செய்வினைப் பதிவுகளால் சிரமப்பட்டு வாழும் ஒவ்வொருவரும், முற்பிறவிகளில் தன் உடல், உயிர், ஆன்மா (மனம், வாக்கு, காயம்) இம்மூன்றினால் பிறருக்குச் செய்த வினை களை, இவை மூன்றினால்தான் நிவர்த்தி செய்து தீர்க்கவேண்டும்.
உடலால் செய்த வினைகளை எந்திர, மந்திர வழிபாடு, சரீரத்தாலும்; உயிரால் செய்த வினைகளை முன்னோர் வழி பாட்டுமூலமும்; மனதால் செய்த பாவங்களை வாழ்வின் செயல்கள்மூலம் நடைமுறை யிலும் நிவர்த்தி செய்து வாழும்போது, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, குட்டிச் சாத்தான் வேலை, துர்ஆவிகள் தாக்கம், ஆபிசார தோஷம் போன்ற செய்வினைகளால் உண்டாகும் எதிரி, கடன், நோய், தொழில் முடக்கம், திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, வறுமை, இழப்புகள், கணவன்- மனைவி பிரிவு போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து நல்ல வாழ்வை அடையலாம்.
கணவன்- மனைவி ஒற்றுமை யையும், பாசத்தையும் தரும் ஒரு வசிய எந்திரம் பற்றி அறிவோம்.
தனக்கு இணையாகத் தன் மனைவிக்கு அழகு, நாகரிகம், ஆஸ்தி, அந்தஸ்து, அறிவு போன்றவை இல்லையென்று, ஏதாவது ஒரு காரணத்தால் கணவராலும், கணவர் வீட்டாராலும் பாசம் கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் மனம் நொந்து, கணவர் வீட்டில் அடிமைபோல் வாழ்ந்துவருகிறார்கள். இந்தநிலையில் ஆண்களும் உள்ளனர். இருபாலரும் இந்நிலை மாறி பாசம் கிடைக்கச் செய்யும் எந்திரம், பூஜைமுறைகளைப் பற்றி அறிவோம்.
மூல மந்திரம்
"கருவெழுத்தாகிய ஒன்றுக்குங் காணிக்கை
நாலெழுத்துத் துனைதிரு வெழுத்தாகிய
திருச்சரப் பன்னீரெவ் வெழுத்தை
குருவெழுத்தான ஆரெழுத்து அதுகுந்த
உருவெழுத்தான அகத்திய ரென்ற
அட்சர முள்ளெழுத்தே.'
இந்த எந்திரத்தை 6 ஷ் 6 அங்குலம் அளவுள்ள ஒரு செப்புத் தகட்டில் எழுதி, வீட்டுப் படுக்கை யறையில் சந்தனம் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி வைத்து, மூலமந்திரத்தை 2,748 முறை கூறி உருவேற்றி பூஜையை முடிக்கவும். (தினமும் காலை 300 முறை, மாலை 300 முறை வீதம் மூலமந்திரங்களைக் கூறி ஐந்து நாட் களில் பூஜையை முடிக்கலாம். எண்ணிக்கை 2,748 வருமாறு பார்த்துக்கொள்ளவும்.)
இந்த எந்திரத்தை 2 ஷ் 2 அங்குலம் அளவுள்ள ஒரு சிறிய தகட்டில் வரைந்து அதனையும் பூஜையில் வைக்கவும். இதனை தாயத்துபோல் உருட்டி, ஒரு வெள்ளிக் குப்பியில் அடைத்து, ஆண்கள் இடுப்பிலும், பெண்கள் கழுத்திலும் அணிந்து கொள்ளலாம்.
இந்த எந்திரத் தகட்டினை கண்ணாடி பிரேமிட்டு, படுக்கையறையில் மாட்டிவைத்து, தினமும் ஊதுவத்தி ஏற்றி வைத்து, 30 முறை ஜெபித்து, அகத்தியரையும், வம்சத்தில் மாண்டுபோன வாழவந்த பெண்களையும், வம்சத்தில் பிறந்த பெண்களையும் கணவர்- மனைவி பாசம் கிடைக்க பிரார்த்தனை செய்து வணங்கிவந்தால், கணவரால் ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு கணவர் பாசமும், கணவர் வீட்டார் அன்பும், மனைவியால் ஒதுக்கப்பட்டு வாழும் ஆண்களுக்கு மனைவியின் பாசமும் கிடைக்கும்
செல்: 93449 95889
__________
தத்தாத்ரேய ஜெயந்தி விழா
வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 11-12-2019, புதன்கிழமை தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு, காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை தத்தாத்ரேயர் ஹோமமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.
குழந்தை வரம் தரும் தத்த குருவாக விளங்குபவர் தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளின் அம்சமாகப் போற்றப்படும் தத்தாத்ரேயர் தான் கண்ட அனைத்திலுமே குரு உபதேசத்தை உணர்ந்தவர்.
தத்தாத்ரேயர் விக்ரகமானது, உலக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து, வாழ்வில் ஆசையைத் துறந்து அன்போடு வாழவேண்டுமென்ற உயரிய நோக்கத்தில், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது.
தத்த ஜெயந்தியன்று தத்தாத்ரேயர் ஹோமத்துடன் பாலபிஷேகமும் நடைபெறஉள்ளது. குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் மேற்கண்ட பூஜையிலும், அபிஷேகத்திலும் கலந்துகொண்டு, அபிஷேகப் பாலை தத்தப் பிரசாதமாகப் பெற்று, விரைவில் சந்தான பாக்கியம் பெற்று ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.
Email : [email protected]