Advertisment

ஒரு ஜாதகத்தின் கொடுப்பினையை அறிவது எப்படி? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/how-know-giving-horoscope-prasanna-astrologer-i-anandhi

ரு ஜாதகத்திற்கு பலன்சொல்ல பல்வேறு வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக ஒரு ஜாதகத்திற்கு வேத ஜோதிடம், கைரேகை, நாடி ஜோதிடம், எண்கணிதம், பஞ்ச பட்சி, பிரசன்னம், அட்சய லக்ன பத்ததி, கிருஷ்ணமூர்த்தி பத்ததி என பல்வேறு முறைகள்மூலம் பலன் கூறலாம். இதுபோன்ற அனைத்து முறைகள்மூலமும் ஒரு ஜாதகர் அறிய விரும்பும் ஒரே விஷயம் விதி மற்றும் கொடுப்பினை. ஏனெனில் தலைவிதி பற்றிய அபரிமிதமான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

Advertisment

மனித வாழ்க்கையில், தினம் தினம் நடைபெறும் சம்பவங்களான சந்திப்பு, பயணம், சந்தோஷம், இன்பம்- துன்பம், கஷ்டம், வேலை, தொழில், வெற்றி- தோல்வி வருமானம்- செலவு, லாபம்- நஷ்டம், நோய், விபத்து, சண்டை சச்சரவு போன்றவை அனைத்தும் மதி என்ற ராசிப்படிதான் ஆரம்பிக்கும் மற்றும் நடைபெறும். ஆனால் அனைத்து சம்பவம் மற்றும் நிகழ்வுகளின் விளைவும், முடிவும் கண்டிப்பாக விதிப்படி- அதாவது லக்னம்- கொடுப்பினைபடிதான் இருக்கும். இதுதான் நிதர்சனமான மற்றும் அனுபவப்பூர்வமான உண்மையாகும். இதைத்தான் ஜோதிடம் ராசி, லக்னம்- விதி, மதி என்று கூறுகிறது. இந்த கட்டுரையில் உளவியல்ரீதியாக விதி, கொடுப்பினையை எவ்வாறு அறியலாம் என்றும்,

ரு ஜாதகத்திற்கு பலன்சொல்ல பல்வேறு வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக ஒரு ஜாதகத்திற்கு வேத ஜோதிடம், கைரேகை, நாடி ஜோதிடம், எண்கணிதம், பஞ்ச பட்சி, பிரசன்னம், அட்சய லக்ன பத்ததி, கிருஷ்ணமூர்த்தி பத்ததி என பல்வேறு முறைகள்மூலம் பலன் கூறலாம். இதுபோன்ற அனைத்து முறைகள்மூலமும் ஒரு ஜாதகர் அறிய விரும்பும் ஒரே விஷயம் விதி மற்றும் கொடுப்பினை. ஏனெனில் தலைவிதி பற்றிய அபரிமிதமான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

Advertisment

மனித வாழ்க்கையில், தினம் தினம் நடைபெறும் சம்பவங்களான சந்திப்பு, பயணம், சந்தோஷம், இன்பம்- துன்பம், கஷ்டம், வேலை, தொழில், வெற்றி- தோல்வி வருமானம்- செலவு, லாபம்- நஷ்டம், நோய், விபத்து, சண்டை சச்சரவு போன்றவை அனைத்தும் மதி என்ற ராசிப்படிதான் ஆரம்பிக்கும் மற்றும் நடைபெறும். ஆனால் அனைத்து சம்பவம் மற்றும் நிகழ்வுகளின் விளைவும், முடிவும் கண்டிப்பாக விதிப்படி- அதாவது லக்னம்- கொடுப்பினைபடிதான் இருக்கும். இதுதான் நிதர்சனமான மற்றும் அனுபவப்பூர்வமான உண்மையாகும். இதைத்தான் ஜோதிடம் ராசி, லக்னம்- விதி, மதி என்று கூறுகிறது. இந்த கட்டுரையில் உளவியல்ரீதியாக விதி, கொடுப்பினையை எவ்வாறு அறியலாம் என்றும், ஜோதிடரீதியாக ஒருவரின் விதி மற்றும் கொடுப்பினையையும் அறிவது எப்படி என்பதைக் காணலாம்.

Advertisment

ss

உளவியல்ரீதியான விதி மற்று கொடுப்பினை ராசிக் கட்டத்திலுள்ள கிரகநிலை ஒருவர் பிறந்தபோதுள்ள நேரத்திற்கு மட்டுமே உரியது. இதன் துல்லியமே அவரின் விதி, தலையெழுத்து மற்றும் கொடுப்பினை, புண்ணியம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இதனால்தான் உலகிலுள்ள அனைவருக்குமே ஒரே மாதிரியான ஜாதகம் இல்லாமல் மாறுபாடு கள் கொண்டதாகவே இருந்துவருகிறது. ஒருவரின் தலையெழுத்தும், கர்மாவும் நகமும் சதையும் போன்றது. கர்மம் என்றால் என்ன? பகவத்கீதையில் அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு ஸ்ரீ கிருஷ்ணர் விடையளிக்கிறார்.

