நல்ல முயற்சிகள் எடுப்பவரையும் சில நேரங்களில் ராகு காலம், எமகண்டம், குளிகை, சந்திராஷ்டமம் போன்ற சொற்கள் முடக்கிப் போட்டுவிடுகின்றன.ராகு காலம் முழுநேரமும் கெடுதல் இல்லை என்பதே உண்மை. ராகு காலத்தின் கடைசியில் வரும் அரைமணி நேரம்-அமிர்த ராகு காலம்.
இதன் பலன்- தொட்டது துலங்கும்; கேட்டது கிடைக்கும். இதில் மங்களகாரகனான செவ்வாயின் கிழமையும், செல்வத்திற்கு அதிபதியான சுக்கிரனின் வெள்ளிக்கிழமையும் விசேஷமானவை. திருமணம் சம்பந்தமான பரிகாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை ராகு காலமும், வறுமையைப் போக்க வெள்ளிக்கிழமை ராகு காலமும் சிறந்த பலன் தருபவை. ராகு காலம் கடவுளை வழிபட ஏற்ற நேரம் என்பதால் மற
நல்ல முயற்சிகள் எடுப்பவரையும் சில நேரங்களில் ராகு காலம், எமகண்டம், குளிகை, சந்திராஷ்டமம் போன்ற சொற்கள் முடக்கிப் போட்டுவிடுகின்றன.ராகு காலம் முழுநேரமும் கெடுதல் இல்லை என்பதே உண்மை. ராகு காலத்தின் கடைசியில் வரும் அரைமணி நேரம்-அமிர்த ராகு காலம்.
இதன் பலன்- தொட்டது துலங்கும்; கேட்டது கிடைக்கும். இதில் மங்களகாரகனான செவ்வாயின் கிழமையும், செல்வத்திற்கு அதிபதியான சுக்கிரனின் வெள்ளிக்கிழமையும் விசேஷமானவை. திருமணம் சம்பந்தமான பரிகாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை ராகு காலமும், வறுமையைப் போக்க வெள்ளிக்கிழமை ராகு காலமும் சிறந்த பலன் தருபவை. ராகு காலம் கடவுளை வழிபட ஏற்ற நேரம் என்பதால் மற்ற வேலைகளுக்கு நம் முன்னோர்கள் முன்னுரிமை தரவில்லை. தவிர ராகு காலம் தீமைதரும் என்று குறிப்பிடவில்லை.
தினமும் வரும் குளிகைக் காலம் நல்ல செயல்களைச் செய்ய ஏற்றதென்பது ஜோதிடவல்லுநர்களின் கருத்து. குளிகையில் செய்யும் வேலை வெற்றியைத் தருவது மட்டுமல்லாது அந்த நிகழ்வு மறுபடி தொடர்வதற்கும் வழிவகுக்கும்.
மறுபடி தொடரக்கூடாது என்பதால் மரணச் சடங்குகள் அந்த நேரத்தில் செய்யப்படுவதில்லை. காலப்போக்கில் உண்மையான காரணம் மறைந்து குளிகைக் காலம் கெட்டதாகவே கருதப்படுகிறது. கேரளாவில் பெரும்பாலும் குளிகைக் காலமே திருமண முகூர்த்தத்திற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
சந்திரன் நிற்கும் ராசிக்கு எட்டாமிடத்தில் வருவது சந்திராஷ்டமம். முக்கியமான முயற்சிகளையும், முடிவுகளையும் சந்திராஷ்டம நாட்களில் எடுப்பதில்லை. ஜோதிட விதிகளின்படி தேய்பிறைச் சந்திரன் பாபி- அசுபர். ஜாதகத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்கப் பிறந்தவர்களுக்கு சந்திரன் கெட்டவனாகிறார். அவர் அஷ்டம ஸ்தானத்தில் (எட்டாமிடம்) வரும்போது கோட்சார விதிகளின்படி கெடுக்கிறார்.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற கருத்தின்படி, தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு (பௌர்ணமிக்குப் பின் அமாவாசை வரை) சந்திராஷ்டமம் நன்மையே தரும். தனுசு ராசிக்கு சந்திரன் எட்டாம் அதிபதியாவதால் சந்திராஷ்டமம் இல்லை.
தினப்பலன் பார்க்கும்போது தாரா பலன் (நட்சத்திரத் தொடர்பு) மிகவும் முக்கியம். பிறந்த நட்சத்திரத்திற்கு 2, 11, 20-ஆவது நட்சத்திரங்களில் (சம்பத்து தாரை) சந்திரன் சஞ்சரிக்கும்போது செல்வத்தையும்; 6, 15, 24-ஆவது நட்சத்திரங்களில் வெற்றியையும்; 13-ஆவது நட்சத்திரத்தில் ராஜயோகத்தையும் தரும். 3, 7, 12, 21-ஆவது நட்சத்திரங்களில் மட்டும் எச்சரிக்கை தேவை. 17-ஆவது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் மட்டுமே சந்திராஷ்டமம்.
ஒவ்வொரு நாளும் 16 முகூர்த்தங்களாகவும், 24 ஓரைகளாகவும் பிரிக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஒருவர் பொருளை இழக்கிறார்; மற்றொருவர் லாபம் அடைகிறார். ஓரிடத்தில் குழந்தை பிறப்பதும், அதே இடத்தில் அதே நேரத்தில் ஒருவர் இறப்பதும் நிகழ்கிறது. ஆக, நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதையும் வகைப்படுத்திவிட முடியாது. ஜாதகருடைய லக்னம், சூரிய- சந்திர நிலைகளைக் கொண்டே நல்ல நேரத்தைக் கணிக்க முடியும்.
ஜோதிடத்தின் மறுபெயரே காலமறிதல். காலம் கடல் போன்றது. நீச்சல் தெரிந்தவருக்கு மகிழ்ச்சியையும், நீந்தத் தெரியாதவருக்கு மரணத்தையும் தரும். திருக்குறளில் "காலமறிதல்' என்ற அதிகாரத்தில், "காக்கை பகலிலும், ஆந்தை இரவிலும் வலிமையுடன் இருப்பதுபோல் வெற்றியடைய காலபலம் அவசியம்' (பஞ்சபட்சி) என்கிறார் திருவள்ளுவர்.
மிதிவண்டி சக்கரங்களில் காற்றை அடைத்து காற்றுக்கு எதிராய்ப் பயணம் செய்வதுபோல் காலபலமறிந்தால் காலனையும் வெல்லலாம்.
செல்: 63819 58636