ஒருவரின் திருமணத்தை கணவன்- மனைவி அமைப்பைக் குறிப்பிடுவது, களத்திர ஸ்தானமென்று கூறப்படும் லக்னத்திற்கு 7-ஆவது ராசியாகும். பாரம்பரிய வேத, கணித ஜோதிட முறையில் 7-ஆவது ராசியில் செவ்வாய், ராகு- கேது கிரகங்கள் இருந்தால் திருமணத்தடையை உண்டுபண்ணும்.
ஒருவரின் திருமணத்தடைக்கு ஜாதகம், கிரகங்கள் மட்டும் காரணம் இல்லை. தங்களுக்கு எதுபோன்று பெண், மாப்பிள்ளை அமைய வேண்டுமென்று ஆணும், பெண்ணும் அவரவர் மனதில் திட்டமிட்டு கற்பனை செய்துகொண்டு வரன் தேடுவது, குடும்பத்தில் பெற்றவர்கள், பெரியவர்கள் தங்கள் விருப்பம் ஆசைப்படி தங்கள் குழந்தைகளுக்கு மாப்பிள்ளை, பெண் தேடுவது, தங்கள் விருப்பம்போல் அமையும்வரை திருமணம் செய்துவைக்காமல் தங்களுக்குத் தாங்களே திருமணத்தடையை உண்டாக்கிக் கொள்கின்றார்கள்.
சப்தரிஷி நாடியில், திருமணத்தடைக்கு லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்கு முக்கியத் துவம் தருவது இல்லை. 12 ராசிகளில் எந்த ராசியாவது 7-ஆவது ராசியாக இருக்க லாம். அந்த 7-ஆவது ராசி கிரகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அந்த கிரகம், அமர்ந்த இடம் அதனுடன் சேரும் கிரகம், அதைப் பார்க்கும் கிரகம் இவற்றைக் கொண்டுதான் ஒருவருக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா?
ஒருவரின் திருமணத்தை கணவன்- மனைவி அமைப்பைக் குறிப்பிடுவது, களத்திர ஸ்தானமென்று கூறப்படும் லக்னத்திற்கு 7-ஆவது ராசியாகும். பாரம்பரிய வேத, கணித ஜோதிட முறையில் 7-ஆவது ராசியில் செவ்வாய், ராகு- கேது கிரகங்கள் இருந்தால் திருமணத்தடையை உண்டுபண்ணும்.
ஒருவரின் திருமணத்தடைக்கு ஜாதகம், கிரகங்கள் மட்டும் காரணம் இல்லை. தங்களுக்கு எதுபோன்று பெண், மாப்பிள்ளை அமைய வேண்டுமென்று ஆணும், பெண்ணும் அவரவர் மனதில் திட்டமிட்டு கற்பனை செய்துகொண்டு வரன் தேடுவது, குடும்பத்தில் பெற்றவர்கள், பெரியவர்கள் தங்கள் விருப்பம் ஆசைப்படி தங்கள் குழந்தைகளுக்கு மாப்பிள்ளை, பெண் தேடுவது, தங்கள் விருப்பம்போல் அமையும்வரை திருமணம் செய்துவைக்காமல் தங்களுக்குத் தாங்களே திருமணத்தடையை உண்டாக்கிக் கொள்கின்றார்கள்.
சப்தரிஷி நாடியில், திருமணத்தடைக்கு லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்கு முக்கியத் துவம் தருவது இல்லை. 12 ராசிகளில் எந்த ராசியாவது 7-ஆவது ராசியாக இருக்க லாம். அந்த 7-ஆவது ராசி கிரகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அந்த கிரகம், அமர்ந்த இடம் அதனுடன் சேரும் கிரகம், அதைப் பார்க்கும் கிரகம் இவற்றைக் கொண்டுதான் ஒருவருக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? தடை, தாமதமாகி திருமணம் நடக்குமா? என்று பலன் அறியவேண்டும். ஏழாம் பாவத்தை, 7-ஆவது ராசியைக்கொண்டு சரியான பலனறிய முடியாது என்பது ரிஷிகள் வாக்கு ஆகும்.
ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், லக்னத் திற்கு 7-ஆவது ராசிக்குடைய கிரகத்துடன் ராகு- கேது சேர்ந்திருந்தால் திருமணம் தடை, தாமதமாகும். ஜென்ம லக்னாதிபதி கிரகத்துடன் ராகு- கேது கிரகங்கள் சேர்ந்தோ அல்லது லக்னாதி பதி கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2-ஆவது ராசிகளில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் லக்னத் திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 6, 8-ஆவது ராசிகளில் லக்னாதிபதி கிரகம் இருத்தாலும் அல்லது லக்னாதிபதி கிரகம் இருக்கும் ராசிக்கு 6, 8-ஆவது ராசிகளில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருத்தாலும் திருமணம் தடை யாகும். இது "சஷ்டாங்க தோஷம்' ஆகும்.
(பாரம்பரிய ஜோதிடத்தில், ஆண் ராசி, பெண் ராசி ஒன்றுக் கொன்று 6-ஆவது, 8-ஆவது ராசிகளாக இருந்தால் இது சஷ்டாங்க தோஷம், பொருத்தமில்லை என்று கூறுவார்கள். ஆனால் சப்தரிஷி நாடியில், ஒருவர் ஜாதகத்திலேயே இந்த தோஷத்தை அறிந்துகொள்ள கூறியுள்ளார்கள். சஷ்டாங்க தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் தடை, தாமதமாகும். திருமணத்திற்குப் பின்பு கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.)
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 4-ஆவது, 10-ஆவது ராசிகளில் லக்னாதிபதி கிரகம் இருந்தால் திருமணம் தடை, தாமதமாகும், இதேபோன்று லக்னாதிபதி கிரகம் இருக்கும் ராசிக்கு 4-ஆவது, 10-ஆவது ராசிகளில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தாலும் திருமணம் தடை, தாமதமாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகத்துடன் "சனி' சேர்ந்து இருந்தாலும் அல்லது 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் இருந்தால் திருமணம் தடை, தாமதமாகும்.
லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குடைய கிரகம், லக்னத்திற்குரிய கிரகத்திற்கு 3, 6, 9, 12-ஆவது ராசிகளில் நின்றால் திருமணம் தடையாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆவது ராசிக் குரிய கிரகம் லக்னாதிபதிக்கு 2, 5, 8, 11-ஆவது ராசிகளில் இருந்தால் பல தடை, சிரமங்களுக் குப் பிறகு திருமணம் நடைபெறும்.
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குடைய கிரகம் இருக்கும். ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் கேது இருந்தால், திருமணம் நடப்பதில் தடை உண்டாகும். திருமணத்திற்குப்பிறகு கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். இதுபோன்று கேது கிரகம் இருந்தாலும் லக்னாதிபதி கிரகத்திற்கோ அல்லது 7-ஆவது ராசி கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7-ஆவது ராசிகளில் "குரு' கிரகம் இருந்தால், தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
ஒரு பெண்னின் ஜாதகத்தில் அவளின் ஜாதக லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4, 6, 8, 10-ஆவது ராசிகளில், 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தால், அவளுக்கு திருமணம் தடை, தாமதமாகும்.
பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் கேது இருந்தால் அவளுக்கு திருமணம் தடை, தாமதமாகும்.
ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் ராகு- கேது இருக்கும் ராசிகளுக்கு ஒருபுறம் லக்னாதி பதி கிரகமும், அதற்கு எதிர்புறம் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தால் திருமணம் தடை, தாமதமாகும். திருமனம் நடந்து முடிந்தாலும் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.
நாடி விதிப்படி ஒரு ஆணின் ஜாதகத்தில் "குரு' கிரகம் இருக்கும் ராசிக்கு 4, 6, 8, 10-ஆவது ராசிகளில் மனைவியைக் குறிக்கும். "சுக்கிரன்' இருந்தால் அவனுக்கு திருமணம் தடையாகும்.
நாடி விதிப்படி ஒரு பெண்ணின் ஜாதகத்தில், ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் கேது இருந்தாலும் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 4, 6, 8, 10-ஆவது ராசிகளில் கணவனைக் குறிப்பிடும் செவ்வாய் கிரகம் இருந்தால், அவளுக்கு திருமனம் தடை, தாமதாகும்.
ஒரு ஆணின் ஜாதகத்தில், அவன் மனைவியைக் குறிப்பிடும் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசியில் கேது இருந்தாலும், சனி கிரகம் இருந்தாலும் திருமணம் தடை, தாமதமாகும்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் ராகு- கேது இருக்கும் ராசிகளுக்கு ஒரு புறம், குருவும், அதற்கு எதிர்புறம் மனைவி கிரகமான சுக்கிரன் இருந்தால் திருமணம் தடை, தாமதமாகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ராகு- கேது இருக்கும் ராசிகளுக்கு ஒரு புறம் ஜாதகியைக் குறிப்பிடும் சுக்கிரன் இருந்து அதற்கு எதிர்புற ராசிகளில் கணவனைக் குறிக்கும் செவ்வாய் இருந்தால் அவளுக்கு திருமணம் தடை, தாமதமாகும்.
பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் ஏதாவது ஒன்றில் சனி கிரகம் இருந்தால், அவளுக்கு திருமணம் தடை, தாமதமாகும்.
தடை, தாமதத்திற்கு கிரகங்கள் சுட்டிக் காட்டுவது விதியா? வினையா? என்பதை ஆய்வுசெய்து சரியான- முறையான பரிகாரங் களைச் செய்தால் தீமைகளைத் தடுத்துக் கொள்ளலாம்.
செல்: 93847 66742