Advertisment

பரம்பரை நோய் தீர்க்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/hereditary-remedies-prasanna-astrologer-i-anandhi

ரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் உறவினர்கள் குழந்தையின் உருவமைப்பு யாரைப்போல் உள்ள தென்று விமர்ச்சிப்பார்கள். அப்பாவின் கண்கள், அம்மாவின் மூக்கு, தாத்தாவின் காது, அத்தையின் சிரிப்பு என, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எல்லாம் கலந்த ஒரு உருவம் வந்திருக்கிறதென வியக்கும்வகையில் குழந்தை தோன்றியிருக்கும். அம்மா, அப்பா இருவரிடமிருந்தும் கடத்தப்பட்ட ஒரு ஜீன் நகலில் உருவானதுதான் குழந்தை. அந்த ஜீன் உண்ணும் உணவு, வாழுமிடம், இருக்கும் சூழ்நிலை ஆகியவற்றுக்கும் தகுந்தாற்போல் கருவாக உருவாகும். முன்னோர்களின் ஜீன்மூலம் உருவாகும் குழந்தைக்கு எப்படி உறவு களின் உடலமைப்பு இருக்கிறதோ, அதேபோல் ஜீன்கள்மூலம் பரம்பரை வியாதியும் கடத்தப்படுகிறது. மரபியல் வழியாகத் தோன்றி, அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் நோய் அல்லது கோளாறாக இருப்பதனால் இவை பரம்பரை நோய் எனவும் அழைக்கப்படுகின்றன.

Advertisment

மரபுவழியாக, பரம்பரையாக வரும் நோய் என்றாலே பெரும்பாலும் முதலில் கருத்தில் கொள்வது தந்தையின் வழியைத்தான். ஆனால் சில நோய்கள் தாயின் வழியாகவும் மரபு கடத்தப்பட்டு வரும். ஆக தந்தை, தாய்வழி ரத்தபந்த உறவுகளை பாதித்த அனைத்து நோய்களும் சந்ததியினரையும் பாதிக்குமென்பது மருத்துவ வல்லுனர் களின் கண்டுபிடிப்பு.

pp

​மன அழுத்தம், உடல் எடை, கொலஸ்ட்ரால், கருப்

​மன அழுத்தம், உடல் எடை, கொலஸ்ட்ரால், கருப்பை நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், புற்று நோய், நரம்பு, எலும்பு, மூட்டுவலி என பல பரம்பரை நோய்கள் இருந்தாலும், சமீபகாலமாக சிறியவர்முதல் வயோதிகர்கள்வரை அனைவரும் பாதிக்கப்படும் எலும்பு மூட்டுப் பிரச்சினை, பிறப்பிலிருந்து காணப்படும் மரபணு சார்ந்த அசாதாரண நிலைகள், மரபணுப் பிறழ்ச்சி எனப்படுகிறது.

ஜோதிடரீதியாக இதை உற்றுநோக்கினால், ஒரு ஜாதகர் பெரும் மரபுவழி செய்திகளான முன்னோர்களின் உடலமைப்பு, குணாதிசயங்கள், நோய், பாவம், புண்ணியம் போன்றவற்றை செல்களின்மூலம் கொண்டுசெல்கிறார். இதை அறிவியல்ரீதியாகக் கூறினால், மனிதர்களின் மரபணுவில் இருக்கும் 46 குரோமோசோம்கள் ராகு- கேது கலவைகளாகும். குரோமோசோம்களில் ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரை வியாதி, பாவம்- புண்ணியம் போன்ற அனைத்தும் பதிவாகியிருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தை வழியைக் குறிப்பவை (ராகு); மற்றும் 23 குரோமோசோம்கள் தாய்வழியைக் குறிப்பவை (கேது).

மரபுவழி பாவ- புண்ணியங்களைக் குறிப்பிடும் கிரகங்கள் ராகு- கேதுக்கள். அத்துடன் பரம்பரை, முன்னோர்கள் என்றாலே சனி பகவான்தான் முன்னிலை வகிப்பவர். உடலிலுள்ள உறுதியான பாகங்களைக் குறிப்பவர் செவ்வாய் என்றாலும், கர்மவினைக்கேற்ற பலனை வழங்குபவர்கள் சனி, ராகு- கேதுக்களே. இவர்கள் மூவரும் சம்பந்தப்படாத ஒரு பரம்பரை வியாதி மனிதர்களைத் தாக்கும் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு.

மேலே கூறப்பட்ட பரம்பரை வியாதிகளில் பெரும்பான்மையோர் அவதிப்படுவது ஆர்த்ரைடிஸ் எனப்படும் எலும்பு மூட்டு பாதிப்பாகும். மனித உடல் எலும்புகளாலான கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு, தசைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு எலும்பு மண்டலம் எனப்படுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, நுரையீரல், இதயம்போன்ற உறுப்புகளை எலும்பு மண்டவங்கள் பாதுகாக்கிறது. எலும்புகள் சீராக இருந்தால் மட்டுமே தசைகள் மற்றும் உடல் பாகங்கள் சிறப்பாக இயங்கும்.

ஒருவரின் நோயின் தன்மை மூன்றுவிதமாக இருந்தால்கூட, வாதம் தொடர்பான ஆர்த்ரைடிஸ் என்று கூறப்படும் எலும்பு தொடர்பான பிரச்சினைகளால் சிறிய வயது குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை பலரை வயது வித்தியாசமின்றி பாதிக்கப்படுகி றார்கள். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அதிகமாக பாதிக்கச் செய்கிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாமதிபதி எந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கிறாரோ அதைப் பொருத்து அவர்களுடைய நோயின் தன்மையைத் தீர்மானிக்கலாம்.

ராகுவோடு இணைந்த கிரகத்தின் உடல் உள்ளுறுப்பு அதிகமாக வேலைசெய்யும். கேதுவோடு இணைந்த கிரகத்தின் உடல் உள்ளுறுப்பு சரியாக வேலை செய்யாது. ஒரு உறுப்பு வேகமாகவும் இயங்கக்கூடாது. மெதுவாகவும் இயங்கக் கூடாது. அதன் செயலாக் கத்திற்கேற்ப இயங்குவதே நல்லது.

ஒருசிலருக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் குறுகிய காலத்திற்கு சிறிய பாதிப்பைத் தரும். மேலும் ஒருசாரருக்கு நீண்டநாள் பிரச்சினையாகவும், கடுமையான வைத்திய செலவும், அதிகபட்சம் அறுவை சிகிச்சையும் செய்யநேரும். வயது வேறுபாடின்றி கடுமையாக ஒருவரைத் தாக்கும் மூட்டு, எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படக் காரணம் சனிபகவானே. சராசரியாக ஒரு மனிதன் ஆயுள் காலத்தில் குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டகச்சனி, அர்த்தாஷ்டமச்சனி என சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கமுடியும். ராசி மண்டலத்தை சுற்றி வர 30 ஆண்டுகால அவகாசம் எடுக்கும் இவர், உடல் உறுப்பில் கால்களைக் குறிப்பவர்.

கோட்சார சனி பகவான் ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரகங்களுடன் சம்பந்தம் பெறும்போது, தசாபுக்திக்கும் ஏற்ப எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். ஜனனகால ஜாதகத்தில் சனி பலம் குறைந்து நீசம், அஸ்தமனம், வக்ரம், குறைந்த பாகையில் இருப்பவர்களுக்கு வம்சாவளியாக ஆர்த்ரைடிஸ் தாக்கம் மிகுதியாக இருக்கும். ஜனனகால ஜாதகத்தில் சனி வலுப்பெற்றவர்களுக்கு கோட்சாரத்தில் சனியுடன் ராகு- கேதுக்கள், சூரியன், செவ்வாய் சம்பந்தம் பெறும்போது தசாபுக்திக்கேற்ப பாதிப்பு குறுகிய காலத்திற்கு இருக்கும். மேலும் சனி தசை ராகு- கேது புக்தி, ராகு- கேது தசை, சனிபுக்திக் காலங்களில் அறுவை சிகிச்சைக்குச் செல்லும் வகையில் மிகுதியான பாதிப்பிருக்கும். இந்த தசை, புக்திக் காலகட்டத்தில் சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்படுகிறது.

ஜனன ஜாதகத்தில் சனி மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு உடலில் எலும்பு பாதிப்பு இயல்பாகவே இருக்கும். விட்டமின் ஊ குறைந்தவர்களுக்கும் எலும்பு தொடர்பான பாதிப்பிருக்கும். அறுவை சிகிச்சைமூலம் நிவாரணம் பெற விரும்புபவர்கள் கோட்சார குரு லக்னாதிபதிக்கு சாதகமாக இருக்கும் காலகட்டத்தில் சிகிச்சை செய்தால் பலன் இரட்டிப்பாகும்

பரிகாரங்கள்

உடலில் காற்றுத் தன்மை மிகுதியாக உடையவர்கள் எளிதில் செரிமானமாகும் உணவை உண்ணவேண்டும், தினமும் உணவில் நல்லெண்ணெய் சேர்க்கவேண்டும். இது எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை உடம்புக்குத் தரும். பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

சனிக்கிழமை காலை 9.00-10.30 மணி வரையில் வரும் ராகு வேளையில் இனிப்பு கலந்த எள்ளுருண்டையை கருப்புநிறப் பசுவுக்குத் தரவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் வரும் ராகு வேளையில், ராகுவின் அதிதேவதை துர்க்கையை பூஜிக்கவேண்டும்.

கருப்புநிற திராட்சை ரசத்தால், அமாவாசையன்று காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். கருப்புநிற உளுந்தை தானம் தரவேண்டும்.

செல்: 98652 20406

bala300922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe