இந்த வார ராசிபலன் 22-1-2023 முதல் 28-1-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-22-1-2023-28-1-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 4.

செவ்வாய்: ரோகிணி- 2.

புதன்: பூராடம்- 1.

குரு: உத்திரட்டாதி- 3.

ff

சுக்கிரன்: அவிட்டம்- 2.

சனி: அவிட்டம்- 3.

ராகு: பரணி- 1.

கேது: சுவாதி- 3.

கிரக மாற்றம்:

தை 8 (22-1-2023)

கும்ப சுக்கிரன் (மாலை 3.54).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

23-1-2023 பகல் 1.50 மணிக்கு கும்பம்.

25-1-2023 பகல் 2.30 மணிக்கு மீனம்.

27-1-2023 மாலை 6.35 மணிக்கு மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனி பகவான் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் வரும் நாட்களில் நடக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லா மல், கடன் பிரச்சினைகளும் குறையும். தொழில், வியா பாரத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். எதிலும் கவனமாக இருந்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பல முண்டாகும். தொழில் அபி விருத்திக்காக எதிர்பார்த்த அரசு உத்தரவுகளும் பொருளாதார உதவிகளும் கிடைத்து உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். கடினமான பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருக்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். இடம், பொருள், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமான பலன்களை அடைவீர்கள். துர்க்கையம்மனை தரிசிப்பது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 10-ல், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். உங்கள் எதிர் பார்ப்புகள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் 9-ல் சஞ்சரிப்பதால் நல்ல நட்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் பெரிய மனிதர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி யடைவீர்கள். நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினைக்கெல்லாம் நல்ல தீர்வுகள் கிடைக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதியுடன் செயல் படமுடியும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படு மளவுக்கு உங்களது உயர்வு சிறப்பாக இருக்கும். தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கு வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புண் டாகும். உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகி நிம்மதியேற்படும். கூலியாட்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைவது டன் அதிகபடியான ஆதாயங்களை அடையும் யோகமுமுண்டு. மகாவிஷ்ணு வழிபாடு, துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்றுவது நன்மைதரும்.

dd

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் சஞ்சரிக்கும் சுக்கிரன் வரும் ஞாயிற்றுக் கி

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 4.

செவ்வாய்: ரோகிணி- 2.

புதன்: பூராடம்- 1.

குரு: உத்திரட்டாதி- 3.

ff

சுக்கிரன்: அவிட்டம்- 2.

சனி: அவிட்டம்- 3.

ராகு: பரணி- 1.

கேது: சுவாதி- 3.

கிரக மாற்றம்:

தை 8 (22-1-2023)

கும்ப சுக்கிரன் (மாலை 3.54).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

23-1-2023 பகல் 1.50 மணிக்கு கும்பம்.

25-1-2023 பகல் 2.30 மணிக்கு மீனம்.

27-1-2023 மாலை 6.35 மணிக்கு மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனி பகவான் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் வரும் நாட்களில் நடக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லா மல், கடன் பிரச்சினைகளும் குறையும். தொழில், வியா பாரத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். எதிலும் கவனமாக இருந்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பல முண்டாகும். தொழில் அபி விருத்திக்காக எதிர்பார்த்த அரசு உத்தரவுகளும் பொருளாதார உதவிகளும் கிடைத்து உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். கடினமான பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருக்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். இடம், பொருள், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமான பலன்களை அடைவீர்கள். துர்க்கையம்மனை தரிசிப்பது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 10-ல், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். உங்கள் எதிர் பார்ப்புகள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் 9-ல் சஞ்சரிப்பதால் நல்ல நட்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் பெரிய மனிதர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி யடைவீர்கள். நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினைக்கெல்லாம் நல்ல தீர்வுகள் கிடைக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதியுடன் செயல் படமுடியும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படு மளவுக்கு உங்களது உயர்வு சிறப்பாக இருக்கும். தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கு வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புண் டாகும். உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகி நிம்மதியேற்படும். கூலியாட்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைவது டன் அதிகபடியான ஆதாயங்களை அடையும் யோகமுமுண்டு. மகாவிஷ்ணு வழிபாடு, துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்றுவது நன்மைதரும்.

dd

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் சஞ்சரிக்கும் சுக்கிரன் வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதாலும் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து அனு கூலமான பலன்களைப் பெறுவீர்கள். எதிர் பாராத பண வரவுகள் ஏற்பட்டு அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன் 8-லும், 12-ல் செவ்வாயும் சஞ்சரிப்ப தால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதும், உடல்நலத் தில் கவனம் செலுத்துவதும் நல்லது. வயது மூத்தவர் களிடமும், பங்காளியிடமும் பேச்சில் சற்று பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் தான் நெருக்கடிகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் உதவியை எதிர்பார்க்காமல் நீங்கள் நேரடியாகப் பணி புரிந்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையுமென்றாலும், உழைப்புக் கான பலனையும் ஊதியத்தையும் பெறுவீர்கள். வேலை காரணமாக அதிகப்படியான பயணங் கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற் கொள்வது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத் தில் குரு சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்ப தாலும் பொருளாதாரநிலை மிகச் சிறப் பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். எதிர்பார்ப்புகள் நிறைவேறி நிம்மதியான நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எளிதில் கைகூடும். உடன்பிறந்தவர் கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் சனியும், ஞாயிற்றுக்கிழமை முதல் 8-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்து வது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாகனங் கள்மூலமாக ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். தொழில், வியாபாரத்தில் எந்தவித பிரச்சினையையும் எளிதில் எதிர்கொண்டு லாபத்தை அடைவீர் கள். வேலையாட்கள் ஒத்து ழைப்பு சிறப்பாக இல்லா விட்டாலும், உங்கள் தனித் திறமையால் எடுத்த பணி யைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள் தொழில் நிமித்தமாக எதிர்பார்த்த பொருளா தார உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து எதையும் சமாளிக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரி கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஞாயிறு, சனி ஆகியவை சாதகமான நாட்களாக இருக்கும். திங்கள் பிற்பகல், செவ்வாய், புதன் முற்பகல் காலங்களில் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி களைச்செய்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன் களைப்பெற்று அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். எடுக்கும் முயற்சி களில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் சுக்கிரன் 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பயணங்களில் நிதானத்தோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுகப் பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உங்களது மதிப்பு, மரியாதையும் அதிகரிக் கும். உத்தியோகரீதியாக நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொன் றிலும் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். உடன் வேலைசெய்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகாரியிடமிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நல்ல வாய்ப்புகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, ராகு காலத்தில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 4-லும், சனி 6-லும் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களது பலமும் வலிமையும் கூடும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல லாபங்களை அடையும் வாய்ப்புகள் உண்டு. குரு 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். உங்களிடம் எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு தற்போது நட்புடன் பழகுவார்கள். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நண்பர்கள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் புதிய ஆர்டர்களையும் பெறுவீர்கள். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல், சம்பள நிலுவைத் தொகைகள் தற்போது கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக புதிய வேலை தேடிவருபவர்களுக்கு வரும் நாட்களில் ஒரு கௌரவமான இடத்திலிருந்து அழைப்புவரும். பூர்வீக சொத்துவழியில் ஆதாயங்களை அடைவீர்கள். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் பரிபூரண வெற்றிகிடைக்கும். துர்க்கையம்மனுக்கு ராகுகாலத்தில் தீபமேற்றுவது, அஷ்ட லட்சுமி வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், சனி சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்யமுடியும். எதிர்பாராத உதவிகளால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். அதேசமயம் சூரியன் 4-ல், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல், நிம்மதிக் குறைவு ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எளிதில் முடியவேண்டிய விஷயங்கள்கூட ஒருசிலரின் இடையூறுகளால் சற்று தாமதப் படும். உடனிருப்பவர்களே சில நேரங்களில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்பட்டால் சில அனுகூலங்களைப் பெறமுடியும். வெளியூர்ப் பயணங் களையும், இரவுநேரப் பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சரிவர பணிபுரிய மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் கவனத்தோடு இருந்தால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். வெளிநபர்களிடம் தொழிலைப் பற்றிப் பேசாமலிருப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுக்கமுடியாத அளவுக்கு நெருக்கடிகள் ஏற்படும். அதிகாரி யிடம் பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சாதகமான