ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
17-11-2019- கடகம்.
19-11-2019- சிம்மம்.
21-11-2019- கன்னி.
23-11-2019- துலாம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 3, 4, அனுஷம்- 1, 2.
செவ்வாய்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.
புதன்: சுவாதி- 2, 3, 4.
குரு: மூலம்- 2.
சுக்கிரன்: கேட்டை- 2, 3, 4, மூலம்- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
செவ்வாய் அஸ்தமனம்.
20-11-2019- செவ்வாய் உதயம்.
22-11-2019- தனுசு சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் தனது சுயசாரம் பெற்று (சித்திரை யில்) ராசியைப் பார்க் கிறார். பொதுவாக ராசி நாதனோ லக்னநாதனோ தன் ராசி அல்லது லக்னத் தைப் பார்த்தால் சிறப்பு. அதேபோல ஒரு பாவ காதிபதி தன் பாவகத்தைப் பார்த்தாலும் சிறப்பு. மனித வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தன்னம் பிக்கை, தைரியம், தளராத விடாமுயற்சி மூன்றும் அவசியம்! தைரியம் இருந் தாலே வைராக்கியமும் வந்து விடும். இம்மூன்றும் ஒரு வருக்கு அமைந்துவிட்டால் அவர் நினைத்தது நிறைவேறும்; சாதனை படைக்க லாம்; சோதனைகளை ஜெயிக்கலாம். உங்களுக்கு ராசிநாதன் அத்தகைய மனோபலத்தையும், விடா முயற்சியையும் தருவது உறுதி. அதைத்தான் திருவள்ளுவர் "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்' என்றார். முயற்சிக்கு வள்ளுவர் இலக்கணம் வகுத்துச் சொல்கிறார். தன் மெய்வருந்த என்பதற்கு தீவிர முயற்சி அல்லது விடாமுயற்சி என்று அர்த்தம்! ஒரு குளவி ஒரு புழுவைக்கொத்தி, மண்கூடு அமைத்து- அதில் வைத்து ரீங்காரம் இடுமாம். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்தப் புழு குளவியாக உருவெடுத்து வெளிவருமாம். இதன் ரகசியம், இந்த உலகம் ஒலி- ஒளியால் இயங்குகிறது. அதேபோல பஞ்சபூதத்தால் இயங்குகிறது. ஒளி- கண்ஞ்ட்ற், ஒலி- நர்ன்ய்க். நடராஜர் விக்ரகத்தில் உடுக்கையும், ஜோதியும் கரங்களில் இருப்பதுபோல் அமைந்திருக்கும். அதைப்பார்த்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் விளக்கம் கேட்டபோது ஒளி- ஒலி என்று அறிந்து, உலக இயக்கத்துக்கே அவைதான் காரணமென்று ஏற்றுக்கொண்டார். எனவே உங்கள் எதிர்காலமும் ஒளி, ஒலியால் பிரகாசிக்கும். வாழ்க்கையும் பிரகாசிக்கும். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கண்ணுக்குத் தெரியும்.
பரிகாரம்: செவ்வாய்- சனி பார்வை இருப்பதால், பூந்தோட்டம் அருகில் கூந்தலூர் கிராமம் சென்று முருகனை வழிபடவும். (கும்பகோணம்- நாச்சியார்கோவில் வழி). விவரங்களுக்கு செல்: 96888 77536-ல் தொடர்பு கொள்ளலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் 4-க்குடைய சூரியன் சேர்க்கை. திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஆண்கள்- பெண்களுக்கு திருமணயோகம் கூடும். திருமணமானவர்களுக்கு மனைவிபேரில் மனை, வீடு, வாகன யோகம் அமையும். 7-ஆம் இடம் மனைவி ஸ்தானம்- கணவர் ஸ்தானம். அதற்கு (விருச்சிகத்துக்கு) 10-ஆம் இடம் சிம்மம். அந்த வீட்டுக்குடைய சூரியன் 7-ல் சுக்கிரனுடன் சம்பந்தம் என்பதால், மனைவி அல்லது கணவர்பேரில் தொழில் யோகம் அல்லது உத்தியோக வாய்ப்பு ஏற்படும். அல்லது வாகன யோகம் அமையலாம். வீடு வாங்கலாம். சிலருக்கு மனைவி பிறந்த வீட்டி லிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய பங்குபாகங்கள் வந்துசேரும். பெண்களுக்கு கணவர் வீட்டிலிருந்து வரவேண்டிய சொத்து, பங்குபாகம் வந்துசேரும். ரிஷப ராசிக்கு அட்டமச் சனி நடக்கிறது. 2020 டிசம்பர் 26-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. தனுசு சனி மகர ராசிக்கு மாறும்போது ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி முழுமையாக விலகும். சனிப்பெயர்ச்சி தேதி திருக்கணிதத்துக்கும், வாக்கியப் பஞ்சாங்கத்
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
17-11-2019- கடகம்.
