நோய் எதிர்ப்பு சக்தியும் ஜாதகமும்! -ஆர். சுப்பிரமணியன்

/idhalgal/balajothidam/immunity-and-horoscope-ar-subramanian

ற்போதைய சூழ்நிலையில் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. அதனை எளிதில் கணிக்கும் கருவிகளைத் தயாரிப்பதில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி என்பது மனிதனிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் சற்றுக் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும் என்பதும் உண்மையே.

ii

ஒரு மனிதனிடமுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஜோதிடம்மூலம் அறிந்துகொள்ள முடியும். இதற்கு, ஒருவரின் ஜாதகத்திலுள்ள 12 வீடுகளில் அவரது ஜென்ம லக்னம் அமையும் வீடு அடிப்படை ஆதாரமாக அமைகிறது. ஜென்ம லக்னம் என்பது ஆத்ம சக்தி, உயிர்சக்தி என்றே கருதப்பட

ற்போதைய சூழ்நிலையில் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. அதனை எளிதில் கணிக்கும் கருவிகளைத் தயாரிப்பதில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி என்பது மனிதனிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் சற்றுக் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும் என்பதும் உண்மையே.

ii

ஒரு மனிதனிடமுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஜோதிடம்மூலம் அறிந்துகொள்ள முடியும். இதற்கு, ஒருவரின் ஜாதகத்திலுள்ள 12 வீடுகளில் அவரது ஜென்ம லக்னம் அமையும் வீடு அடிப்படை ஆதாரமாக அமைகிறது. ஜென்ம லக்னம் என்பது ஆத்ம சக்தி, உயிர்சக்தி என்றே கருதப்படுகிறது.

ஜென்ம லக்னமே ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தியைக் கணிக்க அடிப்படையாக அமைகிறது.

ஒருவரது ஜென்ம லக்னம் வலுவாக அமைந்து விட்டால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். நோய் வந்தாலும் விரைவில் குணமடைந்துவிடுவார். இது அனுப வப்பூர்வமான உண்மை.

ஜென்ம லக்னம் ராசிச் சக்கரத்திலும், அம்சச் சக்கரத்திலும் ஒரே வீட்டில் அமைந்து வர்க்கோத்தமம் என்னும் அமைப்பைப் பெற்றிருத்தல் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஜென்ம லக்னத்திற்கு இருபுறமும் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற சுபகிரகங்கள் அவையும் "சுபகர்த்தரி யோக'மும் சிறப்பானது. உதாரண மாக, சிம்மம் லக்னமாகி, கடகத்தில் குருவும் கன்னியில் புதனும் அமைவது மிகச்சிறந்த அமைப்பென சொல்லப்படுகிறது. ஜென்ம லக்னத்தில் லக்னாதிபதி இருத்தலும், பார்த்தாலும் நன்றே.

இவற்றுக்கு மாறாக, ஜென்ம லக்னம் பலவீனம் பெற்றால், அந்த நபர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் எனவும், அடிக்கடி நோய்க்கு ஆட்படுபவர் எனவும் கணிக்கலாம். இதற்கான விதிமுறைகள் பின்வருமாறு...

ஜென்ம லக்னத்திற்கு முன் பின் வீடுகளில் அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இருக்கும் அசுப கர்த்தரி யோகம்.

ஜென்ம லக்னத்தில் இரண்டு அசுப கிரகங்கள் இருத்தல் அல்லது பார்த்தல். மேலும், மனிதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியை ரேகை சாஸ்திரத்தின்மூலமாகவும் உறுதிசெய்யலாம். இதற்கு அவரவர் உள்ளங்கையிலுள்ள ஆயுள்ரேகை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆயுள்ரேகை என்பது சுட்டுவிரலின் கீழே ஆரம்பித்து, அரைவட்ட வடிவில் வளைந்து கீழ்நோக்கி மணிக்கட்டுவரை செல்லும்.

இந்த ஆயுள்ரேகையானது தெள்ளத் தெளிவாக, அழுத்தமாக, தொடர்ச்சியாக நீண்டுசென்றால் அந்த நபர் ஆரோக்கியமானவர்; நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என அறியலாம். மாறாக, ஆயுள்ரேகை விட்டுவிட்டு இருந்தாலோ, பிளவுபட்டிருந்தாலோ, சங்கிலித்தொடர்போல இருந்தாலோ, தீவுக்குறி, வட்டக்குறி, சதுரக்குறி, புள்ளிகள், குறுக்குக்கோடுகள் இருந்தாலோ, சிறியதாக அமைந்தாலோ அந்த நபர் அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்; எதிர்ப்பு சக்தி குறைவான நபர் என அறியலாம்.

இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மனிதர்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் பரிகார முறைகள் கூறப்பட்டுள்ளன.

உணவே மருந்து மருந்தே உணவு என்ற வகையில் அன்றாட உணவில் இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், தேன், வெந்தயம், கீரை, காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நோய்க் காலங்களில் அசைவ உணவைத் தவிர்த்தல் நன்று.

பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி களையும், தியானத்தையும் மேற்கொள்ளுதல் சிறந்தது.

தினமும் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தைப் பாராயணம் செய்துவருதல் நற்பலன் தரும்.

தற்கால மருத்துவமுறைகளுடன் மேற்சொன்ன பாரம்பரிய வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறலாம்

செல்: 74485 89113

bala140820
இதையும் படியுங்கள்
Subscribe