சகுனி
இந்த கர்ணத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகளாகவும், அமைதியாகவும் புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம் இருப்பதால் இவர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியானதாக இருக்கும் இவர்கள் தங்களை மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாகவே மாற்றிக்கொள்வார்கள்.
தேவதை- ஸ்ரீ விஷ்ணு
மிருகம்- காகம்
கிரகம்- சனி
மலர்கள்- செண்பகம், நீலசங்குபூ
ஆகாரம்- வெல்லம்
பூசுவது- சேறு
ஆபரணம்- கருத்தநூல்
தூபம்- அகில்
வஸ்திரம்- கந்தை
பாத்திரம்- கற்பாத்திரம்
தெய்வம்- விஷ்ணு
கிழமை- சனிகிழமை
வழிபாடு- காலபைரவர்
ஸ்தலம்- திருநள்ளாறு சனீஸ்வரர்.
இவர்களிடம் உண்மைக்காக சண்டையிடும் குணமுள்ளது. உயர்ந்த அறிவு உள்ளவர்கள். எதார்த்தமாக பழகுவார்கள்.
அழகானவர்கள். அசாத்திய தைரியமுள்ளவர்கள். மிகுந்த செல்வம் உடையவர்கள். செல்வம் இல்லாதவர்களைக்கூட செல்வம் உள்ளவர்களாக காட்டிக்கொள்வார்கள். நோய்தீர மருந்து உட்கொள்ளும் செயல்களை இக்கரணத்தில் செய்தால் சிறந்த பலன்களைக் கொடுக்கும். எதிரிகளை எந்த விதத்திலாவது எதிரில் நின்று வெற்றி பெற இக்கரணம் சிறப்பாக பயன்படுகிறது. இக்கரணத்தில் செய்யும் செயற்கரிய செயல்களால் பெரும் சாதனை செய்யும் நிலை ஏற்படும். பலர் மருத்துவம் சார்ந்த தொழிலில் இருக்கிறார்கள். பலர் சிறந்த அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். இவர்களிடையே தவறு செய்யாதவர்களையும் சாதாரணமாக தண்டிக்கும் குணமும் உண்டு.
ஒருவரை தான் இருக்கும் இடத்தின் பக்கமே வரவிடாமல் செய்து விரட்டி விடும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இணைந்தே இருக்கும் இருவரையும் எளிதில் பிரித்துவிடும் தன்மையும் இக்கரணத்திற்கு உண்டு. இவர்களுக்கு கோபம் வரும்பட்சத்தில் கடுமையான வார்த்தைகளையே எளிதில் பயன்படுத்துவார்கள். பிற கரணங்களில் பிறந்தவர்களைவிட இந்த சகுனி கரணத்தில் பிறந்தவர்களுக்கு திதி, சூன்யம் அதிகம் வேலை செய்கிறது. இவர்கள் அதிகமாக நகைகளை அடகு வைப்பதும் மீட்பதும் மீட்ட நகைகளை மீண்டும் அடகு வைப்பதும் இவர்களது பழக்கங்களில் முக்கியமான ஒன்றாகிறது. பலர் வட்டி வாங்கியே காலம் கழிக்கின்றனர். பலர் வட்டி கட்டியே காலம் கழிக்கின்றனர். வேலை செய்ய இவர்களுக்கு விருப்பம் இருக்கும். இக்கரணத்தில் பிறந்தவர் கள் திருநள்ளாறு செல்லும்போது புத்தாடை உடுத்தாமல் ஏற்கெனவே உடுத்திய பழைய ஆடையுடன் சென்று சனீஸ்வர பகவானுக்கு கருப்பு நூல்களைக் கொண்டு மாலை செய்து அணிவிக்கலாம். வெல்லத்தில் பொங்கல் வைத்து தானம் கொடுக்கலாம்.
இக்கரணத்தில் பிறந்தவர்கள் வழிபடும் தெய்வத்திற்கு திருநீர் பூசி விபூதியை கல்பா பாத்திரத்தில் கலக்கி விபூதியினால் அபிஷேகம் செய்து, அகில் குச்சிகளைக்கொண்டு தூபம் காட்டி, பயன்படுத்தப்பட்ட துணிகளைக்கொண்டு அலங்கரித்து, கருப்பு நூலில் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிவித்து, வெல்லத்தில் பொங்கல் வைத்து, வெல்லம் அவல்பொரி, கலந்து படையல் வைத்து, செண்பகப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டுவர கரண தெய்வம் மனம் குளிர்ந்து கரணநாதன் பூரண பலம் அடைகின்றார்.
ஜாதகருக்கு தடைபட்டுக்கொண்டிருந்த காரியங்கள் எல்லாம் சாதாரணமாக கைகூடிவரும். சுப காரியங்கள் அல்லது மனதில் நினைத்த காரியங்கள், படித்ததற்கான பயணங்கள் மேற்கொள்ளும்பொழுது மனதில் எண்ணியது நன்மைக்காக நடந்தேற மேலே குறிப்பிட்ட சுபகரணங்களில் அதற்கு உண்டான பூக்களை பயன்படுத்துவதும் வாசனை திரவியம் பூசுவதும், ஆகாரம் ஒன்பதும், தூபம் போடுவதும் ஆகிய உங்களால் முடிந்ததை அந்த நேரத்திலுள்ள கரணத்திற்கு ஏற்றவாறு சொல்லியபடி பயன்படுத்தி பாருங்கள்.
இவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தீர காகத்திற்கு உணவு, தண்ணீர் கொடுப்பது சிறப்பு. துப்புரவு பணியாளர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது நல்லது. வயதான முதியோர் களுக்கும் உடல் ஊனமுற்றோர் களுக்கும் அன்னதானம் செய்துவந்தால் எல்லாம் வெற்றியாக அமையும்.
கட்டுரை மற்றும்ஜோதிடம் தொடர்பாக பேச: 90802 73877