கொரோனா நோய் தவிர்க்க சித்தர்கள் அருளிய மூலிகை ரகசியம்!

/idhalgal/balajothidam/herbal-secrets-revealed-by-siddhas-avoid-coronary-disease

சித்தர்தாசன் சுந்தர்ஜி

(ஜீவநாடி) ஊழ்வினை ஆய்வு ஜோதிடர்

சைவத் தமிழ்ச் சித்தர்கள், மனிதனையும் மற்ற உயிரினங்களையும் அவற்றின் உடல், உயிர், ஆன்மா என்ற மூன்று நிலையாகப் பிரித்துப் பகுத்தறிந்து ஆய்வு செய்து, உடலுக்கு நோய், உயிருக்கு காற்று, ஒரு ஆன்மா என தன் வாழ்வில் அனுபவிக்கும் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வு ஆகியவற்றுக்கு அவரவர் செய்த, செய்யும் பாவ- புண்ணியச் செயல்களே காரணம் எனக் கூறியுள்ளனர்.

சித்தர் பெருமக்கள், உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றினால் 72 வகையான காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப் படுவார்கள் எனக் கூறுகின்றனர்.

இன்று ஆங்கில மருத்துவத்தில் டைபாய்டு, மலேரியா, நிமோனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா, கொரோனா என இந்த பழைய காய்ச்சல்களுக்குப் புதுப்புதுப் பெயர்களைக் கூறிவரு கின்றனர் என்பதே உண்மை. வருங் காலத்தில் இதுபோன்று இன்னும் பல பெயர்களில் பல காய்ச்சல் களை மக்கள் அடைந்து, அனுப வித்து வாழப் போகின்றனர்.

பஞ்சபூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை அளவுக்கதிகமாக மாசுபடும்போது இதுபோன்று புதுப்புது நோய்கள் உண்டா கின்றன என்றும், இதுபோன்ற நோய்கள் உண்டாகும் காலங் களை ஒன்பது கிரகங்களின் கோட்சார சுழ

சித்தர்தாசன் சுந்தர்ஜி

(ஜீவநாடி) ஊழ்வினை ஆய்வு ஜோதிடர்

சைவத் தமிழ்ச் சித்தர்கள், மனிதனையும் மற்ற உயிரினங்களையும் அவற்றின் உடல், உயிர், ஆன்மா என்ற மூன்று நிலையாகப் பிரித்துப் பகுத்தறிந்து ஆய்வு செய்து, உடலுக்கு நோய், உயிருக்கு காற்று, ஒரு ஆன்மா என தன் வாழ்வில் அனுபவிக்கும் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வு ஆகியவற்றுக்கு அவரவர் செய்த, செய்யும் பாவ- புண்ணியச் செயல்களே காரணம் எனக் கூறியுள்ளனர்.

சித்தர் பெருமக்கள், உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றினால் 72 வகையான காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப் படுவார்கள் எனக் கூறுகின்றனர்.

இன்று ஆங்கில மருத்துவத்தில் டைபாய்டு, மலேரியா, நிமோனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா, கொரோனா என இந்த பழைய காய்ச்சல்களுக்குப் புதுப்புதுப் பெயர்களைக் கூறிவரு கின்றனர் என்பதே உண்மை. வருங் காலத்தில் இதுபோன்று இன்னும் பல பெயர்களில் பல காய்ச்சல் களை மக்கள் அடைந்து, அனுப வித்து வாழப் போகின்றனர்.

பஞ்சபூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை அளவுக்கதிகமாக மாசுபடும்போது இதுபோன்று புதுப்புது நோய்கள் உண்டா கின்றன என்றும், இதுபோன்ற நோய்கள் உண்டாகும் காலங் களை ஒன்பது கிரகங்களின் கோட்சார சுழற்சிக்கால நிலையைக் கொண்டு, அறிந்து கொள்ளவேண்டும் என்றும், அதற்கான வழிகளையும் கூறியுள்ளனர்.

குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்கள் ஒன்றுக் கொன்று 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் இணைந்தோ, எதிரெதிராக சம்பந்தப்பட்டோ சஞ்சாரம் செய்யும் காலங்களில் இதுபோன்று நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள். காலரா, அம்மை, சபோலா தொற்று, டெங்கு, சிக்குன் குனியா போன்ற இன்னும் பலவிதமான நோய்கள் உண்டான சமயங்களில், இந்த கிரகங்களின் கோட்சார நிலையை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை விளங்கும். கிரகங்களின் கோட்சார சுழற்சி நிலை, தனிமனிதர்களைப் பாதிப்பதில்லை. உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்பதே சித்தர்கள் கூற்று.

கொரோனா தொற்று ஆரம்பித்து, அதிகமான காலத்தின் கிரக நிலைகளை அறிவோம்.

இதில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுசு ராசியிலும், இதற்கு 7-ஆமிடமான மிதுன ராசியில் ராகு கிரகமும் கோட்சார நிலையில் உள்ளன.

சனி, கேது இரண்டு கிரகங்களும் நோய்த்தொற்றினை உண்டாக்கின. ராகு கூட்டங் கூட்டமாக மக்கள் மரணம் அடையும் நிலையை உண்டாக்கியது. மண், நீர், நெருப்பு ஆகியவற்றால் நோய்ப் பாதிப்புண்டானால் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பாதிப்படையச்செய்யும். ஆனால், கொரோனா தொற்று காற்றின்மூலம் பரவுவதால்தான் இப்படி ஒரேசமயத்தில் உலகையே பாதிப்படையச் செய்கிறது.

cc

விஞ்ஞானம் என்ற பெயரால் மனிதன் புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தன் வசதிக்காகவும், அணுசக்தி ஆயுதங்களை உருவாக்கி வானில் ஏவிவிட்டுப் பரிசோதனை செய்வதாலும் உண்டான அதிகமான நச்சுப்புகையால் ஆகாயம், காற்று மாசுபட்டுப்போனதாலும், காற்று மாசினை சுத்தம் செய்யும் வனம், காடு, மரங்கள் அழிக்கப் படுவதாலும் பஞ்சபூதங் களும், கிரகங்களும் இணைந்து- இயற்கையே மனிதர்களைத் தாக்கி, இன்று அழித்துவருகிறது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மக்கள் கும்பல் கும்பலாக மரணம் அடைந்துவரு கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நலமடைய, எந்த விதமான மருந்தும் இதுவரை கண்டுபிடிக் கப்படவில்லை.

கொரோனா நோய்த் தொற்றுப் பாதிக்காமல், முன்னெச்சரிக்கையாகத் தடுத்துக்கொள்ளவும், நோயால் பாதிப்படைந்தவர்கள் சாதாரண மூலிகைகள்மூலம் நலமடையவும் அகத்தியர் முதலான தமிழ்ச் சித்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையான சித்த மருத்து வத்தில் சிக்கனமான, செலவில்லாத, சிறப்பான மூலிகை மருந்தினையும் அதனைப் பயன்படுத்தும் மருத்துவமுறையும் கூறியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் உருவான சமயத்தில், இந்த நோயிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற, ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்பதையறிந்து அரசு சித்த மருத்துவர்களை அழைத்துப் பேசினார். அவர்கள், டெங்கு, சிக்குன் குனியா நோய்களை நிலவேம்புக் குடிநீர் மூலம் நீக்கி, தமிழக மக்களைக் காப்பாற்றமுடியும் என்று கூறி, அதனைப் பயன்படுத்தி, நோய் பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சை செய்து நலமடைய வைத்து நிரூபித்தார்கள்.

இதைத்தொடர்ந்து அப்போதைய அமைச் சர்கள், அரசு அலுவலர்கள், மக்களைத் தேடிச் சென்று நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டு மென்று அரசாணை பிறப்பித்தார்.

இன்று கொரோனா தொற்று அதிகமான நிலையில், சித்தர்கள் கூறிய மருந்தினை அறிவோம்.

கபசுரக் குடிநீர்

கொரோனா நோய்த் தொற்று பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அனைவரும் ஒரு சிட்டிகை (மூன்று கிராம்) கபசுரக் குடிநீர் சூரணப்பவுடரை 150 மில்லி தண்ணீரில் போட்டு, அதனை நன்கு கொதிக்க வைத்து 50 மில்லி நீராக சுண்டக் காய்ச்சி, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரவும். இதன்பின், வழக்கம்போல வெளியில் சென்று அவரவர் வேலைகளைச் செய்யலாம். இதே போன்று மாலையில் வீட்டிற்கு வந்து கபசுரக் குடிநீரைக் காய்ச்சி அருந்தவும். இவ்விதம் தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால் கொரோனா வைரஸ் கிருமி தொற்றாது.

கொரோனா தொற்று நோயினால் பாதிக் கப்பட்டவர்கள் இதேபோன்று கபசுரக் குடிநீரைக் காய்ச்சி, ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லி விகிதம் குடித்து வந்தால், மூன்று நாளில் நோய்த் தொற்று பாதிப்பு நீங்கி குணமடைந்துவிடுவார்கள். இதுபோன்று குடித்துவருவதால் உடலில் உள்ள வைரஸ் கிருமி பெருகாமல் அழிந்துவிடும்.

பெரியவர்கள் 50 மில்லியும், பிறந்த ஒருவயது வரை உள்ள குழந்தைகள் 10 மில்லி குடிநீரும், ஒரு வயதிற்குமேல் நான்கு நான்கு வயதுவரை உள்ள குழந்தைகள் இருபது மில்லி நீரும், நான்கு வயதுமுதல் 12 வயதுவரை உள்ள சிறுவர்கள் 30 மில்லி குடிநீரும் அருந்தலாம்.

இன்று கபசுரக் குடிநீர் என்ற பெயரில் சரியான மருத்துவமுறை, அளவுகளுடன் கோஆபரேட்டிவ் மற்றும் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சூரணப்பவுடரை தமிழக அரசே தயாரித்து விற்பனை செய்கிறது.

பூஜை, யாகம், ஹோமம், மந்திர ஜபம் ஆகியவற்றால் கொரோனா போன்ற நோய்களை நீக்கமுடியாது. சித்த மருந்தும், மன அடக் கமுமே நோயைத் தீர்க்கும். தமிழக மக்கள் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்காமல் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று பயத்தைவிட்டு, கபசுரக் குடிநீர் குடித்து நோய் பயமின்றி வாழ்வோம்.

செல்: 99441 13267

bala030720
இதையும் படியுங்கள்
Subscribe