இந்த வார ராசிபலன்

/idhalgal/balajothidam/inata-vaara-raacaipalana

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-3-2018 முதல் 10-3-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

5-3-2018- துலாம்.

7-3-2018- விருச்சிகம்.

9-3-2018- தனுசு.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 1,

பூரட்டாதி- 1, 2, 3.

செவ்வாய்: கேட்டை- 3, 4,

மூலம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 1, 2, 3.

குரு: விசாகம்- 4.

சுக்கிரன்: பூரட்டாதி- 4,

உத்திரட்டாதி- 1, 2.

சனி: மூலம்- 3.

ராகு: ஆயில்யம்- 1.

கேது: திருவோணம்- 3.

குரு அதிசாரம்.

7-3-2018- குரு வக்ரம் ஆரம்பம்.

10-3-2018- தனுசு செவ்வாய்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சி பெறுகிறார். குருவோடு சம்பந்தம். 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம். எனவே செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்த குற்றம் விலகுகிறது. பாக்கியாதிபதி 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் (செவ்வாயோடு சேர்ந்து குரு பார்ப்பதால்) வாக்கு, தனம், குடும்பம், வித்தை ஆகிய இரண்டாமிடம் சம்பந்தமானவற்றில் எந்தக் குறைபாடும் வராது. 4-ஆம் இடம் கல்வி ஸ்தானம், 2-ஆம் இடம் வித்தை ஸ்தானம். படித்துப் பெறும் அறிவு 4-ஆமிடம். கேள்வி அறிவால்- இயற்கை அருளால் பெறும் ஞானம் 2-ஆமிடம். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்று ஒரு பழமொழி உண்டு. அது சேர்க்கையினால் வரும் அனுபவ ஞானம். ஒரு சிவில் இன்ஜினியர் கட்டடம் கட்டுவதற்கு டிப்ளமோ படிக்கலாம்; பி.ஈ., படிக்கலாம். அது பள்ளிப்படிப்பு. தூக்கணாங்குருவி கூடு கட்டுகிறதே! அது எந்தக் கல்லூரியில் படித்திருக்கிறது? குளத்தில் மீன் குஞ்சு நீந்துகிறதே! அது எந்த நீச்சல்குளத்தில் நீச்சல் கற்றது? ஆகவே இயற்கை அறிவு தருவது ஒரு ஞானம். "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்று வள்ளுவர் கூறுவார். இதற்கெல்லாம் பூர்வபுண்ணிய ஞானம் வேண்டும். 5, 9-ஆமிடங்கள் வலுப்பெற்றால் பூர்வ புண்ணிய ஞானம் வரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம் பெறுகிறார். 2, 5-க்குடைய புதன் அவருடன் நீசமடைகிறார். உச்சனோடு சேர்ந்த நீசன் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். நீசகிரகம் பங்கம் அடைவதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், நீச கிரகத்தை உச்ச கிரகம் பார்த்தாலும், நீச கிரகம் உச்சனோடு சம்பந்தப்பட்டாலும், ராசியில் நீசமடையும் கிரகம் அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றா லும் அல்லது லக்ன கேந்திரம், சந்திர கேந்திரம் பெற்றாலும் நீசகிரகம் ராஜயோகமாக மாறும். ரிஷப ராசிக்கு 2, 5-க்குடைய ஆதிபத்தியம் பெற்றவர் புதன். அதனால் வாக்கு, தனம், குடும்பம், வித்தை பலமடையும். புத்திர தோஷம் விலகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். இது பாவ ஆராய்ச்சிப் பலன். அதேபோல புதன் தசை, புதன் புக்தி நடந்தாலும் அவையும் யோகப்பலனைத் தரும். நீச கிரகமாகிய புதனுக்கு வீடு கொடுத்த குரு 9-ல் நின்று புதனைப் பார்ப்பதும் நீசபங்க ராஜயோகம். எனவே, ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்தாலும் நீசபங்க ராஜயோகத்தால் கெடுதல்கள் வி

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-3-2018 முதல் 10-3-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

5-3-2018- துலாம்.

7-3-2018- விருச்சிகம்.

9-3-2018- தனுசு.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 1,

பூரட்டாதி- 1, 2, 3.

செவ்வாய்: கேட்டை- 3, 4,

மூலம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 1, 2, 3.

குரு: விசாகம்- 4.

சுக்கிரன்: பூரட்டாதி- 4,

உத்திரட்டாதி- 1, 2.

சனி: மூலம்- 3.

ராகு: ஆயில்யம்- 1.

கேது: திருவோணம்- 3.

குரு அதிசாரம்.

7-3-2018- குரு வக்ரம் ஆரம்பம்.

10-3-2018- தனுசு செவ்வாய்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சி பெறுகிறார். குருவோடு சம்பந்தம். 10-க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம். எனவே செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்த குற்றம் விலகுகிறது. பாக்கியாதிபதி 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் (செவ்வாயோடு சேர்ந்து குரு பார்ப்பதால்) வாக்கு, தனம், குடும்பம், வித்தை ஆகிய இரண்டாமிடம் சம்பந்தமானவற்றில் எந்தக் குறைபாடும் வராது. 4-ஆம் இடம் கல்வி ஸ்தானம், 2-ஆம் இடம் வித்தை ஸ்தானம். படித்துப் பெறும் அறிவு 4-ஆமிடம். கேள்வி அறிவால்- இயற்கை அருளால் பெறும் ஞானம் 2-ஆமிடம். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்று ஒரு பழமொழி உண்டு. அது சேர்க்கையினால் வரும் அனுபவ ஞானம். ஒரு சிவில் இன்ஜினியர் கட்டடம் கட்டுவதற்கு டிப்ளமோ படிக்கலாம்; பி.ஈ., படிக்கலாம். அது பள்ளிப்படிப்பு. தூக்கணாங்குருவி கூடு கட்டுகிறதே! அது எந்தக் கல்லூரியில் படித்திருக்கிறது? குளத்தில் மீன் குஞ்சு நீந்துகிறதே! அது எந்த நீச்சல்குளத்தில் நீச்சல் கற்றது? ஆகவே இயற்கை அறிவு தருவது ஒரு ஞானம். "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்று வள்ளுவர் கூறுவார். இதற்கெல்லாம் பூர்வபுண்ணிய ஞானம் வேண்டும். 5, 9-ஆமிடங்கள் வலுப்பெற்றால் பூர்வ புண்ணிய ஞானம் வரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம் பெறுகிறார். 2, 5-க்குடைய புதன் அவருடன் நீசமடைகிறார். உச்சனோடு சேர்ந்த நீசன் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். நீசகிரகம் பங்கம் அடைவதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், நீச கிரகத்தை உச்ச கிரகம் பார்த்தாலும், நீச கிரகம் உச்சனோடு சம்பந்தப்பட்டாலும், ராசியில் நீசமடையும் கிரகம் அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றா லும் அல்லது லக்ன கேந்திரம், சந்திர கேந்திரம் பெற்றாலும் நீசகிரகம் ராஜயோகமாக மாறும். ரிஷப ராசிக்கு 2, 5-க்குடைய ஆதிபத்தியம் பெற்றவர் புதன். அதனால் வாக்கு, தனம், குடும்பம், வித்தை பலமடையும். புத்திர தோஷம் விலகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். இது பாவ ஆராய்ச்சிப் பலன். அதேபோல புதன் தசை, புதன் புக்தி நடந்தாலும் அவையும் யோகப்பலனைத் தரும். நீச கிரகமாகிய புதனுக்கு வீடு கொடுத்த குரு 9-ல் நின்று புதனைப் பார்ப்பதும் நீசபங்க ராஜயோகம். எனவே, ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்தாலும் நீசபங்க ராஜயோகத்தால் கெடுதல்கள் விலகும். உதாரணத்துக்கு கலைஞர் ரிஷப ராசி. அட்டமத்துச்சனி நடந்தாலும் உடல்நலனில் சிறு சங்கடங்கள் நிலவினாலும் 94 வயதிலும் ஆயுள்குற்றமில்லாமல் தெளிவாக இருக்கிறார்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீசம்; உச்சம் பெற்ற சுக்கிரனோடு சம்பந்தம். ராசிநாதனும் 4-க்குடையவருமான புதன் நீசம் பெற்றாலும் நீசபங்க ராஜயோகப் பலனை அடைகிறார். மிதுன ராசிக்கு கண்டச்சனி நடந்தாலும் (7-ஆமிடத்துச் சனி) பாதிப்புக்கு இடமில்லை. 9-ஆமிடம், ஜென்ம ராசி, 4-ஆமிடங்களை சனி பார்க்கிறார். எனவே குருவருளும் திருவருளும் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும். செல்வாக்கு, பெருமை, திறமை செயல்தன்மை இவற்றுக்கு கேடு, கெடுதிக்கு இடமில்லை. தேக சுகம், பூமி, மனை, வீடு, வாகன பாக்கியம் இவற்றுக்கும் குறைவில்லை. 10-ஆமிடத்தை 10-க்குடைய குருவும் பார்ப்பதால் தொழில், வாழ்க்கை, செய்யும் பணி இவற்றிலும் தேக்கம் எதுவுமில்லை. எல்லாம் வழக்கம்போல இயங்கும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் மனைவியின் பெயரில் அசையும் சொத்துகளும், அசையாச் சொத்துகளும் ஏற்பட வாய்ப்புண்டு. 3-க்குடைய சூரியன் 9-ல் நின்று தன் ஸ்தானத்தைத் தானே பார்ப்பதால் உடன்பிறந்தவர்கள் வகையிலும், தகப்பனார் வகையிலும் நன்மைகள் உண்டாகும். சிலர் அது சம்பந்தமாக கடன்கள் வாங்க நேரிடும். 2-ல் உள்ள ராகு பேச்சில் விவகாரம் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