பலன் களைப் பெறுவீர்கள். சிவன் தலங்களுக்குச் செல்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தைரியத்தோடு செயல்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நவீன கரமான பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டங் கள் உண்டு. குரு 5-லும், ராகு 6-லும் சஞ்சரிப்ப தால் நல்ல பணவரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தியாவதுடன், கடந்தகால நெருக்கடி கள் விலகி மகிழ்ச்சியுண்டாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படு மளவுக்கு உயர்வான நிலையை எட்டமுடியும். நவீன யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபங் களைப் பெறுவீர்கள். அரசுவழியில் எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். வெளியூர்த் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர் கள் பணியில் சிறப்பாக செயல்படமுடியும். கடினமான செயல்களைக்கூட சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட் களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மையுண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக உள்ள வம்பு வழக்கு கள் சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி யேற்படும். முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், 3-ல் சனி சஞ்சரிப்ப தால் கடந்தகால சோதனைகள் முழுமையாக விலகி நல்ல வளர்ச்சியினை அடையும் வாய்ப்புண்டு. ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேவைகளனைத்தும் பூர்த்தியாவது மட்டு மல்லாமல் கடன் பிரச்சினைகள் படிப்படி யாகக் குறைய ஆரம்பிக்கும். எதிர்பார்த்ததை விட அதிகப்படியான பணவரவுகள் உண்டாகி நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். ஆன்மிக- தெய்வீகக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பொருட்தேக்கங்கள் விலகி நல்ல நிலையை அடையமுடியும். சட்டரீதியாக நிலவிய சிக்கல்கள் விலகி பணியில் மகிழ்ச்சியுண்டாகும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர் களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். செவ்வாய், புதன் கிழமைகளில் எந்த செயலில் ஈடுபட்டாலும் பரிபூரண வெற்றியை அடையும் யோக முண்டு. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, தட்சிணா மூர்த்தி வழிபாடு மிகவும் நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த செயலில் ஈடுபட்டாலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். நெருங்கியவர்களே மன அமைதியைக் குறைப் பார்கள். பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்க மான நிலை ஏற்பட்டு தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். முன்கோபத்தைக் குறைத் துக்கொள்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை முடிந்தவரை தள்ளிவைப்பது நல்லது. சில விஷயங்களில் நீங்கள் முன்நின்று செயல் படாமல், உறவினர்கள்மூலமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவை யற்ற பிரச்சினைகள் ஏற்படும். போட்டிகள் காரணமாக நியாயப்படி கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மற்ற கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர் பாராத உதவிகள் கிடைத்து, உங்களுக்கிருக்கும் நெருக்கடிகள் குறைந்து மகிழ்ச்சியும் மன நிம்மதியும் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்று.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வெற்றிகளைக் குவிப்பீர்கள். ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். வாகனங்களில் சற்று பொறுமை யாகச் செல்வது நல்லது. வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிலருக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்படலாமென்பதால் ஆடம்பரத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, குறித்த இடைவேளையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். போட்டிகள் காரணமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளில் சில இடையூறுகள் இருந்தாலும், எதையும் எதிர் கொள்வீர்கள். கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காதென்பதால் உங்கள் பணியில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நிலைமையை சமாளிக்க முடியும். இந்த வாரத் தில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக் கும். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசிக்கு 3-ல் செவ்வாய், லாப ஸ்தானத் தில் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றம்மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். புதன் 10-ல் இருப்பதால் கௌரவமான நிலையுண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும், ஜென்ம ராசியில் குருவும், 12-ல் சனியும் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சிந்தித்து செயல்பட்டால் வீண் இழப்பு களைத் தவிர்க்கலாம். ராசிக்கு 2-ல் ராகு இருப்ப தால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் நல்ல லாபங்கள் கிடைக்கும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் குறித்த நேரத்தில் கிடைப்பதால், தொழிலில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி நல்ல நிலையினை அடைய முடியும். தொழில் விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமலிருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்குமென்றாலும், கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதிகாரிகள் ஆதரவு மிகவும் நன்றாக இருக்கும். எதைப் பற்றி யும் கவலைப்படாமல் நீங்கள் தைரியத்தோடு செயல்படலாம். ஞாயிறு, வியாழன், வெள்ளிக் கிழமைகளில் வெளியிலிருந்து மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்தி கிடைக்கும். துர்க்கை யம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

bala270123
இதையும் படியுங்கள்
Subscribe