பிரபல ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் வக்ர கிரகங்களின் நிலைபற்றி மாறுபட்ட கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். வக்ர கிரகங்களின் முழுமையான முடிவு ஜனன ஜாதகத்தில் அவற்றின் பலம் மற்றும் பலவீனத்தைப் பொருத்தே அமைகிறது. தற்காலத்தில் நடக்கும். பிரச்சினைகள் மிக்க வாழ்க்கை நிலைகள் ஜனன ஜாதகத்திலுள்ள வக்ர கிரகங்களை வைத்து ஆராயப்பட வேண்டியது முக்கியமாகிறது.
வக்ரமான கிரகங்களில் நல்லதாகவோ. கெட்டதாகவோ ஆவதில்லை. ஆனால், நல்லது செய்ய அல்லது கெட்டது செய்வதற்கான அதிக பலத்தை, பூமிக்கருகே வரும்போது பெறுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்தம்பன அவஸ்தை நிலையில் இது அதிகமாகிறது என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.
வெளிவட்ட கிரகங்களென்று சொல்லப்படும் செவ்வாய், குரு, சனி ஆகியவற்றுக்கு இந்த நிலைத் தோற்றமானது மிகவும் முக்கியமானது. மேலும் தனித்தன்மை உடையதாகும். ஏனெனில், இந்த கிரகங்கள் பூமியின் வெளிவட்டத்தில், வெகுதூரத்தில் உள்ளன என்பதேயாம். குறிப்பாக, சுக்கிரன் மற்றும் புதனின் வக்ரநிலைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். ஏனெனில், அவை எப்போதும் சூரியனுக்கு அருகேயுள்ள கிரகங்களாகும். அவை அஸ்தமன நிலையிலும், வக்ர நிலையடையும்போது சுக்கிரனும், புதனும் அதி சுபராகிவிடுகின்றனர்.
வக்ரநிலையில் வெளிவட்ட கிரகங்கள், சூரியனுக்கு எதிராக வருவது மாறாத ஒன்றாகும். கோட்சாரத்தில் வக்ரமாகும் கிரகம் தாமதத் தையும் தடைகளையும் ஏற்படுத்துமென பலர் நம்பு கின்றனர். இந்தக் கருத்தானது தவறான ஒன்றல்ல. அனுபவத் திலும், பல நூல்களில் குறிப் பிட்டுள்ளது போலவும், வக்ர சனி மற்றும் செவ்வாய் கண்டிப்பாக தாமதத்திற்கும், அபாயத்திற்கும் காரண மாகின்றன.
மிகவும் பலம்மிக்க ஒரு அசுபகிரகம் வக்ரநிலையை அடையும்போது, கண்டிப்பாக ஜாதகரின் மனநிலை, கற்பனா சக்தி, மனதின் தனித்தன்மை ஆகியவை மிக அதிக அளவுக்கு பாதிக்கப்படும் என்ற உண்மையை நாம் ஒதுக்கிவிடமுடியாது. இந்த நிலை லக்னம், சூரியன் மற்றும் சந்திரனைப் பொருத்தே அமைகிறது என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும். ஏனெனில், பூமிக்கு மிக அருகில் இருப்பதால், இந்த பாதிப்பு ஓரளவுக்கு கிரகநிலை, இயற்கை குணம், பலம் ஆகியவற்றை ஒட்டியே அமைகிறது. பல சந்தர்பங்களில் இவ்வித பாதிப்பு ஜாதகருக்கு அழிவைக்கூட தந்துவிடுகிறது.
அனுபவத்தில் பார்க்கும்போது சனி, செவ்வாய் ஆகிய அசுப கிரகங்களின் வக்ரநிலையின் பாதிப்பானது, ஜாதகர் ஒரு சிறு வெற்றியைக்கூட, பிரம்மப் பிரயத்தனம் செய்தபின்னரே அடையமுடிகிறது.
கீழே உள்ளவை வக்ர கிரகங்கள் தரும் பலன் பற்றிய, சில புகழ்பெற்ற ஆராய்ச்சி யாளர்களின் கருத்துகளாகும்.
1. வக்ர கிரகங்களின் காரகங்கள் மாறுபட்ட நிலையிலேயே வேலைசெய்கின்றன.
2. ஜனன ஜாதகத்திலுள்ள வக்ர கிரகம் "கார்மிக்' கிரகம் என்ற வகையில், முற்பிறவியில் ஜாதகரால் செய்யப்பட்ட தீயவினைகள், அந்த கிரக காரகத்துவத் தைப் பொருத்தே இருக்கும். முற்பிறவியில் என்ன தீய வினைகளை ஜாதகர் செய்தார் என்பதைக் கூறமுடியாவிட்டாலும், செய்த தவறுகளின் தன்மையை, வக்ர கிரகம் அதன் காரகத்துவ அடிப்படையில் குறிகாட்டிவிடுகிறது.
3. ஜனன ஜாதகத்தில் வக்ர கிரகம்- உடலின் சக்கரங்களில் ஏற்படும் குறைகளையும், அதற்கான கிரக காரகத்துவங்களையும் குறிகாட்டுகிறது.
4. நீசமான வக்ர கிரகம் நற்பலன்களை அளிக்கிறது.
5. உச்ச நிலையிலுள்ள வக்ர கிரகம்-
அந்த கிரக தசாபுக்திக் காலங்களில் இன்னல் களைத் தருகிறது.
6. வக்ர கிரகம் ராசியில் நீசம்பெற்று, நவாம்சத்தில் உச்சம்பெற்றால், அந்த கிரக தசாபுக்திக் காலங்களில் நன்மைகளை அளிக்கிறது.
7. இயற்கை சுபர்கள் வக்ரமாக, நன்மையான பலன்கள் அமையும்.
8. இயற்கை அசுபர் வக்ரமாக, தீய பலன்களை அளிக்கிறது.
9. வக்ர நிலையில் வக்ர கிரகம் முந்தைய ராசியில் நுழைகிறது. ஆயினும் அவை இருந்த ராசியின் பலன்களையே தொடர்ந்து தருகிறது. இதற்கு விதிவிலக்கு குரு மட்டுமே. குரு எங்கிருக்கிறாரோ அந்த இடத்தின் பலன்களையே தருகிறார். உதாரணம்- வக்ர கன்னிச் சனி, துலாத்தின் பாவத்துக்கான பலன்களைத் தருகிறது. குரு- மிதுனத்தில் வக்ரமாகி ரிஷபத் தில் நுழைய, மிதுனத்திலிருக்கும்போது மிதுனதின் பலனையும், ரிஷபத்திலிருக்கும்போது ரிஷபத்தின் பலனையுமே தரும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jathagam_1.jpg)
எந்தவொரு கிரகமும் வக்ரம் பெறும்போது, அந்த பாவத்துக்கு விரயாதிபதி, விரயத்தைக் கொடுத்து விடுகிறார். உதாரணமாக- கும்ப லக்னம், 2, 11-க்குரிய குரு வக்ரம் பெறும்போது, அவரின் தசாபுக்திக் காலங்களில் ஜாதகர் 3, 12 பாவங்களுக்குரிய பலன்களை அனு பவிப்பார். இந்த நிலையில் கும்ப லக்ன ஜாதகர், குரு கும்பத்தில் வக்ரமடையும்போது இடமாறுதல், பதவி மாறுதல், வீடு விற்றல் ஆகிய பலன்களை அடைவார். எனவே, வக்ர கிரகம் தன் பாவத்துக்கு அடுத்த பாவத்தின் பலன்களைத் தரும்.
ஜோதிடரால் வக்ர கிரக காலத்தில், கிரகவாரியாக ஜாதகருக்கு வழங்கப்பட வேண்டிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை இங்கு காணலாம்.
1. கோட்சார செவ்வாய் வக்ரமாகும் போது- ஜாதகர் எதிர்கால திட்டங்களை நிறைவேற்றக் காத்திருந்து, தாமதமாக நிறைவேற்றவேண்டும். ஏமாற்றத்தைத் தவிர்க்க சக்தியை வீணாக்காதீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டும். தர்க்கம் செய்யக்கூடாது. புதிய திட்டங்களை வகுத்தல் அவசியம். பிறர் சமாதானத் துக்கு வந்தால் ஒத்துப் போகவேண்டும். குறிக்கோளை எட்ட, அதற்கான சரியான வழிமுறைகளை ஆராய்தல் அவசியம். ஆரோக்கித்தைப் பேணவேண்டும். மன அழுத்தம் தரும் நிகழ்வுகளை விலக்க வேண்டும். சூழ்நிலைக்குத் தக்கபடி விரும்பிய மாற்றங்களைச் செய்தல்வேண்டும்.
