அதிர்ஷ்டங்களை அள்ளிதரும் ஹோரை சூட்சுமங்கள்!-பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/horai-tricks-bring-good-luck

​​"ஹோரை பார்த்து செயல்படுபவர்களிடம் உரசக்கூடாது' என்கிற பழமொழி உண்டு. ஏனெனில் ஹோரை பார்த்து ஒரு விஷயத்தைச் செய்யும்பொழுது அந்த விஷயம் நிச்சயம் 100 சதவிகிதம் வெற்றியாகும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்தவகையில் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களைச் செய்வதும், அசுப ஹோரையில் சில விஷயங்களைத் தவிர்ப்பதும் வழக்கம்.

ஹோரை என்பது உங்கள்வீட்டு காலண்டரில் பார்த்தாலே தெரியும்! அதற்கான அட்டவணையும் கொடுக் கப்பட்டிருக்கும். இதில் எந்தெந்த ஹோரைகள் என்ன காரியங்களை செய்ய உகந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் செயல் பட்டால் நமக்கும் வெற்றி வந்துசேரும். அவற்றைத் தெரிந

​​"ஹோரை பார்த்து செயல்படுபவர்களிடம் உரசக்கூடாது' என்கிற பழமொழி உண்டு. ஏனெனில் ஹோரை பார்த்து ஒரு விஷயத்தைச் செய்யும்பொழுது அந்த விஷயம் நிச்சயம் 100 சதவிகிதம் வெற்றியாகும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்தவகையில் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களைச் செய்வதும், அசுப ஹோரையில் சில விஷயங்களைத் தவிர்ப்பதும் வழக்கம்.

ஹோரை என்பது உங்கள்வீட்டு காலண்டரில் பார்த்தாலே தெரியும்! அதற்கான அட்டவணையும் கொடுக் கப்பட்டிருக்கும். இதில் எந்தெந்த ஹோரைகள் என்ன காரியங்களை செய்ய உகந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் செயல் பட்டால் நமக்கும் வெற்றி வந்துசேரும். அவற்றைத் தெரிந்துகொள்வோம்.

ff

சூரிய ஹோரை

புதிய தொழில் துவங்க நினைப் பவர்கள், புதிதாக வேலைக்குச் செல்பவர் கள், பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறவேண்டுமென்று நினைப்பவர்கள், அரசுவழி காரியங்களை சாதிக்க நினைப் பவர்கள், சொத்துகள்மீதான உயில் சாசனம் எழுத யோசிப்பவர்கள், சூரிய ஓரையில் இதனைத் துவங்க அந்த காரியம் நல்லபடியாக நடக்கும்.

சந்திர ஹோரை

புதிய வியாபாரம் துவங்க நினைப் பவர்கள், திருமண காரியங்கள் பற்றிய விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், நீர்வழிப் பயணங்களை மேற்கொள்ள நினைப்பவர்கள், தாய்வழி உறவினர் களை சந்திக்கப் போகிறவர்கள், தைல தயாரிப்பில் ஈடுபட நினைப்பவர்கள் ஆகியோர் இந்த ஹோரையில் இந்த விஷயங்களைத் துவங்க ஜெயம் உண்டாகும்.

செவ்வாய் ஹோரை

செவ்வாய் ஹோரையை அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள செல்லும் பொழுது பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல ஆயுதம் தயாரிக்க நினைப்பவர்கள், இயந்திரங்கள் தயாரிக்க நினைப்பவர்கள், செவ்வாய் ஹோரையில் துவங்க நல்லபடியாக நடக்கும்.

புதன் ஹோரை

புதன் ஹோரையில் புதிதாக வேலைக்கு இன்டர்வியூ செல்பவர்கள், கலை, கல்வி தொடர்பான விஷயங்களுக்குச் செல்பவர்கள், புதிய பொன்னை உருக்குபவர்கள், ஜோதிடரைக் காணச் செல்பவர்கள் இந்த ஹோரை பார்த்துச் செல்ல, செல்லும் காரியம் 100 சதவிகிதம் ஜெயமாகும்.

குரு ஹோரை

குருவைக் காணச் செல்பவர்கள், நல்ல மனிதர்களை அறிமுகம் கொள்ள போகிறவர்கள், சுப காரியங்களை நிர்ணயிக்க நினைப்பவர்கள், நவரத்தினங்கள், தங்க நகைகள் வாங்கப் போகிறவர்கள், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்க நினைப் பவர்கள், கடன் பாக்கிகளை கொடுக்க நினைப்பவர்கள், புது வஸ்திரம் வாங்க நினைப்பவர்கள், சுபகாரியங்களுக்கு நாள், நேரம் பார்க்கச் செல்பவர்கள், இந்த ஹோரை பார்த்துச் செல்ல, செல்லும் காரியம் ஜெயமாகும்.

சுக்கிர ஹோரை

சுப காரியங்களை நிர்ணயம் செய்ய இந்த ஹோரையைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதேபோல வாகனம் வாங்கச் செல்பவர்கள், இன்ன வாகனம் வாங்க வேண்டுமென்று பார்க்கச் செல்பவர் கள்கூட சுக்கிர ஹோரை பார்த்துச் செல்ல மனதிற்குப் பிடித்த வாகனம் அமையும். அதேபோல விருந்துக்குச் செல்பவர்கள், மருத்துவரைக் காணச்செல்பவர்கள், ஆபரணம் புதிதாக அணிந்துபார்க்க நினைப்பவர்கள், வஸ்திரம் வாங்கச் செல்பவர்கள், புது வஸ்திரம் உடுத்த வேண்டிய நேரம், தொழில் தொடங்ககூடிய நேரம் ஆகியவற்றை சுக்கிர ஹோரை பார்த்து செய்ய சுபமாகும்.

சனி ஹோரை

சனி ஹோரையில் காடு, கிணறு, நிலம், தோட்டம் தொடர்பான விஷயங்களைப் புதிதாகக் கையாள்பவர்கள், ஆயுதக் கலை தொடங்குபவர்கள், யாத்திரை செல்ல நினைப்பவர்கள், விருந்துண்ணச் செல்பவர்கள் ஆகியோர் இந்த ஹோரை பார்த்துச் செல்ல, செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியாகும்.

செல்: 98425 50844

bala190523
இதையும் படியுங்கள்
Subscribe