பிரசன்னம் என்பது ஒருவரின் நிகழ்கால கர்மாவை அறியும் ஜோதிடமுறை. இன்று பிரசன்னம் பார்த்துச்சென்ற நபரின் கர்மா மறுநாளே மாறக்கூடிய தன்மையுடையது. அதாவது ஒருவர் இன்று பிரசன்னம் பார்த்து அதிலுள்ள பிரச்சினைகளை தெரிந்து கொண்டு செல்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த நபர் பிரசன்னம் பார்த்தபிறகு ஏதாவது ஒரு நல்ல அல்லது தீய செயல்களைச் செய்திருக்கலாம். பிரஜகர் நல்ல செயல் செய்திருந்தால் மறுபடியும் பிரசன்னம் பார்க்கும்போது கர்மவினை தாக்கத்தின் விளைவுகள் குறைந்து சுபக் குறிப்புகள் காட்டும். அதேநேரத்தில் பிரஜகர் தெரிந்தோ- தெரியாமலோ ஏதாவது தவறு செய்திருந்தால் மறுமுறை பிரசன்னம் பார்க்கும்போது வினைப்பதிவு மிகுதியாக தெரியும். ஒருவர் செய்த பரிகாரம் பலிக்குமா, பலித்துவிட்டதா, பரிகாரத்திற்கு பலன் கிடைத்துவிட்டதா போன்ற அனைத்து விஷயங்களையும் பிரசன்னத்தின்மூலம் எளிதாக உணர்த்தமுடியும்.
இது 25-1-2025 அன்று பார்க்கப் பட்ட பிரசன்னம்.
காணாமல் போன ஒரு நபர் பற்றிய பிரசன் னம்.
ஜோதிடத்தில் மறைவு ஸ்தானங் கள் என்பது 3, 6, 8, 12. இந்த மறைவு ஸ்தானங்கள் அசுபத் தன்மை யாக இயங்கும் போது விரும்பத் தகாத விளைவு கள் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னம் என்பது ஜாதகர். இதற்கு பின் வீடான 12-ஆமிடம் இயங்கினால் ஜாதகர் வெளியூர், வெளிநாடு சென்று பிழைக்க நேரும். அந்நிய மொழி பேசுபவர்கள் அல்லது வேற்று இனத்தவருடன் வாழ நேரும். சிலர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பார்கள். சிலருக்கு இனம்புரியாத நோய் தாக்கம் இருக்கும். மீளமுடியாத வைத்தியச் செலவுகள் அதிகரிக்கும
பிரசன்னம் என்பது ஒருவரின் நிகழ்கால கர்மாவை அறியும் ஜோதிடமுறை. இன்று பிரசன்னம் பார்த்துச்சென்ற நபரின் கர்மா மறுநாளே மாறக்கூடிய தன்மையுடையது. அதாவது ஒருவர் இன்று பிரசன்னம் பார்த்து அதிலுள்ள பிரச்சினைகளை தெரிந்து கொண்டு செல்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த நபர் பிரசன்னம் பார்த்தபிறகு ஏதாவது ஒரு நல்ல அல்லது தீய செயல்களைச் செய்திருக்கலாம். பிரஜகர் நல்ல செயல் செய்திருந்தால் மறுபடியும் பிரசன்னம் பார்க்கும்போது கர்மவினை தாக்கத்தின் விளைவுகள் குறைந்து சுபக் குறிப்புகள் காட்டும். அதேநேரத்தில் பிரஜகர் தெரிந்தோ- தெரியாமலோ ஏதாவது தவறு செய்திருந்தால் மறுமுறை பிரசன்னம் பார்க்கும்போது வினைப்பதிவு மிகுதியாக தெரியும். ஒருவர் செய்த பரிகாரம் பலிக்குமா, பலித்துவிட்டதா, பரிகாரத்திற்கு பலன் கிடைத்துவிட்டதா போன்ற அனைத்து விஷயங்களையும் பிரசன்னத்தின்மூலம் எளிதாக உணர்த்தமுடியும்.
இது 25-1-2025 அன்று பார்க்கப் பட்ட பிரசன்னம்.
காணாமல் போன ஒரு நபர் பற்றிய பிரசன் னம்.
