ஜாதகம் உணர்த்தும் தொழில் ரகசியம்! -மாரிமுத்து மாசிமலை

/idhalgal/balajothidam/horoscope-indicates-business-secret-marimuthu-masimalai

ருவருக்கு எவ்வாறு தொழில் அமைகிறதென்பதை காலச்சக்கரம் நிர்ணயிக்கிறது. உலகில் பிறந்த அனைவரும் ஒரேமாதிரியாக தொழில் செய்வதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த லக்னத்திற்கு ஏற்றவாறும், கிரக அமைப்புக்குத் தக்கபடியும், காலம், தேசம், வர்த்தமானம் எனப் படும் அவர் பிறந்த சூழல்களுக்குத் தக்கபடியும் தொழில் அல்லது உத்தியோகம் அமைகிறது.

மகர ராசியானது காலச் சக்கரத்திற்கு 10-ஆம் வீடாகும். மகரம் பூமி ராசி, சர ராசியாகும். சர ராசி வளர்ச்சியைக் குறிக்கும். காலதேவன் 10-ஆம் பாவ காரகமான தொழில் சம்பந்தப்பட்ட காரகங்களை வளர்ச்சியுடன் இணைத்திருப்பது சிறப்பான அம்சமாகும்.

உதாரணமாக, மகர ராசியில் சுக்கிரன் இருக்கும்பொழுது அது எவ்வாறு தனது பாவ காரகங்களை மற்ற பாவங்களுக்குத் தகுந்தவாறு மாற்றி செயல்படுகிறது என்பதைக் காண்போம்.

இங்கு சுக்கிரன் ஒரு பாவத்தில் இருக்கிறதென்று சொன்னாலே, அது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருக்கின்றதென்று அர்த்த மாகிறது. பாவம் என்றால் நடிப்பாகும். இங்கு சுக்கிரன் மற்ற பாவங்களுக்குத் தகுந்தவாறு தன்னுடைய காரகங்களை மாற்றிக்கொண்டு நடிக்க ஆரம்பிக்கும்.

ஒருவர் மகர லக்னத்தில் பிறந்தவர் என எடுத்துக்கொள்வோம். சுக்கிரன் மகர லக்னத் திலேயே

ருவருக்கு எவ்வாறு தொழில் அமைகிறதென்பதை காலச்சக்கரம் நிர்ணயிக்கிறது. உலகில் பிறந்த அனைவரும் ஒரேமாதிரியாக தொழில் செய்வதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த லக்னத்திற்கு ஏற்றவாறும், கிரக அமைப்புக்குத் தக்கபடியும், காலம், தேசம், வர்த்தமானம் எனப் படும் அவர் பிறந்த சூழல்களுக்குத் தக்கபடியும் தொழில் அல்லது உத்தியோகம் அமைகிறது.

மகர ராசியானது காலச் சக்கரத்திற்கு 10-ஆம் வீடாகும். மகரம் பூமி ராசி, சர ராசியாகும். சர ராசி வளர்ச்சியைக் குறிக்கும். காலதேவன் 10-ஆம் பாவ காரகமான தொழில் சம்பந்தப்பட்ட காரகங்களை வளர்ச்சியுடன் இணைத்திருப்பது சிறப்பான அம்சமாகும்.

உதாரணமாக, மகர ராசியில் சுக்கிரன் இருக்கும்பொழுது அது எவ்வாறு தனது பாவ காரகங்களை மற்ற பாவங்களுக்குத் தகுந்தவாறு மாற்றி செயல்படுகிறது என்பதைக் காண்போம்.

இங்கு சுக்கிரன் ஒரு பாவத்தில் இருக்கிறதென்று சொன்னாலே, அது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருக்கின்றதென்று அர்த்த மாகிறது. பாவம் என்றால் நடிப்பாகும். இங்கு சுக்கிரன் மற்ற பாவங்களுக்குத் தகுந்தவாறு தன்னுடைய காரகங்களை மாற்றிக்கொண்டு நடிக்க ஆரம்பிக்கும்.

ஒருவர் மகர லக்னத்தில் பிறந்தவர் என எடுத்துக்கொள்வோம். சுக்கிரன் மகர லக்னத் திலேயே இருக்கும்பொழுது, அவருக்குத் தொழில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பலன்களைக் கொண்டிருக்கும். அவருடைய தொழில் காலச்சக்கரத்தில் 10-ஆம் பாவ சூழலுக்கேற்ப தொழில் வளர்ச்சி, தொழிலில் அயராத உழைப்பு, தொழிலில் வைக்கப்படும் முதலீடு, அதன்மூலம் உண்டாகும் அந்தஸ்து, தொழிலை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள், அதன்மூலம் கிடைக்கும் வெற்றி, வெற்றியால் உண்டாகும் அந்தஸ்து போன்றவற்றை சுக்கிரனுக்கே உரிய அழகான, நேர்த்தியான, மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும்.

ff

இங்கு சுக்கிரனின் காரகமான விலைமதிப்புமிக்க ரத்தினக் கற்கள், பொன், வைர ஆபரணங்கள், ஜவுளி வியாபாரம், பட்டுத்துணிகள், வெண்மை நிறமுள்ள அனைத்து வஸ்துகள் போன்றவற்றையும், விலையுயர்ந்த புதிய வாகனங்களையும், இன்ன பிற சுக்கிரன் சம்மந்தப்பட்ட வகையிலும் தொழில்கள் அமையும். தனுசு லக்னத்திற்கு 2-ஆம் பாவமாக விளங்கும் மகர ராசியில், காலச் சக்கரத்திற்கு 10-ஆம் பாவத்தில் இருக்கும் சுக்கிரனால், ஜாதகர் தன்னுடைய அழகான, வசீகரமான பேச்சு வண்மையால் பொருளீட்டுவர். தன்னுடைய அறிவுத்திறனை பேச்சுத்திறமையால் வெளிக்காட்டி தொழிலில் ஈடுபடுவார். இங்கு 2-ஆம் பாவமும் பொன், பொருள், பணம் முதலியவற்றை முதலீடாக வைத்துத் தொழில்செய்யும் அமைப்பைக் காட்டுகிறது.

விருச்சிக லக்னத்திற்கு மகர லக்னம் 3-ஆம் பாவமாக செயல்படுவதால் அவர்கள் செய்தித் தொடர்புகள், செய்திகளைப் பறிமாற்றும் திறன், போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட தொழில்களிலும், தபால் மற்றும் கூரியர், ரயில்வே துறைகளிலும் தொழில் அமையும். மேலும் எழுத்தாளர்களாகவும், ஒப்பந்தத் தொழில்களிலும் அதிகமாக ஈடுபடும் வாய்ப்புண்டு.

துலா லக்னத்தாருக்கு மகர ராசி 4-ஆம் பாவமாக வருவதால் வீடு கட்டுதல், ரியல் எஸ்டேட், வாகனம் சம்பந்தப்பட்டவற்றிலும், விவசாயத் தொழில்களிலும் என விரிவடைந்த தொழில் அமையும்.

கன்னி லக்னத்தார்களுக்கு மகர ராசி 5-ஆம் பாவமாக அமைவதால் இயல், இசை, நாடகம், ஆன்மிகம், யோகா, சினிமா, ஜோதிடம், அரசியல் போன்ற துறைகள்மூலம் தொழில் அமையும்.

சிம்ம லக்னத்தாருக்கு 6-ஆம் வீடாக மகர ராசி இருப்பதால் மருந்துகள் சம்பந்தபட்ட துறை, மருத்துவமனை, மருந்துத் தொழிற்சாலை, உணவு உற்பத்தித் தொழில், ஜவுளித்துறை, வழக்கறிஞர் தொழில் போன்றவற்றில் தொழில் அமையும் வாய்ப்புண்டு. இவர்களுக்கு பிறர் உதவி விளைவாக 6-ஆம் பாவம் செயல்படுவதால் நண்பர்கள், உறவினர் கள்மூலம் உதவிகளைப் பெற்று முன்னேறுவார்கள்.

கடக லக்னத்தாருக்கு 7-ஆம் வீடாக அமைவதால் பொதுஜனத் தொடர்புமூலம் உண்டாகும் தொழில், தொழிற்சாலைகளுக்கு வேலையாட்களை வழங்கும் தொழில், தொழிலாளிகளை முதலீடாகக் கொண்டு தொழில் செய்தல், கணவன் அல்லது மனைவிமூலம் தொழில் அமைதல், தொற்று நோய் சம்பந்தப்பட்ட மற்றும் தடுப்பூசி தொழில் போன்ற துறைகளிலும், திருமணம் சார்ந்த பெண்- ஆண்கள் சம்பந்தப்பட்டவகையில் மேட்ரிமோனியல் அலுவலகம் நடத்துவது போன்ற தொழில்கள் அமையும் வாய்ப்பு அதிகம்.

மிதுன லக்னத்திற்கு 8-ஆம் வீடாக அமைவதால் விபத்து சம்பந்தப்பட்ட துறைகளான தீயணைப்புத்துறை அது சம்பந்தப்பட்ட கருவி களைத் தயாரிக்கும் நிறுவனம், ஆயுள் காப்பீடு அலுவலகம் மற்றும் விபத்துக் காப்பீடு தொழில், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் போன்றவை அமையும்.

ரிஷப லக்னத்திற்கு 9-ஆம் வீடாக அமைவதால் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில், தெய்வ நம்பிக்கை பரப்பும் தொழில், சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுப்பயணங் கள் மேற்கொள்ளும் நிறுவனங்கள், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் சம்பந்தப்பட்ட தொழில்களைக் குறிக்கும்.

மேஷ லக்னத்திற்கு 10-ஆம் பாவமாதலால் அவர்களுக்கு தொழில் துறையில் அதிகாரம், மதிப்பு, மரியாதை போன்றவற்றில் ஒரு சிறந்த அமைப்பினைக் கொடுக்கும். பத்தாம் பாவம் மேஷ லக்னத்திற்கு காலச் சக்கரத்தின் 10-ஆம் பாவ சூழலையே கொடுப்பதால், அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நன்மதிப்பைக் கொடுக்கும்.

மீன லக்னத்திற்கு 11-ஆம் பாவமாதலால் மற்றவர் களை மகிழ்விக்கும் இசை, நடனம், ஆடல், பாடல், சினிமா போன்ற தொழில்களில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். மேலும் அவர்கள் சங்கம், யூனியன் போன்றவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் மேம்படுபவர்களாக இருப்பார்கள்.

கும்ப லக்னத்திற்கு 12-ஆம் பாவமாக வருவதால் இவர்கள் அதிக முதலீடுகளை வைத்து தொழில் செய்வார்கள். பல கிளைகளுடன் தொழில் நடத்துவார்கள்.

விவசாய நிலங்களில் முதலீடுசெய்து அதன்மூலம் தொழில் செய்வார்கள்.

இங்கு மகர ராசியானது நில ராசியாகும். விவசாய நிலங்களில் செடி, கொடி, மரங்கள் வளர்வதால், இது முழுப் பலனளிக்கும் ராசியாகும். இது சர ராசியாகவும் இருப்பதால் எப்பொழுதும் வளர்ச்சியின் நோக்கத்தில் பயணிக்கும் நிலையைக் கொண்டிருப்பதால் அனைத்து 10-ஆம் பாவ காரகங்களும் முன்னோக்கி வளர்ச்சியடை வதைக் குறிக்கும்.

10-ஆமிடத்தை ஜாதகத்தின் உச்சிஸ்தானம் என்று கூறுவர். 10-ல் ஒரு பாவியோ 8-ல் ஒரு ஏழையோ இருந்தால் அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் என்ற பழமொழி உண்டு. ஆதலால் 10-ஆமிடம் உன்னதமான இடமாகப் போற்றப்படுகிறது.

செல்: 81221 80481

bala100323
இதையும் படியுங்கள்
Subscribe