உயர்கல்வி, மேற்கல்வி யோகம்! -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/higher-education-higher-education-yoga-dr-muruku-balamurugan

ற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்விச் செல்வம் அழியாதது; பிறரால் களவாட முடியாதது. கல்வி அறிவிருந்தால் எங்கு சென்றாலும் அதனால் மதிப்பும், மரியாதையும் உயரும். எங்கு, யாரிடத்தில் எப்படிப் பழகவேண்டும்- எப்படிப் பேசவேண்டும் என்ற ஆற்றல் உண்டாகும். அப்படிபட்ட கல்விச் செல்வம் யாருக்கெல்லாம் தடையின்றிக் கிடைக்கும் என்பதையும், உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகம் யாருக்கு அமையுமென்பதைப் பற்றியும் இங்கே பார்ப்போம்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 2-ஆம் பாவமானது பேச்சுத்திறன், அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4-ஆம் பாவமானது கல்வி ஸ்தானம் என்பதால், பொதுவாக ஒருவரின் கல்வியறிவு, திறமை பற்றி அறிய உதவும். 5-ஆம் பாவத்தைக்கொண்டு ஒருவரின் அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, உயர்கல்வி, பட்டக் கல்வி ஆகியவற்றை அறியலாம். 5-ஆம் பாவமானது சுபகிரகங்களின் பார்வை, சேர்க்கையுடன் இருந்தாலும், 5-ஆமதிபதி பலமாக அமைந் திருந்தாலும் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலும் யோகமுண்டாகும். மேலும் மேலும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் முடியும். முதுநிலை பட்டப்படிப்புக்குக் குறிப் பிட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெறக் கூடிய அமைப்பு உண்டாகும்.

ff

5-ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலும், 5-ல் ஓரு உச்ச கிரகம் அமையப்பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி, உச்சம்பெற்று 5-ஆமதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில

ற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்விச் செல்வம் அழியாதது; பிறரால் களவாட முடியாதது. கல்வி அறிவிருந்தால் எங்கு சென்றாலும் அதனால் மதிப்பும், மரியாதையும் உயரும். எங்கு, யாரிடத்தில் எப்படிப் பழகவேண்டும்- எப்படிப் பேசவேண்டும் என்ற ஆற்றல் உண்டாகும். அப்படிபட்ட கல்விச் செல்வம் யாருக்கெல்லாம் தடையின்றிக் கிடைக்கும் என்பதையும், உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகம் யாருக்கு அமையுமென்பதைப் பற்றியும் இங்கே பார்ப்போம்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 2-ஆம் பாவமானது பேச்சுத்திறன், அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4-ஆம் பாவமானது கல்வி ஸ்தானம் என்பதால், பொதுவாக ஒருவரின் கல்வியறிவு, திறமை பற்றி அறிய உதவும். 5-ஆம் பாவத்தைக்கொண்டு ஒருவரின் அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, உயர்கல்வி, பட்டக் கல்வி ஆகியவற்றை அறியலாம். 5-ஆம் பாவமானது சுபகிரகங்களின் பார்வை, சேர்க்கையுடன் இருந்தாலும், 5-ஆமதிபதி பலமாக அமைந் திருந்தாலும் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலும் யோகமுண்டாகும். மேலும் மேலும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் முடியும். முதுநிலை பட்டப்படிப்புக்குக் குறிப் பிட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெறக் கூடிய அமைப்பு உண்டாகும்.

ff

5-ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலும், 5-ல் ஓரு உச்ச கிரகம் அமையப்பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி, உச்சம்பெற்று 5-ஆமதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோக முண்டாகும். பொதுவாக கல்வி ஸ்தானம் 4-ஆமிடம் என்பதால், 4-ல் பாவ கிரகங்கள் அமையாமல் 4-ஆமதிபதி வலுவிழக்காமல் இருந்து, 5-ஆமதிபதி வலுவாக இருந்தால், கல்வியில் எந்தவிதத் தடையுமின்றி சாதனைகள் பல செய்ய நேரிடும்.

5-ஆமதிபதி பலம்பெறுவது மட்டுமின்றி, 4, 5-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், 5-ஆமதிபதி கேந்திர, திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்யலாம்.

2, 4, 5-ஆம் பாவங்கள் கல்விக்கு சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும், பாவ கிரகங்களால் சூழப்படாம-ருப்பதும் நல்லது. அப்படி பாவ கிரகங்களால் சூழப் பட்டால் கல்வியில் தடைகள் உண்டாகும்.

குறிப்பாக, சர்ப்பகிரகம் என வர்ணிக்கப் படக்கூடிய ராகு- கேது ஆகியவை மேற் கூறிய ஸ்தானங்களில் அமையப்பெற்றால் கல்வியில் தடையுண்டாகும்.

அதுவும் ராகு அல்லது கேதுவின் தசை கல்வி கற்கக்கூடிய வயதில் நடைபெற்றால், கல்வியில் இடையூறுகள் ஏற்படுகின்றன. சந்திரனின் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்; செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், பட்டக்கல்வி பயிலக்கூடிய வயதில் ராகு தசை வரும். இந்த ராகு தசைக் காலங்களில் படிப்பிற்குத் தடைகள் ஏற்படும். கல்வியில் நாட்டம் குறையும். விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்களுக்கு, பட்டக் கல்வி கற்கக்கூடிய வயதில் கேது தசை நடக்கும்.

இதனால் கல்வியில் தடை, இடையூறுகள் ஏற்படும்.

4, 5-ஆம் பாவத்தில் கிரகங்கள் வலுவாக அமையப்பெற்றால் உயர்படிப்பு யோகம், அந்த கிரகத்தின் இயல்பிற்கேற்ப அமையும்.

பொதுவாக, 4, 5-ல் சூரியன் வலுவாக அமையப்பெற்று, உடன் செவ்வாய் அமையப்பெற்றோ, பலம்பெற்றோ இருந் தால் மருந்து, அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் சாதனை செய்யலாம். அதுவும் சூரியன், செவ்வாய் பலம்பெறுவதுடன், மருத்துவ கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரன், ராகு- கேது ஆகியவற்றின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தால், மருந்து சார்ந்த துறைகளில் சாதனை செய்யும் யோகமுண்டாகும்.

4, 5-ல் சந்திரன் வலுப்பெற்றால் மருந்து, கேட்டரிங், கடல் சார்புடைய படிப்பில் சாதிக்கமுடியும்.

செவ்வாய், சூரியன், குரு பார்வையுடன் 4, 5-ல் வலுவாக இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற துறைகளில் சாதிக்கமுடியும்.

செவ்வாய் 4, 5-ல் பலமாக இருந்தால், நிர்வாகம் சார்ந்த எம்.பி.ஏ. படிக்கமுடியும். செவ்வாயுடன், சனி சேர்ந்திருந்தால் கட்டடம் சார்ந்த துறை, எந்திரம் சார்ந்த துறையில் உயர்கல்வி கற்கும் யோகமுண்டா கும். செவ்வாய், புதன் இணைந்திருந்தால் கம்ப்யூட்டர் துறையில் உயர்கல்வி யோகமுண்டாகும்.

4, 5-ல் புதன் பலம்பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், ஆடிட்டிங் சார்ந்த துறைகளில் உயர்கல்வி யோகமுண்டாகும்.

4, 5-ல் குரு பலம்பெற்றால் வங்கிப் பணிக்கான கல்வி, சட்டப்படிப்பு, மற்றவர் களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தக்கூடிய கல்வி யோகம் உண்டாகும். குரு, புதன் இணைந்திருந்தால் கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து, பள்ளி, கல்லூரி களில் ஆசிரியர், பேராசிரியராகும் யோகமுண்டாகும்.

4, 5-ல் சனி பலம்பெற்றால் டெக்னிக்கல் கல்வி உண்டாகும். 4, 5-ல் சுக்கிரன் பலம்பெற் றால் கலை, இசை தொடர்புடைய கல்வியில் சாதனை செய்யும் அமைப்புண்டாகும்.

ராகு 5-ல் சுபப் பார்வையுடன் பலம்பெற் றால் புதுவகையான கல்வியில் எதிர்நீச்சல் போட்டு சாதிக்கும் ஆற்றல் உண்டாகும்.

5-ல் கேது அமையப்பெற்றால் மருந்து, கெமிக்கல் சார்ந்த கல்வி, சமயம் சார்ந்த கல்வியில் சாதிக்க நேரிடும்.

படிக்கின்றபொழுது ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்கும் அமைப்பேற்படுகிறது. அது யாருக்கு என பார்க்கும்பொழுது, அதற்கும் ஒருவர் ஜாத கத்தில் கிரகங்கள் சாதகமாக இருக்க வேண்டும். பொதுவாக படிக்கின்ற வயதில் ஒருவர் ஜாதகத்தில் 2-ல் பாவ கிரகம் இருந்து, அதன் தசை படிக்கும் வயதில் நடைபெற்றால் அவர்கள் பெற்றோரிடம் தங்கிப் படிக்காமல், வேறிடங்களுக்குச் சென்று தங்கிப் படிக்கக்கூடிய நிலையோ அல்லது ஹாஸ்ட-ல் தங்கிப் படிக்கக்கூடிய நிலையோ ஏற்படுகிறது. அதாவது குறிப்பாக 2-ல் பாவ கிரகம் இருந்தால் குடும்பத்துடன் இருந்து படிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும்.

அடுத்து உயர்கல்வி படிக்கும்பொழுது ஒருசிலர் வெளிமாநிலங்களுக்குச் சென்று படிக்கும் நிலை, வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் நிலை ஏற்படுகிறது. அது யாருக்கென்றால், 4, 5-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தால் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் நிலை உண்டாகிறது. ஒருவர் ஜாதகத்தில் வெளிநாடு யோகத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானங்கள் 9, 12-ஆம் பாவங்களாகும். 9, 12-ஆமதிபதிகள் இணைந்திருந்தாலும், 9, 12-க்கு அதிபதியுடன் 4, 5-க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 9, 12-ல் அமையும் கிரகங்களின் தசாபுக்தி படிக்கும் வயதில் நடைபெற்றாலும்- அதிலும் குறிப்பாக 9, 12-ல் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்து படிக்கும் வயதில் அதன் தசை நடைபெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்கோ, வெளியிடங்களுக்கோ சென்று படிக்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் 4, 5-க்கு அதிபதிகள் 9, 12-ஆமதிபதியுடன் இணைந்திருப்பது வெளிநாட்டு யோகத்தை உறுதியாக ஏற்படுத்தும். படிக்கும் வயதில் 3, 6-ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசை, புக்தி நடைபெற்றால் வெளிமாநிலங்களுக்குச் சென்று படிக்கும் யோகமும், 9, 12-ல் அமையப்பெற்ற கிரகங் களின் தசை, புக்தி நடைபெற்றால் வெளிநாடு களுக்குச் சென்று படிக்கக்கூடிய யோகமும் ஏற்படும். ஒருவர் ஜாதகத்தில் கல்விக் காரகன் புதன் வ-மையாக இருந்தால் கல்வியில் உயர்வான நிலையை எட்ட உதவும்.

bala030323
இதையும் படியுங்கள்
Subscribe