ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணமாக இருக்கிறார். அவருடன் 10-க்குடைய சனி சேர்க்கை. அதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. அப்படி தர்மகர்மாதிபதி யோகம் அமைந்த ஜாதகர் களுக்கு அதிர்ஷ்டதேவதையின் அரவணைப்பும் ஆசியும் கிடைக்கும். 3-ல் உள்ள ராகு தைரியத்தையும் வைராக்கியத்தையும் வாரிவழங்கும். அதேபோல சகோதர சகாயமும், நண்பர்களின் நல்லுதவியும் பெருகும். அதுமட்டுமல்ல; ராசியை பாக்கியாதிபதியான குரு பார்ப்பதால், குறையேதுமில்லை. எல்லாமே நிறைதான்! அதனால் நிம்மதிதான். 3-ல் ராகு. 9-ல் சனி, கேது இருப்பதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஒருசிலருக்கு தந்தைவழியில் அல்லது பங்காளிவகையில் கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் உருவாகலாம். வழக்கு வியாஜ்ஜியங்களையும் சந்திக்கும் அவசியமுண்டாகும். 6-க்குடைய புதன் 6-க்கு 6-ல் (ராசிக்கு 11-ல்) இருப்பதால் சத்ரு ஜெயமுண்டாகும். எதிரிகள் உதிரிகளாகிவிடுவார்கள். 5-க்குடைய சூரியன் 12-ல் மறைவதால், சிலருக்கு பிள்ளைகள்வகை யில் தொல்லைகளும் கவலைகளும் ஏற்படலாம். என்றாலும் 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் எல்லா பிரச்சினைகளும் இல்லாதொழிந்துவிடும். 2, 7-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் அமர்ந்து குரு பார்வையைப் பெறுவதால் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். திருமண மாகாதவர்களுக்குத் திருமண யோகமும், புத்திர பாக்கியம் இல்லா தவர்களுக்கு வாரிசு யோகமும் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
2020 டிசம்பர்வரை ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடைபெறு கிறது. குருவீட்டில் குருவோடு சேர்ந்திருப்பதால் அட்டமச்சனி பொங்குசனியாக மாறிப் பொலிலிவைத்தரும். திருவள்ளுவர் சொல்லிலிய மாதிரி "பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்பதுபோல, நல்லதற்காகச் சொல்லும் பொய்யும் நன்மையாக மாறிவிடும். மகாபாரதக் கதையில் குருக்ஷேத்திரப் போரில், துரோணரை யுத்த களத்திலிலிருந்து வெளியேற்ற கிருஷ்ணர் ஒரு ராஜதந்திரத் தைக் கையாண்டார். துரோணாச்சாரியாரின் ஒரே ஆசைமகன் அஸ்வத்தா மாவை அர்ஜுனன் கொன்றுவிட்டான் என்ற செய்தியை- வதந்தி யைப் பரப்பினார். துரோணர் நம்பாமல் தர்மரிடம் "அஸ்வத்தாமா இறந்தது உண்மையா' என்று கேட்க, தர்மரும் "அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது உண்மை' என்றுகூற, யானை என்ற சொல் துரோணர் காதில் விழாதபடி கிருஷ்ணர் கங்கை ஊதியதாகவும், துரோணர் மனம் வெறுத்து வில்லைத்தூக்கியெறிந்துவிட்டு யுத்த களத்தைவிட்டு வெளியேறியதாகவும் சொல்லப் படும். யுத்த தர்மத்தில் இது ஏற்றுக்கொள்ளப் படும்! வெற்றிபெறுவதற்குக் கையாளும் ராஜதந்திரமாகும்! அது பாவச் செயல் பட்டியலிலில் சேராது! அதேபோல ஒரு உயிரைக் காப்பாற்றும் பொருட்டு பொய் சொல்லலாம் என்று குறள் கூறுகிறது. இதுதான் ஆபத்துக்குப் பாவமில்லை என்பது! எட்டில் முக்கியமான கிரகங்கள் மறைவது தோல்வியையும், ஏமாற்றத்தையும் குறிக்குமென்றாலும், குருவீட்டில் முக்கிய கிரகங்கள் மறைவதால் தோஷமில்லை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அதனால் ஜென்ம ராகுவால் தோஷம் ஏற்படாது. மேலும் ராகுவும் சுயசாரம் பெற்று குரு, சனியால் பார்க்கப்படுகிறார். குரு- மிதுன ராசிக்கு 10-க்குடையவர். சனி- மிதுன ராசிக்கு 9-க்குடையவர். அதனால் தர்மகர்மாதிபதிகளின் சம்பந்தம் கிடைக் கும்போது எந்த தோஷமும் அணுகாது. அதாவது தடுப் பூசி போட்டமாதிரி! அதனால் மற்ற நோய்கள் அணுகா தல்லவா! (கொரானாவைத் தடுத்தமாதிரி). அதுதான் தர்மகர்மாதிபதியின் சேர்க்கை- சம்பந்தப் பலனாகும்! ரப்பர் கிளவுஸ் (கையுறை) மாட்டிக்கொண்டு கரன்டு வேலை செய்வது மாதிரி! (ஷாக் அடிக்காது). மேலும் 7, 10-க்குடைய குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதும் ஒரு பலமாகும்! (விதி விலக்கு). எல்லா சாபங்களுக்கும் சாபவிமோசனம் இருப்பதுபோல, எல்லா பாவங்களுக்கும் பாவவிமோசனங்களும் உண்டு. அதுதான் விதிவிலக்கு. அரசு வேலைக்கு 30 அல்லது 35 வயது என்று ஒரு வரையறை திட்டம் இருந்தாலும், பிற்பட்ட இனத்தவர்களுக்கு 40 வயதுவரை விதிவிலக்கு என்று அரசுவிதி இருப்பதுபோல எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. உதாரணமாக, தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ் வாகனமும் "நோ என்ட்ரி'யில் (ஒருவழிப்பாதையில்) போகலாம் அல்லவா! அப்படித்தான் எல்லாம்! குரு பார்வையாலும், தர்மகர்மாதிபதி சேர்க்கை யாலும் மிதுன ராசிக்கு ஜென்ம ராசியின் கெடுபலனுக்கு நிவர்த்தி ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு, செவ்வாய், சனி, கேது மறைகிறார்கள். 12-ல் ராகு மறைகிறார். 8-ல் புதன் மறைகிறார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு கெடுதலா- நன்மையா என்றால் கெடுதல் இல்லை. ஆனால் நன்மைகள் உண்டென்றாலும் தாம தமாக நடக்கும்! நம்பிக்கை தளர வேண்டாம்! ஈர விறகு தாமதமாகப் பற்றும். கற்பூரம் சட்டென பற்றிக்கொள்ளும் ஐந்து கிரகங் களின் மறைவு உங்களுக்கு தாமதப் பலனைத் தான் தருமேதவிர, தோல்வியைத் தராது. கூட்ஸ் ரயில் மெதுவாகவே ஓடும். சாதாரண ரயில் அதைவிட வேகமாகப்போகும். எக்ஸ்பிரஸ் ரயில் அதைவிட வேகமாக ஓடும். மறைவுபெற்ற கிரகங்கள் கூட்ஸ் ரயிலுக்குச் சமம். யோகமான தசாபுக்திகள் நடக்கும் ஜாதகர்கள் சாதாரண ரயிலுக்குச் சமம். யோக மானச் தசாபுக்திகளும் சாதகமான கோட்சாரமும் அமைந்த ஜாதகர்கள் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குச் சமம்! அதேபோல ஜாதகத்திலும் முக்குண வேளை என்றுண்டு. சாத்வீக வேளை, ராஜஸ வேளை, தாமஸ வேளை. இப்படி வேளைக் காலங்களில் குறிப் பிட்ட லக்னங்களுக்கு, குறிப்பிட வேளை உத்தமம் என்று ஜோதிடவிதி சொல்லப்படுகிறது. 6-ஆமிடம் மறைவு ஸ்தானமென்று சொல்லப் பட்டாலும், 10-ஆமிடமான தொழில், வாழ்க்கை, வேலை, உத்தியோகம் போன்ற இடத்துக்கு அதுவே பாக்கியஸ்தானமாகும். ராசி அல்லது லக்னத்துக்கு 6, 8, 12 போன்ற ஸ்தானங்கள் வேறு ஒரு பாவகத்துக்கு (இடத்துக்கு) சுப அதிபதியாவார்கள். உதாரணமாக, ராசி அல்லது லக்னத்துக்கு 6-ல் மறையும் கிரகம் 10-ஆமிடத்துக்கு பாக்கியஸ்தானத்தில் அமரும் கிரகமாகிறது. எந்த வீட்டுக்கும் 5, 9-ல் திரிகோணம் பெறும் கிரகம் அந்த வீட்டுக்கு நன்மையே செய்யும்; கெடுதல் செய்யாது. எனவே கடக ராசிக்கு 6-ல் மறையும் கிரகங்களால் கெடுதலே மிகுதியாகும் என்றோ, நன்மைகளே நடக்காது என்றோ கவலைப்படவேண்டாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் தன் ராசிக்கு 8-ல் மறைகிறார். எந்த ஒரு ஜாதகத் திலும் ராசிநாதனோ, லக்னநாதனோ தன் வீட்டுக்கு 6, 8, 12-ல் மறையக்கூடாது. அதேசமயம் அந்த கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றாலும், திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் பெற்றாலும் அந்த ஜாதகர் சோடை போவ தில்லை. செல்வாக்கு, திறமை, கௌரவத் தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடையலாம். சூரியன் 8-ல் மறைந்தாலும் செவ்வாயின் பார்வையைப் பெறு கிறார். செவ்வாய் சிம்ம ராசிக்கு பாக் கியாதிபதி என்பதோடு, சூரியனின் உச்ச ராசிநாதன் செவ்வாய்தான்! அத்துடன் சூரியன் நின்ற ராசி மீனம். அதன் அதிபதி குரு ஆட்சிபெற்று சிம்ம ராசியில் அமர்கிறார். சிறைத்தண்டனைபெற்ற அரசியல்வாதிகள் தனது செல்வாக்கினால் சகல சுகபோகங் களையும் (அதிகாரிகளின் ஆதரவால்) அனுபவிக்கிறார்கள் அல்லவா- அதுமா திரிதான்! ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு விதிக்கப்பட்ட அல்லது அனுபவித்த தண்டனைக் காலத்துக்கும், இப்போது சிறையில் அடைப்பட்டுள்ள கைதிகளின் அனுபவத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு! வ.உ.சி செக்கிழுத் தார். சுப்பிரமணிய சிவாவுக்கு தாகம் தீர்க்க தண்ணீருக்கு பதில் ஆங்கிலேயர் சிறுநீர் கொடுக்கப்பட்டது. இன்று ஏ கிளாஸ் (முதல் வகுப்பு), கட்டில், மெத்தை, மின்விசிறி போன்ற வசதிகள் உண்டு. மது, புகை போன்ற வசதிவாய்ப்புகள் எல்லாம் கிடைக் கின்றன. கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் பல புத்தகங்களை எழுதி முடித்தாராம். பணவசதி படைத் தவர்களுக்கு சிறைத்தண்டனை என்பது "ஸ்டார் ஹோட்டலில்' தங்குவது மாதிரிதான்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைந் தாலும், அவருக்கு வீடுகொடுத்த சனி 4-ல் அமர்ந்து புதனைப் பார்க்கிறார். அத்துடன் புதனுக்கு சாரம்கொடுத்த (சதயம்) ராகு ராசிக்கு 10-ல் புதனுக்கு 9-ல் இருக்கிறார். எந்த ஒரு கிரகமும் ராசி, லக்னத்துக்கு 6, 8, 12-ல் இருந்தாலும், அவருக்கு சாரம்கொடுத்த கிரகமும், வீடுகொடுத்த கிரகமும் அதற்கு 5, 9-ல் திரிகோணமாக இருந்தாலும், அந்த கிரகம் கெடுபலனைத் தராது. சுபப்பலனே செய்யும். கேந்திர ஸ்தானமும் திரிகோண ஸ்தானமும் புனித கங்கைக்குச் சமம். அசுத்தங்கள் சேர்ந்தாலும் கங்கையின் புனிதம் கெடுவதில்லை. கேந்திர ஸ்தானம் (1, 4, 7, 10) என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோண ஸ்தானம் (1, 5, 9) என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரத்தின் பலன் உழைப்புக்கேற்ற கூலிலி- சம்பளமாகும். திரிகோணத்தின் பலன் உண்மை உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம்- போனஸாகும். காலம் உழைப்பவர்களைக் கைவிடாது. அதிலும் உண்மை, விசுவாசமாக உழைப்பவர்களுக்கு போனஸ் கொடுத்து பாராட்டும். சோம்பேறிகளையும், நம்பிக்கைத் துரோகிகளையும் காலம் எப்போதும் ஆதரிக் காது. அந்த நேரம் மட்டும் சாதகமாகத் தெரிந் தாலும் பின்னொரு காலம் சோதனையையும் வேதனையையும் சந்திக்கத்தான் வேண்டும். உங்களைப் பொருத்தவரை நன்மையே நடக்குமென்று எதிர்பார்க்கலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 3-ல் செவ்வாய்; குரு, சனி, கேது; 