murugan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ல் சனி இருப்பது மிக நல்லது. 6, 9-க்குடைய குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் ஜென்ம ராகுவின் தோஷம் விலகும். தொழில்துறையிலும் உத்தியோகத்திலும் செய்யும் வேலையிலும் சுமை அதிகமாக இருந் தாலும் வெற்றி எளிதாகும். மேலிடத்தாரின் பாராட்டுக்கு ஆளாகலாம். புதுமுயற்சிகளில் ஆர்வத்தோடும் வேகத்தோடும் இறங்கி செயல்பட்டு வெற்றி பெறலாம். மனதில் வகுத்த திட்டங்கள் அனைத்தும் வெற்றியாகும். 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமான 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானம் என்பதால், அங்குள்ள சனி தொழில்ரீதியான கடன்களை உருவாக்கலாம். சுபமுதலீடுகளைச் செய்யலாம். சொந்தத்தொழில் செய்கிறவர்கள் கிளைகளை ஆரம்பித்துப் பெருமை அடையலாம். உடன்பிறந்தவர்களோடு அனுசரித்து லாபம் தேடலாம். நட்புடன் நலம் பெறலாம். 7-ல் கேது நிற்க, 7-க்குடையவர் 6-ல் மறைந்தாலும் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் மனைவி வகை வைத்தியச்செலவு உண்டாகும். தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் சொத்துசுகம் விருத்தி, வீடு வாகன அமைப்பு, தொழில் விருத்தி எல்லாம் உருவாகும். அதற்காக கடனும் உருவாகும். தேக நலம் சுகமடையும். சிலருக்கு இடப்பெயர்ச்சி உருவாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார்.5-க்குடைய குருவும் 9-க்குடைய செவ்வாயும் 4-ல் சேர்ந்திருப்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவான முன்னேற்றம் தெரியும். செல்வநிலை உயரும்விதத்தில் அனுகூலமான பலனை ஏற்படுத்தும். தகப்பனார் அல்லது தகப்பனார் வர்க்கம், தாயார் அல்லது தாயார் வர்க்கம் இவற்றில் திருப்தியான பலன்களை எதிர்பார்க்கலாம். கடந்தகால வருத்தங்களும் பூசல்களும் விலகி இணக்கமும் நெருக்கமும் ஏற்படும். 12-ல் உள்ள ராகு வீண்விரயத்தைக் குறைத்து சேமிப்பை ஏற்படுத்துவார். 6-ஆமிடத்துக் கேது கடன்களை நிவர்த்தி செய்வதோடு போட்டி, பொறாமை, நோய், வைத்தியச்செலவு போன்ற 6-ஆமிடத்துப் பலனையும் இல்லாது ஒழிப்பார். 6-ஆமிடம் பங்காளி ஸ்தானம். அந்த வீட்டுக்குடையவர் 5-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பங்காளி வகையில் ஆதாயமும் அனுகூலமும் லாபமும் உண்டாகும். பங்காளிகளுக்குள் நடந்த நீண்டகால வழக்கு, வில்லங்கம், வியாஜ்ஜியம் எல்லாம் இப்போது விலகி சமரச உடன்பாடு உண்டாகும். மனைவிக்கு தேக ஆரோக்கியம் ஏற்படுவதோடு மனைவி பெயரில் சேமிப்புத் திட்டங்களை உருவாக்கலாம். மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் அல்லது லைஃப் இன்ஷ்யூரன்ஸ் போன்ற வகையிலும் முதலீடுகள் செய்யலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசபங்க ராஜயோகமாக இருந்து ராசியைப் பார்க்கிறார். 9-க்குடைய சுக்கிரனும் 10-க்குடைய புதனும் 7-ல் இணைந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். சிலருக்குத் தகப்பனார் வகையில் யோகம். சிலருக்கு மனைவி வகையில் யோகம். சிலருக்குத் தொழில் வகையில் யோகம். 4-க்குடைய குருவின் பார்வை புதனுக்கும் சுக்கிரனுக்கும் கிடைப்பதால் சிலருக்குத் தாயார்வழி யோகம் என்று குறிப்பிடலாம். பணம் சேமிப்பு, பிள்ளைகளின் சுபகாரியம் இவற்றில் தெளிவான முன்னேற்றம் தெரியும். உங்கள் விடாமுயற்சியாலும் தெய்வப் பிரார்த்தனை பலத்தாலும் நூற்றுக்கு நுறு வெற்றிகளை அடையலாம். சிலருக்குத் தாயார் வகையில் சொத்துகள் கிடைக்கும். தாயார் வகையில் இன்ஷ்யூரன்ஸ், சேமிப்புப் பணமும் வந்துசேரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கலாம். இரண்டு சக்கர வாகனத்தை மாற்றி கார் வாங்கலாம். 5-ல் கேது- புத்திர தோஷம் என்று சொன்னாலும் தசாபுக்திகள் தெளிவாகவும் பலமாகவும் இருப்பதால் தோஷமில்லை. கர்ப்பப்பை சம்பந்தமான தோஷமுள்ள பெண்கள் கும்பகோணம் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடுவதாலும் அவர் மந்திரத்தை ஜெபிப் பதாலும் கர்ப்பப்பை தோஷம் விலகும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் உச்சம் பெறுகிறார். 9, 12-க்குடைய புதன் சம்பந்தப்படுகிறார். புதனுக்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 2-ல் நின்று அவர்களைப் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்திலும் குடும்பச் சூழ்நிலையிலும் யோகமும் முன்னேற்றமும் உண்டாகும். அனைத்து செயல்களிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். துலா ராசிக்கு 10-ல் உள்ள ராகுவும், 4-ல் உள்ள கேதுவும் சிலருக்குத் தொழில் அல்லது வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும். சிலருக்கு இருப்பிடத்தில் பிரச்சினைகளை உண்டாக்கும். 10 என்பது தொழில், வாழ்க்கை, வேலையைக் குறிக்கும். 4 என்பது தாயார், கல்வி, சுகம், வாகனம் இவற்றைக் குறிக்கும். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் 4-ஆம் பாவம், 10-ஆம் பாவத்தால் பிரச்சினைகளை சந்திக்க நேரும். தெளிந்த நீரோடையில் கல்லை விட்டு எறிந்தால் கலங்குவதுபோல தாயார் வகையிலேயோ தாயின் சொந்தக்காரர் வகையிலேயோ சிலருக்கு வாழ்க்கையில், சந்தோஷத்தில் பிரச் சினைகள் உருவாகும். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல உற்றவர்களும் மற்றவர்களும் உங்களுக்கு பிரச்சினைகள் வராதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு- வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு கொஞ்சல் அவலையும் சர்க்கரையும் கொடுத்த மாதிரி!

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசி நாதன் செவ்வாய் ஆட்சிபெறுகிறார். அவருடன் 2, 5-க் குடைய குருவும் பலம்பெறுகிறார். ராசிக்கு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களை குரு பார்க்கிறார். அதேபோல ராசிக்கு 7-ஆமிடத்தைச் செவ்வாய் பார்ப்பதோடு 4-ஆமிடம், 8-ஆமிடங்களையும் பார்க்கிறார். தொழில், வியாபாரம், மனைவி, மக்கள் உறவு, வாழ்க்கை எல்லாவற்றிலும் அமோகமான நற்பலன்கள் நடைபெறும். தோப்பு துரவு, வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். குழந்தைகளால் பெருமிதமும், அவர்களின் செயல்களாலும் நடவடிக்கையாலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். பிள்ளைகளுக்கு நற்காரியங்கள், சுபகாரியங்கள் நிறைவேறும். அவர்களின் வெளிநாட்டு வேலை முயற்சிக்கு நற்பலன் கிடைக்கும். 2-ஆமிடத்துச் சனி 4-ஆமிடம், 8-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்ப்பதால் தொழில்யோகம், புதிய வாய்ப்புகள், பதவி உயர்வு போன்ற நன்மைகள் ஏற்படும். சகோதர வகையில்- குறிப்பாக சகோதரிகள் வகையில் சஞ்சலம், சந்தோஷக் குறைவு, சங்கடங்களை சந்திக்க நேரும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு எதிராகவே அமையும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் அமர்கிறார். 12-க்குடைய செவ்வாயும் 12-ல் ஆட்சி பெறுகிறார். எனவே, தவிர்க்கமுடியாத செலவுகளை சந்திக்க நேரும். சிலருக்கு வைத்தியச் செலவு, சிலருக்கு தேவையற்ற அலைச்சல் திரிச்சல், பயணச் செலவு, சிலருக்கு இடப்பெயர்ச்சி, தொழில்மாற்றத்தால் செலவு ஏற்படும். இவையெல்லாம் தவிர்க்கமுடியாத- நியாயமான விரயம் என்றாலும், ஒருசிலருடைய அனுபவத்தில் ஏமாற்றமான விரயங்களும் இருக்கும். ஒரு அன்பர் மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டார். திருமணத்திற்கு வேண்டிய பணவசதி கேட்ட இடத்தில் கிடைக்க வில்லை. பற்றாக்குறையாகிவிட்டது. அவர் நண்பர் அனுதாபப்பட்டு வேறொருவர் கொடுத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொடுத்து, மொய்ப்பணத்தில் திருப்பிக் கொடுத்துவிடு என்று உதவினார். நல்லமுறையில் திருமணமும் நடந்தது. மொய்ப்பணமும் தாராளமாக வந்தது. ஆனாலும் கொடுக்கவேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் வேறு செலவுக்குப் பயன்படுத்திவிட்டார். பணம் கொடுத்த வருக்கு இது ஒரு பாடம் என்றும், ஆபத்தி லும் பாவம் பார்க்கக்கூடாது என்ற ஞானமும் உதயமாகிவிட்டது. இது ஒரு ஏமாற்றமான விரயம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசியில் ஜென்மத்தில் கேது நிற்க, 7-ல் ராகு நிற்கிறார். ராசிநாதன் 12-ல் மறைகிறார். உடல்நலனில் கவனம் தேவை. அவ்வப்போது விரயச் செலவுகள் ஏற்படும் என்றாலும் அதை சுபவிரயமாக மாற்றி வீண்விரயத்தைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி உறவில் பனிப்போர் நிகழும். சிலருடைய வாழ்க்கை மூடுபனி யாக இருக்கும். அட்டமாதிபதி 2-ல் இருப்பதால் ஒருவருக்கொருவர் ஈகோ உணர்வால் வாக்குவாதங்களை சந்திக்கநேரும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவ தில்லை என்ற தத்துவப்படி நடந்து கொண்டாலும், விவாதங்களை விலக்கிக்கொண்டாலும் குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் இருக்கும். சச்சரவுக்கு இடம் இருக்காது. "குடும்பத்தில் அன்பு பெருக வேண்டுமானால் இருவரும் (கணவன்- மனைவி) விடுமுறையை அடிக்கடி எடுத்துக் கொள்ளவேண்டும்' என்று பெர்னாட்ஷா சொன்னார். அதை உண்மையாக்கும் பொருட்டு மனைவிமார் பிறந்த இடம் போவதும், கணவரைப் பிரிந்திருப்ப தும் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். இதற்கு விரயச்சனியும் ஒரு காரணம்படிக்கும் மாணவர்கள் தாயின் கையால் சாப்பிட முடியாமல் ஹாஸ்டலில் தங்கிப். படிக்கலாம். வேலை செய்பவர்கள் மனைவி கையில் சாப்பிடமுடியாமல் ஹோட்டலில் சாப்பிடும் சூழ்நிலையும் உருவாகலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் குரு வீட்டில் நின்று ராசியைப் பார்க்கிறார். செல்வாக்கு, திறமை, பெருமை இவற்றுக்குக் குறைவில்லை. செயல்களிலும் நிதானமும் ஆர்வமும் அக்கறையும் நிலவும். 10-ல் செவ்வாயும் குருவும் பலம்பெற, 2-ல் புதனும் சுக்கிரனும் பலம்பெறுவதால் பொருளாதாரத்தில் தேக்கம் இல்லை. மனதளவிலும் ஏக்கமில்லை. அதேசமயம் பெரும் பாலானவர்களுக்கு காரண மில்லாத கவலைகளால் தூக்கமில்லை. 6-ஆமிடத்து ராகுவும், 12-ஆமிடத்துக் கேதுவும் சத்ருஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவாரணம் போன்ற பலன்களைத் தந்தாலும் மனதில் மட்டும் திருப்தி இருக்காது. என்றாலும் தொட்டது துலங்கும். எந்தச் செயல்களிலும் அரைகுறை இல்லாமல் முழுமையடையும். சிலருக்கு மனைவியாலும் (பெண்கள் ஜாதகமானால் கணவரா லும்), சிலருக்குப் பிள்ளைகளாலும் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனைவியின் ஆலோசனை குடும்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும். திட்டமிட்ட பணிகளை விடாமுயற்சி யாலும் தீவிரப் பிரயாசையாலும் செயல்படுத்தி வெற்றி காணலாம். நண்பர்களால் நல்ல ஆதரவு கிடைக்கும். குறிப்பாக முஸ்லிம் இன நண்பர்களால் பெருத்த நன்மை உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசியை அதிசார குரு 9-ல் நின்று பார்க்கிறார். அவருடன் செவ்வாய் இணைந்திருக்கிறார். செவ்வாய்- குரு சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். லாப விரயாதிபதி சனி 10-ல் இருக்கிறார். பணவரவு- செலவுகளில் பஞ்சமில்லை என்றாலும், ஒரு திட்டத்திற்காக எடுத்து வைத்த சேமிப்பு இன்னொரு தவிர்க்கமுடியாத திட்டத்தில் செலவாகும். அதனால் பழைய திட்டத்திற்கு வேறுவகையில் பணம் திரட்டி செயல்படுத்தவேண்டிய நிலை ஏற்படும். 7-க்குடைய புதன் நீசம் என்றாலும் புதனோடு சேர்ந்த சுக்கிரன் உச்சம் என்பதால் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்பும் ஆயுள்தீர்க்கமும் நிலவும். என்றாலும் தேவையற்ற கற்பனைபயம், வீண் விரயம், தவிர்க்கமுடியாத செலவுகள் உண்டாகும். சிலருக்கு கணவன் அல்லது மனைவி வகையில், வேறுசிலருக்கு தாய்- தந்தை வழியிலும், இன்னும் சிலருக்குத் தொழில் வகையிலும் அல்லது உடன்பிறந்தவர்கள் வகையிலும் மேற்படி செலவுகள் ஏற்படும். ஆனாலும் நினைத்த திட்டத்தை செயல்படுத்தி திருப்தி அடைந்துவிடலாம். அதற்கான மனவுறுதியையும் தைரியத் தையும் ராகு பகவான் அருள்வார். (5-ஆமிடத்து ராகு).

இதையும் படியுங்கள்
Subscribe