வாக்கியப்படி, ஐப்பசி 11-ஆம் தேதி தனுசு ராசிக்கு குரு மாறி விடுவார்.

சூரியன்: நெருப்பு கிரகமான சூரியன், துலாம் எனும் காற்று ராசியில் நீசமாகிறார். எனினும், அவருடன் சுக்கிரன் எனும் நீர் கிரகம் ஆட்சியாகி அமர்ந்துள்ளதால் சூரியன் நீசபங்கமடைகிறார்.

செவ்வாய்: நெருப்பு கிரகமான செவ்வாய் கன்னி எனும் நில ராசியில், சனியின் பார்வையில் அமர்ந்துள்ளார். செவ்வாய் தனது நான்காம் பார்வையால் சனியைப் பார்க்கிறார்.

நெருப்பு கிரகமான செவ்வாய் நில ராசியிலும், காற்று கிரகமான சனி நெருப்பு ராசியிலும் இருந்து, சம்பந்தம் கொள்கின்றனர். ஐப்பசி 26-ல் செவ்வாய் துலா ராசிக்கு மாறுவார்.

Advertisment

புதன்: காற்று ராசியான துலாத்தில் புதன் வக்ரகதியில் உள்ளார். இம்மாதம் முழுக்க அந்த நட்சத்திரங்களின் சாரத்தில் முன்னே பின்னேபோய் துலா ராசியிலேயே இருப்பார்.

ipp

குரு: ஐப்பசி 10 வரை நீர் ராசியான விருச்சிகத்தில் இருப்பார். அப்போது அவர் மற்ற இரு நீர் ராசிகளான மீனம் மற்றும் கடகத்தைத் தனது பார்வையால் குளிரச் செய்வார். அச்சமயம் சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கும்போது மழை பொழியச் செய்வார். மேலும் சந்திரன் நில ராசியான ரிஷபத்தில், ரோகிணி நட்சத் திரத்தில் செல்லும்போதும் மழைக்கு வாய்ப்புண்டு.

Advertisment

ஐப்பசி 11-ல் குரு தனுசு ராசிக்குப் பெயரும்போது அவருடன் காற்று கிரகங்களான சனியும் கேதுவும் உள்ளனர். எதிரே காற்று மற்றும் நெருப்பு கிரகமான ராகு, காற்று ராசியான மிதுனத்தில் அமர்ந்து பார்வையிடுகிறார். மேலும் செவ்வா யின் நான்காம் பார்வையையும் குரு பெறுவார்.

ஆக, ஆகாய கிரகமான குரு, நிறைய காற்று, நெருப்பு கிரகங்களின் சம்பந்தம் பெறுகிறார். அவர் தனுசு ராசியிலிருந்து மேஷம், சிம்மம் எனும் நெருப்பு ராசிகளையும்; மிதுனம் எனும் காற்று ராசியையும் பார்வையிடுகிறார்.

சனி: காற்று கிரகமான சனி தனுசு எனும் நெருப்பு ராசியில், கேது- ராகுவின் சம்பந்தம் பெற்று, செவ்வாயின் பார்வை யிலும் உள்ளார்.

சுக்கிரன்: நீர் கிரகமான சுக்கிரன் முதலில் தனது ஆட்சி வீடான துலாத்தில்- காற்று ராசியில் உள்ளார். சந்திரன் துலா ராசியின் சித்திரை, சுவாதி, விசாக நட்சத்திரங்களில் செல்லும்போது மழை பொழிந்து, நிலம் குளிர்ந்து, ஈரக்காற்று வீச வாய்ப் புள்ளது.

ஐப்பசி 11 அன்று நீர் கிரகமான சுக்கிரன் நீர் ராசியான விருச்சிகத்தில் பிரவேசித்து மாதம் முழுவதும் அங்கேயே உள்ளார். இதன்மூலம் ஐப்பசி மாதம் முழுவதுமே ஏறக்குறைய மழை பெய்ய வாய்ப் புண்டு.

காற்று ராசி மிதுனத்தில் ராகுவும், நெருப்பு ராசி தனுசில் கேதுவும் உள்ளனர்.

ஐப்பசி மாத நிலவரப்படி 10-ஆம் தேதிவரை குருவின் நிலையால் ஓரளவு மழையும், 11-ஆம் தேதிக்குப்பிறகு சுக்கிரனின் இருப்பால் நல்ல மழையும் பொழிய வாய்ப்புள்ளது.

இந்த மாதம் நெருப்பு கிரகங்கள் சற்றே பலமற்ற நிலையில் உள்ளனர். சூரியன் நீசத்தாலும், செவ்வாய், சனியின் பார்வையாலும் சற்றே வலுவிழந்து உள்ளனர். எனவே நெருப்பு கிரக ஆதிக்கம் குறைகிறது. இதுவும் இந்த மாதத் தொடர்மழைக்கு ஒரு காரணமாக இருக்கும்.

நெருப்பு ராசியில் (தனுசில்), குரு, சனி, கேது எனும் காற்று கிரகங்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. இந்நிலை மழையின் அளவை ஓரளவு கட்டுப்படுத்தவும் கூடும்.

மேலும் நீர் ராசியான விருச்சிகத்தில் நீர் கிரகமான சுக்கிரன் அமரும்போது, "கால் ஆறு மட்டுமே நிறையும்' என்று கூறப்பட்டுள்ளது. விருச்சிகம் வடக்கு திசையைக் குறிப்பதால், வடக்குப் பகுதி இடங்களும், தென்கிழக்குப் பகுதி இடங்களும் மழைபெறும் வாய்ப் புண்டு. ஐப்பசி 11 வரை மேற்கு திசை இடங்களில் மழைபொழிய வாய்ப் புண்டு.

மழை பொழியக்கூடிய நாட்கள்

அக்டோபர்- 21- புனர்பூசம்.

அக்டோபர்- 22- பூசம்.

அக்டோபர்- 23- ஆயில்யம்.

அக்டோபர் 29- விசாகம்.

அக்டோபர் 30- அனுஷம்.

அக்டோபர் 31- கேட்டை.

நவம்பர்- 1- மூலம்.

நவம்பர்- 2- பூராடம்.

நவம்பர்- 3- உத்திராடம்.

நவம்பர்- 4- திருவோணம்.

நவம்பர்- 7- சதயம்.

நவம்பர்- 9- உத்திரட்டாதி.

நவம்பர்- 10- ரேவதி.

நவம்பர்- 14- ரோகிணி.

மேற்கண்ட தினங்களில் மழை பொழியும் வாய்ப்புள்ளது.

ஐப்பசி- 1 (அக்டோபர்- 18) ரோகிணி அன்று கனமழை பெய்யக்கூடும்.

ஐப்பசி 11-ல் குருப்பெயர்ச்சி வரை ஆங்காங்கே நிலத்தில் ஏதேனும் விரும்பத்தகாத இடைஞ்சல் வரக்கூடும். எனினும், குரு- சனி, கேதுவுடன் சேர்ந்த பிறகு எல்லாம் நன்மையாக நடக்கும்.

செல்: 94449 61845