வினை விதைத்தவன் வினையறுப்பான். கர்மத்தினை ஒரு விதைக்கு ஒப்பிடலாம். ஒவ்வொரு விதையும் எவ்வாறு விதைக்கப்பட்ட சில காலத்திற்குப்பிறகு முளைத்து உரிய தருணத்தில் வெளியே தெரிவதுபோல், ஒருவரின் ஒவ்வொரு செயலின் விளைவுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் உள்ளது. அக்காலம் கடந்தபிறகு அச் செயலைப் பொருத்து தக்க பலன் உண்டாகிறது. ஆகவே ஒருவன் நல்லது- கெட்டது என எதைச் செய்தாலும் அதற்குத் தகுந்த பலனை உரிய இடத்தில், உரிய காலத்தில் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வினையானது இன்பமோ- துன்பமோ குறுகிய காலத்தில் அதே உடலிலும் அனுபவிக்கப்படலாம் அல்லது அடுத்த பிறவியில் வேறு உடலாலும் அனுபவிக்கப்படலாம். இது பிரபஞ்சத்தின் நியதி.

தலையெழுத்து மாற்றக்கூடிய ஒன்றா என்றால், நிச்சயமாக மாற்றலாம். ஆனால் அதற்குரிய வழிமுறையினை உணர்ந்து கடக்கவேண்டும். ஒரு ஜீவனில் உள்ள ஆசைகளே தலையெழுத்திற்குக் காரணமாக அமைகிறது என்பதால், இறைவன் எந்த விதத்திலும் ஒரு ஜீவனின் தலையெழுத்திற்கு நேரடி காரணமாக இருப்பதில்லை. ஜீவன் தனது ஆசைகளை மறந்து, துறந்து ஞானத்தை அடைவதற்கு பதிலாக சுயநலத்திற்காக இறைவனை வழிபட்டால் இறைஞானத்தை அடையமுடியாமல் லௌகீக மாயையில் ஆன்மா சிக்கி தலையெழுத்தை அதிகப்படுத்துகிறது. ஆகவே, இந்தப் பெரும் பிரச்சினைக் குத் தீர்வு, தூய பக்தியுடன் தொண்டு, சேவை செய்து பகவானின் திருநாமத்தை உச்சரிக்க தலையெழுத்து மாறும். இந்து தர்ம கோட்பாடுகளை நன்கு பயின்று தலையெழுத்தினை மாற்றிக் கொள்ளமுடியும். ஒருவரின் செயல்களே தலையெழுத்தை நிர்ணயிப்பதால் செயல்களைப்பற்றி தெளிவாக அறிதல் தலையெழுத்தை வெல்வதற்கு உதவியாக அமையும்.

ss

ஜோதிடரீதியான விதி மற்றும் கொடுப்பினை ஜோதிடரீதியாக விதி மற்றும் கொடுப் பினையை அறிய பெரும்பான்மையானவர்கள் லக்னம் எனும் லக்னாதிபதி, 5-ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானம், 9-ஆமிடம் எனும் பாக்கிய ஸ்தானத்தின் மூலமே அறிய முற்படுவார்கள். இதன்மூலம் 10 முதல் 20 சதவிகிதம் வரையான பிராப்தம் எனும் விதி மற்றும் கொடுப்பினையை அறியமுடியும் என்பது என் கருத்து. இதை மூன்று விதிகளாக உணர்த்துகிறேன். இந்த மூன்று விதிகள்மூலமே ஒரு ஜாதகரின் கொடுப்பினையை 100-க்கு 100 சதவிகிதம் தெள்ளத் தெளிவாகக் கூறமுடியும்.

ஜோதிடத்தில் பலாபலன்கள் கூறுவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நட்சத்திர சார ஜோதிட முறையாகும். ஜாதக புத்தகத்தைத் திறந்து பார்த்தால் கிரக பாதாச்சாரம் என்று ஒரு குறிப்பு எழுதியிருப்பார்கள். அதில் எந்தெந்த கிரகம் எந்தெந்த நட்சத்திர பாதத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த கிரக பாதச்சார குறிப்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரின் விதி, கொடுப்பினை போன்ற பலன்கள் தெள்ளத்தெளிவாகக் கூறமுடியும். இந்த முறையைத்தான் இன்றளவும் கிராமப்புறங் களில் வசிக்கும் ஜோதிடர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

விதி- 1

ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது நின்றால், அந்தக் குறிப்பிட்ட கிரகம் நின்ற பாவக, காரகப் பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகம் எந்தெந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரகப் பலன்களையும் ஜாதகர் தன் வாழ்வில் நிச்சயமாக அனுபவிக்க விதி, கொடுப்பினை உதவும்.

விதி- 2

ஒரு கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் எந்தவொரு கிரகமும் இல்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் பாவக, காரகப் பலன்களையும் மற்றும் அந்தக் குறிப்பிட்ட கிரகம் எந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரகப் பலன்களையும் ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிப்பதற்கு வாய்ப்பில்லை. விதி, கொடுப்பினை இல்லை எனலாம்.

விதி- 3

ஒரு குறிப்பிட்ட கிரகம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறதோ அந்த நட்சத்திரநாதன் ராசிக் கட்டத்தில் எந்த பாவத்தில் நிற்கிறதோ அந்த பாவக, காரகப் பலன்களையும் அந்த நட்சத்திரநாதன் எந்தெந்த பாவகங்களுக்கு ஆதிபத்தியம் வகிக்கிறாரோ, அந்த பாவகப் பலன்களையும் ஜாதகர் அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் தசாபுக்தி க்காலங்களில் அனுபவிப்பார். வாசகர்கள் பொறுமையாக மீண்டும், மீண்டும் படிக்கவும்.

செல்: 98652 20406

bala020824
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe