Advertisment

விதியை பின் வாங்கச் செய்வது எப்படி? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/how-reverse-rule-prasanna-astrologer-i-anandhi

னித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் இயற்கை. இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சியடையும் அதே மனம் துன்பம் ஏற்படும் போது கடவுளுக்கு கண் இல்லையா? எல்லாம் என் தலைவிதி, என்ன பாவம் செய்தேனோ? என பலவாறு புலம்புவதுண்டு.

Advertisment

அரசன்முதல் ஆண்டிவரை பிரபஞ்ச நியதிப்படி நாம் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. கர்ம வினைக்கேற்ப பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அனைவருக்கும் பொருந்தும். சந்தோஷம் வரும் சமயத்தில் தான் செய்த புண்ணியப் பலன் என்று கர்வப்படும் மனம் இக்கட்டான சூழ்நிலையில் தனக்குத்தானே கேட்கும் கேள்வி என் தலையெழுத்து ஏன் இப்படி இருக்கிறது என்பதாகும். துக்கம், துயரங்கள் தாக்கும் தருணத்தில் தனது தலையில் கடவுள் தலைவிதியை சரியாக எழுதவில்லை என கடவுள்மீது குற்றம் சுமத்துவது சகஜம்.

ss

தலையெழுத்து என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு நாம் பதில் பெற்றுவிட்டால் பிறவி எடுத்த பயனை அடைந்துவிடலாம். தலையெழுத்து என்பது விதியின்படி சில பலன்களை ஒருவர் அனுபவிக்கும்பொழுது அவ

னித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் இயற்கை. இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சியடையும் அதே மனம் துன்பம் ஏற்படும் போது கடவுளுக்கு கண் இல்லையா? எல்லாம் என் தலைவிதி, என்ன பாவம் செய்தேனோ? என பலவாறு புலம்புவதுண்டு.

Advertisment

அரசன்முதல் ஆண்டிவரை பிரபஞ்ச நியதிப்படி நாம் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. கர்ம வினைக்கேற்ப பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அனைவருக்கும் பொருந்தும். சந்தோஷம் வரும் சமயத்தில் தான் செய்த புண்ணியப் பலன் என்று கர்வப்படும் மனம் இக்கட்டான சூழ்நிலையில் தனக்குத்தானே கேட்கும் கேள்வி என் தலையெழுத்து ஏன் இப்படி இருக்கிறது என்பதாகும். துக்கம், துயரங்கள் தாக்கும் தருணத்தில் தனது தலையில் கடவுள் தலைவிதியை சரியாக எழுதவில்லை என கடவுள்மீது குற்றம் சுமத்துவது சகஜம்.

ss

தலையெழுத்து என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு நாம் பதில் பெற்றுவிட்டால் பிறவி எடுத்த பயனை அடைந்துவிடலாம். தலையெழுத்து என்பது விதியின்படி சில பலன்களை ஒருவர் அனுபவிக்கும்பொழுது அவர் மென்மேலும் புதிய செயல்களைச் செய்கிறான். அது நல்ல செயல்களாகவும் இருக்கலாம். தீய செயல்களாகவும் இருக்கலாம். அதனால் தலையெழுத்து மேலும் வலுவடைந்து கடல் அலைகளைப்போல ஓயாத இன்ப அல்லது துன்ப அலைகளாக ஜீவனை இன்ப, துன்பப்படுத்துகிறது.

Advertisment

கால சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும் வாழ்கையின் பிடியில் இருந்து வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலில் விதிப்பயனை மீறி சில திட்டமிடுதலை செய்து வெற்றிபெற சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எந்த பாவகத்தால் ஒருவர் அதிகமான துன்பத்தை அனுபவிக்கி றார்களோ எந்த பாவகம் தொடர்பான செயல் தடை, தாமதத்தை தருகிறதோ அதற்கு 12-ஆம் பாவகம் தொடர்பான காரகத்துவங்களின்மீது பற்றை குறைக்க வேண்டும்.

ஒவ்வொரு பாவகத்திலும் உயிர் காரகத்துவம் பொருள் காரகத்துவம் அடங்கியுள்ளது. எந்த பாவகத்தின் உயிர் காரகத்துவத்தை அடைய விரும்பு கிறோமோ அதற்கு 12-ஆம் பாவகத்தின் மீதான பொருள் பற்றை குறைக்கவேண்டும். எந்த பாவகத்தின் பொருள் காரகத்துவத்தை பெறவேண்டுமோ அதற்கு 12-ஆம் பாவகம் தொடர்பான உயிர் காரகத்துவ உறவு களிடம் அதிக ஈடுபாடு காட்டாமல் விலகி இருக்கவேண்டும். இதுபோன்ற சில எளிய முறைகளை கடைபிடிக்க துன்பம் விலகும். என் அனுபவத்தில் பலருக்கு இதுபோன்ற பரிகாரங்கள் நல்ல பலன் தந்துள்ளது. இதை சில உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். திருமணமாகி பத்து ஆண்டுகள் கடந்தும் பிள்ளை பிறக்காதவர்கள் ஒரு வருடத்திற்குமுன்பு புத்திர பிராப்தத்திற்கு நம்மை அணுகியவர்கள்.

