Advertisment

ஒரு ஜாதகத்தின் கொடுப்பினையை அறிவது எப்படி.? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/how-know-giving-horoscope-prasanna-astrologer-i-continuation-anandis-last

கர்ம ஸ்தானம்

ஒருவருக்கு தொழிலை வழங்கக்கூடிய பத்தாம் பாவகத்தின்மூலம், தொழில்மூலம் உண்டாகக்கூடிய கௌரவம், அந்தஸ்து, தொழில் செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறியமுடியும். அதேபோல் கர்ம ஸ்தானம் என்பது தொழில் ஸ்தானம் மட்டுமல்ல; கர்மம் செய்ய (இறுதி காரியம் செய்ய) ஆண் வாரிசு உண்டா என்பதைக் பற்றிக் கூறும் இடமுமாகும்.

Advertisment

தொழில் ஸ்தானமான 10-ஆம் அதிபதி நட்சத்திர சாரத்தில் கண்டிப்பாக ஒரு கிரகமாவது இருக்கவேண்டும். அதிக கிரகங்கள் நிற்பது மிகச் சிறப்பு. 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. 10-ஆம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் கிரகங்கள் இருந்தால் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத் திறன், தலைமை தாங்கும் பண்பு உண்டு. தொழில் நுட்பம் அறிந்தவர்கள். தன் கையே தனக்கு உதவி என, பிறரை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேறு வார்கள். தொழிலில் அதீத மேன்மை உண்டு.

aa

அரசாளும் யோகம், அரசு உத்தியோகம் உண்டு. பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில் தான

கர்ம ஸ்தானம்

ஒருவருக்கு தொழிலை வழங்கக்கூடிய பத்தாம் பாவகத்தின்மூலம், தொழில்மூலம் உண்டாகக்கூடிய கௌரவம், அந்தஸ்து, தொழில் செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறியமுடியும். அதேபோல் கர்ம ஸ்தானம் என்பது தொழில் ஸ்தானம் மட்டுமல்ல; கர்மம் செய்ய (இறுதி காரியம் செய்ய) ஆண் வாரிசு உண்டா என்பதைக் பற்றிக் கூறும் இடமுமாகும்.

Advertisment

தொழில் ஸ்தானமான 10-ஆம் அதிபதி நட்சத்திர சாரத்தில் கண்டிப்பாக ஒரு கிரகமாவது இருக்கவேண்டும். அதிக கிரகங்கள் நிற்பது மிகச் சிறப்பு. 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. 10-ஆம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் கிரகங்கள் இருந்தால் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத் திறன், தலைமை தாங்கும் பண்பு உண்டு. தொழில் நுட்பம் அறிந்தவர்கள். தன் கையே தனக்கு உதவி என, பிறரை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேறு வார்கள். தொழிலில் அதீத மேன்மை உண்டு.

aa

அரசாளும் யோகம், அரசு உத்தியோகம் உண்டு. பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில் தான் தனித்தியங்கி பலருக்கு வேலை தரும் இயல்பில் இருப்பார்கள். நீடித்த வருமானமும், தொழில் செய்யும் இடங்களில் நல்ல மரியாதையும் கௌரவமும் ஜாதகருக்குக் கிடைக்கும். மாமியார் ஆதரவு உண்டு. மாமியார்மூலம் தொழில் உதவி அல்லது மாமியார் தொழிலை ஏற்று நடத்துவர்.கர்மம் செய்ய புத்திரம் உண்டு.

10-ஆம் அதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் ஜாதகர் சொந்தத் தொழில் செய்தாலும் அதில் முன்னேற்றம், பிறரது மரியாதை பெறுவது கடினமானதாக அமையும், உழைப்பு, முதலீட்டிற்கேற்ற வருமானத்தைப் பெற்றுத்தராது. மாமியாரால் மன உளைச்சல் உண்டு.

பரிகாரம்: சலவைத் தொழிலாளிகளுக்குத் தேவையான தொழில் உபகரணம் வாங்கித் தருவது மிக நல்லது.

லாப ஸ்தானம்

பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து, பல வகையில் வருவாய், லாபம் போன்றவற் றைக் குறிப்பது 11-ஆமிட மான லாப ஸ்தானம்.

ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி சாரத்தில் அதிக கிரகம் இருக்கலாம்.

பதினொன்றாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் கிரகம் பலம் பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. சித்தப்பா, மூத்த சகோதர ருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கௌரவம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். கூட்டுத் தொழிலில் வெற்றி தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்தபிறகு பணவரவு அதிகமாகும். ஜாதகருக்குப் பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை மூலதனமாககொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். அடுத்தவர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பவர். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.

லாப ஸ்தானாதிபதி நட்சத்திர சாரத்தை எந்த கிரகமும் இடம்பெறவில்லை எனில் பொதுவாழ்ககையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பொருளாதாரத்தில் தன்நிறைவற்ற நிலையைத் தரும்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாட்டால் ஐஸ்வர்யங்களை அதிகரிக்க முடியும்.

அயன, சயன ஸ்தானம்

ஜோதிடரீதியாக ஒரு பாவகத்தின்மூலம் ஏற்படும் பிரச்சினையை அதற்கு பன்னிரண்டாம் இடமே தீர்த்து வைக்கும். லக்ன பாவத்தின் பன்னிரண்டாம் இடமான அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானத்தின்மூலம் ஒருவர் இந்தப் பிறவியில் அனுபவிக்கும் துயரங்களுக்குத் தீர்வு வழங்க முடியும். இதன்மூலம் முக்தி அல்லது மோட்சம் என்ற பிறவிப் பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா போன்றவற்றை அறியமுடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், இடது கண், தியாக சிந்தனை, ராஜ துரோகம் போன்றவற்றையும் அறியமுடியும்.

விரய ஸ்தானாதிபதி சாரத்தில் ஒரே கிரகம் இருந்தால் சிறப்பு. ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். சொந்த பூமியில் வாழ்ந்தால் தொட்டது துலங்காது.

கட்டுக்கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். சிலர் கடனுக்காக, செய்யாத குற்றத்திற்காக தலைமறைவாக வாழ்வார்கள்.

இரவு நேர வேலை, இரவு நேரத் தொழில் சிறப்பாகும்.

இரவில் உறக்கம் கெடுவ தால் உண்டாகும் நோய் களும் ஏற்படும். சிலர் வாழ்வின் பெரும்பகுதியை மருத்துவ மனையில் கழிப்பார்கள். எந்த நோய்க்கு எந்த மருந்தை எடுப்பது என்று தெரியாமல் குழம்புவார்கள்.

பன்னிரண்டாம் அதிபதியின் நட்சத்திரசார அதிபதி தசை இளம் வயதில் நடக்கக்கூடாது. அந்த கிரகங் களுக்குரிய நோய்கள் தாக்கும். மரணம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை அடை வார்கள். அதிக கிரகம் விரயாதிபதி சாரத்தில் நின்றால் விரக்தி மனப்பான்மை, சந்நியாச யோகம் உண்டாகும்.

பரிகாரம்: சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடுவது நல்லது.

மனித வாழ்க்கையில் நடக்கும் சுபமோ, அசுபமோ தசாபுக்திக் காலங்களில் மட்டுமே வெளிப்படும்.

ஒரு கிரகம் எந்த நட்சத்திர சார அதிபதியின் சாரம் பெற்று தசை நடத்துகிறதோ அது தொடர்பான பலன்கள் மட்டுமே ஜாதகர் அனுபவிக்கும் கொடுப்பினை என்பதில் சிறிதும் ஐயமில்லை. வழக்கம்போல் இந்த கட்டுரைக்கும் வாசகர்களின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. "பாலஜோதிடம்' வாசகர்களின் ஆதரவிற்கு உளமார்ந்த நன்றிகள்.

செல்: 98652 20406

bala230824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe