த்திரம் என்பது கிரகங்களுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்களின் வரிசையில், 12-ஆவது நட்சத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இது நவகிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியனின் நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாகும்.

இந்த உத்திரம் ஆளுமை மற்றும் ஆட்சிக்குப் பெயர்பெற்ற சிம்ம வீட்டில் தனது முதல் பாதத்தையும், அறிவுக்கூர்மைக்கு அடித்தளமாக விளங்கும் கன்னியில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாதங்களையும் பதியவைத்துள்ளது.

காலச்சக்கரத்தில் ஒன்று, ஐந்து, ஒன்பதாவதாக வரும் இடங்கள் முக்கியத் துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின் றது. அவ்வழியில் மேஷத்தின் செவ்வாய், சிம்மத்தின் சூரியன், தனுசின் குரு ஆகிய கிரகங்களின் நட்சத்திரங்கள் முழுமையானதாகப் பரிமளிக் காமல், தலையற்ற- உடலற்ற- காலற்ற நட்சத்திரங்களாக 12 ராசிகளிலும் பரவிப் படர்ந்திருக்கின்றன.

Advertisment

dd

நமது இந்தியப் பஞ்சாங்க முறையில், சந்திரன் புவியைச் சுற்றிவரும்பொழுது உத்திர நட்சத்திர வரையறைக் குள் பயணிக்கும் காலம் உத்திரத்திற்குரிய கால மாகும். இந்த நேரத்தில் ஜனித்தவர்கள் உத்திரத் தைத் தனது ஜென்ம நட்சத் திரமாக அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள்.

இது புதனின் கர்மப் பதிவினைக்கொண்ட நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.

இந் நட்சத்திரம் கட்டில் மற்றும் படுக்கையின் கால்கள் போன்று காட்சியளிப்ப தாக அறியப்படுகிறது. உத்திரத்தை சமஸ்கிருதத் தில் உத்தர பால்குனி என்றும், சீனத்தில் சியு என்றும், கிரேக்கத்தில் லியோனியஸ் என்றும், தமிழில் மானேறு, கதிர் நாள், கடையெழும் சனி, பார்கொடி, மாரி நாள் என்ற பெயர்களிலும் அழைக்கப்படு கிறது.

இந்த நட்சத்திரத்தில் சபரிமலைவாசன் ஐயப்பனும், பாண்டவர்களில் அர்ஜுனனும், தேவகுரு ஆகியோரும் ஜனித்ததாக தமிழ் நிகண்டுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன் அதிதேவதை அதிதி. அதிதி என்றால் சூரியனுக்கும் தாயானவள் என்று பொருள். இதுவொரு மனித கண நட்சத்திரமாகும். எனவே தேவகணத்திற்கு உயரும் எண்ணப் போக்கும், ராட்சச கண அளவுக்குத் தாழும் எண்ணமும் இவர்களைச் சார்ந்திருக் கும். முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் மச்சம் அல்லது தழும்பு இவர்களுக்கிருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் 32 வயதுவரை சிரமப்பட்டு, பின்வரும் காலங்களில் தங்களின் வளர்ச்சி இவர்களின் கைவசமாக்கப்படுகிறது.

இது சூரியனின் ஆளுமையான நட்சத்திரம் என்றாலும், புதனின் வீட்டில் பெரும்பங்கு பரிமளிப்பதால் இவர்களிடம் ஒரு நளினம் அமையப்பெற்றிருக்கும்.

இது புதனின் கர்மப் பதிவைக்கொண்ட நட்சத்திரம் என்பதால், இவர்களுக்கு தாய்மாமன்வழியிலும் நண்பர்கள்வழியிலும் பெரும் இடர்ப்பாடுகளையும், சில துரோகங்களையும் கடந்துவரும் சூழ்நிலை அமையும். மேலும் வெளித்தொடர்புகள் போன்ற வகைகளிலும் சில இடர்களை இவர்கள் சந்தித்தே வந்திருப்பார்கள்.

அதிலும் பத்திரம், ரிஜிஸ்ட்ரேஷன் போன்றவற்றில் சில கசப்பான சம்பவங் களைக் கடந்து வந்திருப்பார்கள்.

இவர்களின் வம்சாவளியில் திருமண மாகாமல் இறந்த ஒரு பெண் இருந்ததற்கான வாய்ப்புண்டு. மேலும் இவர்களின் குடும்பங்களில் இடதுகை பழக்கமுள்ள நபர்கள் இருப்பார்கள்.