உபஜெய ஸ்தானங்களைத்தவிர மற்ற இடங்களில் செவ்வாய் வக்ரநிலை அடையும்போது, ஜாதகரை மிகவும் கோபமுடையவராக்கி, தவறான புத்தியையளித்து, தனது கஷ்டங்களைத் தீர்க்க எதிர்மறையான வழிகளில் செல்ல வைக்கும். இவர்கள் எப்போதும் உண்மையையும், நேர்மையையும் கண்டு அஞ்சக்கூடியவர்களாக இருப்பர். எனவே இவர்கள், தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் கோபித்துக்கொண்டு வசைபாட ஆரம்பிப்பார்கள். இவர்கள் தூக்கத்தில் அச்சம் தரக்கூடிய, மாறாத கனவுளைக் காண்பார்கள். இவர்கள் தங்கள் நிலையைப் பிறரிடம் நிரூபிக்கும் முன், தங்களது குறைகளையும், தவறுகளையும் வெளியிடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவர். எனவே ஜோதிடர் கள், வக்ர கிரகங்கள் தங்கள் ஒளிக் கதிர்களைக்கொண்டு ஜாதகரை நேராகத் தாக்கி, சீக்கிரமே பாதிப்படையச் செய்கிறதென்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
2. கோட்சார புதன் வக்ரமாகும்போது- வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளைக் கையாளவேண்டிய காலம். எண்ணிப் பார்த்து ஏற்றம்பெற வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுதல் மற்றும் எதிர்காலத்துக்கான நல்ல திட்டங் களை வகுக்கவேண்டிய காலம். பிறருடன் ஒத்துப்போதல், செய்யவேண்டிய காரியங்களுக்கு புதிய மாற்றங்களை, புதிய பரிமாணங்களை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.
3. எந்தவொரு ஜாதகத்திலும் வக்ர சனி, ஜாதகரைக் கடின மனமுடையவராகவும், பிடிவாத குணமடையவராகவும், பயனற்ற காரியங்களைச் செய்யக்கூடியவராகவும், தற்பெருமை உடையவராகவும், தவறானவழிகளில் பணம் சம்பாதிக்கும் பேராசை உடையவராகவும், மதத் தத்துவங்களைப் பிரசாரஞ்செய்யத் தயங்காதவராகவும்-
ஆனால் அந்த தத்துவங்களைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்காதவராகவும் ஆக்கும். இந்த நிலை, சனி 3, 6, 11-ஆமிடங் ளைத் தவிர, மற்ற இடங்களில் இருக்கும் போது மட்டுமே ஏற்படுகிறது.
இதேபோன்று மற்ற கிரகங்களுக்கும் அதன் காரகங்களைப் பொருத்து அவர் களுக்கான ஆலோசனைகளை வழங்குதல் ஜோதிடரின் கடமையாகும்.
வக்ர கிரக காலங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் வருடம் முழுவதும் நிலைத்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதன் ஒழுங்கான பாதையைவிட்டு விலகிச் செல்லலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் கருத்து வேறுபாடு களுக்கான நிகழ்வுகளைத் தவிர்க்கலாம். தாமதங்களைத் தவிர்க்கலாம். வழக்குகளைத் தவிர்க்கலாம். தகவல் தொடர்புகளை சரிசெய்துகொள்ளலாம். எதிர்பாராத மாற்றங்களைத் தவிர்த்து எதற்கும் தயாராக இருக்கவேண்டும். தடைகளைத் தாண்ட முற்பட வேண்டும். எண்ணங்களிலும், நினைவுகளிலும் வக்ர கிரகங்களின் தாக்கத்தை அறிந்துகொண்டு நடக்கவேண்டும்.
செல்: 97891 01742
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/jathagam-t.jpg)