"நான் பிறந்த நேரம் சரியில்லை. அதனால் மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பிரம்ம தேவன் எழுதிய லிபி சரியில்லை' என்று சதாசர்வ காலமும் புலம்புபவர்களைக் காண்கிறோம்.
ராகு காலத்தில் பிறந்தவர்கள் ராஜயோகப் பலன் பெற்று உலாவருகிறார்கள்.
அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர் களைப் பிடிக்கும் துறையில் அமைச்சர் பணி செய்கிறார்கள்.
"பூராடத்தில் பிறந்தால் போராட்டமான வாழ்க்கை' என்ற சொல்மொழியைத் தோற் கடித்து, ஒரு பெண் அரசுப் பணியில் உயர் நிலை பெற்று, போராடும் பெண்களுக் காகப் புனர்வாழ்வுக்கு வழி சொல்லிவருகிறார்.
மனித ஜீவன்களாகிய நாம் பிறந்த வுடன் நமது ஜனன ஜாதகத்தில்-
"ஜனனீ ஜென்ம சௌக்யானாம்
வர்த்தனீ குலஸம் பதாம்
பதவீ பூர்வ புண்யானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா'
என்ற வாசகம் எழுதப்பட்டு, அதற்கு நேரடிப் பொருளாக, முற்பிறவியில் செய்த பாவங்களுக்கேற்றபடிதான் இந்த வாழ்க்கை. புண்ணியம் செய்திருந்தால் நல்வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது.
ஜனன காலத்தில், ஒருவர் ஜாதகக் கட்டங்களில் அமரும் கிரகங்களின் இடத் தைப் பொருத்தே அவரது வாழ்க்கை யில் சுகயோகங்கள், போக பாக்கி யங்கள் அமைகின்றன. என்றாலும் சோத னைகள் வந்தாலும் மறைந்திருக்கும் ஜாதக யோகங்களை வெளிக்கொண்டு வந்து தலையெழுத்தை மாற்றி நல்வாழ்க்கை வாழமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு வேதங்களுள் நான்காவதான அதர்வணத்தில் மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் தீர ஜாதக அமைப்பை முன்வைத்து அதற்குரிய மந்திரார்த்தங்கள், உயர்ந்த வாழ்க்கை தரும் லிபி முறைகள் சொல்லப்பட்டுள்ளன.
அதர்வண வேதத்தில் சோதித்தறிய ஜோதிடமும் மருத்துவமும், ரிக் வேதத்தில் பிரச்சினைகளுக்கு வழிகாணும் மந்திரத் தொகுப்புகளும், யஜுர் வேதத்தில் ஆலயங்கள், இல்லங்களில் இறைவனது ஆராதனையால் சோதனை அகற்றும் சூட்சுமங்களும் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றைப் பயன்படுத்தி, நம் ஜனன ஜாதகத்தை பிரம்மதேவ லிபியாக எழுதி வீட்டுப் பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டுவந்தால் அவரவர் தலையெழுத்தே மாறி உயர்ந்த வாழ்க்கை அமைந்துவிடும். இங்கே நம் ஜாதகத்தை எழுதுவதில் பழம்பெரும் சுவடி முறை பின்பற்றப்படுகிறது. அதென்ன?
வினை அகற்றும் பனையோலை தற்காலத்து வேத மாந்தர்களும், முற்காலத்து ஜோதிடப் பண்டிதர்களும் மகரிஷிகளும் பனையோலையை பதினெட்டுக்கு நான்கு (18 ஷ் 4) புள்ளிகள் (சென்டிமீட்டர்) அளவுக்கு தயார் செய்துகொண்டு, அதில் எழுத்தாணியால் ஜாதகங்களைத் துல்லியத் தரத்துடன் எழுதி, பலன்களை உள்ளபடி எடுத்துக்கூறி அசரவைத்தார்கள். அவர்கள் கூறுகின்ற பரிகாரங்களும் தெய்வப் பூசனை முறைகளும் தெளிவாக்கப்பட்டு நூறு சதவிகிதப் பலன்களை அனுபவித்தார்கள்.
ஏன் பனையோலையில் ஜாதகங்களை எழுதினார்கள் என்கிற காரணத்தை ஆராய்ந்தால் அதிலும் ஒரு தெய் வாம்சமான உண்மை. இருக்கிறது. பனையோலை நீண்ட காலம் அழியாமலிருக்கும். பாதுகாத்து வைத்தால் பத்து தலைமுறைகள்கூட கெடா மலிருக்கும்.
பனைமரம் சிவபெருமானின் அம்சமாக உள்ளது. அதனால்தான் இந்தப் பனையோலை மட்டையை வைத்துத் திருக்கார்த்திகை தீபத் தன்று சொக்கர் பனையை அமைக் கிறார்கள். பூமியில் விழுகின்ற விதை நெடுமரமாக உயர்ந்து தாகம் தீர்க்கும் வெண்நுங்கை சுவை யோடு கொடுக்கிறது. இந்த மரம் சொல்லும் உட்பொருள் என்ன?
வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லப் புறப்படும் மனிதன் கரடுமுரடான பாதையில் கஷ்டப்பட்டு முன்னேறிட வேண்டும். உலக வடிவான பனங் காயைப் பறித்துக் கனி எடுத்து உண்ணலாம். இதுவே வெற்றிக் கனி. நமது வாழ்க்கை பல கோணங் களில் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று சொல் கிறது. பனைமரம் ஒரு சக்தி வாய்ந்த ஈஸ்வர வடிவம் என்பதைத் தமிழகத் திலுள்ள சிவஸ்தல வரலாற்று ஏடுகளிலிருந்து அறியலாம். இது ஒரு அபூர்வமான தலவிருட்சம்.
காஞ்சிபுரம் அருகிலுள்ள வன்பார்த்தான் பனங்காட்டூர் எனும் திருப்பனங்காடு தலத்தில் இறைவன் பனங்காட்டீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இங்கே தலவிருட்சமே இரண்டு பனைமரங் கள்தான்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனைப் பனை வடிவாய்ப் பாடியுள்ளார்.
"விடையின் மேல் வருவானை
வேதத்தின் பொருளானை
அடையிலன் புடையானை
யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில் வாளைகள் பாயும்
வன்பார்த்தான் பனங்காட்டூர்
சடையில் கங்கை தரித்தானைச்
சாராதார் சார் வெண்ணே.'
அதேபோலத் திருப்பனந்தாள் தலத்தில்-
"போழின வெண்மதியும்
மனல் பொங்கரவும் புனைந்த
தாழ்சடை யான் பனந்தாட்
டிருந்த தாடகை யீச்சுரமே'
என்று திருஞானசம்பந்தர் அங்கருளும் ஈசனைத் தலவிருட்சமான பனை மரத்தின் சிறப்போடு பாடியருளினார்.
அடுத்து திருவாரூர் அருகிலுள்ள திருப்பனையூர் சௌந்தர்யநாத சுவாமி யைத் திருஞான சம்பந்தர்-
"அரவச் சடைமேன் மதி மத்தம்
விரவிப் பொலிகின் றவனூ ராம்
நிரவிப் பல தொண்டர் கணாளும்
பரவிப் பொலியும் பனையூரே'
என்று புகழ்ந்து பாட, சுந்தரமூர்த்தி சுவாமிகள்-
"மாட மாளிகை கோபுரத்தொடு
மண்டபம் வளரும் வளர்பொழில்
பாடல் வண்டறையும்
பழனத் திருப்பனையூர்'
என்று இத்தலத்தில் ஈசன் பனைவடி வாய் அருள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இதேபோல் விழுப்புரம் அருகே முண்டியம் பாக்கம் வழியில் பனையபுரம் என்னும் புறவார்ப் பனங்காட்டுத் தலத்தில் பனைமரங்கள் நடுவே எழுந்த ஈசன் பனங்காட்டீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இவரைத் திருஞான சம்பந்தர்-
"பண்ணமர்ந்தொலி சேர்
புறவார்ப் பனங்காட்டூர்ப்
பெண்ணமர்ந் தொரு பாகமாகிய
பிஞ்ஞகா பிறைசேர் நுதலிடை'
என்று புகழ்ந்து, பனையில் இறைவன் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.
இக்கவிகளிலிருந்து கலிதோஷங்களை நீக்கி நலம்பெற நம் ஜனன ஜாதக பிரம்ம லிபிகளைப் பனையோலையில் முறைப்படி சுலோகங்களோடு எழுதிவைத்துப் பூஜித் தால், ஈஸ்வர அம்சமாக விளங்கும் ஓலைப் படிவத்தில் நமது ஜனனகால கிரகங்கள் தோஷங்களையகற்றி நல்வினைகளை நிகழ்த்தும். சுகவாழ்க்கைத் தேடிவரும்.
பனையோலையில் ஜாதக லிபிகள் லிபி என்பதற்கு தலைவிதி, பிரம்மதேவன் எழுதிய எழுத்து, நன்மை தரும் எழுத்துகள், வடநூலார் தொகுத்தளித்த கிரந்தங்கள் என்று பொருள். பனையோலைச்வடியில் நம் ஜாதகத்தை எழுதிவைப்பதால் முதலில் நமக்கு ஆயுள்பலம் கூடும். பனையோலை ஜாதகம் ஜீவித்திருக்கும் காலம்வரை நமது ஜீவனும் இந்த உலகில் வாழுமென்று சொல்லப் படுகிறது. இந்த பிரம்ம லிபி முறையில் (இழ்ஹம்ட்ஹ கண்க்ஷண்) எழுதப்படும் ஜாதகத்திற்குரியவர் நல்ல சக்திவாய்ந்த நபராக- பணம், புகழ், செல்வாக்கைப் பெறுவார் என்று "காலச்சக் கரம்' கருத்துக் கூறுகிறது. மேலும் துர்தசா காலங்களில்கூட நவநாயகர்கள் நன்மையே செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
பொதுவாக, பழங்காலத்தில் பனையோலை ஜாதக லிபிகளை குடும்பத்திற்கே எழுதி, பூஜையறையில் சாமி படம், சாளக் ராமம், வலம்புரிச்சங்கு, மகாமேருக்கள் இடையில் வைத்து, அதை "ஜென்ம பத்ரிகா' என்று அழைத்து வணங்கிவந்தனர். நாள டைவில் இந்த வழக்கத்தை மறந்தனர்.
சுகவாழ்வளிக்கும் ஜாதக சூட்சுமங்கள்
முதலில் கலைகள் 18 என்ற எண்ணைக் குறிப்படும் வகையில் 18 புள்ளி நீளம், 4 புள்ளி (வேதங்கள்) அகலம் உடைய நான்கு பனையோலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், சந்தனம் பூசியபிறகு, அதன் பசுமை மாறாமல் காயவைத்த பக்குவத்தில், எழுத்தாணி கொண்டு சுபவேளையில் ஜாதகருக்கு அனுகூலமான லாப வேளையில் எழுதலாம். விருட்ச இலையில் ஜாதகம் எழுதிவைத்தால் வாழ்க்கை விருட்சமாய் வளர்ந்துவரும்.
உதாரணமாக, பனையோலையில் ரேவதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்த ஒரு நபருக்கு "ஜென்ம பத்ரிகா' எழுதும் முறையைக் காண்போம்.
முதலில் ஓலையில், "ஜனனீ ஜென்ம சௌக்யானாம்... லிக்யதே ஜென்ம பத்ரிகா' என்றெழுதி, மேற்பகுதியில் பிரணவமும், ஸ்வஸ்திகமும் இடவேண்டும்.
ரேவதி நட்சத்திரம், மீன ராசிக்கான ராசி கணபதி துதியை வடித்து, மேலே "ஸ்ரீகுருப்யோ நம' என்று எழுதவேண்டும்.
அடுத்ததாக, மீன ராசிக்கான சூட்சும மந்திரத்தை எழுதிக்கொள்ள வேண்டும். வரிசையாகப் பார்த்தால்-
முதலில் இந்தப் பிறவியில் நாம் சுகவாழ்வு பெற ஜென்ம பத்ரிகா எழுதப்படுகிறது என்ப தற்காக ஒரு துதி. ஸ்ரீகுருவந்தனத்தை ஒரே வாசகத்தில் சொல்லி முழுமுதற்கடவுளான விநாயகரை, தங்கள் ராசிக்குரிய கணபதியின் பிரார்த்தனை மந்திரத்தை எழுதுகிறோம்.
தொடர்ந்து, மீன ராசிக்கான அதிதேவதை யாக வரும் தபஸ்ய மூர்த்தியின் துதியை எழுதி, அந்த ராசிக்குரிய தியான சுலோகத்தை யும் பொறிக்க வேண்டும். இதில் ராசியின் சக்தியைப் பெருக்குகிற மந்திர சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
அடுத்த ஓலையின் முன்பக்கத்தில் நட்சத்திர தேவதா பிரார்த்தனை மந்திரம் எழுத வேண்டும். ரேவதிக்கான தேவதை பூஷா பன்னி ரண்டு ஆதித்தர்களில் ஒருவராக- 32 நட்சத் திரங்கள் மீன்வடிவில் காணப்பட, நடுவில் சிம்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருபவர்.
அடுத்து இரு ஓலைகளில் ராசிச்சக்கரமும், நவாம்சச் சக்கரமும் எழுத வேண்டும். தசா புக்தி விவரக்குறிப்பை ஒரே ஓலைச்சுவடியில் குறித்துவைக்கலாம்.
ஒருவருக்கு ஜாதகம் யோகம் தர...
✶ ஒருவரது ஜாதகத்தை சுபவேளையில் எழுதுவது அவருக்கு ஆயுள், ஆரோக்கியம், போக பாக்கியங்கள், நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும். எல்லாருக்கும் ஜாதகம் எழுதப் படுகிறது. ஆனால் ஒருசிலருக்கு மட்டுமே அதிர்ஷ்டமான வாழ்க்கை அமைந்து கோடீஸ் வரர்களாக வலம்வருகிறார்கள். ஏன்?
✶ ஜாதகங்களில் நட்சத்திரத்திற்கு வேதை உருவாக்கும் (தாக்குதல் தரும்) தெய்வப் படங்களைப் பொறித்தல் கூடாது.
✶ அவயோகம் உருவாக்கும் அரிமந்திர வகை, சித்த, சாத்திய, சுசித்த மந்திரங்களை எழுதிவைத்தல் கூடாது. இந்தவகையில் உரியதைத் தேர்ந்தெடுக்கலாம்.
✶ ஜாதகங்களை நாம் வாழ்ந்திருக்கும்வரை கிழியாமல் வைத்து அதை வணங்குதல் வேண்டும். இது தாளில் எழுதிவைப்போருக்குச் செய்தி.
✶ ஒருவருக்கு ஜனன ஜாதகம்தான் உயிர், வாழ்க்கைப் பத்திரம். இதை நம்பாதவர்க்கு கிராமப்புறத்துச் சொல் வழக்கத்தில், ஒருவர் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும்போது, "சித்ரகுப்தன் இவர் ஏட்டை எடுத்துப் பார்த்திருக்கிறான்' என்பார்கள்.
அவர் உயிர்விட்டால் "தர்மதேவனாம் எமன் ஏட்டைக் கிழித்தெறிந்துவிட்டான்' என்று புலம்புவார்கள். பிழைத்துவிட்டால் "நீண்ட ஆயுள்' என்பார்கள்.
இந்த உலகத்தில் யாருடைய ஜாதகத்தை யும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பிரம்ம லிபியாக உரிய அதிர்ஷ்டம் தரும் துதிகளோடு பனை யோலைச் சுவடியில் எழுதிவிடமுடியும். இந்த ஜாதகம் எழுதும் ரகசியம் "உத்தரகாலாமிர்தம்', "யவன ஜாதகம்', "சித்தாந்த சாராவளி', "பிருஹச் சாதகம்' ஆகிய உயர்ந்த ஜோதிடக் கிரந்தங் களில் சுலோகங்களாகவே குறிப்பிடப் பட்டிருக்கிறது.
"ஆதித்யாதி க்ரஹா ஸர்வே
ஸநக்ஷத்ரா ஸராசய:
குர்வந்து மங்களம் நித்யம்
யஸ்யேஷா ஜென்ம பத்ரிகா'
என்னும் மகா மந்திர வாக்கியத்திலிருந்து, நவகிரகங்களின் இயக்கமும், நட்சத்திர ராசிகளின் சக்தியும் மங்களங்களைத் தரும் துதிகளோடிணைந்து நமக்கு நல்ல யோகங் களைத் தரட்டும் என்று ஆசிர்வதிக்கப் படுவதை அறியவேண்டும். யோகமுடைய "பிரம்ம லிபி' நல்வாழ்வை அருளட்டும்!
செல்: 91765 39026