திருமணம் என்பது இரு புனித ஆத்மாக் களின் கலப்பு. தனிமையைத் தகர்க்க இரு ஆன்மாக்களிடையே ஏற்படும் பிணைப்பு.

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்வது வழக்கம்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய ஜாதகப் பொருத்தம் பார்க்கும் வழிமுறைகளை நமது ஜோதிட முன்னோடிகள் வழங்கியுள்ளார்கள்.

இன்றும் பலர் பத்துப் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் செய்கிறார்கள். முறையான திருமணப் பொருத்தம் என்பது ஜாதகக் கட்டப் பொருத்தமே.

Advertisment

கட்டப் பொருத்தம் இருந்தாலும் தசாபுக்தி மிகமுக்கியம். ஜனன காலத்தில் அமையும் கிரக நிலைகளால் மனிதனின் விதி நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், அந்த விதிப்பயனை ஜாதகர் எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்று கூற தசாபுக் தியே உதவும். இந்தக் காலத்தில் ஜோதிடம் கூற பலமுறைகளைப் பயன்படுத்தினாலும், ஜாதகரின் யோக- அவயோக காலங்களைத் தீர்மானம் செய்வது தசாபுக்திகளே என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே திருமணப் பொருத்தத்தில் தசாபுக்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மகிழ்ச்சிதரும் மணவாழ்க்கையில் தசாபுக்திகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.

அத்துடன் திருமணம் நடைபெறுவது, தடைப் படுவது, தாமதமாவது, விவாகரத்து, மறுமணம் அனைத்தும் தசா புக்தியின் கையிலேயே இருக் கிறது. தசாபுக்தி கிரீன் சிக்னல் காட்டாமல் எந்த சம்பவமும் நடக்காது. அதனால்தான் தசாபுக்திக்கு ஏற்ப மனிதனின் வாழ்வில் பல்வேறு ஏற்ற- இறக்கங்கள் நிகழ்கின்றன. இதை மேலும் புரியும்விதமாகச் சொன்னால், எந்த தோஷமும் இல்லாத சுத்த ஜாதகம்கூட முறையற்ற வாழ்க்கைத் துணையைப் பெற காரணமாகிறது.

நான் பார்த்த ஒரு ஜாதகத்தில், ஜாதகி கடக லக்னம். லக்னத்தில் வக்ர குரு, கேது. (மகரத்தில்). 7-ல் சனி, ராகு. இதுபோன்று காலதாமத சாத்தியங்களுக்கான ஏராளமான விஷயங்கள் இருந்தன. 19 வயதில் ஆரம்பமான கேது தசை, படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு காதல் திருமணத்தை நடத்தி, பிரிவினை ஏற்படுத்தி, பத்து வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் வீட்டோடு முடங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல தசாபுக்திகள் இருக்கும்போது நடைபெறும் திருமணமே மனநிறைவான வாழ்க்கைத்துணையைப் பெற்றுத்தரும். தசாபுத்திக்கு முக்கியத்துவம் தராமல் பார்க்கும் திருமணப் பொருத்தம் மன சங்கடத்தைத் தருகிறது.

Advertisment

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது தசாபுக்தியைப் பொருத்த வரை கீழ்க்காணும் விதிகளைப் பின்பற்றவேண்டும்.

1. ஆண்- பெண் இருவருக்கும் ஒரே தசை திருமணமாகி 15 ஆண்டு கள்வரை வராமல் இருப்பது சிறப்பு. இதை தசா சந்திப்பு என்றும் கூறுவார்கள். இது தற்கால நடை முறைக்கு ஒத்துவராத விதி. நமது முன்னோர்கள் குறைந்தது ஐந்துமுதல் 12 வயது வித்தியாசத்திலேயே திருமணம் நடத்தினார்கள். நாகரிக உலகில் ஒரே வயது, ஒரே நாளில் பிறந்தவர்கள் என திருமணம் நடப்பது அதிகரித்துவிட்டது. குறைந்தது மூன்றாண்டு களாவது இடைவெளி இருக்கவேண்டும். காலத்திற்கேற்பப் பலன் சொல்லவேண்டிய சூழல் நிலவுவதால், ஒரே தசை நடந்தாலும் அவை சுபமானதாக இருந்தால் திருமணம் செய்யலாம். புக்திகள் மட்டும் ஒரேவிதமாகக் குறுக் கிடாமல் இருப்பது நல்லது.

2. திருமணத்தின்போது ஆண், பெண் இருவரில் ஒருவருக்காவது கேந்திர, திரிகோணாதிபதிகளின் தசை நடக்கவேண்டும். தீய பலன்களைத் தரும் தசை நடந்தால், ஜாதகக் கட்டப் பொருத்தம் இருந்தாலும் மணவாழ்வு சங்கடம் தரும்.

3. இருவரின் ஜாதகத்திலும் பகை கிரகங்களின் தசை நடந்தால் கருத்து வேறுபாடு, பிரிவினை அதிகரிக்கும். தசாநாதர்களைவிட நட்சத்திரநாதர்கள் பகை கிரகமாக இல்லாமல் இருக்கவேண்டும். கோர்ட் வாசலில் நிற்கும் பல தம்பதிகளின் ஜாதகத்தை ஆய்வுசெய்தால், ஜாதகத்தில் எந்தப் பிரச்சினையும் தென்படாது. தம்பதிகளின் தசையை நடத்தும் கிரகம் பகை கிரகமாக இருக்கும் அல்லது தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரம் பகை கிரக நட்சத் திரமாக இருக்கும்.