19-11-2019- சிம்மம்.
21-11-2019- கன்னி.
23-11-2019- துலாம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 3, 4, அனுஷம்- 1, 2.
செவ்வாய்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.
புதன்: சுவாதி- 2, 3, 4.
குரு: மூலம்- 2.
சுக்கிரன்: கேட்டை- 2, 3, 4, மூலம்- 1.
சனி: பூராடம்- 1.
ராகு: திருவாதிரை- 3.
கேது: பூராடம்- 1.
கிரக மாற்றம்:
செவ்வாய் அஸ்தமனம்.
20-11-2019- செவ்வாய் உதயம்.
22-11-2019- தனுசு சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் தனது சுயசாரம் பெற்று (சித்திரை யில்) ராசியைப் பார்க் கிறார். பொதுவாக ராசி நாதனோ லக்னநாதனோ தன் ராசி அல்லது லக்னத் தைப் பார்த்தால் சிறப்பு. அதேபோல ஒரு பாவ காதிபதி தன் பாவகத்தைப் பார்த்தாலும் சிறப்பு. மனித வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தன்னம் பிக்கை, தைரியம், தளராத விடாமுயற்சி மூன்றும் அவசியம்! தைரியம் இருந் தாலே வைராக்கியமும் வந்து விடும். இம்மூன்றும் ஒரு வருக்கு அமைந்துவிட்டால் அவர் நினைத்தது நிறைவேறும்; சாதனை படைக்க லாம்; சோதனைகளை ஜெயிக்கலாம். உங்களுக்கு ராசிநாதன் அத்தகைய மனோபலத்தையும், விடா முயற்சியையும் தருவது உறுதி. அதைத்தான் திருவள்ளுவர் "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்' என்றார். முயற்சிக்கு வள்ளுவர் இலக்கணம் வகுத்துச் சொல்கிறார். தன் மெய்வருந்த என்பதற்கு தீவிர முயற்சி அல்லது விடாமுயற்சி என்று அர்த்தம்! ஒரு குளவி ஒரு புழுவைக்கொத்தி, மண்கூடு அமைத்து- அதில் வைத்து ரீங்காரம் இடுமாம். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்தப் புழு குளவியாக உருவெடுத்து வெளிவருமாம். இதன் ரகசியம், இந்த உலகம் ஒலி- ஒளியால் இயங்குகிறது. அதேபோல பஞ்சபூதத்தால் இயங்குகிறது. ஒளி- கண்ஞ்ட்ற், ஒலி- நர்ன்ய்க். நடராஜர் விக்ரகத்தில் உடுக்கையும், ஜோதியும் கரங்களில் இருப்பதுபோல் அமைந்திருக்கும். அதைப்பார்த்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் விளக்கம் கேட்டபோது ஒளி- ஒலி என்று அறிந்து, உலக இயக்கத்துக்கே அவைதான் காரணமென்று ஏற்றுக்கொண்டார். எனவே உங்கள் எதிர்காலமும் ஒளி, ஒலியால் பிரகாசிக்கும். வாழ்க்கையும் பிரகாசிக்கும். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கண்ணுக்குத் தெரியும்.
பரிகாரம்: செவ்வாய்- சனி பார்வை இருப்பதால், பூந்தோட்டம் அருகில் கூந்தலூர் கிராமம் சென்று முருகனை வழிபடவும். (கும்பகோணம்- நாச்சியார்கோவில் வழி). விவரங்களுக்கு செல்: 96888 77536-ல் தொடர்பு கொள்ளலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருடன் 4-க்குடைய சூரியன் சேர்க்கை. திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஆண்கள்- பெண்களுக்கு திருமணயோகம் கூடும். திருமணமானவர்களுக்கு மனைவிபேரில் மனை, வீடு, வாகன யோகம் அமையும். 7-ஆம் இடம் மனைவி ஸ்தானம்- கணவர் ஸ்தானம். அதற்கு (விருச்சிகத்துக்கு) 10-ஆம் இடம் சிம்மம். அந்த வீட்டுக்குடைய சூரியன் 7-ல் சுக்கிரனுடன் சம்பந்தம் என்பதால், மனைவி அல்லது கணவர்பேரில் தொழில் யோகம் அல்லது உத்தியோக வாய்ப்பு ஏற்படும். அல்லது வாகன யோகம் அமையலாம். வீடு வாங்கலாம். சிலருக்கு மனைவி பிறந்த வீட்டி லிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய பங்குபாகங்கள் வந்துசேரும். பெண்களுக்கு கணவர் வீட்டிலிருந்து வரவேண்டிய சொத்து, பங்குபாகம் வந்துசேரும். ரிஷப ராசிக்கு அட்டமச் சனி நடக்கிறது. 2020 டிசம்பர் 26-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. தனுசு சனி மகர ராசிக்கு மாறும்போது ரிஷப ராசிக்கு அட்ட மச்சனி முழுமையாக விலகும். சனிப்பெயர்ச்சி தேதி திருக்கணிதத்துக்கும், வாக்கியப் பஞ்சாங்கத்துக்கும் வித்தி யாசம் இருக்கும். சனிக்குரிய ஸ்தலம் திருநள்ளாறுதான். அங்கு சனிப்பெயர்ச்சி விழா முறைப்படி, வாக்கியப் பஞ்சாங் கப்படிதான் நடக்கும். (திருக்கணிதப்படியும் நடத்துவார்கள். அது ஒப்புக்காகத்தான் நடக்கும்.) 28-3-2020-ல் சனி மகரத்துக்கு அதிசாரமாக மாறுவதாக ஒரு கணக்கு. ஈரோடு எஸ்.எம்.எஸ். சதாசிவம் (சபரி ஜோதிட கேந்திராலயா) கணித்த 2025 வரையுள்ள 25 வருட அட்வான்ஸ் பஞ்சாங் கத்தில் 28-3-2020-ல் மகர சனிப்பெயர்ச்சி என்றுள்ளது. ஈரோடு விகாரி வருட வரருசி வாக்கியப் பஞ்சாங்கத்தில் மேற்படி தேதி குறிப்பிடப்படவில்லை. பஞ்சாங் கத்தை வைத்துதான் ஜோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். பஞ்சாங்கமே குழப் பினால் யாரைக் குற்றம் சொல்வது? குறை சொல்வது?
பரிகாரம்: கும்பகோணத்திலிலிருந்து எட்டு கிலோமீட்டர் தெற்கே, பட்டீஸ்வரத்திலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள உடையாளூர் சென்று வழிபடவும். சுக்கிரன் நான்கடி உயரத்தில் மூலவராக அருள்புரி கிறார். தொடர்புக்கு: ஏ.ஆர். சிவராமன், செல்: 95978 03314, தொலைபேசி: 0435- 2445412. (வெள்ளிக்கிழமை உகந்தது).
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம். ராகு சாரம் (சுவாதியில் புதன்). 4-க்குடைய கேந்திரம் பெறும் புதன் 5-ஆம் இடமான திரிகோணத்திலிருப்பது ஒரு சிறப்பு. ஆகவே, ஜென்ம ராகு உங்களுக்கு யோக ராகுவாகப் பலன் தரும். 6, 11-க்குடைய செவ்வாய் புதனோடு சம்பந்தம் என்றாலும், செவ்வாய் சுயசாரம் (சித்திரை) என்பதால் பாதிப்புக்கு இடமில்லை. பொதுவாக கேந்திரம், திரிகோணம் பெறும் கிரகங்கள் எல்லாமே கெடுபலனைத் தவிர்த்து யோகப் பலனைச் செய்வார்கள். அதாவது புனித நதியாகிய கங்கையில் அசுத்த நீர் வந்து சேர்ந்தாலும் கங்கையின் புனிதம் கெடுவதில்லை. தை 1- மகர சங்கராந்திக்கு முதல் நாள் போகிப்பண்டிகை என்று எல்லாரும் கழிவுப் பொருட்களை எரித்து விடுவார்கள். அசுத்தம் சுத்தமாகிவிடும். அதுபோல கேந்திரம், திரிகோணம் பெறும் கிரகங்களுக்கு 6, 8, 12-க்குடையவர்கள் சம்பந்தம் ஏற்பட்டாலும் அவற்றின் மாசு நீங்கிவிடும். மேலும் 7, 10-க்குடைய குரு 7-ல் ஆட்சிபெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். குருவுக்கு சாரம்கொடுத்த கேதுவும் அவருடன் குரு வீட்டில் சம்பந்தம். மேலும் திரிகோணாதி பதியான சனி கேந்திரமாகிய 7-ல் இருப்பதும் உங்களுக்கு அனுகூலமான பலன்தான்.