உத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராசிநாதன் ஒன்றாம் பாதமென்றால் சூரியனாகவும், இரண்டு, மூன்று, நான்காம் பாதங்களுக்கு புதனாகவும், நட்சத்திரநாதன் சூரியனாகவும், நவாம்ச நாதர்களாக ஒன்றாம் பாதமென்றால் குருவும், இரண்டாம் பாதமென்றால் சனியும், மூன்றாம் பாதமென்றாலும் சனியும், நான்காம் பாதமாக வரும்பொழுது மீண்டும் குருவாகவும் அமையப்பெறும்.

இந்த உத்திர நட்சத்திர முதல் பாதம் சிம்மத்தில் அமையப்பெற்றாலும், மகம் மற்றும் பூரத்திற்கு இருக்கும் அதிகார மனோ நிலை இந்த உத்திரத்திற்கு இல்லாதது ஒரு சிறப்பாகும். இந்த நட்சத்திரம் தன்னை இலகுவாக்கி இசைந்து மற்றவர்களிடம் காரியத்தை சாதித்துக்கொள்ளும் ராஜதந்திர நட்சத்திரமாகும்.

உத்திரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் குருவின் தனுசு வீட்டில் அமையப்பெறும். இது சிம்மத்திற்கு ஐந்தாம் வீடாக வருவதனால் எண்ணங்களை ஈடேற்றிக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் இவர்களின் வம்சாவளிகளில் நடந்தேறக் கூடும். இங்கு சூரியன், சந்திரன், குரு ஆகியோரின் இணைவானது அரசியல், அரசாங்கம், விவசாயம் மற்றும் கல்வி கற்பிக்கும் தொழில்களின்மூலம் சிறப் படையும் தகுதியை அளிக்கும். கற்ற கல்வியினை அல்லது சாஸ்திரங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் தொழிலில் உத்திரம் சிறந்து விளங்குகிறது. ஆன்மிகம் மற்றும் அழகியல் சார்ந்த பயணத்தின்மூலம் வருவாயீட்டும் வாய்ப்புகள் அமையப் பெறுவார்கள். கல்வியின்மூலம் பெறும் சிறப்பினை அடையும் நட்சத்திரமாக இது விளங்குகிறது.

உத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சனியின் வீடான மகரத்தில் அமையப்பெறும். இவர்கள் அதீத புத்திசாலித் தனமும் ராஜதந்திரமும் கொண்டவர்கள். பேச்சால் வசீகரிப்பர். விஞ்ஞானத்தின் பின்புலம் அறிவது, கணிதத்தில் ஞானம், பேராசிரியர் போன்ற துறைகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வார்கள். அதீத சிந்தனைமூலம் நிர்வகிக்கும் சி.ஏ., ஆடிட்டர் போன்ற துறைகளிலும் இவர்கள் புகழ்பெற்று விளங்குவார்கள்.

உத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் கும்ப ராசியில் அமையப்பெறும். இவர்களும் உத்திரம் இரண்டாம் பாதத்திற்கான பலனையே பெரும்பாலும் அனுபவிப்பார்கள்.

உத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் குருவின் வீடான மீனத்தில் அமையப் பெறும். இது ராசிநாதனான புதன் நீசமடையும் வீடென்பதனால் கல்வியில் சில இடர்ப்பாடுகள் இருக்கும். கல்வியறிவினை சரிவர அமைத்துக்கொள்ள முடியாதென்றா லும், புத்திக்கூர்மை மிகுந்தே காணப்படும். பாட அறிவைவிடவும் பட்டறிவு இவர் களுக்கு பேருதவி செய்யும். இவர்கள் ரிஜிஸ்டர் சம்பந்தப்பட்ட தொழில், கம்ப்யூட்டர், ஹாஸ்பிடல், அழகியல் சார்ந்த தொழில், கம்யூனிகேஷன், தரகு, கணினி போன்ற துறைகளில் தன்னை மெருகேற்றி முன்னிலை வகிப்பார்கள்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவர் களது பணி செய்யுமிடங்கள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் உத்திர நட்சத்திரத்தின் சின்னமான கட்டில் சின்னத்தை லோகோ வாகப் பயன்படுத்துவதன்மூலம் தொழிலில் மேன்மையடைய முடியும். மேலும் இந்த நட்சத்திரம் புதனின் கர்மப் பதிவினைக் கொண்ட நட்சத்திரம் என்பதனால் மதுரை மீனாட்சியம்மன் மற்றும் திருவெண்காடு சென்று வழிபடுவது இவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் என்று ஐதீகங்களில் கூறப்பட்டுள்ளன.

வணங்கவேண்டிய தெய்வம்: சூரியன்.

வணங்கவேண்டிய தலம்: மதுரை மீனாட்சியம்மன்.

விருட்சம்: அலரிச்செடி.

அணியவேண்டிய ரத்தினம்: பவளம்.

(அடுத்த இதழில் அஸ்தம்)

செல்: 80563 79988