9-ல் ராது, 6-ல் சூரியன், 5-ல் புதன், 7-ல் சுக்கிரன் அமர்வது உங்களுக்கு சாதகமான- அனுகூலமான கோட்சார கிரக அமைப்புதான்! எனவே, உங்களுடைய நியாயமான ஆசைகளும் கோரிக்கைகளும் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக, 30 வருடங்கள் தொடர்ந்து உச்சத்தில் வாழ்ந்தவருமில்லை. எச்சத்தில் தாழ்ந்தவருமில்லை என்பார்கள். அது ஏன்? சனிபகவான்தான் மற்ற எட்டு கிரகங்களில் அதிகப்பட்ச காலமாக ஒரு ராசியில் தங்கும் கிரகம். சூரியன், புதன் ஒரு மாதம்; சுக்கிரன் 40 நாள்; செவ்வாய் 45 நாள்; குரு ஒரு வருடம்; ராகு- கேது 18 மாதம்; சனி மட்டுமே இரண்டரை வருடம். சமயத்தில் வக்ரகதியானால் மூன்று வருடம். சந்திரன் இரண்டேகால் நாள்தான். சனியின் ஒரு சுற்று (12 ராசிகளுக்கும்) 30 வருடம். இந்த காலஅளவு (30 வருடம்) ஒவ்வொரு மனித வாழ்விலும் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும். ஒரு நாட்டின் மாற்றம் 360 வருடம். (12 ஷ் 30 = 360). உலகயளவில் 4320 வருடங்களுக்கு ஒரு மாற்றம் (360 ஷ் 12) ஏற்படும். அதை "ஊழிக்காலம்' என்பார்கள். இப்படி காலத்தின் கணக்கு செயல்படுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில்தான் இயற்கை மாற்றம், நோய் மாற்றம் போன்றவை ஏற்படும். தற்காலம் "கொரானா' பயமுறுத்துகிறது. அதேசமயம் எல்லா இயற்கை மாற்ற விளைவுகளுக்கும் பரிகாரம் உண்டு. தர்ம சிந்தனை, தெய்வ சிந்தனை, உபகார சிந்தனை ஆகியவையே பரிகார விதிகளாகும். பல வருடங்களுக்குமுன்பு அஷ்ட கிரகச் சேர்க்கை (ஒரு ராசியில்) ஏற்பட்டது. அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட எல்லாரும் கோளறு பதிகம் பாடவேண்டு மென்று காஞ்சி மகாபெரியவர் அறிவித்தார். (வேயுறுதோளிபங்கன் என்று தொடங்கும் பாடல்). திருஞான சம்பந்தர் பாடியது. எனவே, இயற்கையின் சீற்றத்தைத் தணிக்க, இறைவழிபாடே சிறந்த பரிகாரம். எல்லாரும் கூட்டுவழிபாடு செய்தால் இறைவன் வருவான். துன்பம் தீர்ப்பான். இன்பம் துய்ப்பான்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி நடக்கிறது. 25 வயதுக்குட் பட்டவர்களுக்கு முதல் சுற்று- மங்குசனி. 30 வயதைக் கடந்தவர்களுக்கு இரண்டாம் சுற்று- பொங்குசனி. 60-ல் இருப்பவர்களுக்கு மூன்றாம் சுற்று- மரணச்சனி. அதற்காக அறுபதை நெருங்குபவர்களுக்கு மரணம் வருமென்று அர்த்தமல்ல. 90 கடந்தவர்களும் உண்டு. கருணாநிதி, அன்பழகனைப் போல). கோட்சார சனியும், ஜாதக தசாபுக்திக் காலமும் இணையவேண்டும். உதாரணமாக, ஏழரைச் சனி நடக்கும் காலம் சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடந்தால்தான் சிக்கல்! அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் பசும்பால் அபிஷேகம் செய்யவேண்டும். வசதிபடைத் தவர்கள் ருத்ரஹோமம் செய்து, சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். மலைபோல வரும் துன்பமெல்லாம் பனிபோல விலகிவிடும். சிலருக்கு வீடு மாற்றம்; சிலருக்கு தொழில் மாற்றம்; சிலருக்கு பதவி- தொழில் மாற்றம்; சிலருக்கு ஊர்மாற்றம் ஏற்படலாம். 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனியின் விளைவாக சிலருக்கு ஓயாத கடன் உண்டாகும். ஜாதக தசாபுக்தி மோசமாக அமைந்தால் வட்டிக்குப் பணம் வாங்கி வட்டியைக் கொடுக்க வேண்டும். ஒருசிலருடைய அனுபவத்தில் வாங்கும் சம்பளம் 90 சதவிகிதம் கடனுக்கே போய்விடும். குடும்பச்செலவு பற்றாக்குறைக்கு புதுக்கடன் வாங்க நேரும். ஒரு கிரகம் கடன் வாங்க வைத்தாலும், இன்னொரு கிரகம் கடனை அடைக்கச்செய்யும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
