ஆண்கள் சிலர் தாம்பத்திய விஷயத்தில் தங்கள் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருக் கிறார்கள். அதனால் கணவன்- மனைவி உறவில் விரிசல் உண்டாகிறது. பலரின் வாழ்க்கை விவாகரத்துவரை சென்று விடுகிறது. இதற்கு ஜோதிடரீதியான காரணமென்ன?
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும்போது, அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறதோ, அவனுடைய மூளை என்ன கூறுகிறதோ, அதற்கேற்றபடிதான் அவனது செயல்களும் இருக்கும். அவர்களின் இல்வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும் சில கிரகங்கள்தான் காரணம். அவற்றில் முக்கிய மானவை சந்திரன், செவ்வாய், சுக்கிரன், லக்னாதிபதி. ஒருவரின் ஜாதகத்தில் தேய்பிறைச் சந்திரன் 6, 8, 12-ல் இருந்து, செவ்வாய் பலவீனமாக இருந்தால், அவர் அதிகமாக சிந்திப்பார். பெண்ணுடன் உறவுகொள்வதைப்போல கற்பனை செய்துகொண்டே இருப்பார். ஆனால், அவருடைய வாழ்க்கையில்... பல சிக்கல்கள், கஷ்டங்கள் இருக்கும். இரவில் மனைவி யுடன் உறவில் ஈடுபடும்போது, பலவகையான கவலைகளால் அவருக்கு உணர்ச்சிகள் சரியாக இருக்காது. உறவில் நாட்டமே இருக்காது.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் சனியுடன் 5 அல்லது 11, 12-ல் இருந்து, தேய்பிறைச் சந்திரனாக இருந் தால், அவருடைய உயிரணுக்கள் பலமற்றவையாக இருக்கும்.
அதன்காரணமாக அவருக்கு உணர்ச்சிகள் குறைவாக இருக்கும்.
அதனால் மனைவியை அவரால் சந்தோஷப்படுத்த முடியாது. பலரின் வாழ்க்கை தோல்விய டைந்து விவாகரத்தில் முடிவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, செவ்வாயும் பலவீனமாக இருந்து அது பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால், அவர் எப்போதும் கற்பனையுலகில் மிதந்துகொண்டிருப்பார். அதனால் உறவுகொள்ளும்போது சில விநாடிகளிலேயே உயிரணுக்கள் வெளியேறிவிடும்.
பலருக்கு தாம்பத்திய விஷயத்தில் திருப்தியற்ற நிலை இருப்பதற்கு வீட்டிலிருக்கும் சில அம்சங்களும் காரணங்களாக உள்ளன. படுக்கையறையின் வண்ணம் சரியில்லாமலிருக்கும். தேவையற்ற பொருட்கள் தேக்கிவைக்கப்பட்டிருக்கும். வீட்டிலிருக்கும் ஆண் தென் கிழக்கில் படுத்தால் தோஷம் உண்டாகும். வடகிழக்கில் துணி சலவை செய்தால்- குளியலறை இருந்தால் தோஷம் அதிகமாக இருக்கும். அதன்காரண மாக கணவன்- மனைவி உறவில் மகிழ்ச்சி யிருக்காது.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரனுடன் 2 அல்லது 5 அல்லது 12-ல் இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால், அவர் எப்போதும் காம சிந்தனைகளுடனே இருப்பார். ஆனால், செவ்வாய் பலவீனமாக இருப்பதால், உறவின்போது வெகு சீக்கிரமே உயிரணுக்கள் வெளியேறிவிடும். சிலரின் சரீரம் மிகவும் பலவீனமாக இருக்கும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும. சுவாசக் கோளாறு இருக்கும். அவர் மேற்கில் தலை வைத்துப் படுத்தால், மேலும் பிரச்சினைகள் அதிகமாகும். சிலரின் வீடுகளில் பூஜையறைகள் சரியான விதத்தில் இருக்காது. படுக்கையறை வடமேற்கு திசையில் இருக்கும். அதனாலும் உடலுறவு விஷயத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.
ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரன், ராகு 3, 6, 8, 11-ல் இருந்து, செவ்வாய் பலவீனமாக இருந்தால், அவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். ஆனால் உறவு விஷயத்தில் பலமிருக் காது. முழுமையான ஈடுபாடில்லாமல் உறவு கொள்வார். அதிகமாக ஆசைப்பட்டாலும், அவருடைய உடல் அதற்கு ஒத்துழைக்காது.
ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், சனி சேர்ந்து 2-ல் இருந்தால், அந்த ஜாதகர் எல்லாரிடமும் சண்டை போடுவதைப்போல பேசுவார். தன் மனைவியிடம்கூட கோபமாகவே பேசுவார். எந்தச் சமயத்திலும் சந்தோஷ மனநிலையுடன் இருக்கமாட்டார். தேவையற்ற விஷயங்களை உறவின்போது பேசி, சூழலையே கெடுத்துவிடுவார். அதனால் அவரின்மீது மனைவிக்கு வெறுப்புதான் இருக்கும்.
வீட்டின் பிரதான வாசல், படுக்கையறையின் வாசல் சரியாக இல்லாமலிருந்தாலும், வீட்டிலிருப்பவர் வடமேற்கில் படுத்தாலும் உறவில் சந்தோஷம் கிடைக்காது.
பரிகாரங்கள்
இரவில் தாமதமாக சாப்பிடக்கூடாது. தினமும் காலையில் குளித்துவிட்டு, தனக்கு விருப்பமான கடவுள்களை வணங்கவேண்டும். சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். ஆஞ்ச னேயரை நான்கு முறை சுற்றி வரவேண்டும். தினமும் வெயிலில் சிறிது நேரம் அமரவேண்டும். (வைட்டமின்-டி கிடைப்பதற்காக). தெற்கு திசையில் தலைவைத்துப் படுப்பது நல்லது. ஜாதகத்தில் எந்த கிரகம் சரியில்லையோ, அந்த கிரகத்திற்குரிய பொருளை தானமளிக்கவேண்டும். படுப்பதற்குமுன்பு, சிறிது வெல்லம் சாப்பிடலாம். அவரவரின் லக்னத் திற்கேற்றபடி எந்த தோஷம் இருக்கிறதோ, அந்த தோஷத்திற்கான பகவானுக்குரிய எந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது நல்லது.
செல்: 98401 11534