திரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்! - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/impact-tridosham-disease-mahesh-verma

ருவர் ஜாதகத்திலிருந்து அவருக்கு வரக்கூடிய நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். லக்னம், 6-ஆம் பாவம், 11-ஆம் பாவம் ஆகியவற்றைக் கொண்டு நோயைப் பற்றிக் கூறிவிட முடியும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 6-ஆம் பாவத்தில் சனி இருந்தால், அவருக்கு பித்தம் காரணமாக சளி உண்டாகும். பொதுவாக, 6-ஆம் பாவத்தில் சனி இருந்தால் பித்தநோய் இருக்கும். லக்னாதிபதியும் பலவீனமாக இருக்கும்போது, அது திரிதோஷ மாக (வாதம், பித்தம், கபம்) மாறி அடிக்கடி பிரச்சினையைக் கொடுக்கும்.

லக்னாதிபதியான புதன் அஸ்தமனமாக இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால், கோட்சார சந்திரன் 6, 8, 12-ல் வரும்போது, சந்திரனுக்கு ராகு அல்லது சனியின் பார்வை இருந்தால், அந்த காலகட்டத்தில் அவருக்கு சளி, கபம் ஏற்படும்.

லக்னாதிபதி பலவீனமாக இருந்து, சந்திரன் நீசமாகி, ராகு 8-ஆம் வீட்டில் இருந்தால், அந்த ஜாதகருக்கு ச

ருவர் ஜாதகத்திலிருந்து அவருக்கு வரக்கூடிய நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். லக்னம், 6-ஆம் பாவம், 11-ஆம் பாவம் ஆகியவற்றைக் கொண்டு நோயைப் பற்றிக் கூறிவிட முடியும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 6-ஆம் பாவத்தில் சனி இருந்தால், அவருக்கு பித்தம் காரணமாக சளி உண்டாகும். பொதுவாக, 6-ஆம் பாவத்தில் சனி இருந்தால் பித்தநோய் இருக்கும். லக்னாதிபதியும் பலவீனமாக இருக்கும்போது, அது திரிதோஷ மாக (வாதம், பித்தம், கபம்) மாறி அடிக்கடி பிரச்சினையைக் கொடுக்கும்.

லக்னாதிபதியான புதன் அஸ்தமனமாக இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால், கோட்சார சந்திரன் 6, 8, 12-ல் வரும்போது, சந்திரனுக்கு ராகு அல்லது சனியின் பார்வை இருந்தால், அந்த காலகட்டத்தில் அவருக்கு சளி, கபம் ஏற்படும்.

லக்னாதிபதி பலவீனமாக இருந்து, சந்திரன் நீசமாகி, ராகு 8-ஆம் வீட்டில் இருந்தால், அந்த ஜாதகருக்கு சளித்தொல்லை இருக்கும். வயிறு சம்பந் தப்பட்ட பிரச்சினை, வாய்வுத்தொல்லை இருக்கும். சில நேரங்களில் மரணபயம்கூட அவருக்கு உண்டாகும்.

ramar

சந்திரன் 11-ஆவது வீட்டில் பலவீனமாக இருக்கும்போது, வயிற்றுப் பிரச்சினையைக் கொடுக்கும். மனதில் பயம் உண்டாகும். சனி 6-ல் இருக்கும்போது, காலை நேரத்தில் மூக்கு அடைக்கும். தலைவலி ஏற்படும்.

லக்னத்தில் செவ்வாய், 3-ல் சந்திரன், 8-ல் ராகு இருந்தால், லக்னத்திலிருக்கும் செவ்வாய் 8-ல் இருக்கும் ராகுவைப் பார்க்கும். அதனால் அந்த ஜாதகருக்கு அடிக்கடி நோய்கள் உண்டாகும். கபம், தலைவலி உண்டாகும். மனபயம் ஏற்படும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி, ராகுவுடன் லக்னத்தில் இருந்து, சந்திரன் கேதுவுடன் இருந்தால், அவருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். ஜலதோஷம், கபம் உண்டாகும்.

லக்னத்தில் செவ்வாய், கேது, 3-ல் சனி, 4-ல் சூரியன், சுக்கிரன், 5-ல் புதன் இருந்தால், அந்த ஜாதகருக்கு அடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். அதன்காரணமாக கபம், தலைவலி உண்டாகும்.

ஏனென்றால், லக்னத்தில் உள்ள செவ்வாய் பித்தத்தை உண்டாகும். 5-ஆம் பாவத்தில் புதன் பலவீனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை இருக்கும்.

அவருக்கு புதன் தசையில் சுக்கிரன், சந்திரன் அல்லது ராகுவின் அந்தரம் நடக்கும் காலத்தில் சுவாசப் பிரச்சினை உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் நீசச் சந்திரன், ராகுவுடன் லக்னத்தில் இருந்து, 11-ஆவது வீட்டில் புதன் இருந்து, அந்த புதனுக்கு சனியின் பார்வை இருந்தால், சந்திரன் ராகுவுடன் சேரும்போது அதிகமான மன உளைச்சல் இருக்கும். 11-ஆவது வீட்டில் புதன் இருந்தால், அது 6-ஆம் வீட்டிலிருந்து 6-ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கும். எனவே ஜாதகருக்கு சளி, பித்தம், கபம் ஆகியவை உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, ஜாதகருக்கு சந்திர தசை நடக்கும் போது அடிக்கடி சுவாச நோய், கபம் ஆகியவை உண்டாகும். சிலருக்கு காய்ச்சலும் வரும்.

ஜாதகத்தில் சந்திரன் 6, 8-ல் இருந்து, செவ்வாய் லக்னம் அல்லது 4, 12-ல் இருந்தால், அவருக்கு 13 வயது வரும்வரை அடிக்கடி ஜுரம் வரும். தலையில் நீர் கோக்கும். கபம் கட்டும்.

சுக்கிரன் 2-ஆம் பாவாதிபதியாகி 2-ஆம் பாவத்தில் இருந்து, அதை செவ்வாய் அல்லது ராகு பார்த்தால், அந்த ஜாதகருக்கு காம வேட்கையால் சீதளம், கபம் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரனுடன் இருந்து, அதை செவ்வாய் பார்த்தால், அவருக்கு வாழ்க்கையின் முற்பகுதியில் அடிக்கடி சீதளம் வரும்.

சுக்கிரன், சூரியன் 11-ல் இருந்து, சந்திரன் 6, 8-ல் இருந்தால், அவருக்கு இருமல், காய்ச்சல், சீதளம் உண்டாகும்.

ஒரு வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருந்தால், அங்கு வாழ்பவருக்கு ஜுரம், இருமல் இருக்கும். ஒரு வீட்டின் வட கிழக்கில் தேவையற்ற பொருட்களைத் தேக்கிவைத்தால் அல்லது குப்பைத் தொட்டி இருந்தால் அல்லது அந்த இடம் மூடப்பட்டு காற்று வசதி இல்லாமலிருந்தால், அங்கு வாழ்பவருக்கு சுவாச நோய், இருமல், காய்ச்சல் வரும். ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் கழிவறை அல்லது கிணறு இருந்தால், அங்கு வாழ்பவருக்கு எதிர்பாராமல் நோய்வரும்.

பரிகாரங்கள்

லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். கருப்பு நிற ஆடையைத் தவிர்க்க வேண்டும். இரவில் சாப்பிட்டபிறகு பாத்திரங்களைக் கழுவி வைக்கவேண்டும். படுக்கைக்குக் கீழே செருப்பு, இரும்புப் பொருட்கள், தோல் பொருட்கள் இருக்கக்கூடாது. தெற்கில் அல்லது கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும். தினமும் சூரிய பகவானை வழிபடவேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது நன்று. தினமும் சிவனின் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறுவது சிறப்பு.

வீட்டின் வடகிழக்கில் குப்பை களை சேர்த்து வைக்கக்கூடாது.

செல்: 98401 11534

bala271120
இதையும் படியுங்கள்
Subscribe