மகிழ்ச்சியாக சிரித்து வாழவேண்டுமென்பது எல்லா மனிதர்களுக்கும் உள்ள ஆசை. பல குடும்பங்களுக்கு இந்த ஆசை கனவாகவே போய்விடுகிறது. அபூர்வமாக சில குடும்பங்களுக்கு மட்டுமே கனவு நனவாகிறது. பற்றில்லாதவரின் வாழ்க்கையில்தான் சந்தோஷம் பிறக்கும். பிறர் பணத்தை, சொத்தை அபகரிக்க நினைத்தல், நம்மைவிட முன்னேறக்கூடாது என பொறாமைப்படுதல், நமக்கு உரிமையில்லாதவர்களின் பொருள் மீது ஆசைகொள்ளுதல் போன்ற தீய எண்ணமும் செயலும் கொண்டவர்களுக்கு அன்பின்மீது நம்பிக்கை இருக்காது. அன்பின் மகத்துவம் அறிந்தவர்கள் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுத்து, எந்த பிடிவாதமும் நன்மை செய்யாது என்பதையும் அறிந்து நடப்பர்.
முன்கோபம் என்பது எதையும் முழுமை யாக அறியாமல், பார்த்ததும் கேட்டதும் முறைத்துக்கொண்டு முடிவெடுப்பதாகும். முன்னால் நடந்ததை வைத்து வெறுப்போடு அணுகுதல் கோபமாக மாறும். எந்தவொரு விஷயத்தையும் கோபத்துடன் அணுகினால் உண்மையைத் தவறவிட நேரும். ஆதலால் பொறுமையுடன் செயல்பட்டால்தான் நினைத்ததை அடையமுடியும். உண்மையை, நீதீயை நிலைநாட்ட முடியும். சிலர் பொறுமையை சோதிக்குமளவு நடந்து கொள்வார்கள். சிலருக்கு தாழ்வு மனப் பான்மை, இயலாமை பொறாமையாக மாறி கோபத்தை ஏற்படுத்தும்.
எதற்கும் உதவாத கோபம் சோகமாக்கி சிரிப்பை இழக்கச் செய்துவிடும். சந்தோஷத்தைப் பெற பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை. பிறரை ஒப்பிடாத எண்ணம் மட்டுமே கிடைத்ததில் நிறைவு, நிம்மதியைத் தந்து வாழ்க்கையை சுகப் படுத்தும்.
கோபம்
முன்கோபமானது பலரது வாழ்க்கையில், நல்ல மனிதர்களையும் நல்ல சந்தர்ப்பங்களையும் தவற வைத்திருக்கிறது. லக்னத் தில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு இருப்பவர்க
மகிழ்ச்சியாக சிரித்து வாழவேண்டுமென்பது எல்லா மனிதர்களுக்கும் உள்ள ஆசை. பல குடும்பங்களுக்கு இந்த ஆசை கனவாகவே போய்விடுகிறது. அபூர்வமாக சில குடும்பங்களுக்கு மட்டுமே கனவு நனவாகிறது. பற்றில்லாதவரின் வாழ்க்கையில்தான் சந்தோஷம் பிறக்கும். பிறர் பணத்தை, சொத்தை அபகரிக்க நினைத்தல், நம்மைவிட முன்னேறக்கூடாது என பொறாமைப்படுதல், நமக்கு உரிமையில்லாதவர்களின் பொருள் மீது ஆசைகொள்ளுதல் போன்ற தீய எண்ணமும் செயலும் கொண்டவர்களுக்கு அன்பின்மீது நம்பிக்கை இருக்காது. அன்பின் மகத்துவம் அறிந்தவர்கள் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுத்து, எந்த பிடிவாதமும் நன்மை செய்யாது என்பதையும் அறிந்து நடப்பர்.
