Advertisment

இருதார யோகம் யாருக்கு வரம்! யாருக்கு சாபம்! பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/irutara-yoga-boon-whom-curse-who-prasanna-astrologer-i-anandhi

திருமணம் எனும் பந்தம் இல்லறத்தின் இனிய வரம். இன்ப மான- மன நிறைவான வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை. ஒருவருக்கு ஏற்படும் இருதாரத்தை இரண்டுவிதமாக பிரிக்கலாம். வாழ்க்கைத்துணையின் மறைவிற்குபின்பு மீண்டும் மணம் முடிப்பது ஒருவகை. வாழ்க்கைத் துணை இருக்கும் போதே மற்றொரு வாழ்க்கைத் துணையை தேடுவது இரண்டாவது வகை. மருத்துவ வசதி குறைவாக இருந்த காலத்தில் எதிர்பாராத இடர்களால் வாழ்க் கைத் துணையை இழந்தால் ஆண்கள் மட்டுமே மறுமணம் செய்து கொண்டார்கள். ஆனால் தற்காலத் தில் பெண்களும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய காலச்சூழல் வந்துவிட்டது. இயற்கை நிகழ்வி னால் உருவாகும் இரண்டாம் தாரம் ஏற்றுக்கொள்ளகூடியது. கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாம் தாரத்தை நாடுபவர்கள் இரண்டாம் தரமான வாழ்க்கையைத்தான் அனுபவிக்கிறார் கள் என்பது நிதர்சனமான உண்மை. வெகுசிலருக்கு திருமணம் மனநிறைவான வாழ்க்கையை தருகிறது. ஒரு தாரத்தையே சமாளிக்க முடியாத இந்த கலி காலத்தில் இரண்டாம் தாரம் என்பது சர்வசாதரணமான நிகழ்வாகத்தான் இருக்கிறது.

Advertisment

ஒரு திருமணம்கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக் காக பலர் ஏங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்துவிடுகிறது. முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டுவிடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும்வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.

ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் இரண்டாமிடம் எனும் குடும்ப ஸ்தானத்தின்மூலம் ஏழாமிடம் எனும் மூலம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம். அதாவது வாழ்க்கைத் துணையால் பெரும் இன்பம் எத்தகையது? அவர் நல்லவரா? பண்புள்ளவரா? படித்தவரா? நடைபெறும் திருமணம் மன மகிழ்வைத் தருமா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பு உள்ளவரா? தம்பதிகள் கடைசிவரை சேர்ந்து வாழ்வார்களா? போன்றவற்றை தெரிந்துகொள்ளமுடியும். ஒருவருக்கு இரண்டாம் தாரம் ஏற்பட ஜோதிடரீதியான காரணங்கள

திருமணம் எனும் பந்தம் இல்லறத்தின் இனிய வரம். இன்ப மான- மன நிறைவான வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை. ஒருவருக்கு ஏற்படும் இருதாரத்தை இரண்டுவிதமாக பிரிக்கலாம். வாழ்க்கைத்துணையின் மறைவிற்குபின்பு மீண்டும் மணம் முடிப்பது ஒருவகை. வாழ்க்கைத் துணை இருக்கும் போதே மற்றொரு வாழ்க்கைத் துணையை தேடுவது இரண்டாவது வகை. மருத்துவ வசதி குறைவாக இருந்த காலத்தில் எதிர்பாராத இடர்களால் வாழ்க் கைத் துணையை இழந்தால் ஆண்கள் மட்டுமே மறுமணம் செய்து கொண்டார்கள். ஆனால் தற்காலத் தில் பெண்களும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய காலச்சூழல் வந்துவிட்டது. இயற்கை நிகழ்வி னால் உருவாகும் இரண்டாம் தாரம் ஏற்றுக்கொள்ளகூடியது. கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாம் தாரத்தை நாடுபவர்கள் இரண்டாம் தரமான வாழ்க்கையைத்தான் அனுபவிக்கிறார் கள் என்பது நிதர்சனமான உண்மை. வெகுசிலருக்கு திருமணம் மனநிறைவான வாழ்க்கையை தருகிறது. ஒரு தாரத்தையே சமாளிக்க முடியாத இந்த கலி காலத்தில் இரண்டாம் தாரம் என்பது சர்வசாதரணமான நிகழ்வாகத்தான் இருக்கிறது.

Advertisment

ஒரு திருமணம்கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக் காக பலர் ஏங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்துவிடுகிறது. முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டுவிடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும்வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.

ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் இரண்டாமிடம் எனும் குடும்ப ஸ்தானத்தின்மூலம் ஏழாமிடம் எனும் மூலம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம். அதாவது வாழ்க்கைத் துணையால் பெரும் இன்பம் எத்தகையது? அவர் நல்லவரா? பண்புள்ளவரா? படித்தவரா? நடைபெறும் திருமணம் மன மகிழ்வைத் தருமா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பு உள்ளவரா? தம்பதிகள் கடைசிவரை சேர்ந்து வாழ்வார்களா? போன்றவற்றை தெரிந்துகொள்ளமுடியும். ஒருவருக்கு இரண்டாம் தாரம் ஏற்பட ஜோதிடரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சம்பந்தம் முதல் தாரத் துடன் தேவையற்ற வம்பு, வழக்கு அல்லது பிரிவினையை ஏற்படுத்துகிறது.

Advertisment

ஜனனகால ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2-ஆமிடத்திற்கு அல்லது களத்திர ஸ்தானம் எனும் 7-ஆமிடத்திற்கு எத்தனை கிரகங்கள் சம்பந்தம் உள்ளதோ அத்தனை நபர்கள் திருமண வாழ்வில் சம்பந்தம் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதாவது 7-ஆம் அதிபதியுடன் எத்தனை கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதோ அத்தனை திருமணங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.

7-ஆமிடத்திற்கு சூரியன், செவ்வாய் சேர்க்கை, குருச் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் இருதார பலன் உண்டு சுக்கிரன், சனி சேர்க்கை எந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. ஆனால் பொருத்தமற்ற வாழ்க்கைத்துணை, வாழ்க்கைத்துணையால் அவமானம், மனக்கசப்பு, மறு விவாகம் உண்டாகும்.

அதேபோல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை, சூரியன் செவ்வாய் சேர்க்கை களத்திர காரக கிரகங்களை பலவீனமடையச் செய்வதால் மறுமணம் நடக்கும்.

சுக்கிரன் சந்திரன் சேர்க்கை மாமியார், மருமகள் கொடுமையால் பிரியும் குடும்பமாகும்.

ss

ஏழாம் இடத்தில் பதினொன்றாம் அதிபதி நிற்பது அல்லது பதினொன்றாம் இடத்தில் ஏழாம் அதிபதி அமர் வது. (பரிவர்த்தனை) 7-ஆம் அதிபதி பலம் குறைந்து 11-ஆம் அதிபதி வலுப்பெறும்போது வெகுசுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச்செல்லும். 2, 7-ஆம் அதிபதிகள் 11-ஆம் பாவத்தோடு சம்பந்தம் பெறுதல், 11-ஆம் அதிபதி 2, 7-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுவது, பொதுவாக 7-ஆம் அதிபதி அல்லது 7-ல் நின்ற கிரகம் புதன், குரு, செவ்வாய், சூரியனின், ராகு, கேதுக்களின் நட்சத்திர சாரங்களைப் பெறக்கூடாது. இதில் புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம் என்பதால் இரண்டாவது வாழ்க்கையை ஏற்படுத்தும். குரு செவ்வாய், சூரியன் உடைபட்ட நட்சத்திரங்கள். இவற்றின் 4 பாதங்களும் இரண்டு ராசிகளுக்கு சம்பந்தம் பெறுவதால் திருமண வாழ்க்கையும் உடையும் வாய்ப்பு அதிகம். மேலும் ராகு- கேதுக்கள் பிரிவினையை ஊக்குவிக்கும் கிரகங்களாகும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ரஜ்ஜு, யோனி பொருத்தம் இல்லாத ஜாதகம் தம்பதியினரை பிரிக்கும்.

11-ஆம் பாவகத்திற்கு திரிகோணாதிபதிகள் சம்பந்தம் பெறும்போது சட்டப்படியான மறுமணமாகவும் , அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும்போது சட்டத்திற்கு புறம் பான உறவும் ஏற்படும்.

11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்தல், 1, 11-ஆம் அதிபதிகள் பரிவர்தனை பெறும்போது இரு தாரம் ஏற்படும்.

7-ஆம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தைகூட தரும்.

ஜென்ம லக்ன அடிப்படையிலான இருதார அமைப்புகள் ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், மீனம் ஆகிய 5 லக்னத்திற்கு இயல்பாகவே இருதார யோகம் உண்டு.

ரிஷபம் காலபுருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் ஆட்சி வீடு. ரிஷபத்தில் உச்சம்பெறும் ராகு ஏழாமிடமான விருச்சிகத்தில் நீசம். விருச்சிகம் காலபுருஷ எட்டாமிடம். எட்டாமிடம் மறைவு ஸ்தானம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்கமுடியாத மறைவு வாழ்க்கை நிச்சயம் உண்டு.

மிதுன லக்னம் காலபுருஷ மூன்றாம் இடம் என்பதால் அடிக்கடி வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். லக்னாதிபதி புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். புதனும், சுக்கிரனும் நட்பு கிரகம். மேலும் சுக்கிரன் மிதுனத்திற்கு 5, 12-ஆம் அதிபதி என்பதால் தக்க நேரத்தில் துணையாக இருந்து இரண்டு தார யோகத்தை செய்துகாட்டுவார்.

இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் புதன், சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் இரண்டு திருமணம் உண்டு.

கடகம்

கடக லக்னத்தினருக்கு சுக்கிரன் 11-ஆம் அதிபதி. சுக்கிரன் ஆட்சி, உச்சம் சுயசாரம் பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.

துலாம்

காலபுருஷ ஏழாமிடம். இதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி தசை சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசை சனி புக்தியில் இரண்டாம் திருமணம் நடக்கிறது.

மீனம்

இயல்பாகவே இரட்டை தன்மை நிறைந்த லக்னம். மீனத்தில் சுக்கிரன் உச்சம் ஏழாம் வீடான கன்னியில் சுக்கிரன் நீசம் என்பதால் அழகான பெண்னை அல்லது வெகுலியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக் காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.

பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசை அல்லது புக்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.

இரண்டாம் திருமணம் யாருக்கு வரம் இளைய தாரத்தைப் பற்றி சொல்லக்கூடிய ஏழு, பதினொன்றாம் இடம் சுப வலுப்பெற்றால் இரண்டாம் வாழ்க்கை அதிர்ஷ்டத்தை தரும்.

பதினொன்றாம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி, உச்சம்பெற்று ஏழாம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் இளைய மனைவியால் யோகம் உண்டு. அதேபோல் இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் அதிபதி வலுப்பெற்று தசை நடத்தினால் இளைய தாரத்தால் பணம், புகழ் கிட்டும். ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இரண்டாம் திருமணத்திற்குப்பிறகு பதவி, புகழ், அந்தஸ்து, கௌரமான வாழ்க்கை உண்டு. லக்னம் ஏழாமிடத்திற்கு சுக்ரன் செவ்வாய், சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் இரண்டாம் திருமணத்தில் நிம்மதியாக இருக்கிறார்கள்.

இரண்டாம் திருமணம் யாருக்கு சாபம் பதினொன்றாம் இடம் அசுப வலுப்பெற்றால் இரண்டாம் வாழ்க்கை துரதிர்ஷ்டத்தை தரும்.

ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் மூன்று, நான்காம் இடத்துடன் சம்பந்தம் பெற்றால் கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்குபோல் ஒரு வைப்பாட்டி வைத்த கதைதான். பதினொன்றாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடத்துடன் சம்பந்தம் பெற்று குருப்பார்வை பெற்றால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்து இளைய தாரத்தால் வம்பு, வழக்கு, கட்டப்பஞ்சாயத்து என கடனாளியாக வாழ்வார்கள். சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் மற்றும் தவறான இன்பத்திற்காக இரண்டாவது வாழ்க்கையை தேடினால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கசக்கும். ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் கேது, செவ்வாய் கேது சம்பந்தம் இருப்பவர்கள் அனுசரித்து போகாமல் பல திருமணம் செய்தால் சாபம் நிறைந்ததாக இருக்கும்.

உலவியல்ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்றால் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்காக மறுதிருமணம் செய்யலாம். உண்மையில் வாழவே முடியாத வகையில் பிரச்சினை இருந்தாலும் இரண்டாம் திருமணம் நடத்தலாம்.

சிறு சிறு கருத்து வேறுபாட்டிற்கு பிரிய நினைத் தால் எத்தனை திருமணம் செய்தாலும் மணவாழ்க்கை கேள்விக் குறியாகவே இருக்கும். பலர் இது போன்ற காரணத் தினால் நல்ல வாழ்க்கைத் துணையை இழந்து பிறரு வருந்துகிறார்கள். அதேபோல் வாழ்க்கைத் துணையின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னை சரிசெய்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும். அதீத எதிர்பார்ப்பு மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத பல திருமணங்களே இன்று நீதிமன்ற வாசலிலும், இணைய முடியாமல் வீட்டிலும் மனக் காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான ஒன்றல்லவா? ஒரு பிரச்சினை என்று வரும்போது ஒருவர் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கும். அந்த பிரச்சினையில் கணவன், மனைவி தவிர்த்து 3-ஆம் நபரின் தலையீடு பிரச் சினையை பெரிதுபடுத்தும். குறிப்பாக தம்பதியினரின் பெற்றோர்கள், நண்பர்கள். இதில் எத்தனையோ நண்பர், நண்பிகளே வில்லி, வில்லனாக மாறுகிறார்கள் என்பது நாம் அரிந்ததே. பிரிந்த பிறகு தவறை உணர்வதைவிட வாழும் போதே விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிமையாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் மரபு.

பரிகாரம்

இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோஷமாக இருந் தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோஷம்தான். அந்த சந்தோஷம் மன அமைதி யில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின்மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபாட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாதீஸ்வரர் வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி வலு குறைந்து 11-ஆம் அதிபதி பலம்பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்தவேண்டும்.

நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்யவேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ஆமிடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.

ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரனில்லை. எப்படியாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்துவிடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக்கூடாது.

செல்: 98652 20406

bala271023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe