ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் தங்கள் ஜாதகத்தில் என்ன அதிர்ஷ்டம் உள்ளது, அந்த அதிர்ஷ்டம் செயல்படும் காலம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். ஒருவரின் ஜாதகப் பலனை அறிய ஜோதிடத்தில் ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. அதில் இந்து லக்னமும் ஒன்று.
மகா காளியின் ஆசிபெற்று, "உத்தரகால மிருதம்' எழுதிய மகாகவி காளிதாசர் தனது புத்தகத்தில் இந்து லக்னம் பற்றி எழுதி இருக்கிறார். இந்து என்றால் ஒளி பொருந்திய அல்லது ஒளிவீசும் லக்னம் என்று பொருள். மேலும் இதனை லக்ஷ்மி லக்னம் என்றும், தன லக்னம் என்றும் கூறுகிறார்.
ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண் எனப்படுகிறது. அதன் இரு கண்களாக சூரியனும், சந்திரனும் இருக்கின்றன. இந்து லக்னம் எனப்படுவது சூரியனின் அடிப்படையிலான லக்னத்தையும், சந்திரனின் அடிப்படையிலான ராசியை வைத்தும் கணிக்கப்படுகிறது. காளிதாசர் தான் பெற்ற ஞானத்தால், ஒவ்வொரு கிரகத்திற்கும் களா பரிமாண எண்களைக் குறிப்பிடுகிறார். "களா பரிமாணம்' என்பதற்கு "கிரகங்களின் கதிர்வீச்சு அளவு' எனப் பொருள். பூமிக்கு கிரகங்களால் கிடைக்கும் ஒளி அளவுகள், எண்களாக மாற்றப்பட்டு அவை நம்முடைய ஞானிகளால் அளவிடப் பட்டிருக்கின்றன.
இந்து லக்ன கணக் க

இந்து லக்ன கணக் கின்படி, கிரகங்களின் கிரகமான சூரியனால் பூமிக்கு கிடைக்கும் ஒளியளவு எண் 30 எனவும், பூமிக்கு மிக அருகில் இருக்கும் சந்திரனின் ஒளியளவு 16 எனவும், சுக்கிரனின் ஒளியளவு 12 எனவும், குருவின் ஒளி எண் 10 எனவும், புதனின் ஒளி எண் 8 எனவும், பாவ கிரகமான செவ்வாயின் ஒளி எண் 6 எனவும், சூரியனை வெகுதொலைவிலிருந்து சுற்றிவரும் ஒளியற்ற, முதன்மை பாவக கிரகமான சனியின் ஒளி எண் குறைந்த அளவாக ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கிரக களா பரிமாண வரிசையில் ஊழ்வினையை அனுபவிக்கச் செய்யும் ராகு- கேதுக்களுக்கு இடம் தராமல், மற்ற ஏழு கிரகங் களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள்.
ஏனென்றால் ராகு-கேதுக்கள் ஒளியைப் பிரதிபலிக்கமுடியாத வெறும் இருளான நிழல்கள் மட்டுமே என்பதால் அவற்றை இந்து லக்னம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பலர் இந்து லக்னமும் சந்திர லக்னமும் ஒன்றுதான் என நம்பிவருகின்றனர். சந்திர லக்னம் வேறு; இந்து லக்னம் வேறு.
இந்து லக்னம் கணக்கிடும் முறைகள்
1. ஜென்ம லக்னத்திலிருந்து ஒன்பதாம் இடத்தின் அதிபதி மற்றும் அதற்குரிய எண்ணைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
2. ராசியிலிருந்து ஒன்பதாம் இடத்தின் அதிபதி மற்றும் அதற்குரிய எண்ணைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
3. அவ்வாறு குறித்துக்கொண்ட எண்களைக் கூட்டிவரும் எண் 12ஐவிட பெரியதாக இருந்தால், அந்த எண்ணை 12-ஆல் வகுக்க வேண்டும்.
4. அவ்வாறு வகுக்கும்போது கிடைக்கும் மீதியை, சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து எண்ணும்போது கிடைப்பது இந்து லக்னமாகும். ஒருவேளை 12 என்ற எண்ணே கூட்டல் தொகையாக வந்தால், 12-ஐ சந்திரன் நின்ற இடத்திலிருந்து எண்ணிப் பார்க்க வருவது இந்து லக்னம்.
5. ஒருவேளை, கூட்டிக் கிடைக்கும் எண்ணானது 1 - 12-க்குள் (12-ஐ விடக் குறைவாக) அமைந்தால், அதனை 12-ஆல் வகுக்க முடியாது, அதனால் அந்த எண்ணை அப்படியே எடுத்துக்கொண்டு, சந்திரன் நின்ற இடத்திலிருந்து எண்ணக் கிடைப்பது இந்து லக்னமாகும்.
