முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரம்- 2.
செவ்வாய்: ரோகிணி- 2.
புதன்: அஸ்தம்- 1.
குரு: உத்திரட்டாதி- 3 (வ).
சுக்கிரன்: மகம்- 2.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
ஆவணி 25 (10-9-2022) புதன் வக்ர ஆரம்பம் (காலை 9.09).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
4-9-2022 இரவு 9.42 மணிக்கு தனுசு.
6-9-2022 இரவு 11.37 மணிக்கு மகரம்.
9-9-2022 அதிகாலை 4.00 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களது முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்ப தால் உணர்ச்சிவசப்படாமல் உடனிருப் பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். ராசிக்கு 2, 7-க்கு அதிபதி யான சுக்கிரன், சூரியனுடன் 5-ல் சஞ்சரிப் பதால் பண வரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமில்லாமல் உங்களின் அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் அமைப்புகள், பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் யோகம் ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புண்டாகும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிடமுடியும். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலைகிடைத்து சிறப்பான லாபங்களைப் பார்க்கமுடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடையமுடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடந்தகால மனக் கசப்புகள் விலகி நிம்மதியுடன் செயல்பட முடியும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய செயலில் நீங்கள் ஈடுபட்டால் அதற்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். 2, 5-க்கு அதிபதியான புதன் 5-ல் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் சூழலுக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங் களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண் டால் நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத் தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை அடைய முடியும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறு களை ஏற்படுத்தினாலும் நீங்கள் சிறப்பாக செயல் பட்டு அனைத்துப் பணியும் நன்றாக முடித்து விடுவீர்கள். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பை யும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உத்தி யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற் கான ஆதாயங்கள் கிடைக்கும். புதியவேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லது நடக்கும். தூரப் பயணங் களைத் தள்ளிவைப்பது நல்லது. உடல் ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் அனைத்து புதிய முயற்சிகளுக்கும் முழுமையான அனுகூலங்கள் கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ் வாரம் இருக்கும். ராசிக்கு 3-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக் கூடிய வலிமை உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். வீடு, மனை வாங்க வேண்டுமென்ற உங்களின் நீண்ட நாளைய கனவுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் ஆதாயமான செய்திகள் கிடைக்கும். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து தாராள தனவரவுகள் ஏற்பட்டு கையிருப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறை வேற்றமுடியும். உத்தியோகரீதியாக சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலைசெய் பவர்கள் உதவிகரமாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு பல்வேறு வெற்றி களைக் குவிக்கமுடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு சனிக்கிழமை யன்று எள்தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வதன்மூலம் கெடுதிகள் குறையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தி யாகும் வாய்ப்பு, பொருளா தாரரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் பலம் உண்டாகும். 2-ல் சூரியன், 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்று மில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத் தோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். கூட்டாளிகளை அனுசரித் துச் செல்வதன்மூலம் அவர் களின் உதவியால் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடலாம். சில இடைத்தரகர் களின் செயல்களால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடி யான நிலை ஏற்பட்டாலும், அதனை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களைப் பகைத்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய நிலை ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்று.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் நன்றாக இருக்கும். செவ்வாய் 10-ல் இருப்பதால் கௌரவ வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புண்டாகும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சுப நிகழ்ச்சிகள் கைகூடும். வீண் செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு உங்களின் பொருளாதார நிலை உயரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் கடந்த கால மருத்துவச் செலவு குறையும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய முறைகளைக் கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் விலகுவதால் மன நிம்மதி யுடன் தொழில்புரிய முடியும். நீங்கள் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கை யாளர்களுக்கு டெலிவரி செய்யமுடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கிருந்த சட்டச் சிக்கல்கள் விலகி நிம்மதி உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு எதிர்பார்த்த நல்ல பதவிகள் தேடிவரும். பிறரால் முடிக்க முடியாத பணி களைக்கூட நீங்கள் வெற்றி கரமாக செய்துமுடிக்கும் திறன் ஏற்படும். உங்கள் மீதிருந்த பழிச் சொற்கள் விலகி நல்ல பெயர் எடுக்கமுடியும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதனால் பொருளாதார அனுகூலங்களும் கிடைக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரணமான வெற்றி கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் ஜென்ம ராசியில் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலிலும் மிகவும் சாமர்த்தியமாக செயல் படுவீர்கள். சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொண்டு இலக்கை அடைவீர்கள். ராசிக்கு 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குருபகவான் 7-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வரவேண்டிய பண வரவுகள் தேவையற்ற வகையில் தடைப்படும். நீங்கள் மிகவும் நம்பியவர்கள்கூட கடைசி நேரத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்களை அடைந்துவந்த உங்களுக்கு, ஒருசிலர் செய்யும் செயல்களால் வீண் விரயங்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் எந்திரங்களை பழுது பார்ப்பதற்காக செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வேலையாட்கள்மூலம் நெருக்கடி கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் பணியில் மிகவும் கவனத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். அதிகாரியிடம் பேசும்பொழுது பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது. இரவுப் பயணங்களைத் தள்ளிவைப்பது தற்போதைக்கு நன்று. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது, மகாலட்சுமிக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராகு- கேது 1, 7-ல் சஞ்சரிப்பதாலும் செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர் களை அனுசரித்துச்செல்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. விட்டுக் கொடுத்துச் செல்வதன்மூலம் தேவையற்ற நெருக்கடிகளையும், வீண் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். ராசியாதிபதி சுக்கிரன், சூரியனு டன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகத் திருப்திகரமாக இருந்து அனைத்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு சாதகமற்ற ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் குரு, சனி தற்போது வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கிருந்த வீண் பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பங்காளி கள்வழியில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்குமளவுக்கு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். தொழில்ரீதியாக பிறர் உங்களுக் குத் தரவேண்டிய பண பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைத்து பொருளாதார நெருக்கடி கள் முழுமையாக விலகும். வாங்கிய கடன் களை பைசல் செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையிலிருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியலாம். பணிபுரியும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாகக் கையாளமுடியும். திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவது, செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விரதமிருப்பது, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது கெடுதியைக் குறைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து எல்லாவகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருப்பதால் அனைத்து விதமான அன்றாடத் தேவைகளையும் எளிதில் பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை தக்கநேரத்தில் காப்பாற்றமுடியும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சற்று சிக்க னத்தோடு செயல்படுவது நல்லது. ராசியாதி பதி செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வீண் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். தொழில்ரீதியாக நவீன யுக்தியைக் கையாண்டு நல்ல லாபத்தை அடையமுடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல் பட்டால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்க லாம். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துமுடித்து மேலதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். உடனிருப்பவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புண்டாகும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்களை செயல்படுத்தினால் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையமுடியும். வேங்கடாசலபதியை வழிபடுவது, முருகன் தலங்களுக்குச் சென்றுவருவது வாழ்வில் ஏற்றங்களை ஏற்படுத்தும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன், சுக்கிரனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால சோதனைகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல படிப்படியாகக் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் எளிதில் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராசிக்கு 2-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் சிறப்பு. புதன் 10-ல் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை எளிதில் அடையமுடியும். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டமுடியும். கூட்டாளிகள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நீங்கள் வைத்த கோரிக்கைகள் தற்போது நிறைவேறும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைப்பதால் கடன் பிரச்சினைகள் குறையும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும், அதன்மூலம் ஆதாயங்களையும் அடைய முடியும். சரபேஸ்வரர் வழிபாடு மேற் கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், சுக்கிரன், சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் உங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். ராகு 4-லும், செவ்வாய் 5-லும் சஞ்சரிப்பதால் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, சிலர் செய்யும் செயல்களால் மன அமைதி குறையும் சூழல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சின்ன விஷயத்தில்கூட மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டும். வேலையாட்களின் அலட்சியப் போக்கால் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு அரசு அதிகாரிகள்மூலமாக தேவையற்ற கெடுபிடிகள் ஏற்படலாம். எதிலும் பொறுமையாக செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை பிறரிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, மற்றவர்கள் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது, அதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று நீண்டநாளைய தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது, மாணவர்களுக்கு உங்களால் முடிந்த பொருளுதவி செய்வது நன்று.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், நெருங்கியவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படும். எதிர்பாராத வகையில் அசையும்- அசையா சொத்துகள்மூலம் செலவுகள் ஏற்படலாம். பொதுவாக மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் அளிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால்தான் நெருக்கடிகளைத் தவிர்க்கமுடியும். தொழில்ரீதியாக சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சற்று கவனத் தோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களை அனுசரித்துச்செல்வது, நேரம் காலம் பார்க்காமல் கடினமான முயற்சிகளை மேற்கொண்டால் நிலைமையை சமாளித்து முன்னேற்றங்களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். எடுத்த பணியை முடிப்பதில் இழுபறிநிலை நீடிக்கும். உடன் வேலைசெய்பவர்கள் செய்யும் இடையூறுகளால் மன அமைதி குறையும். மற்றவர்கள் பேசுவதைப் பொருட்படுத்தாமல் பொறுமையாக செயல்பட்டால் உங்கள் பணிகளை விரைவில் முடித்துவிடலாம். முக்கிய கிரக சஞ்சாரம் சாதகமில்லாமல் இருந்தாலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறைந்து தாராள தனவரவுகள் ஏற்படும். ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீண்டநாளைய கனவுகள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகளுக்குத் தற்போது தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களுடைய கனவுகள் நிறைவேறும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளைப் பெறமுடியும். புதன் 7-ல் பலமாக இருப்பதால் உடனிருப்பவர்கள், கூட்டாளிகள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக வெளியூரிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த பணியை செம்மையாக செய்துமுடிப்பது மட்டுமல்லாமல் அதிகாரியினுடைய பாராட்டுதலையும் பெறுவீர்கள். வெளிநபர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத் துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் பல்வேறு காரியங்களை சாதித்துக்கொள்ளமுடியும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலங்களை ஏற்படுத்தும். துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.