2020 டிசம்பர்வரை தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி நடக்கிறது. ஏழரைச்சனியில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று என்று 30 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். முதல் சுற்று மங்குசனி. இரண்டாம் சுற்று பொங்கு சனி. மூன்றாம் சுற்றி மரணச்சனி என்பார்கள். அதனால் மூன்றாம் சுற்று மாரகச்சனி என்று பயப்படவேண்டாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால்தான் சனி கெடுபலனைச் செய்வார். மற்றபடி சனி கெடுக்கமாட்டார். பொதுவாக, சிலருக்குப் பொருளாதாரப் போராட்டம் அதிகமாக இருக்கும். கடன், வட்டி, வைத்தியச் செலவு, எதிர்ப்பு, பகை என்று பலன் செய்யும். ரோகம், ருணம், சத்ரு என்று சொல்லலாம். கடன் சிலருக்கு அதிகமாகும். கடன் வாங்கிக் கடன் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். வேறுசிலருக்கு தேவைகள் அதிகமாகும். அதை நிறைவேற்ற கடன் வாங்கும் அவசியம் அதிகரிக்கும். சிலருக்கு தவிர்க்க முடியாத பயணங்கள் அதிகமாக அமையும். பொருளாதாரம் சீராக இருந்தாலும், வரவும் உண்டு; செலவும் உண்டு. சேமிக்கமுடியாது. இதுதான் ஜென்மச்சனி வேலையா அல்லது ஜென்மக் கேதுவின் வேலையா அல்லது சப்தம ராகுவின் வேலையா என்று கணிக்கமுடியாது. அதேசமயம் ராசிநாதன் குரு ஆட்சிபெற்று, சனி, கேது- ராகுவுடன் சம்பந்தப்படுவதால், கிணற்றில் இறைக்க இறைக்க தண்ணீர் வற்றினாலும் ஊற்று பெருகுவதுபோல பணத்தேவை பூர்த்தி யாகும்- கைகொடுக்கும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவென்றாலும், அவருக்கு வீடுகொடுத்த குரு 12-ல் ஆட்சி என்பதால் மறைவு தோஷம் விலகும். ஆனால் ராசிநாதனோடு கேது சம்பந்தப்பட்டு ராகு பார்ப்பதால், ஒருசில பாதிப்பான பலன்களைச் சந்திக்கநேரும். மேலும் இந்த வாரக் கோட்சார கிரகங்கள் ராகு- கேதுவுக்குள் அடக்கம். இதை சிலர் "காலசர்ப்ப தோஷம்' என்பார்கள். பொதுவாக காலசர்ப்ப தோஷம் உடையவர்களுக்கு 30 வயதுவரை ஒரு பலனும், 30 வயதுக்குமேல் ஒரு பலனும் நடக்கும். முற்பகுதி சோதனையாக இருந்தால் பிற்பகுதி சாதனையாகவும், முற்பகுதி சாதனையாக அமைந்தால் பிற்பகுதி வேதனையாகவும் அமையும். இது ஒரு பொதுவிதிதான். இதுவே தீர்க்கமான விதியென்று கூறமுடியாது. "பிருகு சனி பாம்பு இரண்டும் பிற்பலன்' என்பது ஜோதிட விதி. பிருகு என்றால் சுக்கிரன். சுக்கிர தசையும், சனி தசையும், ராகு- கேது தசையும் முற்பகுதி கெடுத்து, பிற்பகுதி யோகமாக அமையும் என்பது பொதுவிதியாகும். ராசியாதிபதி, லக்னாதிபதி பலமாக அமைந்து, மேற்கண்ட கிரகங்களும் பலமாக இருந்தால், எல்லா பகுதியும் நல்லதாகவே அமையுமென்பது அனுபவரீதியான உண்மை. உங்கள் கிரக அமைப்பின்படி, மகர ராசிநாதன் சனி 12-ல் இருப்பதால், முதலில் செலவு, பிறகு அதை ஈடுசெய்ய வரவு என்றமாதிரி அமையும். சிலர் வீடு, வாகனம், குடும்பத்தில் சுபமங்கள காரியச்செலவு என்றும், சுபவிரயச் செலவுகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இறைக்க இறைக்க கிணற்று நீர் ஊறுவதுபோல, செலவுகள் வந்தாலும் அதை ஈடுசெய்ய வரவுக்கும் இடமுண்டு. வரவில்லாமல் செலவில்லையே! வரவென்பது கடனாகவும் இருக்கலாம். லாப வரவாகவும் இருக்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்ப்பது பலம்தான் அவருடன் அவருக்கு வீடுகொடுத்த குருவும் அங்கு ஆட்சி என்பதும் பலம்தான்! ஆகவே, உங்களுக்கு எல்லாவகையிலும் நல்லதாகவே அமையும். 5-ல் ராகு நிற்பது தோஷமென்றாலும், ராகு சுயசாரம் பெறுவதாலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் ஜென்ம ராசியில் நிற்பதும் கெடுதல்களை விலக்கி நல்லதைத் துலக்கும் என்பது தெளிவு! ஜாதக தசாபுக் திகள் பாதகமாக இருந்தால், கெடுபலன்கள் விளைந்தாலும் முடிவில் அது நன்மையாகவே திகழும். அதாவது உங்களுடைய செயலும் நடவடிக்கைகளும் சிலசமயம் மற்றவர்களுக்கு வித்தியாசமாகவோ எதிர்மறையாகவோ தோன்றினாலும், அதன்முடிவும் பின்னணியும் உடன்மறையாகவே அமையும். 7-க்குடைய சூரியன் 2-ல் ராசிநாதன் சனியின் சாரத்தில் (உத்திரட்டாதியில்) இருப்பதால், திருமணமானவர்களுக்கு மனைவிவகையில் நன்மையும் நல்லதும் நடக்கும். 5-ல் உள்ள ராகுவை புத்திர காரகன் குரு பார்ப்பதால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திரன், புத்திரி உள்ளவர்களுக்குப் பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகள்வகையில் நல்ல காரியங்கள் நடக்கும். பெண் பிள்ளை களுக்கு சுபமங்கள நிகழ்ச்சிகள் நிறை வேறும். காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், மகப்பேறு போன்ற மங்கள காரியங்கள் நடைபெறும். பூமி, வீடு, வாகனம் போன்ற சுபச்செலவுகள் சந்திக்கலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி! அவருடன் 9-க்குடைய செவ்வாயும், 11-க்குடைய சனியும் சேர்க்கை. அதனால் தர்மகர்மாதிபதி யோகமும், லாப விரயாதிபத்தியமும் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் பரிவர்த்தனை யோகமும், அபிவிருத்தி யோகமும் உண்டாகும். பழையவற்றைக் கொடுத்துப் புதியவற்றை வாங்கலாம். இந்த விதி வீடு, மனை அல்லது வாகன வகையில் நிறைவேறும். பழைய வீட்டைக் கொடுத்து புதியவீடு வாங்கலாம். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கலாம். டூவீலர் அல்லது ஃபோர் வீலர் (கார்) வாங்கலாம். சிலருடைய அமைப்புக்கு, (இந்த யோகம் உங்களுக்கே அமையலாம். அல்லது வேறுசிலருக்கு அவரவர் வாரிசு களுக்கு (பிள்ளைகள் யோகத்துக்கு) அமையலாம். இதுசம்பந்தமாக வங்கிக் கடனோ, தனியார் கடனோ கிடைக்கும். தைரியமாக வாங்கி திட்டங்களை செயல்படுத்தலாம். நம்பிக்கை, நாணயமாக வாங்கிய கடன்களைத் திருப்பி அடைத்துவிடலாம். மீன ராசிக்கு 6-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதாலும், செவ்வாய் அவரைப் பார்ப்பதாலும் கடன் ஏற்படலாம். கடனில்லாதவர்களுக்கு போட்டி, பொறாமை, வைத்தியச்செலவு வரலாம். இப்படி கடன் வாங்காதவர் களுக்கு 4-ஆமிடத்து ராகு ஆரோக்கியக் குறைவையோ, வைத்தியச்செலவையோ உருவாக்கலாம். வயதானவர்களுக்கு முதுமைப்பருவ நிலையில் வரும் முழங்கால் வலி, மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் போன்ற உபாதைகள் வரலாம். அதற்கான முறையான வைத்தியச் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமடையலாம்.