முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 2.
செவ்வாய்: மிருகசீரிடம்- 1.
புதன்: அவிட்டம்- 2.
குரு: ரேவதி- 1.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 3.
சனி: அவிட்டம்- 4.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
மாசி 15 (27-2-2023) கும்ப புதன் (மாலை 4.48).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
26-2-2023 காலை 10.15 மணிக்கு ரிஷபம்.
28-2-2023 இரவு 8.32 மணிக்கு மிதுனம்.
3-3-2023 காலை 8.58 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
புதன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சூரியன், சனி 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். நினைத்ததை நிறைவேற்றமுடியும். வாக்குறுதிகளைக் காப்பாற்றும் யோகமுண்டு. ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல் படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி யிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாவதுடன் கடந்தகால கடன்களையும் பைசல் செய்யமுடியும். தொழில், வியாபாரத் தில் இருந்த சட்டச் சிக்கல்கள் விலகி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். திறமையான வேலையாட்கள் அமைவதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்து நல்லபெயர் எடுப்பீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சக ஊழியர் கள் உறுதுணையாக இருப்பார்கள். கடின மான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிக்கமுடியும். சிலருக்கு வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும், அதன்மூலம் அனுகூலங்களும் ஏற்படும். புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு வெற்றி தரக்கூடியவையாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராசியாதி பதி சுக்கிரன், குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நீண்டநாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடுவதற்கான வாய்ப்புகளுண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நண்பர்கள்வகையில் எதிர்பாராத உதவிகள் கிடைக் கும். சூரியன் 10-ல் சஞ்சரிப்ப தால் பெரிய மனிதர்களின் ஆதரவு தக்கநேரத்தில் கிடைத்து, நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்லமுடிவு கிடைக் கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து நல்ல லாபங்களை அடையமுடியும். வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டா கும். அரசுவகையில் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் சில இடையூறு களைத் தந்தாலும் எதையும் சமாளித்துவிடுவீர் கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவழியில் நல்லது நடக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் பரிபூரண வெற்றிகள் கிடைக்கும். துர்க்கைக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, பெருமாள்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 2.
செவ்வாய்: மிருகசீரிடம்- 1.
புதன்: அவிட்டம்- 2.
குரு: ரேவதி- 1.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 3.
சனி: அவிட்டம்- 4.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
மாசி 15 (27-2-2023) கும்ப புதன் (மாலை 4.48).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
26-2-2023 காலை 10.15 மணிக்கு ரிஷபம்.
28-2-2023 இரவு 8.32 மணிக்கு மிதுனம்.
3-3-2023 காலை 8.58 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
புதன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சூரியன், சனி 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். நினைத்ததை நிறைவேற்றமுடியும். வாக்குறுதிகளைக் காப்பாற்றும் யோகமுண்டு. ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல் படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி யிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாவதுடன் கடந்தகால கடன்களையும் பைசல் செய்யமுடியும். தொழில், வியாபாரத் தில் இருந்த சட்டச் சிக்கல்கள் விலகி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். திறமையான வேலையாட்கள் அமைவதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்து நல்லபெயர் எடுப்பீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சக ஊழியர் கள் உறுதுணையாக இருப்பார்கள். கடின மான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிக்கமுடியும். சிலருக்கு வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும், அதன்மூலம் அனுகூலங்களும் ஏற்படும். புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு வெற்றி தரக்கூடியவையாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராசியாதி பதி சுக்கிரன், குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நீண்டநாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடுவதற்கான வாய்ப்புகளுண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நண்பர்கள்வகையில் எதிர்பாராத உதவிகள் கிடைக் கும். சூரியன் 10-ல் சஞ்சரிப்ப தால் பெரிய மனிதர்களின் ஆதரவு தக்கநேரத்தில் கிடைத்து, நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்லமுடிவு கிடைக் கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து நல்ல லாபங்களை அடையமுடியும். வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டா கும். அரசுவகையில் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் சில இடையூறு களைத் தந்தாலும் எதையும் சமாளித்துவிடுவீர் கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவழியில் நல்லது நடக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் பரிபூரண வெற்றிகள் கிடைக்கும். துர்க்கைக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, பெருமாள் வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். 10-ல் குரு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத் தோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். பெண்கள் வழியில் சில உதவிகள் கிடைத்து அதன்மூலம் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் தற்போது 8-ல் சஞ்சரித்தாலும், திங்கட்கிழமை முதல் 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி தராமல் நிதானத் தைக் கடைப்பிடித்தால் எதையும் எதிர் கொள்ளும் பலம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் அனைத்தையும் சமாளித்து போட்ட முதலை எளிதில் எடுத்துவிடமுடியும். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. படித்து முடித்த இளைஞர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, விநாயகர் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகமுண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து சேமிக்குமளவுக்கு பொருளாதாரநிலை திருப்தி கரமாக இருக்கும். திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மறைமுகப் பிரச் சினைகள் விலகி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எடுப்பது மட்டுமல் லாமல் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். வெளியூர்மூலமாக தொழில் வளர்ச்சி ஏற்படும். சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, குடும்ப உறுப் பினர்களின் உடல்நலத்திற் கும் முக்கியத்துவம் தருவது நல்லது. எது எப்படியிருந்தாலும் இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச் சுமை இருந்தாலும் பொருளாதார அனுகூலங் கள் கிடைக்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது முடிவு கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது, துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 8-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப் பதால் பண விஷயத்தில் மிகவும் கவனத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். ராசியாதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கிய வர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் ஒருசில அனுகூலங்கள் இருக்குமென்றாலும் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால்தான் வீண் பிரச் சினைகளைத் தவிர்க்க முடியும். உடனிருப்பவர் களிடம் கருத்து வேறுபாடு கள் ஏற்படலாமென்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது உத்தமம். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப் படியாக இருப்பதால் உடல் அசதி உண்டாகும். பணியில் கவனம் செலுத்துவதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது நிதானத்தோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பொறுமையோடு இருந்தால் வள மான பலன்களைப் பெறலாம். அஷ்ட லட்சுமி வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், சனி சஞ்சரிப் பது மிகச்சிறப்பான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு, சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து எல்லா வகை யிலும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். கடன்கள் குறைந்து நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மனக்கவலைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு சமுதாயத்தில் உயர் வான நிலையை எட்டுவீர்கள். உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கௌரவப் பதவிகள் தேடிவரும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். பணி தொடர் பாக பெரிய மனிதர்களின் நட்பும், வெளியூர்ப் பயணங்களும் உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் நீங்கள் எடுத்த செயலை சிறப்பாகச் செய்துமுடிக்கும் பலம் கிடைக்கும். அம்மன் வழிபாடு, பைரவரை தரிசிப்பதன்மூலம் ஏற்றங்களைப் பெறமுடியும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 6-ல் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடி களை எதிர்கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களே உங்களது அமைதியைக் குறைப்பார்கள். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். குறிப்பாக உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமூகமான நிலை நீடித்தாலும் கணக்கு வழக்குகளில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. திடீரென்று பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களிடம் வேலை செய்பவர்கள் தேவையில்லாத நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தள்ளிப்போகும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது சிறப்பு. மற்றவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்காமல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பூர்வீக சொத்துவகையில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பங்காளியிடம் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் சிறப்பான பலன்களைப் பெறும் வாய்ப்புகளுண்டு. முருக வழிபாடு, வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 4-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக சுக வாழ்க்கை, சொகுசு வாழ்க்கை பாதிக்கும். சுலபமாக முடிக்கவேண்டிய காரியங்களைக் கூட சற்று அலைச்சலுடன்தான் முடிக்க முடியும். 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் குறையிருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் மன மகிழ்ச்சி தரும் இனிய செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சில நெருக்கடிகளைத் தந்தாலும் உங்கள் தனித்திறமையால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். கூட்டாளிகள் ஆதரவு மிகச் சிறப் பாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது நட்புடன் பழகுவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். மற்றவர்கள் பணியை நீங்கள் செய்யவேண்டிய நிலை இருந்தாலும் அதற்கான சன்மானங்கள் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் எதிர்பார்த்ததைவிட சிறப்பான அனுகூலங்கள் கிடைக்கும். மகாவிஷ்ணு வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது வலிமை அதிகரிக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினைப் பெறுவீர்கள். செவ்வாய் ராசிக்கு 6-லும், கேது 11-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் கடன் பிரச்சினைகள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு தற்போது அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளை எளிதில் அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்கான சன்மானத் தைத் தற்போது பெறுவீர்கள். மாணவ- மாணவியர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத் திலிருந்து வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு அதன்மூலம் விருப்பங்கள் நிறைவேறும் யோகமிருக்கிறது. மகாலட்சுமி வழிபாடு, துர்க்கைக்கு தீபமேற்றுவது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால், நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். பேச்சில் பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும் என்பதால் அன்றாட செலவுகளைக் கையாள்வதில் இடையூறுகளை எதிர்கொள்வீர்கள். தேவையற்ற நெருக்கடிகள் காரணமாக கையிருப்பு குறையும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும், வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. கடந்த காலங்களில் நீங்கள் செய்த சிறு தவறுகூட தற்போது பெரிதாக மாறி நெருக்கடியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக நிம்மதி குறையும். ஒவ்வொரு செயலிலும் கவனமாகப் பணியாற்றினால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, குலதெய்வத் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகமுண்டு. பணவரவுக்கு எந்தவிதத்திலும் குறையில்லாமல் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து, போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உழைப்புக்கான சன்மானங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் உடன் வேலை செய்பவர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாய்ப்பு எதிர்பார்ப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடையமுடியும். வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சந்திரன் சிறப்பாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமான பலன் கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் குரு, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். சூரியன், 12-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதாலும், புதனும் திங்கட்கிழமை முதல் 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் ஏற்படும். நம்பியவர்களே நெருக்கடிகளைத் தருவார்கள். பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. செவ்வாய் 3-ல் இருப்பதால் ஒருசில உதவிகள் கிடைக்குமென்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காது. உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் நெருக்கடிகள் சற்று அதிகப்படியாக இருக்கும். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தில் நெருங்கிய பெண்கள் செய்யக்கூடிய உதவிகளால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் சற்று குறையும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பிரதான கிரங்கள் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் அனுகூலமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நல்லது.