தசையை நடத்தும் கிரகத்தைவிட, தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம். ஜாதகம் பார்க்கும்போது, தசை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத் திற்கான பலனைப் பார்த்தால் பலன் நூறு விழுக்காடு தெளிவாக இருக்கும். பலருக்கு கேந்திர, திரிகோணாதிபதிகள் தசை நடக்கும்போதுகூட சந்திக்கும் இடர்ப்பாடுகளுக்கு, தசை நடத்தும் கிரகம் நிற்கும் நட்சத்திரமே காரணமாக அமைகிறது. திருமணம் முடிந்து பல வருடங்களான தம்ப தியினர்கூட இந்த கிரகங்களின் தசாகாலங்களில் கருத்து வேறுபாட்டை சந்திக்கின்றனர். எனவே-

சூரியன் + சுக்கிரன்

சூரியன் + சனி

சூரியன் + ராகு- கேது

சந்திரன் + ராகு- கேது

செவ்வாய் + ராகு- கேது

செவ்வாய் + புதன்

சுக்கிரன் + கேது

போன்ற பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை இணைப்பதை இயன்றவரை தவிர்த்தால், தம்பதியர் அன்புடன் வாழ்வார்கள்.

aa

மேலும் ஜனனகால ஜாதகத்தில் ஆண், பெண் யாருக்கேனும் பகை கிரகங்களின் சேர்க்கை இருந்தால்,விரும்பத்தகாத பல மனவருத்தத்தை திருமணத்திற்கு முன்- பின் தருகிறது. குறிப்பிட்ட சில கிரக இணைவுகள் திருமணத்தை நடத்தித் தருவதில் தாமத நிலையை ஏற்படுத்து கின்றன.

ஒருசில கிரக இணைவுகள் திருமணத்திற்குப் பிறகு பிரச்சினையை உருவாக்கும். மணவாழ் வையே முறிக்கும் சக்தி படைத்தவை. ஐம்ப திலும் ஆசை வரும் என்ற கருத்து இருந்தாலும், ஐம்பதிலும் மணமுறிவை நடத்திக்காட்டும். அதாவது சில பகை கிரகங்களின் இணைவு, பகை கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கும். உதாரண மாக, ஒரு பெண்ணுக்கு ஜனன ஜாதகத்தில் செவ் வாய், கேது சம்பந்தம் இருந்தால், செவ்வாய் தசை அல்லது கேது தசை நடந்தால், தசாக்காலங் களில் அதிகமான அசுபப் பலனையும், புக்திக் காலங்களில் மிதமான தோஷப் பலனையும் அனுபவிப்பார். தசாபுக்தியோடு சம்பந்தம் பெறாத பகை கிரக இணைவுகள் எந்த பாதிப்பை யும் தராது. தசாபுக்தியோடு சம்பந்தம் பெறும் பகை கிரக இணைவுகள் திருமண வாழ்க்கையை தலைகுப்புறக் கவிழ்த்துவிடும். கிரகங்களின் சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை என எந்த வகையில் சம்பந்தப்பட்டாலும் அது கிரக இணைவாகும்.

சூரியன் + சுக்கிரன்

திருமணதிற்கு வரன் பார்க்கும்போது சூரிய தசை நடைபெற்றுக் கொண்டிருந்தால், சுக்கிர தசை நடக்கும் வரனை இணைக் கக்கூடாது. ஜனனகால ஜாதகத்தில் ஆண் அல்லது பெண்ணுக்கு சூரியன் + சுக்கிரன் சம்பந்தம் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு கருத்து வேறுபாடு தோன்றும்.

இந்த அமைப்பும் ஆண்களையே குறிவைத்துத் தாக்கும். ஆண்களைவிட பெண் களுக்கு நிர்வாகத்திறனையும், ஆடம்பரத் தோற்றத்தையும் தருவதால், தம்பதியினரிடையே ஒற்றுமைக்குறைவு மிகும். இல்லற இன்பத்தைக் குறைத்து புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சூரிய ஓரையில் கோதுமைப் பாயசம் படைத்து மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சுக்கிர ஓரையில் சிவ வழிபாடு செய்துவந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சூரியன் + சனி

திருமணத்தின்போது ஆண்- பெண் இருவரில் ஒருவருக்கு சூரிய தசையும், மற்றவருக்கு சனி தசையும் நடக்கக்கூடாது. ஜனன கால ஜாதகத்தில் சூரியன், சனி சம்பந்தமிருந் தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக் குறை வைத் தரும். ஆண் ஜாதகத்தில் இந்த கிரக சம்பந்தமிருந்தால் தந்தை, மகனுக்கு ஒற்றுமைக் குறைவைத் தரும்.

தம்பதியரைவிட, தம்பதியினரின் பெற்றோர் கள்மூலம் அதிக பிரச்சினையை ஏற்படுத்து கிறது. இந்த கிரக சம்பந்தம் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. ஆண்களுக்கு மாமனாரின் செயல்கள் மனவருத்தத்தைத் தருகின்றன. சமயங்களில் வீட்டோடு மாமனாரை வைத்துக் காப்பாற்றவேண்டிய சூழலும் நிலவுகிறது. ஆக, மாமனார்-

மருமகன் உறவில் விரிசல். ஆனால், பெண் களுக்கு தந்தையின் அன்புக்கு இணை யான மாமனார் கிடைக்கிறார். ஆண்களுக்கு இல்வாழ்க்கை பிரச்சசினையைத் தரும். பெண் களுக்கு தகுதி குறைந்த வாழ்க்கைத்துணையே கிடைக்கும். ஆண், பெண் இருவருக்கும் பித்ரு தோஷம், புத்திர தோஷத்தையும் காட்டும் கிரக சம்பந்தம் இது.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சூரிய ஓரையில் சூரிய நமஸ் காரம், சிவ வழிபாடு செய்துவர தோஷம் குறையும்.

பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

சனிக்கிழமைகளில் தயிர்சாதம் தானம் செய்யவேண்டும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406