Advertisment

ஐப்பசி மாத அரசியல் நிலவரம்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/iypasi-monthly-political-status-r-mahalakshmi

வ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும், சூரியன் ஒவ்வொரு ராசியாக நகர்வார். மேஷ ராசியில் சூரியன் இருந்தால், அதனை சித்திரை என தெளிவாகக் கூறிவிடலாம்.

Advertisment

இவ்வாறே சூரிய பகவான் நகர்ந்துசெல்லும் ராசியின்படி, அந்தந்த மாதத்தை நாம் தெரிந்துகொள்ள இயலும்.

Advertisment

ஒரு நாட்டின் தலைவனை அரசன் என்பர். அதுபோல் ஜோதிடத்தின் அரசர் சூரிய பகவானாவார். ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் இருப்பினும் சூரியனே முதன்மை கிரகமாவார். சூரியனைக்கொண்டே அரசியல் நிகழ்வுகள் அமையும். 17-10-2020 முதல் 15-11-2020 வரை ஐப்பசி

வ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும், சூரியன் ஒவ்வொரு ராசியாக நகர்வார். மேஷ ராசியில் சூரியன் இருந்தால், அதனை சித்திரை என தெளிவாகக் கூறிவிடலாம்.

Advertisment

இவ்வாறே சூரிய பகவான் நகர்ந்துசெல்லும் ராசியின்படி, அந்தந்த மாதத்தை நாம் தெரிந்துகொள்ள இயலும்.

Advertisment

ஒரு நாட்டின் தலைவனை அரசன் என்பர். அதுபோல் ஜோதிடத்தின் அரசர் சூரிய பகவானாவார். ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் இருப்பினும் சூரியனே முதன்மை கிரகமாவார். சூரியனைக்கொண்டே அரசியல் நிகழ்வுகள் அமையும். 17-10-2020 முதல் 15-11-2020 வரை ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். துலாம் சூரியனின் நீச வீடாகும். அதன்படி சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசநிலையில் அமர்ந்திருப்பார்.

d

எனில், சூரியனின் நீசத்தன்மை நிலை எத்தகையது? ஒரு அரசன், பதுங்கு குழியில் அமர்ந்திருந்தால் அந்த அரசனின் நிலை எவ்விதம் இருக்குமோ, அதே நிலையை நீச சூரியனும் அடைவார்.

எனினும் அக்டோபர் 23 வரை, சுக்கிரன் சிம்ம ராசியில் உள்ளார். இதனால் சூரியன்- சுக்கிரன் பரிவர்த்தனை உண்டாகி, சூரியன் நீசபங்க யோகம் பெறுவார். எனவே ஐப்பசி மாத முதல் வாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பின் சூரியனின் நீசநிலை தொடர ஆரம்பித்துவிடும்.

சூரியன் அரசியலைக் குறிக்கும் கிரகம் என்பதால், அவரின் நிலை அரசியலில் மாற்றத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

அக்டோபர் 17 முதல் 24 வரை:

இந்நாட்களில் சூரியன் சித்திரை நட்சத்திரத் தில் செல்வார். எனவே அரசியலின் நிலை ஆக்ரோஷமாக அமையும். அரசியல்வாதி களிடையே கருத்து வேறுபாடு- மோதல் அதிகரிக்கும். வெகு கோபம் கொள்வர். சண்டை நடக்குமேயொழிய முடிவு வராது.

அக்டோபர் 24 முதல் நவம்பர் 6 வரை: இப்போது சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் செல்வார். இது ராகுவின் நட்சத்திரம். நீச சூரியன் ஒரு பாம்பின் காலில் செல்லும்போது, அரசியல் உலகம் திடீரென்று ஆழ்நிலை அமைதியாகிவிடும். வெளியே அவ்வாறு தெரிந்தாலும், உள்ளே ரகசிய சதி வேலைகள் நடக்கும்.

யார் காலை வாரிவிடலாம்- யாரை முகவரி இல்லாமல் செய்யலாமென்று ஆலோசிப் பார்கள். அரசியலிலின் மறைமுக நிகழ்வுகளைக் கண்டு விவரமறிந்தோர் மிக அச்சப்படுபவர். எனவே இந்த நேரத்தில், மிதவாத குணம் கொண்ட அரசியல்வாதிகள் எதிலும் ஈடுபடாமல் அமைதியாக இருப்பது நல்லது. அரசியலில் ஆழ்நிலை "சுனாமி' சுழன்றடிக்கும் நேரமிது.

நவம்பர் 6 முதல் 15 வரை : சூரியன்

இப்போது விசாக நட்சத்திரத்திற்கு நகர்ந்து விடுவார். விசாகம் என்பது, குரு சார நட்சத்திரம். எனவே, அரசியல் உலகின் பிதாமகர் போன்ற ஒரு பெரியவர், அரசியல் வாதிகளை அழைத்துப் பஞ்சாயத்து செய்து, ஒருவழியாக அமைதி உண்டாக்குவார்.

அரசியலில் சற்றே அமைதி ஏற்படும்.

ஆக, இந்த ஐப்பசி மாதத்தில், நீச சூரியனால் அரசியல் சற்றே அல்லல் அடைந்தாலும், சொல்லிக்கொள்ளும்படி எந்த முன்னேற்றமோ, முடிவோ கிடைக்காது. எதுவும் புரியாத, தெளிவற்ற நிலையிலேயே ஐப்பசி மாத அரசியல் அமையும்.

செல்: 94449 61845

bala231020
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe