சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
கொரோனா வைரஸ் காய்ச்சலின் இரண்டாவது அலை தற்போது இந்திய நாட்டையே நிலைகுலையச் செய்துகொண்டிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைகின்றனர். இறந்தவர்களின் உடலை எரியூட்ட இடமில்லாத அவல நிலையை ஊடகங்கள் காண்பிக்கின்றன. இந்த நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க, அரசு எவ்வித முயற்சியையும் உரிய காலத்தில் முறையாக மேற்கொள்ளவில்லையென்று நீதிமன்றங்களே கண்டனம் தெரிவிக்கின்றன. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கான காரணம் என்ன- இதனால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்- இதிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி என்பது குறித்து சித்தர்கள் கூறியுள்ள வழியை அறிவோம்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் இந்த மனித உடலை இயக்குகின்றன. இவை மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
வாதம் நரம்பு மண்டலத்தை இயக்குகிறது. இதனால் உண்டாகும் காய்ச்சலை வாதசுரம் என கூறுகின்றனர். பித்தத்தால் உண்டாகும் காய்ச்சலை பித்தசுரம் என்பர். பித்தமானது ஜீரண சக்தியையும், மூளையின் செயல்திறனையும் இயக்குகிறது. பித்தத் தால் உண்டாவதே மூளைக்காய்ச்சலாகும். கபம் நீர் சக்தியைத் தருகிறது. இதனால் உண்டாகும் காய்ச் சலை சளி, இருமல், கபசுரம் என்று கூறுவார்கள்.
உடலில் கபத்தின் அளவு மாறுபடும்போது சளி, உஷ்ண பாதிப்பு, நுரையீரல் வீக்கம், நீர் சேர்தல்- அதனால் மூச்சுத்திணறல் போன்ற துன்பங் களை அடையச் செய்கிறது. மேலும் பித்தத்தின் அளவு மாறுபட்டு, ஜீரண உறுப்புகள் பாதித்து மலச்சிக்கலையும் உண்டாக்குகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து, நோய்த் தாக்கம் அதிகமாகி சிரமப்படச் செய்கிறது. சிலருக்கு மூச்சுத்திணறலால் மரணத்தையும் தந்துவிடுகிறது.
கொரோனா பாதிப்பு அறிகுறிகள்
உடலில் வெப்பம் தாக்காமலிருக்க எப்போதும் குளிர்சாதன அறையிலேயே இருப்பவர் களையும், குளிர்சாதன அறைகளில் எப்போதும் இருந்து பணிபுரிபவர்களையும், மிகக் குளிர்ந்த செயற்கையான குளிர்பானங்களை அதிகம் பருகுபவர்களையும், மது அருந்துபவர்களையும், புகைப்பழக்கம் உள்ளவர்களையும், வீட்டில் குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரைப் பருகுபவர்களையும் இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய உணவான சோறு, குழம்பு, ரசம் ஆகியவற்றை வீட்டில் சமைத்துண்ணாமல், உணவகங் களில் சமைத்த பண்டங்களை வாங்கி உண்கிறார்கள். பாக்கெட்களில் அடைத்து விற்கும் பொடிகளைப் பயன் படுத்துகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட், பீட்சா போன்றவற்றை அதிகம் உண்கிறார்கள். உடல் உழைப்புள்ள எந்த வேலையையும் செய்யாமல் உட்கார்ந்தும் தூங்கியும் இருப்பவர்கள் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற வற்றிற்கு ஆளாகிறார்கள். இவர்களை யெல்லாம் இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.
விவசாயிகள், உழைப்பாளிகள், உணவகங்களில் உண்ணாமல் தாய், மனைவி கையால் வீட்டில் சமைத்த உணவை உண்பவர்கள், இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள், உடலில் வெளியாகும் வியர்வையைத் தடுக்காமல் வெளியேற்றுபவர்கள், செயற்கையான சுகங்களை விடுத்து வாழ்பவர்களை இந்த நோய் தாக்காது. உழைக்காமல் சொகுசாக வாழ்பவர்களையே பெரும்பாலும் இந்த நோய் பாதிக்கும்.
நமது உடலிலுள்ள சாதாரண சளி, கபம்தான் இந்த கொரோனா நோய்க்கான காரணம். எங்கள் கிராமத்தில் கணபதிப்பிள்ளை என்றொரு வைத்தியர் இருந்தார். அப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களுக்கும் சித்தர்களின் மூலிகை மருந்துகளையே தந்தார். சளியால் துன்பப்படுபவர்களுக்கு மருந்து தரும்போது, "இந்த மருந்தை நேரம் தவறாமல் முறையாக உண்டுவந்தால் மூன்றுநாட்களில் சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல் தொல்லை குறையும்.
அதிகபட்சம் ஏழு நாட்களில் முற்றிலும் குணமாகி விடும். இல்லையென்றால் நோய் முற்றி துன்ப மடையச் செய்யும். முற்றியநோயை குணப்படுத்த 14 நாட்களாகும்'' என்று கூறுவார்.
அன்று நான் சிறுவனாக இருந்த போது, ஒரு கிராமத்தில் வசித்த சித்த மருத்துவர் நாடியைப் பிடித்துப் பார்த்து வாதம், பித்தம், கபம் ஆகிய வற்றின் அளவை அறிந்து நோயைக் கூறி சரியான மருந்தைத் தந்தார்.
அதை முறையாகக் கடைபிடிக்கத் தவறினால் அவர்களுக்கு நோய் குணமாக 14 நாட்கள் ஆகும் என்று சொன்னார். இன்று மிகவும் படித்து பல பட்டங்களைப் பெற்று பிரசித்தமான ஆங்கில மருத்துவர் கள் பலவிதமான பரிசோதனைகள் செய்தும் இறுதியாக, "இதனை சரிப்படுத்த 14 நாட்களாகும்' என காலக்கெடு விதிக்கின்றனர். தனிமை யில் இருக்க அறிவுறுத்துகின்றனர்.
மனிதர்களுக்கு இயற்கையாகவே உடலில் சளி உண்டு. கபம், சளி என்பவை இரண்டு வகையாக உடலில் அதிகப்படும். மழை, பனியில் நனைவதாலும்; கோடைகாலத்தில் தலையிலும் உடலிலும் வியர்வை உண்டாவதாலும் சளித்தொல்லை ஏற்படும். இது இயற்கையாக நிகழ்வது.
இதில் மூக்குச் சளி, தொண்டைச் சளி, நெஞ்சுச் சளி என மூன்றுவகை இருக்கும். தற்போதைய கொரோனா நோய்க்கான காரணம் நெஞ்சுச் சளி ஆகும். அதனால்தான் நுரையீர லில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சுத் திணறலை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. இதன் அடிப் படையை இன்னும் முழுமையாக உணராத காரணத்தால்தான், இதற் கான சரியான மருந்தைக் கண்டு பிடிக்க முடியாமல் ஆங்கில மருத் துவர்கள் திணறிவருகின்றனர். மனிதர் கள் தங்கள் வாழ்வியல் மூலமும், பழக்கவழக்க உணவு முறைகள் மூலமும் தனக்குத்தானே சளித் தொல்லையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா என்னும் நோய் உருவானதல்ல;
உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. இதனை இப்போது மருத்துவ மாஃபியாக்களும் கார்ப்ப ரேட் கம்பெனிகளும் சரியாகப் பயன் படுத்திக்கொண்டு, மனித உயிர்களைப் பற்றி கவலைப்படாமல் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா செயல்
இனி கொரோனோ நோயின் செயல்பாட்டைக் காணலாம். ஒருவருக்கு சளி பிடித்தாலும், அவரது உடம்பில் நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால் அது தானே சரியாகிவிடும். நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கு அந்த சளியினால் உண்டாகும் பாதிப்பு நுரையீரலைத் தாக்கி வீங்கச் செய்து, நீர்கோர்த்து சுவாசிக்க சிரமம் தந்து மூச்சுத்திணறலை உண்டாக்கி மரண அபாயத்தை உருவாக்கும்.
மனித உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் 72 வகையான காய்ச்சல் உருவாகி மனிதர்களை பாதிக்குமென்று சித்த மருத்துவத்தில் சித்தர்கள் கூறுகின்றனர். இன்று ஆங்கில மருத்துவத்தில் டைபாய்டு, மலேரியா, நிமோனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா, தற்போதைய கொரோனா போன்ற அனைத் தும், சித்தர்கள் ஆய்வு செய்து கூறியுள்ள பழைய காய்ச்சல்கள்தான். இவற்றுக்கு ஆங்கில மருத்துவர்கள் அவ்வப்போது புதுப்புது பெயர்களை சூட்டி வருகிறார் கள் என்பதே உண்மை. இனிவரும் காலங்களிலும் இதுபோன்று புதுப்புது பெயர்களைக் கூறுவார்கள்.
தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு பலரும் மரணமடைந்து வருகின்றனர். இந்த நோய் வருவதற் கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. பூரண நலம்பெற மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள்கூட முழுமையான உத்தரவாதம் இல்லாதவை. நாமும் கடந்த ஆண்டு மத்திய அரசு சொன்னபடி கைதட்டி, விளக்கேற்றி கொரோனாவை வரவேற்றோம்.
இந்த நோய்த்தொற்று பாதிக்கா மல் முன்னெச்சரிக்கையாகத் தடுத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெறவும் அகத்தியர் முதலான தமிழ்ச் சித்தர்கள் வழங்கிய பாரம்பரிய சித்த மருத்துவ முறையில், சிக்கனமான, செலவில்லாத சிறப்பான மருந்துகளையும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் கூறியுள்ளனர். அதனை இங்கு காண்போம்.
நிலவேம்புக் குடிநீர்- கபசுரக் குடிநீர்
கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமலிருக்க, சிறுவர் முதல் பெரியவர்வரை நிலவேம்பு சூரணம் அல்லது கபசுரக் குடிநீர் சூரணத்தை 3 கிராம் அளவு எடுத்து, 150 மி.லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து, 50 மி.லிட்டராக சுண்டக் காய்ச்சி, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும். இதன்பின் வழக்கம்போல் அவரவர் வேலையைச் செய்துவரலாம். மாலையில் இதேபோன்று குடிநீரைக் காய்ச்சி 50 மி.லி. அளவு குடிக்கவேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளை இந்த நீரைக் குடித்துவந்தால் உடலில் ரத்த அணுக்கள் பெருகும். நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகும்.
நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நோயாளிகள் இதுபோன்று நிலவேம்பு அல்லது கபசுரக் குடிநீர் சூரணத்தைக் காய்ச்சி ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை (காலை 6 மணி, 9 மணி, பகல் 12 மணி, 3 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி) என 50 மில்லி லிட்டர் அளவு குடித்து வந்தால், மூன்று நாட்களில் வைரஸ் காய்ச்சல் தொற்று நீங்கி குணமடைந்து விடுவார்கள். அதன்பிறகு மறுபடியும் காய்ச்சல் வராது. மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குடிப்பதால் வைரஸ் கிருமிகள் உடலில் வலிமைபெற முடியாமல் அழிக்கப்பட்டுவிடும். காய்ச்சல் அதிகமாகாமல் குறைந்துகொண்டே வரும். மூலிகைகளில் பிராணவாயு இயற்கையாகவே அதிகமிருப்பதால், உடலுக்குத் தேவையான பிராணவாயுவைத் தந்து, மூச்சுத்திணறல் உண்டாகாமல் சுவாசத்தை சீராக்கும். ஆக்ஸிஜன் செலுத்தும் அவசியம் தேவைப்படாது. மேலும் சளியைக் கரைத்து வெளியேற்றிவிடும்.
ஒரு வயது முதல் மூன்று வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு 10 மி.லி. அளவும், நான்கு வயதுமுதல் 12 வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு 30 மி.லி. அளவும், இதற்குமேல் வயதுள்ளவர்களுக்கு 50 மி.லி. அளவும் என சூரண குடிநீர் குடிக்கலாம்.
கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் என்னும் பெயரில் போலியாக தயாரித்து பலரும் விற்பனை செய்துவருகின்றனர்.
அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் தயாரித்து விற்கும் மருந்துதானா என்று கவனித்து வாங்கவேண்டும். இந்தியன் மெடிக்கல் பிரக்டிஷனர்ஸ், கோ ஆபரேடிவ் பார்மசி ஸ்டோர்ஸ் லிமிடெட், திருவான்மியூர், சென்னை-41 என்னும் மருந்து நிறுவனம் தயாரிக்கும் சூரணம் தரமாக உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளிலுள்ள சித்த மருத்துவப் பிரிவில் தரும் நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் சூரணம் தரமானது. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் ஆட்சிக் காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் நோய்கள் மக்களை பாதித்தது. அந்த காய்ச்சலிருந்து மக்களைக் காப்பாற்ற ஆங்கில மருத்துவத்தால் இயலவில்லை என்றபோது, சித்த மருத்து வர்களை அழைத்துப் பேசினார். அவர்கள் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றால் உண்டாகும் 72 வகையான காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீரை சிபாரிசு செய்தனர். அதனை நோய் உள்ளவர் களுக்குத் தந்து நலமடையச் செய்து நிரூபித்தார்கள்.
அப்போது நிலவேம்புக் குடிநீரை அனைவருக்கும் வழங்க அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டார் ஜெயலலிதா.
சித்தர்கள் கூறிய இந்த மருந்துக்கு இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதல் தரவில்லை என்று கூறி, மத்திய அரசும் மருத்துவ கவுன்சிலும், இந்த மருந்தை நாம் பயன்படுத்தக்கூடாதென்று தடைசெய்தன. ஆனால், "இது எங்கள் சித்தர்கள் கூறியது. தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை. இதனைப் பயன்படுத்தக்கூடாது என்று நீங்கள் சொல்லமுடியாது' என்று சொல்லி, மத்திய அரசை எதிர்த்து கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தெருத்தெருவாக அரசு அதிகாரிகள், பணியாளர்கள்மூலம் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. பலரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில்லாமல், இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் பாதிப்படையா மல் அந்த ஆபத்து காலத்தை வெற்றிகரமாகக் கடந்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சித்த வைத்தியம், சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் சிறப்பாக இருக்க, வளர்ச்சி யடைய பல உதவிகளைச் செய்தார். இப்போதும் சிக்கலான நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசு, மருத்துவ மாஃபியாக்கள், கார்ப்பரேட் கம்பெனி களிடம் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல், இந்த நோய்க்குத் தீர்வுகாணும் பணியை சித்த மருத்துவர்களிடம் தைரியமாக ஒப்படைத்து, அவர்களையும் பங்கேற்கச் செய்து, சித்த மருந்துகளைப் பயன்படுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
கொரோனா வைரஸ் காய்ச்சலை எண்ணி தமிழக மக்கள் அஞ்சவேண்டாம். அரசுதான் நம்மைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, நமக்கு நாமே திட்டமிட்டு கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் ஆகியவற்றை முறையாகக் குடித்து, தொற்று பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் நாமே தடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் நிலவேம்புக் குடிநீர் முதன்மை யானது. ஏனெனில் நிலவேம்புக்குதான் வைரஸ் கிருமியை அறவே கொன்றொழிக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் இவ்வாண்டு பிலவ வருடப் பஞ்சாங்கங்களில், சித்த மருத்துவத் தால்தான் இந்த விஷக்கிருமிகளை அழிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஆற்றலும் உருவாகும்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
செல்: 99441 13267