Advertisment

ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சம்!

/idhalgal/balajothidam/highlight-janma-laknath

ஜோதிடம் என்பது மிகச்சிறந்த காலக் கண்ணாடியாகும். ஜெனன ஜாதகத் தைக்கொண்டு ஒருவரது வாழ்க்கையைப் பற்றி தெளிவாக அறியலாம். பிறந்த ஜாதகத் தில் 1-ஆம் வீடு என வர்ணிக்கப்படும் ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

ஒரு பாவத்தைப் பற்றி ஆராய்கின்றபோது, அதன் அதிபதியும், அதிலிலுள்ள கிரகங்களும், அதனைப் பார்வைசெய்யும் கிரகங்களும், அதன் காரகனும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒரு பாவத்தில் அதன் அதிபதி ஆட்சி, உச்சம்பெறுவது மிகவும் சிறப்பான அமைப்பாகும். அதுபோல ஒரு வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பதும் நற்பலனைத் தரும். அடுத்து, ஒரு பாவத்தை அதன் அதிபதி பார்வை செய்வதன்மூலம், அந்த கிரகம் ஆட்சிபெற்றால் என்ன பலன் தருமோ அதைவிட சிறப்பான பலனைத் தரும். ஒரு பாவாதிபதி பலம்பெற்றிருந்தால் அந்த பாவகத் தொடர்புடைய பலன்கள் சிறப்படையும். அதுவே ஒரு வீட்டதிபதி நீசம்பெற்றாலோ வக்ரம்பெற்றாலோ அந்த பாவகப்பலனை அடை

ஜோதிடம் என்பது மிகச்சிறந்த காலக் கண்ணாடியாகும். ஜெனன ஜாதகத் தைக்கொண்டு ஒருவரது வாழ்க்கையைப் பற்றி தெளிவாக அறியலாம். பிறந்த ஜாதகத் தில் 1-ஆம் வீடு என வர்ணிக்கப்படும் ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

ஒரு பாவத்தைப் பற்றி ஆராய்கின்றபோது, அதன் அதிபதியும், அதிலிலுள்ள கிரகங்களும், அதனைப் பார்வைசெய்யும் கிரகங்களும், அதன் காரகனும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒரு பாவத்தில் அதன் அதிபதி ஆட்சி, உச்சம்பெறுவது மிகவும் சிறப்பான அமைப்பாகும். அதுபோல ஒரு வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பதும் நற்பலனைத் தரும். அடுத்து, ஒரு பாவத்தை அதன் அதிபதி பார்வை செய்வதன்மூலம், அந்த கிரகம் ஆட்சிபெற்றால் என்ன பலன் தருமோ அதைவிட சிறப்பான பலனைத் தரும். ஒரு பாவாதிபதி பலம்பெற்றிருந்தால் அந்த பாவகத் தொடர்புடைய பலன்கள் சிறப்படையும். அதுவே ஒரு வீட்டதிபதி நீசம்பெற்றாலோ வக்ரம்பெற்றாலோ அந்த பாவகப்பலனை அடையமுடியாது.

bb

பொதுவாக ஜென்ம லக்னத்தை எவ்வளவு கிரகங்கள் பார்வை செய்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு யோகமாகும். சுப கிரகங்கள் லக்னத்திலிருப்பது சிறப்பான அமைப்பாகும். பாவ கிரகங்கள் லக்னத்திலிருப்பது கிரகங்களின் இயல்பிற்கேற்ப சோதனையைத் தரும். எப்பொழுதுமே லக்னாதிபதி ஜாதகருக்கு அனுகூலத்தைத் தருவார். லக்னாதிபதி பாவியாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு முழு சுபராகத்தான் விளங்குவார். பொதுவாக சுபர் பார்வை நல்லது. பாவிகள் பார்வை கெடுதி. சனி பார்வை கெடுதி என்றாலும், சனி லக்னாதிபதியாக வரும்போது சனி பார்வை கெடுதியைத் தராமல் நன்மையைத் தரும். அதுதான் லக்னாதிபதியின் சிறப்பு.

ஜென்ம லக்னத்தைக்கொண்டு ஒருவரது தோற்றம், உடலமைப்பு, இயல்பு, சந்தோஷம், பழக்க வழக்கங்கள், தலை, தலைசார்ந்த பகுதி, உடம்பு, தாயின் தந்தை, தந்தையின் தாய் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம். ஜென்ம லக்னாதி பதி வலுவாக அமையும்போது சிறப்பான உடலமைப்பு, நல்ல அழகான தோற்றம், தைரியம், துணிவு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோணத்தில் அமைந்திருந்தாலும் சிறப்பான வாழ்க்கை, செல்வம், செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். லக்னாதி பதி நீசம்பெற்றால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். நீசம்பெற்ற லக்னாதிபதி நீசபங்க ராஜயோகம் பெற்றால் தடைக்குப் பின்பு நல்ல வளர்ச்சி ஏற்படும். லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும், வக்ரம்பெற்றாலும் வாழ்வில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும்.

ஜென்ம லக்னத்திற்கு 6, 7, 8-ல் தொடர்ந்து சுப கிரகங்கள் அமைவதும் அற்புதமான அமைப்பாகும். இதன்மூலம் பலமான லக்னாதிபதி யோகம் உண்டாகும். குறிப்பாக 6, 7, 8-ல் குரு, புதன், சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் அமையப்பெற்றால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும். குறிப்பாக 6, 7, 8-ல் தொடர்ந்து சுபகிரகங்கள் அமைந்தால் அனுகூலப் பலனை உண்டாக்கும். ஜென்ம லக்னத்தில் ஒரு சுபகிரகம் பலமாக அமையப்பெற்றால் நல்ல உடலமைப்பு இருக்கும்.

பாவகிரகம் பலமாக அமையப்பெற்றால் கெடுதிகள் ஏற்படும். குறிப்பாக லக்னத்தின் முற்பாதியில் அமைந்தால் தலையில் இடது பாகத்தில் பாதிப்பும், பிற்பாதியில் பாவகிரகம் பலமாக அமைந்தால் தலையின் வலது பாகத்தில் பாதிப்பும் உண்டாகும். லக்னத்தில் பாவகிரகங்கள் அமையப்பெற்றால் தலையில் ஒரு தழும்பு ஏற்படும்.

ஜென்ம லக்னத்தில் சந்திரன் பலமாக அமையப்பெற்றால் வசீகரமான உடலமைப்பு, அழகான தோற்றம் இருக்கும். லக்னத்தில் அமையும் சந்திரன் தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலோ, சர்ப்ப கிரகத் தொடர்போடு இருந் தாலோ சற்று குழப்பவாதியாகவும், நீர் தொடர்பு டைய உடம்பு பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

லக்னாதிபதி செவ்வாயாக இருந்தாலும், லக்னத்தில் செவ்வாய் வலுப்பெற்றாலும் என்றும் இளைஞராக- அதாவது முதுமையிலிலும் இளமைத் தோற்றம் இருக்கும். தைரியம், துணிவு, சிறப்பான உடலமைப்பு ஏற்படும்.

லக்னாதிபதி புதனாக இருந்தாலும், லக்னத் தில் புதன் வலுப்பெற்றாலும் குழந்தைத்தனம் அதிகமிருக்கும். நல்ல அறிவாளியாக இருப்பார் கள். பலருக்கு வழிகாட்டக்கூடிய திறனிருக்கும்.

குரு லக்னத்தில் அமையப்பெற்றாலும், லக்னாதிபதி குருவாக இருந்து வலுப்பெற்றா லும் நல்ல உடலமைப்பும், மற்றவர்களிடம் பழகும்போது இனிமையாகப் பேசும் சுபாவமும், உதவிசெய்யும் பண்பும், ஆன்மிக- தெய்வீக எண்ணமும் இருக்கும்.

சுக்கிரன் லக்னத்தில் அமையப்பெற்றால் ஆடம்பரப் பிரியராக இருப்பார். கவர்ச்சியான உடமைப்பும், சிறப்பான பொருளாதார நிலையும் இருக்கும்.

ஜென்ம லக்னத்தில் சூரியன், செவ்வாய் அமையப்பெற்றால் தைரியம், துணிவு, மற்றவர் களை அதிகாரம் செய்யும் திறமை, தலைமைப் பண்பு கொண்டவராக இருப்பார்கள்.

செவ்வாய், சனி அமையப்பெற்றால் முரட்டுத் தனம், பிடிவாதகுணம் இருக்கும். மற்றவர்களை அதிகாரம் செய்யும் அமைப்பு, உடம்பில் ஏதாவதொரு இடத்தில் சிவப்புநிறத் தழும்பு உண்டாகும்.

சனி, ராகு லக்னத்தில் அமையப்பெற்றால் முரட்டுத்தனம், பிடிவாதகுணம், அசட்டு தைரியம், மூர்க்க குணம் கொண்டவராக இருப்பார்கள். கருப்புநிறத் தழும்பு தலை பாகத்தில் இருக்கும்.

bala110322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe