நல்ல மனைவி கிடைத்தும், பல ஆண்கள் அவர்களைத் தவிக்கவிட்டு ஓடிவிடுகிறார்கள். அதற்குக் காரணமென்ன?
ஒரு பெண்ணின் ஜாதகத்திலுள்ள கிரகங்களின் நிலைமையைப் பார்த்து- அவருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்குமென்பதைக் கூறிவிட முடியும். 7-ஆம் பாவமும், 9-ஆம் பாவமும், சுக்கிரனும் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்கவேண்டும்.
நவாம்சத்தில் 7-ஆம் பாவாதிபதி இருக் கும் இடத்தையும், அவருடன் இருக்கும் கிரகத்தையும் பார்க்கவேண்டும்.
7-ஆம் பாவாதிபதி 6 அல்லது 8-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவர்களுக்கு 7-ஆம் பாவாதிபதியின் தசை நடக்கும் நேரத்தில், கோட்சாரத்தில் ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி நடந்தால், அந்தப் பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து பிரிந்து வாழும் நிலை உண்டாகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 12-ல் சனியுடன் இருந்தால் பித்ரு தோஷம் உண்டாகும். சூரிய தசை நடக்கும்போது, கோட்சார குரு 3, 8, 12-ல் இருந்தால், அந்தப் பெண் கணவரிடமிருந்து பிரிந்து வாழும் நிலை உண்டாகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 4, 7, 8-ல் இருந்து, அவர்களுக்கு ஏழரைச்சனி நடக்கும்போது, செவ்வாய் தசை, ராகு தசை அல்லது சனி தசை நடந்தால், அந்தப் பெண் தன் கணவரிடமிருந்து பிரிந்துவிடுவாள்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி இணைந்து லக்னம் அல்லது 4, 7-ல் இருந்தால், அந்தப் பெண்ணுக்குத் திருமண வாழ்க்கை சரியாக இருக்காது. அவளுக்கு செவ்வாய் தசை, சனி தசை நடக்கும்போது திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். அவள் தன் கணவரிடமிருந்து பிரிந்து வாழும் சூழ்நிலை உண்டாகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய், ராகு 8, 12-ல் இருந்து, அவளுக்கு சூரிய தசை, ராகு தசை, செவ்வாய் தசை நடக்கும்போது அவள் தன் கணவரிடமிருந்து பிரிந்துவிடுவாள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 12-ல் ராகு, சனி இருந்தால், பொதுவாக அவளுக்கு சரியான கணவன் கிடைக்கமாட்டான்.
அப்படியே கிடைத்தாலும், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. எப்போதும் அவர்களுக்கிடையே சண்டை நடக்கும். திடீரென்று கணவனிடமிருந்து மனைவி கோபித்துக்கொண்டு பிரிந்து சென்றுவிடுவாள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4-ல் செவ்வாய், சூரியன், 12-ல் கேது- சனி, ராகு- சனி அல்லது புதன்- சனி இருந்தால், அந்தப் பெண்ணின் மனதில் தனக்கேற்ற கணவன் கிடைக்கவில்லை யென்ற கவலை இருந்துகொண்டேயிருக்கும்.
அவளுக்கு செவ்வாய் தசை, சூரிய தசை நடக்கும் போது தன் கணவனைவிட்டுப் பிரிந்துவிடுவாள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்து, 5-ல் சூரியன், செவ்வாய், 7-க்கு அதிபதி 11-ல் இருந்தால், அவள் பல நேரங்களில் தன் கணவனிடம் சண்டை போடுவாள். அவளுக்கு அஷ்டமச்சனி நடக்கும்போது, 7-ஆம் அதிபதி அல்லது 8-ஆம் அதிபதியின் தசை நடந்தால், அவள் தன் கணவரிடமிருந்து பிரிந்துவாழ்வாள்.
குரு, சந்திரன், சூரியன், புதன் 10-ல் இருந்து, செவ்வாயும் சனியும் நீசமாக இருந்தால், அந்தப் பெண் தன் கணவனிடம் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருப்பாள்.
அவளுக்கு ராகு தசை அல்லது சனி தசை நடக்கும்போது தன் கணவனி டமிருந்து பிரிந்துவாழ்வாள்.
ஒரு பெண் வாழும் வீட்டில் சமையலறை தெற்கு மத்தியில் இருந்து, அங்கிருக்கும் சமையல் மேடை தெற்கு திசையை நோக்கியிருந்தால், அங்கு வாழும் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினைகள் இருக்கும். அதைத் தொடர்ந்து மனைவி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்வாள்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் சமையலறை இருந்து, அது தெற்கு நோக்கியிருந்தால், அங்கு வாழும் மனைவிக்கு நோயாளி பட்டம் கட்டி, கணவர் அவளிடமிருந்து விலகிவிடுவார்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் பிரதான வாசல் இருந்து, வீட்டின் மத்திய பகுதியில் சமைய லறை இருந்து, படுக்கையறை வடகிழக்கில் இருந்தால், அங்கு வாழும் கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பிருக்கும். அதனால் அவர் தன் மனைவி யிடமிருந்து பிரிந்துவிடுவார்.
பரிகாரங்கள்
சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிவிட வேண்டும். கருப்புநிற ஆடை யைத் தவிர்க்கவும். செவ்வாய்க் கிழமை விநாயகரை நான்கு முறை சுற்றிவரவேண்டும். வெள்ளிக் கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று சிவப்பு மலர்களைவைத்துப் பூஜை செய்ய வேண்டும். கேஸ் ஸ்டவ்விற்குக் கீழே தோசைக் கல்லை வைக்கக்கூடாது. படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடி தெற்கு திசையில் இருக்கக் கூடாது.
-செல்: 98401 11534