ஆண் ஜாதகம்

3-12-1980 இரவு 7.25 மணி, சேலம். சித்திரை நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னம், திதி சூன்யம் துலாம், மகரம், லக்னாதிபதி புதன் மூன்றாம் அதிபதி சூரியனுடன் 6-ல் மறைவு. 5-ல் மாந்தி, சுக்கிரன், சந்திரன், 5-ஆமிடமான துலாம் திதி சூன்ய பாதிப்பு. 5-ஆம் அதிபதி சுக்கிரன் ராகு சாரம். ஜாதகர் நம்மை சந்தித்தபோது சனி தசையில் கேது புக்தி. சனி மிதுனத்திற்கு அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. பாக்கியாதிபதி சனி குழந்தை பாக்கியத்தை தர முழுமையாகக் கடமைப்பட்டவர் என்பதால் நிச்சயம் இந்த தசையில் குழந்தை பாக்கியம் உண்டு. அடுத்துவரும் சுக்கிர புக்தியில் குழந்தை செல்வத்தை அடைவார் என்பதை அறியமுடிந்தது.

பெண் ஜாதகம்

15-4-1987 காலை 8.35 மணி, சேலம். சுவாதி- 3, துலா ராசி, ரிஷப லக்னம். திதி- துவிதியை, திதி சூன்யம்- தனுசு, மீனம். குழந்தைக்கு காரக கிரகம் குரு சூன்ய வீடான மீனத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது. 5-ல் கேது, 5-ஆம் அதிபதி புதன் நீசமாகி அஷ்டமாதிபதி குரு மற்றும் ராகுவுடன் சேர்க்கை. 9, 10-ஆம் அதிபதி சனி வக்ரம். குழந்தை பாக்கியத்திற்கு பெண் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். ஜாதகிக்கு சனி தசையில் சந்திர புக்தி. பாக்கியாதிபதியே பாதகாதிபதி அவரே கர்மாதிபதி என்பதால் இந்த தசையில் கர்மம் செய்ய புத்திரன் உண்டு என்று கூறப் பட்டது. 5-ல் கேது என்பதாலும் 5-ஆம் அதிபதி நீசம் என்பதாலும் கருத்தரித்து முதல் குழந்தை கலைந்தபிறகு ஜனிக்கும்.

இரண்டாவது குழந்தை உங்களுக்கு தங்கும் என்றும் கூறினேன். 2-ஆவது குழந்தையைப் பற்றிக் கூறும் 7-ஆம் அதிபதியான செவ்வாயின் தசை என்பதால் குழந்தைபேறால் மகிழ்ச்சியடைவீர்கள் என்றும் பலன் உரைக்கப்பட்டது.

தம்பதிகள் இருவருக்கும் சனி தசை நடந்தது. சனி ஆண் ஜாதகத்தில் அஷ்ட மாதிபதி, பெண் ஜாதகத்தில் பாதகாதிபதி. ஏக தசை திருமண வாழ்க்கைக்கு உகந்தது அல்ல.

யோனிப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம் இல்லை. பலமுறை இதை பற்றி எழுதினாலும் திருமணம் நடந்தால்போதும் என்ற கண்ணோட்டத்தில் பலர் சரியாக பொருத்தம் பார்ப்பதில்லை. விதி வழியது. அதே நேரத்தில் விதியை மதியால் வெல்ல முடியும்

பரிகாரம்

5-ஆம் பாவத்தால் ஏற்பட்ட மன உளைச்சலை 12-ஆம் பாவகமான 4-ஆம் இடத்தின்மூலம் மட்டுமே தகர்க்கமுடியும். 4-ஆமிடம் என்பது சுக ஸ்தானம் வீடு, வாகனம், தாய் பற்றிக் கூறுமிடம். எனவே தம்பதி களை ஒரு வருடத்திற்கு சொந்த வீட்டிலிருந்து சுமாரான வசதியுள்ள வாடகை வீட்டிற்கு குடியேறவேண்டும். அவ்வப்பொழுது தாய் வயதிலுள்ள பெண்களுக்கு இயன்ற உணவு தானம் வழங்கவேண்டும்.

ஜாதகர் நல்ல பொருளாதார வசதியுள்ள வர் என்பதால் கல்வி நிலையத்திற்கு (4-ஆமிடம் பள்ளிக்கூடம்) பூமி தானம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. ஜாதகருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டு டன் பரிகார முறைகளை கையாண்டால் பரி பூரண பலன் கிடைக்கும். அந்தவகையில் அன்றாட வாழ்வில் அநேகர் சந்திக்கும் முக்கிய தோஷங்களுக்கு தீர்வு வழங்க முடியும். விதியை மதியால் பின் வாங்கச் செய்யமுடியும். அடுத்த வாரம் மற்றொரு சுவாரஸ்யமான சம்பவத்தை பார்க்கலாம்.

தொடரும்

செல்: 98652 20406

bala020224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe