னிதர்கள் வாழ்வில் எந்த உறவு வேண்டுமானாலும் பிரிந்து போகலாம்; பகையாகலாம். ஆனால், கணவன்- மனைவி இருவர் உறவில் மட்டும் பிரிவு ஏற்படக்கூடாது. கணவன்- மனைவிக்குள் பிரிவு, இழப்பு ஏற்பட்டால் இருவர் வாழ்க்கையும் ஆயுள் முழுவதும், பாதிப்பைத் தந்துகொண்டு இருக்கும். ஒரு குழந்தை பிறந்து பிறகு பிரிவு ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு அடுத்து ஒரு வாழ்க்கை அமையுமா? அமையாதா என்று கேள்விக்குரியதாகிவிடும். எதிர்கால வாழ்க்கை இருளாகத் தோன்றும்.

வேத ஜோதிட முறையில், ஆண்- பெண் ஜாதகத்தில், லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் ராகு- கேது, செவ்வாய் கிரகங்கள் இருந்தால், தோஷமென்றும், திருமணம் செய்தால் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, பிரிவு ஏற்படும். குடும்ப வாழ்க்கை நன்கு அமையாது. ஜாதகப் பொருத்தம் இல்லை. திருமணம் செய்யக்கூடாது என்று கூறி ஜோதிடர்கள் திருமணத்தையே தடுத்துவிடுவார்கள்.

பிறப்பு ஜாதகத்தில் பிறந்தபோது 7-ஆமிடத் தில் அமர்ந்த அந்த கிரகங்கள், இறப்புவரை அந்த இடத்திலேயேதான் இருப்பார்.

அதை வேறு ராசியில் மாற்றிவைக்க ஜோதிடர்களாலும், அவர்கள் கூறும் பரிகார பூஜைகளாலும் முடியாது.

சப்தரிஷி நாடியில், கணவன்- மனைவி பிரிவிற்கு 7-ஆமிடத்தில் ராகு- கேது, செவ்வாய் இருந்தால் கணவன்- மனைவி பிரிவு ஏற்படாது. ஆனால் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் எந்த ராசியில் இருக்கின்றதோ, அந்த 7-ஆவது ராசியாதிபதி கிரகத்தை அதன் பகை கிரகங்கள் பார்த்தால், பிரிவைத் தரும் என்பது ரிஷிகள் வாக்கு. 7-ஆமிடம், 8-ஆமிடத்தில் கிரகங்கள் இல்லையென்றால் அதை சுத்த ஜாதகம் என்றும், ராகு- கேது இருந்தால், சர்ப்பதோஷம் உள்ள ஜாதகமென்றும், செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றும் கூறிவிடுகின்றார்கள். சப்தரிஷிகள், வேத ஜோதிடம் கூறும் இந்தக் கருத்தை மறுத்து ஒருவர் ஜாதகத்தை 7-ஆவது ராசியாதிபதி கிரகத்தை பகை கிரகங்கள் பார்த்தால்தான் களத்திரதோஷம் என்று கூறுகின்றார்கள்.

ஒரு ஆணின் ஜாதகத்தில், ஜாதகரைக் குறிக்கும் கிரகம் லக்னாதிபதி கிரகமாகும். லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் அவரின் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில், லக்னாதிபதி கிரகம் அந்த ஜாதகியைக் குறிக்கும் கிரகமாகும். லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம், அவள் கணவனைக் குறிப்பிடும் கிரகமாகும்.

கணவன்- மனைவியைப் பிரிக்கும் கிரகம் கேது ஆகும். ஆண்- பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகத்துடன், கேதுவின் தொடர்பு ஏற்படுமானால், குடும்ப வாழ்க்கையில் தம்பதியர்க்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினை உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இதன் பலன், சிலர் விவாகரத்து செய்துகொள்வார்கள். சிலர் பிரிந்துவிடாமல், ஒரே வீட்டில் அவரவர் விருப்பம்போல் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். சிலர் அடிக்கடி சண்டைப் போட்டுக்கொண்டு, சில மாதங்கள், வருடங்கள் பிரிந்து வாழ்வார்கள். தொழில், உத்தியோகம் காரணமாக கணவன்- மனைவி சேர்ந்து வாழமுடியாமல் பிரிந்து வாழநேரிடும். தாம்பத்திய சுகத்தைக் குறிக்கும் ஏதாவது ஒருவகையில் இருவருக் கும் பிடித்தம் இல்லாமல் போகும் என்று சப்தரிஷி நாடி ஜோதிட விதிகள் தெளிவு படுத்துகின்றது.

லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம், நின்ற ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் பிரிவு தரும் கிரகமான கேது கிரகம் ஆண்கள் ஜாதகத்தில் இருந்தால், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியைவிட்டு பிரிவார்.

பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆமிட ராசியாதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் பிரிவு தரும் கேது கிரகம் இருந்தால் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி, கணவனை வேண்டாமென்று கூறி விவாகரத்துப் பெற்று ஒதுங்கிச் செல்வாள்.

ss

கணவன்- மனைவி இருவரில் யாராவது ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் வக்ரம்பெற்று, அதற்கு 12-ஆவது ராசியில் பிரிவினைத் தரும் கிரகமான கேது இருந்தால் கணவன்- மனைவியுடனோ, மனைவி- கணவனுடனோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட நேரிடும்.

ஆண்- பெண் இருவரின் ஜாதகத்திலோ அல்லது யாராவது ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி 7-ஆம் அதிபதி கேது, இந்த மூன்று கிரகங்களும், ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால் கணவன்- மனைவி நிச்சயமாகப் பிரிந்துவிடுவார்கள்.

ஆண்- பெண் ஜாதகத்தில், லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் வேறு ஏதாவது ஒரு கிரகத்துடன் பரிவர்த்தனைப் பெற்று தன் சொந்த ராசியில் அமர்ந்து, அந்த 7-ஆமதிபதி கிரகம் அமர்ந்த ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் கேது இருந்தால் கணவன்- மனைவி பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.

ஆண்- பெண் திருமணக் கால சமயத்தில், பத்துப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, 7-ஆமிடத்தில் எந்த கிரகம் உள்ளது என்று பார்க்காமல், 7-ஆமிடத்து அதிபதி கிரகம் எந்த ராசியில் உள்ளது? கேது கிரகத்தினால் பாதிப்பு அடையாமல் அந்த கிரகம் உள்ளதா? பரிவர்த்தனை பெற்று பாதிப்பு அடையும் நிலையில் உள்ளதா என்று கவனமாக பார்த்து திருமணம் செய்யவேண்டும்.

லக்னத்திற்கு 7, 8-ஆவது ராசிகளில் எந்த கிரகமும் இல்லை. சுத்த ஜாதகம் என்று கூறினாலும் 7, 8-ஆவது ராசிக் குரிய கிரகங்கள் வேறு ராசிகளில் இருந்து கேதுவின் பார்வை சேர்க்கை பெற்றால் பிரிவினையை உண்டாகும். கிரகமே இல்லாத ராசியை எந்த கிரகம் பார்த்தாலும் பாதிப்பைத் தராது. ஆனால் ராசியாதிபதி கிரகத்தைப் பார்வை செய்தால் பாதிப்பைத் தரும்.

கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, பிரிவினை நிலைக்கு சரியான காரணத்தை துல்-யமாக அறிந்து பரிகாரம் செய்தால் பாதிப்பு நீங்கும் என்பது ரிஷிகள் வாக்கு.

கணவன்- மனைவி பிரிவு

உதாரண ஜாதகம்- 1

இந்த ஜாதகத்தில் லக்னம் மீனம். லக்னத்திற்கு 7-ஆமதிபதி புதன். இவர் துலா ராசியில் உள்ளார். புதனுக்கு பிரிவு. தடையைத் தரும் கிரகமான கேது 9-ல் உள்ளதால் இவர் குடும்ப வாழ்வில் கணவன்- மனைவியிடையே பிரிவு ஏற்பட்டது.

உதாரண ஜாதகம்- 2

இது ஒரு பெண் ஜாதகம். லக்னம் மேஷம், 7-ஆமிடம் துலாம். 7-ஆமிடத்ததிபதி சுக்கிரன், தடை, பிரிவைத் தரும். கேதுவுடன் சேர்ந்து, ரிஷபத்தில் உள்ளது. இந்தப் பெண் இரண்டுமுறை திருமணம் செய்தும், கணவர்களுடன் சேர்ந்து வாழமுடியாமல் ஏற்பட்டுவிட்டது.

ஆண்- பெண் திருமணகால சமயத்தில் பத்துப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, திருமணத்திற்குப் பின்பு, கணவன்- மனைவியிடையே பிரிவு, வழக்கு, கருத்து வேறுபாடு, விவாகரத்து ஏற்படுமா என்று கவனமாகப் பார்த்து முறையான பரிகாரங்களைச் செய்து திருமணம் செய்தல் வேண்டும்.

செல்: 93847 66742