பரிகாரம்: 7-ல் உள்ள சனி, கேதுவுக்குப் பிரீதியாக தேனிவழி குச்சனூர் சென்று சனிக்கிழமை சனீஸ்வரரை வழிபடலாம். தொடர்புக்கு: கோபி, செல்: 99442 43282, தொலைபேசி: 04544- 249928.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு மறைவு பெற்றாலும் 10-ஆம் இடமான மேஷத்தைப் பார்க்கிறார். அத்துடன் செவ்வாயும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10-ஆம் இடம் என்பது வாழ்க்கை, தொழில், பதவி, ஜீவிதம், வேலை ஆகியவற்றைக் குறிக்குமிடம். அதற்கு தர்மகர்மாதிபதி பார்வை கிடைப்பதால் வாழ்க்கையும், தொழிலும், வேலை, உத்தியோகமும் தேக்கமில்லாமல் பயணிக்கும். என்றாலும், அவ்வப்போது வேகத்தடை (ஸ்பீடு பிரேக்கர்) உள்ள இடங்களில் நிதானித்து, மெதுவாகப் பயணம் போவதுபோல குறுக்கீடுகளும் தடைகளும் காணப்பட்டாலும், உங்களது வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் பாதிப்பு இருக்காது. 6-ஆமிடத்து குரு 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று 10-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ஆகையால் பதவி, தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் குறையில்லை. முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றுக்கு வாய்ப்பும், தெளிவும் இருந்தாலும், விரயமும், செலவும், சிறுசிறு மாற்றங்களும் உண்டாகலாம். எந்த மாற்றமாக இருந்தாலும், அந்த மாற்றம் முன்னேற்ற கரமான மாற்றமாகவே அமையுமென்று எதிர்பார்க்கலாம்; நம்பலாம்.
பரிகாரம்: குருவின் மறைவு தோஷம் விலக கும்பகோணம் அருகில் ஆலங்குடி சென்று வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் கேந்திர பலம்பெறுகிறார். அவருடன் 10-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். இருவரும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார்கள். (சூரியனும், சுக்கிரனும்). அவர்களுக்கு வீடுகொடுத்த செவ்வாயும் 2, 11-க்குடைய புதனோடு சம்பந்தப்பட்டு 10-ஆம் இடத்தை 8-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். 9-க்குடைய செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகத்துக்கும் இடம் உண்டாகிறது. எனவே, உங்கள் வாழ்க்கையிலும், தொழில்துறையிலும் வேலை அல்லது உத்தியோகத்திலும் "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடலாம். நடந்துவரும் தொழில் லாபகரமாக அமையும். போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் விலகும். கடன்கள் குறையும். புதுமுயற்சிகள் துரித வேகத்தில் கைகூடும். பழைய விவகாரங்கள், பிரச்சினைகள் எல்லாம் பனிபோல விலகும். இடையூறுகளும் இன்னல்களும் அகலும். குரு பார்க்கக் கோடி நன்மை என்பதற்கிணங்க எல்லாம் திருப்திகரமாக அமையும். குருவருளும் திருவருளும் பெருகும். கைவிட்டுப்போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியம் சாதகமாக அமையும். நோய்நொடி நீங்கி ஆரோக்கியமும் ஆனந்தமும் உண்டாகும். ஒருசிலருக்கு ஜாதக தசாபுக்திவசமாக பிள்ளைகள் பற்றிய கவலை ஏற்படலாம்; பரிகாரம் தேவைப்படும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருபுவனம் என்ற ஊரிலுள்ள சரபேஸ்வரரை வழிபடவேண்டும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 2-ல் ராகு சாரத்தில் இருக்கிறார். ராகு சுயசாரம் பெறுகிறார். (ராகு- திருவாதிரை 3-ல்). புதனோடு சேர்ந்த செவ்வாய் தொடக்கத்தில் சுயசாரம் பெற்றாலும் (சித்திரை) வாரக்கடைசியில் ராகு சாரம் பெறுகிறார். (சுவாதி). எனவே ஏமாற்றங்களும், இழப்பு களும் ஏற்பட இடமுண்டு. நம்பிக் கொடுத்த இடத்தில் வம்புவழக்குகளும், வாதங்களும் உண்டாகும். வரவேண்டியது உரிய காலத்தில் வராமல் தடையாகும். 10-ல் ராகுவும்; அவருக்கு சனி, கேது பார்வையுமிருப்பதால் தொழில், வாழ்க்கை, வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் பிரச்சினைகளோடு போராடிப் போராடி சமாளிக்கவேண்டும். என்றாலும் குருவும் பார்ப்பதால் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற அளவில் நாளும் பொழுதும் ஓடும். ராகு- கேது சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தால், உங்களையறியாமலேயே எல்லாவற்றிலும் வேதனையும், விரக்தியும், வெறுப்பும் உண்டாகும். ஒருவர்மேல் உள்ள கோபத்தை இன்னொருவர்மேல் செலுத்தி ஆறுதலடையும் சூழ்நிலை உருவாகும். அதன் பக்கவிளைவுகளும், வேதனைகளும் சோதனை களுமாக அமையும். உங்கள் பேச்சும் சொல்லுமே உங்களுக்கு எதிரியாக அமைவ தால் அதிக மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
பரிகாரம்: திருவெண்காடு சென்று அகோரமூர்த்தியை வழிபடவும். புதனுக்கு தனிச் சந்நிதி உண்டு.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசியில் கேந்திராதிபதி செவ்வாயும், திரிகோணாதிபதி புதனும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 2-ல் லாபாதிபதி சூரியனோடு சேர்க்கை. சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம். 9-ல் உள்ள ராகுவை குரு, சனி, கேது பார்க் கிறார்கள். 9-ஆம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம்; தகப்பனார் ஸ்தானம்; குலதெய்வ வழிபாட்டு ஸ்தானம். இவற்றில் ஏதோ ஒரு பிரச்சினையைச் சந்தித்து சங்கடமடையும் காலம்; சஞ்சலப்படும் காலம். ஜாதக தசாபுக்திகளும் பாதகமாக இருந்தால், எல்லாவற்றிலும் எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கநேரும். உங்கள் சொல்லும் பேச்சும் விபரீத விளைவுகளை உருவாக்கும். ஆகவே, இடமறிந்து பேசவேண்டும். சூழ்நிலை தெரிந்து பேசவேண்டும். அக்கம்பக்கம் பார்த்துப் பேசவேண்டும். "பசு' என்று மனதில் தோன்றும் வார்த்தை வாயில் "மாடு' என்று வெளிப்படும். அது மற்றவர்களைப் புண்படுத்தி விவகாரத்தை ஏற்படுத்தும். அதைத்தான் பெரியவர்கள் "தவளை தன் வாயால் கெட்டது' என்பார்கள். ஒருசிலருக்கு உடன்பிறந்தவர்கள் வகையில் பிரச்சினைகளும்; ஒருசிலருக்கு சம்பந்தம் செய்தவர்கள் வகையில் பிரச்சினைகளும் உருவாகலாம்; கவனம் தேவை.