முன்கோபம் என்பது எதையும் முழுமை யாக அறியாமல், பார்த்ததும் கேட்டதும் முறைத்துக்கொண்டு முடிவெடுப்பதாகும். முன்னால் நடந்ததை வைத்து வெறுப்போடு அணுகுதல் கோபமாக மாறும். எந்தவொரு விஷயத்தையும் கோபத்துடன் அணுகினால் உண்மையைத் தவறவிட நேரும். ஆதலால் பொறுமையுடன் செயல்பட்டால்தான் நினைத்ததை அடையமுடியும். உண்மையை, நீதீயை நிலைநாட்ட முடியும். சிலர் பொறுமையை சோதிக்குமளவு நடந்து கொள்வார்கள். சிலருக்கு தாழ்வு மனப் பான்மை, இயலாமை பொறாமையாக மாறி கோபத்தை ஏற்படுத்தும்.
எதற்கும் உதவாத கோபம் சோகமாக்கி சிரிப்பை இழக்கச் செய்துவிடும். சந்தோஷத்தைப் பெற பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை. பிறரை ஒப்பிடாத எண்ணம் மட்டுமே கிடைத்ததில் நிறைவு, நிம்மதியைத் தந்து வாழ்க்கையை சுகப் படுத்தும்.
கோபம்
முன்கோபமானது பலரது வாழ்க்கையில், நல்ல மனிதர்களையும் நல்ல சந்தர்ப்பங்களையும் தவற வைத்திருக்கிறது. லக்னத் தில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு இருப்பவர்கள் பெரும்பாலும் முன் கோபியாக இருப்பர். லக்னத்தில் பாவகிரகம் இருந்து தீயகிரகப் பார்வை, இணைவுபெற் றால், முன்கோபத்தால் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்துவிடுவர். வாக்கு ஸ்தானம் கெட்டிருந்தால் வார்த்தைகளில் கடுமை இருக்கும். வாயால் கெடுபவர்கள் இவர்களாகத்தான் இருப்பர். முன்கோபத் தில் அவசரமான முடிவுகள் எடுத்ததால் பலரது வாழ்க்கையே முடித்து வைக்கப் பட்டிருக்கிறது. சனி ஆறு, எட்டாமிட சம்பந்தம் பெற்ற சிலர் முன்கோபத்தால் பிறரைக் கொன்றுவிடுகிறார்கள். ஆறு, எட்டாம் அதிபதிகள் கடுமையாகக் கெட்டு தசையும் நடந்தால் தற்கொலையும் செய்து கொள்கிறார் கள். முன்கோபம் வருபவர்கள் ஏழரைச்சனிக் காலங்களில் அடுத்தவருக்கு வாக்கு தரக் கூடாது; ஜாமின் போடக்கூடாது. சபதம் போட்டால் தோற்று அவமானப்பட நேரும்.
சோகம்
சோகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஏற்படும். நினைத்தது நடக்காமல், கேட்டது கிடைக்காமல், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், நம்பியவர்களின் துரோகம் என பலவகையில் மனதை காயப்படுத்தி சோகத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள்போல் இல்லாத இயலாமை மனதை வாட்டும். சோகம் பலரை சிதைத்துவிடும். ஐந்தாமிடம் நீசம், வக்ரமடைவது, பாவகிரக பாதிப்பு, பாவ கிரகங்களுக்கு மத்தியில் ஐந்தாமிடம் இருத்தல் நம்பிக்கையை உடைத்து சோகத்தைத் தரும். ஸ்திர லக்னங்களான ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப லக்னக்காரர்கள் அதிகமாக சோகப்படுவார்கள். ஏனென்றால் ரிஷபம், விருச்சிக லக்னத்தினர், லக்னமே ஆறாம் அதிபதியாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு அவர்களே எதிரி. சிம்ம, கும்ப லக்னக்காரர் கள் பலவீனமானவர்கள். பெரும்பாலும் ஆறாம் அதிபதி தொடர்பு ஏற்படக்கூடிய வர்கள் நோய், எதிரி, கடனால் பாதிக்கப்பட்டு சோகமடைவார்கள். குரு பார்வை பெற்றால் மட்டுமே தன்னம்பிக்கை பிறக்கும். சுபகிரகத் தொடர்பானது ஏமாற்றத்தையும் இழப்பை யும் தவிர்த்து மகிழ்ச்சி தரும்.
வெறுப்பு
பொறாமை, தான் என்னும் அகங்காரமாகி வெறுப்பையே தரும். நல்ல கல்வி, அறிவு, அழகில்லாமை, சொத்து, பாரம்பரியப் பெருமை இல்லாமையும், சிலருக்கு தன் நிறம்கூட வெறுப்பை உருவாக்கும். இதற்கு அடிப் படைக் காரணம் லக்னத்திற்கு சனி, ராகு சம்பந்தம் இருந்து ஏதாவது குறையைத் தந்து தன்னையே வெறுக்கச் செய்யும். ஏழாமிடத்திற்கு சந்திரன், சனி, ராகு சம்பந்தத்துடன் பாவகிரகப் பார்வை பெற்றால் தன்னைவிட நிறம், குணம் குறையுடன் இருப்பதால் வெறுப்பாக இருப்பர். ஒன்பதாம் அதிபர் ஆறில் மறைந்த கஞ்சனுக்கு செலவுகூட வெறுப்பையே தரும். தன் வாழ்க்கை நினைத்தபடி நடக் காதவர்களுக்கு வெறுப்பு அதிக மாகவும், தனக்குக் கிடைக்காத வாழ்க்கை அருகில் இருப்பவர்களுக் குக் கிடைத்தால் பொறாமை யால் தாங்கமுடியா வெறுப்பு கொள் வார்கள். "எதுக்குடா வாழ்க்கை' என்னுமளவு வெறுப்புக்கு ஆளாவார்கள்.
மகிழ்ச்சி
நான்கு, ஒன்பதாம் இடங்கள் சுபத்தன்மையுடன் இருந்தால் தாய்- தந்தையர் நல்லவர்களாகவும், கேட்டதை வாங்கித்தரும் பொருளா தார பலத்துடனும் இருப்பார்கள். சிறுவயதில் ராகு தசை, ஏழரைச் சனி நடக்காமலிருந்தால் தாய்- தந்தையருக்கு பாதிப்பு ஏற்படாமல், இருவரும் நிறைவாக இருந்து குழந் தையை சந்தோஷமாக வைத்துக் கொள்வர். இரண்டாமிடம் நன்றாக இருந்தால் கல்வி சிறப்பாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் காரணமாக நன்றாக வளர்வர். நன்றாகப் படிப்ப தால் பள்ளியில் நல்லபெயர் கிட்டும். நல்ல தசையால் வறுமை இருக்காது.
நல்ல பழக்கவழக்கமும் மகிழ்ச்சி தரும். நான்காமிடம் சிறப்பாகி தசை நடந்தால் உயர்கல்வி யோகமும், இளமையில் கிடைக்கவேண்டிய சுகமும், வாகன யோகமும் பெற்று அனைத்து சுகமும் பெறுவர். ஐந்தாமிடம் சிறப்பாகி தசை நடந்து குரு பலமும் சேர்ந்தால், ஒழுக்கத்துடன் கல்வியை முடிப்பர். தீய தசை இல்லாமலிருந்து 2, 10, 11-ஆம் அதிபதிகள் சுபத்தன்மை பெற்றிருந்தால், படித்ததும் வேலைகிடைத்து வருமானம் கிடைக்கும். கிரகவலுவைப் பொருத்து உயர்வேலை வாய்ப்பு கிடைக்கும். தொடர் வருமானமும், நிரந்தர வேலையும் இருந்தால், ஏழாமிட தசாபுக்தி நெருங்கினால் நல்லவரன் தேடிவந்து தானாக அமையும்.
ஐந்தாம் இடம் கெடாமலிருந்தால் நல்ல புத்திர பாக்கியம், ஆரோக்கியமான குழந்தை பெற்று மகிழ்ச்சியாக இருப்பர். ஐந்தாமிடம் சுபமாக வலுத்தால் குழந்தைகள் நினைத் தபடி வளர்ந்து ஆளாவார்கள்.
ஆறாம் அதிபதி வலுக்குறைந்து சுபர் பார்வைபெற்றால் இளமையில் நோய், எதிரி, கடன் படாமல், துணைவர், குழந்தைகளுடன் நன்றாகக் குடும்பம் நடத்துவர். அதன் தசை நடந்தால் திடீர் அதிஷ்டத்தால் பெரும் பதவி, பணம் பெறுவர். மக்கள் போற்றும், அறியுமளவு புகழ் கிடைக்கும். ஆறு, எட்டாமிடம் பாதுகாப்பாக இருந்தால் நஷ்ட மில்லாத வாழ்வுபெற்று நோயற்ற ஆயுள்பலம் பெறுவர். லக்னாதிபதி வலுத்திருந்தால் கடைசிவரை யாருடைய ஆதரவுமின்றி முன்னேற்றம் பெறுவர். யாருடைய துணை யுமின்றி ஆயுள்வரை ஆரோக்கியமாக இருப்பர். லக்னாதிபதி சுப பலம்பெற்றால் பூரண ஆயுள்பெற்று, இறுதிவரை நல்ல பெயர் புகழுடன் வாழ்க்கையை நிறைவு செய்வர். இரண்டாமிடத்தில் சந்திரன், சுக்கிரன், புதன் அமர்தல், சேர்க்கை, பார்வை, சுபத்தன்மை பெற்றிருந்தால், தன்னைச் சுற்றியிருப்பவரையும் சந்தோஷப்படுத்தி, தானும் மகிழ்ச்சியாக வாழ்வர். அந்தந்த வயதிற்குரிய மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற அந்தந்த வீடுகளின் தசா புக்திகள் நன்றாக இருந்து, அந்தந்த வயதுக் காலத்திற்கேற்ப வந்தால் மகிழ்ச்சி குறை வின்றிக் கிடைக்கப் பெறுவர். எல்லாருக்கும் எல்லா வயதிலும் அமையாது. சில காலத்தில் வந்துபோகும். அந்தந்த யோகம் இருப்பவர் களுக்கு அவற்றுக்குரிய தசாபுக்தி நடந்து சந்தோஷப்படுத்தும். இதனை வைத்தே நல்ல வாழ்க்கை யாருக்கெல்லாம் கிடைக்கும்- வேதனை நிறைந்த வாழ்க்கை யாருக் கென்பதைக் கணித்துவிடலாம். பரிகாரம் செய்து சாப விமோசனம் பெறும் வாய்ப்பு ஐந்தாம் இடம் வலுப் பெற்றவர்களுக்கும், நல்ல தசாபுக்தி நடப்பவர்களுக்குமே அமையும்.
பரிகாரம்
எல்லாருக்கும் பரிகாரம் செய்து சரிசெய்ய முடியாது. சிலருக்கு கோவில் பரிகாரம், சிலருக்கு நவரத்தினக்கல் அணிவது, சிலருக்கு பெயர் மாற்றம் செய்துகொள்வது, சிலருக்கு தாய்- தந்தையை கவனித்தல், உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல், அன்னதானம், ரத்த தானம்கூட வாழ்க்கையில் நன்மை தரும். சிலருக்கு எந்த பரிகாரம் செய்தாலும் வாழ்வில் மாற்றமே வராது.
"நல்ல எண்ணம் கொண்ட எனக்கு ஜோதிடர் சொன்ன பரிகாரம் எதுவுமே பலனளிக்கவில்லை' என்றால், நல்ல தசா புக்திகள் இல்லாமல் இருக்கும். அப்படிப் பட்டவர்கள் ஏக்கப்படாமல், நடப்பது நடக்கட்டும் என வாழ்வதே சிறந்த பரிகாரம்.
பெரிய முன்னேற்றம் இல்லையென்றா லும், ஏதாவது ஒரு வகையில் நம் மனதுக்குத் திருப்திதரக்கூடிய வாழ்க்கையாவது கிடைத்துவிட்டால், நம்மை ஏமாற்றியவர் களையும் மன்னிக்கும் குணம்கொண்ட மகான்போல, தீமையை மறந்து வாழ்க்கையை மகிழ்வாய் அமைத்துக்கொள்ளலாம்.
செல்: 96003 53748