சென்ற இதழ் தொடர்ச்சி...

பிறந்த வீடா? புகுந்த வீடா என்ற மனப்போ ராட்டத்தில் வாழ்வைத் தொலைக்கும் பெண்களின் நிலையே வேறு. திருமணம் முடிந்த பெண், கணவன் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்பது நமது மரபு. இப்பொழுது கலியுகத்தில் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுக்கிறார்கள். பல பெற்றோர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் பெண்களை புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். இதற்கான உளவியல்ரீதியான காரணங்கள்:

வீட்டோடு மருமகன்

Advertisment

கணவரால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத நிலை, தவறான நடத்தை காரணமாக போதிய பொருளாதாரமின்மை, பாது காப்பிற்காக கணவனுடன் வாழ அனுப்பமுடியாத நிலை ஏற்படுவது.

கோடிக்கணக்கான வருமானம் தரும் தொழில், சொத்திற்கு ஒரே பெண் வாரிசாக இருந்தால், வீட்டோடு மருமகனை வைத்துக்கொள்ள விரும்புவது.

ஒரே பெண் குழந்தையின்மீது வைத்த அதீத அன்பால் பிரிய மனமில்லாமல் வீட்டோடு மருமகனை வைத்துக்கொள்ள விரும்புவது.

லக்னாதிபதி, பத்தாமதிபதி சம்பந்தம் இருந்தால் வீட்டோடு மருமகன்.

7-ஆம் அதிபதி 4-ல் இருப்பது.

Advertisment

ஆண் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் அல்லது துலாத்தில் இருந்தால், நிச்சயம் ஜாதகர் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவார்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் அல்லது துலாத்தில் குரு தனித்திருந்தாலும், ஜாதகர் மனைவிவழி ஆட்களுடன் மட்டும் அதிக தொடர்பில் இருப்பார்.

ஆணின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு திரிகோணத்தில் சுக்கிரன் இருந்தால், மனைவியின் பொருளாதாரம், சொத்தில் வாழ்வார். வீட்டோடு மருமகனாக இருப்பார்.

Advertisment

கணவன், மனைவியுடன் கருத்தொருமித்து மனைவி வீட்டில்வாழ சம்மதிக்கும்போது பெரிதாகப் பிரச்சினையில்லை.

வீட்டோடு மாமனார்

வேலைக்குச் செல்லும் பெண்ணின் வாரிசுகளைப் பராமரிக்க, சில பெற்றோர்கள் தங்கள் பெண் வாரிசுகளிடம் சென்றுவிடுவது.

போதிய பொருளாதாரம் இன்மையால் மகளின் வருமானத்தில் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படுதல்.

உடல்நலக்குறைவால் பெண்ணின் பராமரிப்பில் வாழவேண்டிய அவசியம் இருத்தல்.

ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி 3-ல் இருந்தால், பெண்ணின் ஜாதகத்தில் 9-ஆம் அதிபதி 1-ல் இருந்தால் வீட்டோடு மாமனாராக இருந்து உதவுவார்கள்.

சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் ஆணின் ஜாதகத் தில் இருந்தால், வீட்டோடு மாமனார், மாமியா ராக இருந்து டார்ச்சர் செய்வார்கள்.

இந்த இரண்டு காரணங்களும் தவிர்த்து, பெற்றோர்களின் குறுகிய மனப்பான்மை பல பெண்களின் வாழ்வை நிலைகுலைய வைக்கிறது.

சம்பந்திகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, ஈகோ பிரச்சினை காரணமாக பெண்ணை புகுந்த வீட்டில் வாழ அனுப்ப மறுப்பது.

பெண்ணின் வருமானத்தை விட்டுத்தர மனமில்லாமல் இருக்கும் பெற்றோர்கள். மிகக்குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்ணின் பெற்றோர்கள் செய்யும் டார்ச்சர், பல குடும்பத்தில் தீராத மனவேதனையைத் தருகிறது.

pபெண்ணின் ஜாதகத்தில் 6, 7, 8-ஆம் பாவக சம்பந்தம், சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருந்தால் பெண்களை வாழவும்விடாமல், சாகவும்விடாமல் நரகவேதனைப் படுத்துகிறார்கள். நல்ல வருமானம் வரும் பெண்கள் பலர் பெற்றோரிடமிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகளின் அன்பை பெற்றோர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். தங்கள் காலத்திற் குப்பிறகு அவர்களுடைய எதிர்கால நிலையை யோசிப்பதில்லை. குழந்தை இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைக்காக வாழ்வைத் தொடர்கிறார்கள். குழந்தை யில்லாமல் நிராதரவாக நிற்கும் பெண்கள் மன ஆறுதலுக்காக தவறான நட்பில் புதிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள். “

"நான், என் பெண்ணுக்கு நல்ல வழிகாட்டி யாக இருப்பேன்' என்று வெறும் வாய்வார்த்தையுடனேயே பல பெற்றோர் காலத்தை வீண்செய்கிறார்கள். முறையான வாழ்க்கை அமையாத பெண்களை நல்லமுறையில் வழிநடத்தும் பெற்றோர் களும் இருக்கிறார்கள். ஒருசில பெற் றோர்கள் பிரச்சினையைப் பெரிது படுத்தி பெண்களின் வாழ்வைக் கேள்விக் குறியாக்குகிறார்கள். இவர்களுக்கு பெற் றோர்கள்தான் பதில்சொல்ல வேண்டும்.

எந்த காரணமும் இல்லாமல் சில பெண்கள் பெற்றோர் வீட்டிலேயே காலந்தள்ளி, புகுந்த வீட்டை, கணவரை, குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை.

குடும்ப ஸ்தானம் இரண்டாமிடம். எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம்.

அதாவது திருமணத்துக்குப் பிறகு பெண், தன் வீட்டைவிட்டு கணவன் வீட்டுக்குச் செல்வது இயல்பான ஒரு செயல். ஏழுக்கு இரண்டாமிடம் கணவரின் குடும்பம் ஆதலால், பெண்களுக்கு இரண்டு ஸ்தானங் களும் முக்கியம். பெண்ணில் ஜாதகத்தில் இரண்டாமிடம் பலமின்றி அமைந் தால் புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுக் கிறார்கள்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்றிருந்தால், ஜாதகரின் மனைவி தன் தாய்வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய்வீட்டிலேயே காலத்தைக் கழிப்பாள். ஆக, பெண்களும் பெற்றோரை சுமப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். 60, 65 வயது பெண்கள்கூட பெற்றோரைப் பராமரிக்க, காரணமே இல்லாமல் கணவரைக் கைவிடு கிறார்கள். தனக்கு மருமகன், மருமகள், பேரன், பேத்தி வந்தபிறகுகூட, தன் குடும்பத் தைவிட பெற்றோருடன் காலம் தள்ளுவதில் சிலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

பெற்றோரை கவனிப்பது தவறு என்று சொல்லவில்லை. பெற்றோருடன், தங்களுக் கென்றுள்ள குடும்பத்தையும் சேர்த்துப் பாருங்கள். இது, பல ஆண்களின் மனக் குமுறல். ஆண்களிடம் மட்டும் தவறில்லை என்று சொல்லவில்லை. பெண்களும் தங்கள் கடமையை உணரவேண்டும்.

பெண்கள் பெற்றோரைப் பராமரிக்கும் போது, பல ஆண் வாரிசுகளுக்கு பெற்றோரைப் பாதுகாக்கும் கடமை உள்ளது என்பது மறந்து போகிறது. ஆண்கள் தங்கள் கடமையைச் செய்ய பெண்கள் தடையாக இருக்கிறார்கள்.

பல ஆண்கள் வருடத்தின் நல்ல நாள், கிழமைகளில்கூட நேரில்சென்று பெற் றோரைப் பார்ப்பதில்லை. குடும்பத்தின் ஆண் வாரிசுகள் ஒதுங்கும்போது, பெண்கள் தலையிட்டுதானே ஆகவேண்டி இருக்கிறது. இவ்வாறு பெற்றோரை கவனிக்கத் தவறும் ஆண்கள், பெற்றோர்கள் இறந்தபிறகு எத்தகைய திதி, தர்ப்பணம் கொடுத்தாலும் பெற்றோர்களின் நல்லாசிகள் கிடைக்காது.

"பெண் குழந்தையைப் பெற்றோருக்கு முதியோர் இல்லம் கிடையாது' என்பது புதிய மொழி.

உதாரண ஜாதகம்

இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில். பாதகாதிபதி சந்திரன் 7-ல் உச்சம். 2, 5-ஆம் அதிபதி குரு பாதகத்தில் நின்று உச்ச வலிமை பெற்ற லக்னாதிபதி செவ்வாயின் உச்ச பார்வை 9-ஆம் இடத்திற்கு பட்டதால் புகுந்த வீட்டை விட பிறந்த வீட்டின்மேல் அதிக நாட்டம். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பிறந்த வீட்டிற்காகவும் பெற்றோருக்காகவும் கழித்தவர் 65 வயதாகும் இந்தப் பெண் எனக்கு மிகவும் தெரிந்தவர். இவர் தன் வாழ்வின் பெரும் பகுதியைத் தாய்வீட்டில் கழித்தவர். காலை ஆறு மணிமுதல் ஒன்பது மணிக்குள் மாமியாரும் மருமகளும் வீட்டுவேலையை அரைகுறையாக முடித்து, ஆண்கள் வேலைக்குச் சென்றவுடன் மாமியாரும், மரும களும் தங்களுடைய அம்மா வீட்டிற்குச் சென்று விடுகிறார்கள். இது மாமியார்- மருமகளுக்குக் கற்றுத்தந்த பாடம். மருமகள், மாமியாரை அவருடைய அம்மா வீட்டிற்கு வண்டியில் கொண்டு போய்விட்டு, வரும் போது திரும்பவும் அழைத்து வந்துவிடுகிறார்.

மாமியார்- மருமகள் ஒற்றுமையைக் கண்டு வியப்பதா? தங்கள் குடும்பத்தை சரிவர கவனிக்காமல், பெற்றோரை கவனிப்பதில் ஆர்வம் செலுத்துவதைப் பாராட்டுவதா என தெரியவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்கள்கூட சோர்வு மிகுதியில், மாதத்தில் ஓரிரு நாட்கள் விடுப்பெடுப்பார்கள்.

பெண்களே, ஆண் வாரிசு இல்லாதபோது உங்கள் குடும்பத்தோடு பெற்றோரையும் கவனியுங்கள். பெற்றோருக்குக் கடமை செய்ய பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஆண்கள் தங்கள் கடமையை உணராதபோதே குடும்பத்தில் தடுமாற்றம் உருவாகிறது. வீட்டில் பிறந்த பெண்கள், வாழவந்த பெண்களுக்கு தங்கள் கடமையை உணர்த்த வேண்டும். பல பெண்கள் தங்கள் ஆதிக்கத்தை பிறந்த வீட்டில் செலுத்தி வாழவந்த பெண்களுக்கு பிரச்சினை செய் கிறார்கள்.

வாழவே முடியாத சூழ்நிலையில் பெண்கள் பிரிந்துவாழும் முடிவை எடுக்கலாம். சிறிய பிரச்சினையைப் பெரிதாக்காமல் கணவர்- மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து வாழும்போது குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்கும். பல ஆண்கள் மனைவியிடம் விட்டுக்கொடுக்க முடியாமல் இருக்கிறார்கள். ஆண்களும் பெண்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும்.

இந்த உதாரணப் பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி சுக்கிரன் லக் னத்தில். பாதகாதிபதி சந்திரன் 7-ல் உச்சம். 2, 5-ஆம் அதிபதி குரு பாதகத்தில் உச்சவலிமை பெற்று, லக்னாதிபதி செவ்வாயின் உச்ச பார்வை 9-ஆம் இடத்திற்குப் பட்டதால் தாய், தந்தையின் வீட்டிலேயே பெரும்பகுதியைக் கழித்தார்.

பரிகாரம்

சுக்கிரன், சந்திரன் சம்பந் தமே பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்குமுள்ள தொடர்பை நிர்ணயம் செய்கிறது. ஒவ்வொரு ஆணும் மனைவி யுடன் அதிக காலம் வாழ் கிறான்; வாழவிரும்புகிறான்.

ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை குறைந்தால், மனைவி தாய்வீட்டிலே இருக்க விரும் புவாள். இதற்குப் பரிகாரமாக வீட்டில் வெள்ளிவிளக்கில் ஒரு சிறு கல்கண்டு சேர்த்து, வடக்கு நோக்கி நல்லெண்ணெய் தீபமேற்ற கணவன்- மனைவி ஒற்றுமை பெருகும். பெண் ஜாதகத்தில் செவ் வாய் வலிமை குறைந்து, சந்திரன் பலம்பெற்றால் தாய் வீடே கதி என்றிருப்பார். இவர்கள் செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்ய ஒற்றுமை பெருகும்.

சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் பெறும் ஆண், பெண்கள் உரிய வழிபாடு செய்தால் இல்லறம் நல்லறமாகும்.

செல்: 98652 29406