ஜோதிடத்தில் மறைவு ஸ்தானங் கள் என்பது 3, 6, 8, 12. இந்த மறைவு ஸ்தானங்கள் அசுபத் தன்மை யாக இயங்கும் போது விரும்பத் தகாத விளைவு கள் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னம் என்பது ஜாதகர். இதற்கு பின் வீடான 12-ஆமிடம் இயங்கினால் ஜாதகர் வெளியூர், வெளிநாடு சென்று பிழைக்க நேரும். அந்நிய மொழி பேசுபவர்கள் அல்லது வேற்று இனத்தவருடன் வாழ நேரும். சிலர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பார்கள். சிலருக்கு இனம்புரியாத நோய் தாக்கம் இருக்கும். மீளமுடியாத வைத்தியச் செலவுகள் அதிகரிக்கும். சிலர் துக்கம் தாளாமல் தலைமறைவாக காசி, இராமேஸ்வரம் போன்ற புனித ஸ்தலங்களுக்கு சென்று வாழ்வார்கள். சிலர் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க வெளியூர், வெளிநாடு சென்று தலைமறைவாக வாழ்வார்கள். நான்காமிடம் என்பது ஒருவர் வசிக்கும் வீடு. இதற்கு பின் வீடான 3-ஆமிடம் இயங்கினால் வீடு மாற்றம் செய்வார்கள் அல்லது சொத்துகள்மீதான ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். சிலர் தாயை பகைத்துக் தனிக் குடித்தனம் செல்வார்கள்.
சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு காணாமல் போவார்கள். சில குழந்தைகள் விடுதியில் தங்கி படிப்பார்கள். அதேபோல் பொது மாரக ஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு பின் வீடான 6-ஆமிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானம் இயங்கினால் மாரகத்திற்கு இணையான கண்டம் உண்டா கும்.
நிலையான- நிரந்தரமான உத்தி யோகம் கிடைக்காது.
அல்லது சொர்ப்ப சம்ப ளத்திற்கு சூழ்நிலை கைதியாக விருப்பம் இல்லாத வேலைக்கு செல்வார்கள்.
குடும்ப தேவையை நிறைவு செய்ய முடியாமல் கடன் வாங்குவார்கள்.
கடனுக்கு பயந்து நோய் வரும். அல்லது வைத்தியத்திற்காக கடன் வாங்குவார்கள். கடனை திரும்ப கட்ட முடியாமல் எதிரியை அதிகரிப்பார்கள். சிலருக்கு தாய்மாமாவால் கடன் வரும். கடனால் தாய்மாமாவுடன் பகை வரும்.
6-ஆமிடத்தில் நிற்கும் கிரகம் 12-ஆமிடத்திற்குடன் சம சப்தமா சம்பந் தம் பெறுவதால் கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். 9-ஆமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பின் வீடு எட்டாமிடம் எனும் அஷ்டம ஸ்தானம். எட்டாமிடம் என்பது பணபர ஸ்தானம். விபரீத என்று கூறினாலும் பலர் அஷ்ட ஸ்தானத்தால் பல்வேறு கண்டங்களையும் துன்பங்களையும் அனுபவிக் கிறார்கள். 3, 6-ஆமிட பிரச்சி னைகள் ஓரளவு நிவர்த்தி தரும். ஆனால் 8, 12-ஆமிடம் தரக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க பூர்வபுண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் பலம் பெற்றிருக்க வேண்டும். எட்டாமிடம் என்பது ஒருவரின் கோபம். 12-ஆமிடம் என்பது ஒருவரின் சாபம். சுய ஜாதகத்தில் 8, 9-ஆம் பாவங்கள் சம்பந்தம் இருந்தால் தந்தையைப் பிரிந்து வாழ்வார்கள் அல்லது இழந்து வாழ்வார்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் தந்தையால் பயனற்ற நிலையை நீடிக்கும். 8-ஆமிடம் இயங்கும் காலங்களிலும் ஸ்திர லக்னங் களில் ஆரூடம் அல்லது கோட்சார லக்னம் செல்லும்போதும் வீட்டைவிட்டு வெளியே சென்றவர்கள் இருக்குமிடம் தெரிந்தாலும் வர மறுக்கிறார்கள்.
மறைவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்கும்போது சுப அல்லது அசுப நிகழ்விற்காக ஒருவர் குடும்பத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். சுப செயல்களான படிப்பு, உத்தியோகம் போன்றவற்றிற்காக ஒருவர் வெளியே தங்கினால் 3, 6-ஆம் பாவம் இயங்கும்.
ஒருவர் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் 8, 12-ஆம் பாவகம் சுய ஜாதக தசாபுக்திரீதியாகவோ அல்லது கோட்சாரரீதியாக இயங்கும். ஒருவர் காணாமல் போவதற்கு அதிகப் படியான காரணம் குடும்ப சூழ்நிலை களாகவே அமைகிறது. கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, கடன், உடன்பிறந்த வர்கள், பெற்றோர்களுடன் மனவேதனை போன்ற பல்வேறு காரணங்களாக இருக்கிறது. தற்போது ஜாதகம் பார்க்க வருபவர்களில் அதிகப்படியாக கணவன்- மனைவி கருத்து வேறுபாடுதான் அதிகமாக உள்ளது. 60 வயதை தாண்டி யும் பிரிந்துவாழ விரும்புகி றார்கள்.
வாலிபத்தில் நகமும் சதையுமாக வாழ்ந்த தம்பதி கள்கூட பிரிவினையை விரும்புகிறார்கள். இது ஒரு வயோதிக தம்பதிகளுக்கு 25-1-2025 அன்று காலை 10.49 மணிக்கு பார்க்கப்பட்ட சோழிப் பிரசன்னம்.
ஆண் மட்டும் பிரசன்னம் பார்க்க வந்திருந்தார்.
நாள்: 25-1-2025 (தை 12)
கிழமை: சனி
நேரம்: காலை 10.49 மணி
திதி: ஏகாதசி
யோகம்: துருவம்
நட்சத்திரம்: கேட்டை
உதய லக்னம்: மீனம்
சோழி லக்னம்: மிதுனம்.
உதய லக்னத்தில் ராகு நின்றாலும் லக்ன டிகிரி ராகுவை கடந்து சென்றதால் பிரசன்னத்திற்கு ராகுவால் பாதிப்பில்லை.
உதய லக்னத்தின் அதிபதி குருபகவான் மூன்றாம் இடத்தில் வக்ரகதியில் சஞ்சரித் தார். மூன்றாமிடம் என்பது சிறு தூர இடப்பெயர்ச்சி பற்றி கூறக்கூடிய இடமாகும். சோழி லக்னத்தில் 6, 11-க்கு டைய செவ்வாய் வக்ரகதியில் சஞ்சரித்தார். குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சூரியன் புதன் பார்வை. இரண்டாம் அதிபதி சந்திரன் ஆறில் நீசம். சோழி லக்னாதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் 3-ஆம் அதிபதி சூரியனுடன் இணைந்து 7-ஆம் அதிபதி குருவின் பார்வையில் சஞ்சாரம் செய்தார்கள்.
ஏழாம் அதிபதி குரு லக்னத்திற்கு 12-ஆமிடத்தில் வக்ரகதியில் சஞ்சரித்த தாலும் ராகு- கேதுவின் மையப்புள்ளியில் சோழி லக்னம் நின்றதாலும் மனைவி சொத்து தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாரா என்று கேட்டேன்.
கேட்டையும் கிணத்தடி நீரும் ஒரு ரகசியத்தைச் சொல்லும் என்பது பழமொழி. அவர் வந்த நாளும் நட்சத்திரமும் சில ரகசியத்தை உணர்த்தியது. அவர் குடியிருக்கும் வீட்டிற்கு தென் கிழக்கு பகுதியிலுள்ள சகோதர உறவு முறையினர் வீட்டில் தங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. மூன்று மாதம் கழித்துவர வாய்ப்புள்ளது என்று கூறப் பட்டது. மேலும் பிரஜகரிடம் நீங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் ஒரு தெய்வத்தை வழிபட்டு அந்த தெய்வத்திற்கு சில வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை வைத்துவிட்டு நிறைவேற்றாமல் அடுத்த தெய்வத்தை கும்பிடுகிறீர்கள். இதேபோல் பல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறா மல் உள்ளது. அதில் கவனம் செலுத்தி பிரார்த்தனைகளை நிறைவேற்றினால் குடும்பத்தில் சங்கடம் குறையும் என்று பலன் கூறப்பட்டது. 37 வருட தாம்பத்தியம். நல்ல புரிதலுடன் வாழ்ந்த எங்களுக்குள் முரண்பாடு அதிகமாகிறது என்றார்.
அவர்களின் ஜாதகத்தை பரிசீலனை செய்ததில் மனைவிக்கு மூன்றாம் அதிபதி தசா. கணவருக்கு ஆறாம் அதிபதி தசா. பிரிந்து வாழ்ந்தால் மட்டும் பிரச்சினை முடிந்துவிடாது. ஒரு பொருள்மேல் நமது பெயர் எழுதியிருந்தால் அந்தப் பொருள் நம்மை தேடி வந்துவிடும். பிரார்த்தனைகளால் மட்டுமே எதையும் வெல்லமுடியும். இந்தப் பிறவியில் உங்களுக்கு என்று எழுதப்பட்ட பொருள் உங்களை விட்டு போகாது என்று கூறினேன். இவ்வளவு வயதிற்குமேல் விட்டுக்கொடுத்து வாழாவிட்டால் 37 வருட தாம்பத்தியத்திற்கு மதிப்பில்லை என்பதை உணர்த்தினேன். பிரசன்ன லக்னாதிபதி புதனை ஏழாம் அதிபதி குரு பார்த்ததால் மனைவி சில நாட்களுக்கு முன்பு திரும்பிவந்தார்.
இனி அடுத்த வாரம் பல வருடங்களுக்கு முன் காணாமல் போனவர் எப்படி வீடு வந்தார் என்பதை பிரசன்னம் மற்றும் ஜாதகத் தின் மூலமாக விளக்கமாகப் பார்க்கலாம்.
-சந்திப்போம்.
செல்: 9865220406