உதாரணம்- 1
ஜனன லக்னம் கன்னி. சந்திரன் நின்ற லக்னம் விருச்சிகம். கன்னிக்கு 9-ஆவது ராசி ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரனின் களா பரிமாண எண் 12. சந்திரன் நின்ற ராசி விருச்சிகம். அதன் 9-ஆவது ராசி கடகம்.
அதன் அதிபதி சந்திரனின் களா பரிமாண எண் 16. 12+16=28 / 12=2. சந்திரன் நின்ற விருச்சிகத்தின் 2-ஆம் வீடான தனுசே இந்து லக்னமாகும். இப்படிக் கணக்கிடப்படும் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகங்களின் தசை நடக்கும் போது ஒரு மனிதன் அளவற்ற செல்வத் தையும், நன்மைகளையும் அடைவான் எனவும், மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பான் எனவும் மூலநூல்கள் சொல் கின்றன. இந்து லக்னத்தில் கிரகங்கள் இல்லாவிட்டாலும் அந்த லக்னத்தைப் பார்க்கும் கிரகத்தின் தசையிலும் நற்பலன் கள் கிடைக்கும்.
உதாரணம்- 2
ஒருவர் ஜென்ம லக்னம் மிதுனம். சந்திரன் நின்ற ராசி சிம்மம். மிதுனத்திற்கு 9-ஆம் ராசி கும்பம். அதிபதி சனி. சனியின் களா பரிமாண எண் 1. சிம்மத்தின் 9-ஆம் அதிபதி செவ்வாய். அதன் களா பரிமாண எண் 6. ஆக 1+6=7. இதனை 12-ஆல் வகுக்கமுடியாது. எனவே இந்து லக்ன எண் 7 என்று கணக்கிட்டு, சந்திரன் நின்ற சிம்ம ராசியின் 7-ஆம் ராசியான கும்பமே இந்து லக்னமாகும்.
உதாரணம்- 3
பன்னிரண்டால் வகுத்து மீதிவரும் எண் பூஜ்யம் என்று வருகின்றபட்சத்தில், ராசிக்கு முந்தைய வீட்டினை இந்து லக்னமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலை கன்னி லக்னம், கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வரும். அதாவது கன்னி, கும்பம் இரண்டின் ஒன்பதாம் அதிபதிகள் சுக்கிரன் ஒருவரே என்றாகி, 12-ஐ 12-ஆல் கூட்ட வரும் 24-ஐ 12-ஆல் வகுக்கும்போது மீதி பூஜ்யம் என்று வருகின்ற நிலையில், கும்பத்திற்கு முந்தைய மகரத்தை இந்து லக்னமாகக் கொள்ளவேண்டும்.
இந்து லக்னத்தின் பலன்
இந்து லக்னத்தில் இயற்கை சுபகிரகங்கள் அமர்வது சிறப்பு.
இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், அதன் தசை மற்றும் புக்தியில் ஜாதகரை புகழ், பணம், அந்தஸ்து என உயரவைக்கும். சில ஜாதகங்கள் தோஷங்கள் நிறைந்தும், யோகமற்ற கிரக நிலைகளும் காணப்படும்.
இவ்வித ஜாதகர்கள் திடீரென செல்வம், வீடு, வாகனம், தொழில் என மிக உயர்ந்த நிலையை அடை வார்கள். காரணம் இந்து லக்னம். இந்து லக்னத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகம் இருந்து, சுபகிரகப் பார்வை பெற்று தசை நடந்தால் நீங்கள் கண்டிப்பாக கோடீஸ் வரர்தான். இந்து லக்னத்தில் சுபகிரகம் இருந்தால் மட்டும் போதாது. ஜாதகரின் லக்னாதிபதி வலுவாக இருந் தால் மட்டுமே எந்த யோகத் தையும் அனுபவிக்கமுடியும்.
இந்து லக்னத்தில் சுபகிர கங்கள் இருந்து தசை நடத்தும்போது, ஒருவர் அந்த தசையில் மிகச்சிறந்த நல்ல பலன்களை அடைவார். பாவ கிரகங்கள் இந்து லக்னத் தில் இருந்தாலும் குறைந்த அளவு நற்பலன்கள் உண்டு. இந்து லக்னத்தில் இருக்கிற பாவகிரகம் சுபத்துவம் அடைந் திருந்தால் சிறந்த நற்பலன் களை சுபகிரகத்திற்கு இணை யாகத் தரும். இந்து லக்னத்தைப் பார்த்த கிரகங்களும் யோகமான பலனைச் செய்யும். இந்து லக்னாதிபதி கேந்திர, திரிகோணம் பெற்று தசை நடந்தாலும் ஓரளவு நல்ல பலன்களே நடைபெறும்.
செல்: 98652 20406