பரிகாரம்: 9-ல் உள்ள ராகுதோஷம் விலக தேனிவழி உத்தமபாளையம் சென்று (தென்காளஹஸ்தி) ஞாயிறு மாலை ராகுகால பூஜையில் கலந்துகொள்ளலாம். தொடர்புக்கு: நீலகண்ட சிவாச்சாரியார், செல்: 93629 93967.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
26-12-2020 வரை விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. இது வாக்கியப் பஞ்சாங்கப்படி உண்டான கணக்கு. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி வித்தியாசப்படும். வாக்கியப் பஞ்சாங்கத்திலும் 2020 மார்ச்சில் சனி அதிசாரமாக தனுசு ராசியிலிலிருந்து மகரத்திற்கு மாறுவதாக கணக்குச் சொல்கிறார்கள். மகரத்தில் இருக்கும் சனி மீண்டும் வக்ரமாக தனுசுவுக்கு மாறுவார். (16-6-2020). அடுத்து, 15-12-2020-ல்தான் மீண்டும் மகரத்திற்கு மாறுவார். ஆகமொத்தத்தில் 2020 முடியும் வரை விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியின் தொடர்பு இருப்பதாகத்தான் கருதவேண்டும். அதனால் சிலசமயம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாகவும் மாறலாம். அரசு வேலைக்கும், வேறு வேலைக்கும் முயற்சிசெய்து எதிர்பார்க்கும் பலருக்கு "எல்லாம் ரெடி; நிர்வாகத்திலுள்ள அதிகாரி கையெழுத்து மட்டும் போடவேண்டும்' என்று சொல்வார்கள். பிறகு "கையெழுத்துப் போடவேண்டிய அதிகாரி வெளிநாடு போய்விட்டார். எப்போது வருவார் என்று தெரியவில்லை' என்பார்கள். அதுவரை இலவம் பஞ்சு வெடிக்குமென்று காத்திருக்கும் கிளியாக நாளும் பொழுதும் ஓடும். தசாபுக்திக்கேற்ற பரிகாரங்களைச் செய்துகொள்ளவும்.
பரிகாரம்: விருச்சிக ராசிக்கு 2020 மார்ச் வரை ஏழரைச்சனி இருப்பதால், மங்குசனியை பொங்குசனியாக மாற்ற திருக்கொள்ளிக்காடு சென்று வழிபடவும். தொடர்புக்கு: சிவக்குமார் அல்லது விசுவநாத குருக்கள், செல்: 94423 46042.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. 2020 மார்ச்சில் ஜென்மச்சனி விலகுமா? 2020 டிசம்பரில் சனி மாற்றமா என்ற குழப்பம் உங்கள் அமைதியையும், ஆனந்தத்தையும் கெடுக்கிறது. நகைச்சுவை நடிகர் என்னத்தெ கண்ணையா சொன்ன "வரும்; ஆனா வராது' என்றமாதிரி "சனிப்பெயர்ச்சி மாறும்; ஆனால் மாறாது' என்ற நிலையில் உங்களை பயமுறுத்தும். என்றாலும் உங்களுக்கு ஜென்ம குரு ஆட்சிபெற்று அனுகூலமாக இருப்பதால் எதையும் சாதிக்கலாம். 2020 மார்ச்சில் குரு மகர ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார். அது உங்களுக்கு அனுகூலமாக அமையும். மகரம் குருவுக்கு நீச வீடு. என்றாலும் சனியும் குருவும் பரிவர்த்தனை என்பதால், நீசபங்க ராஜயோகமாகும். அதனால் தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் எல்லாவற்றிலும் திருப்திகரமாக நடைபெறும். உங்கள் மனதில் வகுத்த திட்டங்கள் எல்லாம் கைகூடும். குடும்பத்தில் அமைதியும் ஆனந்த மும் பெருகும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அமையும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடைபெறும்.
பரிகாரம்: பாளையங்கோட்டை அருகில் வல்லநாடு என்ற ஊரில் கணபதி சுவாமிகள் ஜீவசமாதி உண்டு. வள்ளலாரின் மறுபிறவியாக வாழ்ந்தவர். சென்று வழிபடவும். தினமும் இங்கு அன்னதானம் உண்டு. முருகன் என்ற அன்பர் பொறுப்பாளர்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. 2020 மார்ச்வரை விரயச்சனி நடக்கிறது. அதன்பிறகு ஜென்மச் சனியாக மாறும். விரயஸ்தானத்தில் குரு ஆட்சிபெறுவதால் உங்களுக்கு சுபவிரயமாக நடைபெறும். பிள்ளைகளுக்கு நல்லவை நடக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம்; திருமணமானவர்களுக்கு வாரிசு யோகம்; வேலையில்லாதவர்களுக்கு வேலை யோகம்; வேலையில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி யோகம் ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு ஜாதகரீதியாக சந்திர தசை, சந்திர புக்தி நடந்தால், இந்த ஏழரைச்சனிக் காலத்தில் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளியூர் போகவேண்டிய அமைப்பும், வெளிநாட்டு யோகமும் அமையும். அல்லது வெளிமாநிலம்போய் வேலை பார்க்கும் யோகமும் அமையலாம். அதேசமயம் சில குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கு உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட இடமுண்டு. வெளியூர் போகாமல் குடும்பத்தாருடன் சேர்ந்திருப்பவர்களுக்கு மேற்படி பாதிப்பு வரலாம். அப்படிப் பட்டவர்கள் ஒரு திங்கட்கிழமை சிவன் கோவிலிலில் ருத்ர ஹோமம் செய்து, சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனுக்குப் பாலபிஷேகம் செய்ய வேண்டும்.
பரிகாரம்: ஏழரைச்சனியில் விரயச் சனியின் வேகம் தணிய சனிக்கிழமைதோறும், அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அத்தனை எண்ணிக்கை மிளகுகளை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய் தீபமேற்றவேண்டும். (எள்ளுப் பொட்டலம் ஏற்றக்கூடாது. சாஸ்திர விரோதம்).
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்கு 9-ல் செவ்வாயும், 10-ல் சுக்கிரனும் இருக்கிறார்கள். செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை. செவ்வாய் 10-க்குடையவர்; சுக்கிரன் 9-க்குடையவர். இது உங்களுக்கு பலமான- சாதகமான- அனுகூலமான கிரக அமைப்பாகும். அத்துடன் 11-ல் உள்ள சனி ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப் பதும், லக்னநாதன் லக்னத்தைப் பார்ப் பதும் அற்புதப் பொற்குவியல் கிடைப்பது போன்றதாகும். அத்துடன் 2, 11-க்குடைய குரு 11-ல் ஆட்சிபலம் பெறுகிறார். 5-ல் ராகு. 11-ல் கேது. குரு சம்பந்தத்தால் ராகுவும் கேதுவும் உங்களுக்கு அனுகூலமான கிரகங்களாக மாறுகிறார்கள். பெரியவர்கள் "மனம்போல் வாழ்வு' என்பார்கள். உங்கள் மனம் பொன்மனம். அதனால் எல்லாமே இனிமையாக நிறைவேறும். வாரியார் சுவாமிகள் எம்.ஜி.ஆருக்கு "பொன்மனச் செம்மல்' என்று பட்டம் தந்தார். நீங்களும் ஒருவகையில் பொன்மனச் செம்மலாக மாறலாம். "தோன்றிற் புகழொடு தோன்றுக' என்ற வள்ளுவரின் வாக்கைப் பொய்யாக் காமல் மெய்யாக்கும் வகையில் உங்கள் செயலும், நடவடிக்கைகளும் அமையும். அதனால் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடையலாம்.
பரிகாரம்: திருவாரூர் அருகில் மடப்புரம் என்ற ஊரில் குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி சென்று வழிபடவும். (வியாழக்கிழமை விசேஷம்).
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறு கிறார். அவருடன் சனி, கேது சேர்க்கை; ராகு பார்வை. 6-க்குடைய சூரியனும், 8-க்குடைய சுக்கிரனும் 9-ல் சேர்க்கை. அது ஒருவகையில் பாதிப்புதான் என்றாலும், சூரியன் ராசிநாதனாகிய குருவின் சாரம் பெறுவதாலும் (விசாகம்), செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை என்பதாலும் கெடுதலும் நல்லதாக மாறும் காலம். அதாவது எதிரிகள், போட்டி, பொறாமை குணத்தால் உங்களுக்கு கெடுதல் செய்யலாம். அல்லது உங்களுக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதுவே உங்களுக்கு அனுகூலமாகவும் ஆதரவாகவும் அமைந்துவிடும். இதுதான் செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை யோகத்தின் பலன். 4-ல் ராகு, 10-ல் சனி, கேது இருப்பதால் சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சிலர் டாக்டர்களுக்கும் மருந்துகளுக்கும் தேவையில்லாமல் பணம் செலவழிக்கநேரும். ஒரு டாக்டரிடம் வாங்கிய மருந்துகள் தீரும்முன்னே, இன்னொரு மருத்துவரை அணுகிய நிலையும் அனுபவமாகும். முதல் டாக்டர் சொல்படி வாங்கிய மருந்தை விட்டுவிட்டு அடுத்த டாக்டர் சொன்ன மருந்தை வாங்கிய நிலை. இப்படி வீண்விரயம், வெட்டிவிரயமான நிலையும் ஏற்படலாம்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதிகளில் வழிபாடு செய்தால் உங்களுக்கு ஆன்மிகபலம் பெருகும். தலைவிதியை மாற்றும் ஆற்றல் பெருகும்.