Advertisment

இந்திய ஜோதிடம்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/indian-astrology-s-vijayanarasimhan

முதன்முதலில் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் சுவாசத்திலிருந்து உருவான வேதம் ஒன்று மட்டுமேயாகும். அந்த ஒரு வேதத்தைதான் மகரிஷி வேதவியாசர் நான்கு வேதங்களாக்கினார். அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாகும்.

Advertisment

இந்த நான்கு வேதங்களில் சூக்தங்களும், மந்திரங்களும் இடம்பெற்றிருந்தன. வேதங்களைப் பயன்படுத்தும் நியம முறைகள் வேதங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இதை பாரிஜாத ஹரிஹரா, பராசர மார்க்காவில் விளக்கியுள்ளார்.

Advertisment

dd

வேதங்கள் ஆறு அங்கங்களைக் கொண்டவை. அவை ஜோதிஷா, கல்பம், நிருத்தா, சிக்ஷா, வியாகரணம் மற்றும் சந்தஸ்

முதன்முதலில் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் சுவாசத்திலிருந்து உருவான வேதம் ஒன்று மட்டுமேயாகும். அந்த ஒரு வேதத்தைதான் மகரிஷி வேதவியாசர் நான்கு வேதங்களாக்கினார். அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாகும்.

Advertisment

இந்த நான்கு வேதங்களில் சூக்தங்களும், மந்திரங்களும் இடம்பெற்றிருந்தன. வேதங்களைப் பயன்படுத்தும் நியம முறைகள் வேதங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இதை பாரிஜாத ஹரிஹரா, பராசர மார்க்காவில் விளக்கியுள்ளார்.

Advertisment

dd

வேதங்கள் ஆறு அங்கங்களைக் கொண்டவை. அவை ஜோதிஷா, கல்பம், நிருத்தா, சிக்ஷா, வியாகரணம் மற்றும் சந்தஸ் ஆகும். இவற்றில் சந்தஸ்- பாதம், வியா கரணம்- முகம், கல்பாலி கைகள், ஜோதிஷா- கண்கள், சிக்ஷா- மூக்கு மற்றும் நிருக்தா- காதுகள் என்று கொடுக்கப்பட்டு, ஜோதிடம் வேதத்தின் கண்களென போற்றப்படுகிறது.

"எல்லா உறுப்புகளும் இருக்கின்ற மனிதர் ஆரோக்கியமானவராக இருந்தாலும், கண்ணில்லாதவர் தன் தனித்தன்மையை இழக்கிறார்' என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம்; ஜோதிடம் என்பது கண் போன்றது தானே. ஒருவன் தன் எதிர்காலத்தில் என்ன நடக்குமென்பதை அறிந்துகொள்ளமுடியும் என்பதால் வேதத்தின் அங்கமாக ஜோதிடம் இருந்தபோதிலும், இன்றும் ஒரு நிலையான- தன்னிகரில்லாத இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையாகாது.

பண்டைய ஜோதிட விஞ்ஞானம் மூன்று முக்கிய ஸ்கந்தங்கள் ஹோரா, கணிதா, ஸம்கிதா என்றும், ஆறுவேத அங்கங்களான ஜாதக, கோளா, நிமித்தா, ப்ரஸன்னா, முகூர்த்தா மற்றும் கணிதா எனவும் முனிவர்களால் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கணித ஸ்கந்தா- கோளா மற்றும் கணிதம் பற்றியும், ஹோரா ஸ்கந்தா- பிரஸன்னம், முகூர்த் தம் மற்றும் நிமித்தம் பற்றியும், ஸம்கிதா ஸ்கந்தா- மேலும் விளக்கமாக நிமித்தத்தைப் பற்றியும், யோகங்களைப் பற்றியும், பருவநிலை மற்றும் விலங்குகளின், இராஜ்ஜியத்தின் முன்னேற்றத் தைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கின்றன. மேலும் "மெட்ரோஸ்' எனும் வான் தூசுகள், எரி நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தன்மைகள் பற்றியும் ஹரிஹரா எடுத்துக் கூறியுள்ளார்.

வேத அங்கங்கள் ஆறு 1. கணிதா- ராசி மண்டலத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் அசைவுகளை கணிதம்மூலம் கணக்கீடு செய்வதுபற்றியும்;

2. கோளா- கிரகங்கள் தங்கள் அச்சில் சுழல்வதால் ஏற்படும் அசைவுகள் மற்றும் அவற்றின் நீள்வட்ட சுழற்சியால் ஏற்படும் கோள வானியல்பற்றியும்;

3. ஜாதகா- அடிப்படை ஜோதிடம் மற்றும் பிறந்த ஜாதகத்தை அலசும் வழிமுறைகள்பற்றியும்;

4. பிரசன்னம்- கேட்கப்படும் கேள்விக்கான இடம், காலப்படி பிரசன்ன ஜாதகத்தை அலசும் முறைபற்றியும்;

5. முகூர்த்தா- ஒரு காரியத்தைத் தொடங்க அல்லது நிகழ்வதற்கான சாதகமான அல்லது பாதகமான நேரங்களை அறிதல்பற்றியும்;

6. நிமித்தம்- சகுனம், உடற் குறிகள், மச்சங்கள், மனித குணங்கள், மிருகங்கள் மற்றும் இயற்கை சப்தங்கள்மூலம் அறிதல் பற்றியும் குறிப்பிடுகிறது.

மேலும், ஹரிஹரா, "வேத ஜோதிடம் ப்ரமாணாஸ் மற்றும் பலா என பிரிக்கமுடியும்' எனவும், "முதலாவது வானியல் கிரகங்களின் நிலையை அறியவும், பலா என்பது ஜாதகர் தனது முற்பிறப்பில் செய்த கர்மவினைகளின் பலன்களை அறியவும் வழிகாட்டுகின்றன' என்கிறார்.

செல்: 97891 01742

bala230922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe