வீடு கட்ட ஒரு காலம் உண்டு. அதற்கான பலனை அவரவர் ஜனன ஜாதகத்தில் நான்கா மிடத்தைக்கொண்டு அறியவேண்டும்.
அடிமனை கோல (அஸ்திவாரம் போட) நல்ல நேரங்கள்
சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி, தை மாதங்களில் வீட்டிற்கு அஸ்திவாரம் போட உத்தமம். அந்த மாதங்களில் வளர்பிறை முகூர்த்த காலம் அல்லது வாஸ்துக் காலங்களில் போடுவது சிறந்தது.
குரு, சுக்கிரன் இருவரும் அஷ்டங்கத தோஷம் (ஒருவருக்கொருவர் எட்டாமிடம்) அடை யாமல் பிரகாசமாய் இருக்கும்போது வீட்டிற்கு அஸ்திவாரம் போடவேண்டும்.
அஸ்வினி, பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் வீட்டிற்கு அஸ்திவாரம் போட உத்தமம்.
மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மட்டும் அந்தந்த நட்சத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.
வீடு கட்ட ஆரம்பிக்க...
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலை எதுவும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டு எஜமானருக்காவது, எஜமானிக்காவது கண்டங் களைக் கொடுக்கும்.
மேற்கண்ட மாதங்களிலும், ஆனி மாதத் திலும், வாஸ்து நிர்மாணம், கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது.
கிரகப் பிரவேசம் செய்ய நல்ல காலங்கள் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த் திகை, தை ஆகிய ஆறு மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்ய உத்தமம்.
கிரகப் பிரவேசம் செய்ய உகந்த நட்சத்திரங்கள்
அஸ்வினி, ரோகிணி, மிருக சீரிடம், புனர்பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, மூலம், உத்தி ராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்தி ரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத் திரங்களில் வீடு குடியேற உத்தமம்.
திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் வீடு குடியேற உத்தமம்.
வெள்ளிக்கிழமை உத்தமம் என்றாலும் வீடு குடியேறக்கூடாது. ஏனெனில் அந்த வீட்டுப் பெண்களுக்கு ஆகாது.
இரண்டாமிடம் சுத்தமாக இருக்கவேண்டும்.
ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, கும்பம் ஆகிய லக்னங்களில் கிரகப் பிரவேசம் செய்யலாம்.
கிரகப் பிரவேசம் செய்யக்கூடாத விவரங்கள்
● வீடு கட்டிமுடிக்காமல் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது.
● மேற்கூரை கட்டாமலும், கதவு போடாமலும், சுவர், தரை பூசாமலும் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது.
● பஞ்சமகாயக்ஞம் செய்யாமலும், பிராமண போஜனம் செய்விக்காமலும் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது.
மேற்கண்டவற்றைக் கடைப் பிடிக்காமல் வீடு கிரகப் பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் தீயசக்தி புகுந்துவிடும். மேற்கண்ட வேலைகளை முடித்தபிறகே கிரகப் பிரவேசம் செய்வது நல்லது.
போர் போடுவதற்கு உகந்தவை தண்ணீர் வசதிக்காக "போர்' போடுதல் பெருகிவருகிறது. போர் போடுவதானாலும், கிணறு வெட்ட வேண்டுமென்றாலும் கீழ்க்காணும் விவரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டிற்குக் கிழக்கே அமைத் தால் விபத்து நிகழும்.
வீட்டிற்குத் தென்கிழக்கு- புத்திர நாசம்.
தெற்கு- மனைவிக்குப் பீடை.
தென்மேற்கு- தனக்கு ஆபத்து.
மேற்கு- சரீர சுகம்.
வடமேற்கு- ஆயுதத்தால் பயம்.
வடக்கு- செல்வம்.
வடகிழக்கு- நல்வாழ்வு தரும்.
16 அடிக்குமேல் ஊற்று வருவது உத்தமம். மேற்கில், வடக்கில், வடகிழக் கில் கிணறு வெட்ட அல்லது போர் போட உத்தமம். வீடு நல்ல முறையில் கட்டிக் குடியேற கீழ்க்கண்ட பரிகா ரத்தைச் செய்து கொள்ளவேண்டும்.
பரிகாரம்
குலதெய்வ அருள்வேண்டும்.
எனவே குலதெய்வத்திடம் அனுமதி கேட்டுச் செய்யவேண்டும். மேலும் எம்பெருமான் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு, அங்கு தரப்படும் குங்குமம், திருநீறைக் கொண்டுவந்து கிரகப் பிரவேசம் செய்தால் நன்றாக இருக்கும்.
செல்: 94871 68174