Advertisment

நவகிரகங்கள் குறிக்கும் ஆரோக்கிய நிலை!

/idhalgal/balajothidam/health-condition-indicated-by-navagrahas

ன்றைய நிலையில் ஒருவர் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பது முக்கியமல்ல. ஒருவர் எந்த அளவுக்கு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். தனிப் பட்ட ஜாதகத்தில் ஜென்ம லக்னம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

Advertisment

லக்ன பாவம் சிறப்பாக இருந்தால்தான் திடகாத்திரமான உடலமைப்பு உண்டாகும். லக்ன பாவத்திற்கு 6-ஆம் வீட்டை ருண, ரோக ஸ்தானம் என்றும், 8-ஆம் வீட்டை ஆயுள் ஸ்தானம் என்றும் பிரித்துள்ளார்கள். லக்ன பாவம், 6, 8-ஆம் பாவங்கள் பலமாக இருந்து, நவகிரங்களில் ஆயுள்காரகன் சனி பலமாக இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். எந்த ஒரு ஜாதகருக்கு லக்னாதிபதி பலவீனமாக இருக்கிறதோ அவர் களுக்கு உடல் உபாதைகள் உண்டாகிறது. அது போல 6, 8-ஆம் வீட்டு அதிபதிகள் பலவீனமாக இருந்து பாவ கிரகத் தொடர்போடு இருந்தால் அந்த கிரக அமைப்பைப் பொருத்து உடல் உபாதைகள் உண்டாகி றது. குறிப்பாக சனிபகவான் பலமாக இருந்தால் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி, நோய் நொடி இல்லாத வாழ்க்கை உண்டாகிறது.

கிரகப் பார்வையில் குரு பார்வை மிகமிக முக்கியமாகும். குரு பகவான் சில ஸ்தானங்களைப் பார்க்கின்றபொழுது சிறப்பான ஆரோக்கியம் உண்டாகிறது. ஒருவர் ஜாதகத் தில

ன்றைய நிலையில் ஒருவர் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பது முக்கியமல்ல. ஒருவர் எந்த அளவுக்கு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். தனிப் பட்ட ஜாதகத்தில் ஜென்ம லக்னம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

Advertisment

லக்ன பாவம் சிறப்பாக இருந்தால்தான் திடகாத்திரமான உடலமைப்பு உண்டாகும். லக்ன பாவத்திற்கு 6-ஆம் வீட்டை ருண, ரோக ஸ்தானம் என்றும், 8-ஆம் வீட்டை ஆயுள் ஸ்தானம் என்றும் பிரித்துள்ளார்கள். லக்ன பாவம், 6, 8-ஆம் பாவங்கள் பலமாக இருந்து, நவகிரங்களில் ஆயுள்காரகன் சனி பலமாக இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும். எந்த ஒரு ஜாதகருக்கு லக்னாதிபதி பலவீனமாக இருக்கிறதோ அவர் களுக்கு உடல் உபாதைகள் உண்டாகிறது. அது போல 6, 8-ஆம் வீட்டு அதிபதிகள் பலவீனமாக இருந்து பாவ கிரகத் தொடர்போடு இருந்தால் அந்த கிரக அமைப்பைப் பொருத்து உடல் உபாதைகள் உண்டாகி றது. குறிப்பாக சனிபகவான் பலமாக இருந்தால் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி, நோய் நொடி இல்லாத வாழ்க்கை உண்டாகிறது.

கிரகப் பார்வையில் குரு பார்வை மிகமிக முக்கியமாகும். குரு பகவான் சில ஸ்தானங்களைப் பார்க்கின்றபொழுது சிறப்பான ஆரோக்கியம் உண்டாகிறது. ஒருவர் ஜாதகத் தில் லக்ன பாவத்தை குரு பார்த்தால் நல்ல உடலமைப்பு, சிறப்பான ஆரோக்கியம் ஏற்படுகிறது. அதுபோல 6, 8-ஐ குரு பார்த்தால் அவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகக்கூடிய அமைப்புண்டாகும். குறிப்பாக ஒரு நோய் 4, 5 நாட்கள் இருக்கும் என்றால் ஒரு ஜாதகத்தில் 6, 8-ஆம் வீட்டை குரு பார்த்தால் அந்த ஜாதகருக்கு ஏற்பட்ட நோயானது ஒருசில மணி நேரத்திலோ, ஓரிரு நாளிலோ குணமாகக்கூடிய அமைப் புண்டாகும். இனி ஒவ்வொரு கிரகத்தால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளைப் பார்ப்போம்.

ss

Advertisment

சூரியன்

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் 6, 8-ஆம் பாவங்களில் பலவீனமாக இருந்தால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், காய்ச்சல், குடல் புண், வயிற்றுக்கோளாறு, இதயம் சம்பந்தப் பட்ட பாதிப்புகள், தோல் வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகளால் பிரச்சினை, திருடர் களால் பயம், கண் நோய், விஷத்தால் பாதிப்பு, பெரியோர்களுடைய சாபத்தால் பிரச்சினை, தெய்வக் குற்றங்களால் உடல் உபாதைகள் உண்டாகும்.

சந்திரன்

சந்திரன் 6, 8-ல் பலவீனமாக இருந்தால் நீர் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள், மனக் குழப்பம், தெளிவில்லாத நிலை, மஞ்சள் காமாலை, தூக்கமின்மை, செரிமான பிரச்சினை, உணவு விஷமாகக் கூடிய அமைப்புகள், உணவு செரிக்காத நிலை, குடல் புண், முகப்பரு, தைரியக் குறைவு, நீரினால் கண்டம், உடலில் கட்டிகள் ஏற்படும் நிலை, சாப்பாடு சுவை தெரியாத நிலை, பெண்களால் பாதிப்பு, ரத்தம் சுத்தமில்லாத நிலை, சளி, காய்ச்சல், பெண்களுக்கு உடலில் நீர் அதிகம் சேர்ந்து மாதவிடாய்க் கோளாறு, சுறுசுறுப்பின்மை, கண்களில் நீர் வடிதல் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.

செவ்வாய்

செவ்வாய் 6, 8-ஆம் வீடுகளில் பாதிக்கப் பட்டிருந்தால் ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்பு கள், விபத்தால் பிரச்சினை, குடல் புண், கால்- கை வலிப்பு, உஷ்ண நோய், எதிரிகள் மற்றும் உடன்பிறப்புகளிடம் சண்டை போடும் பொழுது உடலில் காயம் உண்டாகும் நிலை, தோல் நோய், அறுவை சிகிச்சைகள் மேற் கொள்ளும் அமைப்பு, உடலில் ஆயுதங்கள் பட்டு உடல் குறைபாடு, பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு உண்டாகும்.

புதன்

புதன் 6, 8-ஆம் வீடுகளில் பாதிக்கப்பட்டிருந் தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஞாபகசக்திக் குறைவு, திடீர் மயக்கம், வாய்ப்புண், காதுகளில் பாதிப்பு, தொண்டை மற்றும் மூக்குகளில் பாதிப்பு, பேச்சுத்திறன் பாதிக் கும் நிலை, திக்குவாய், இயற்கை சீற்றத்தால் உடல் உபாதைகள், மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் பாதிப்பு, மஞ்சகாமாலை நோய், கனவால் மனநிலை பாதிப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, உடல்கள் இணையும் இடத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

குரு

குரு 6, 8-ல் பலவீனமாக இருந்தால் காது களில் பாதிப்பு, வயிற்றுக் கோளாறு, ஞாபக மறதி, குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இடையூறுகள், பெரியோர்கள் சாபத்தால் உடல் உபாதைகள், வறுமையின் காரணமாக சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாத நிலை, தெய்வக் குற்றங்களால் உடல் உபாதை கள் ஏற்படும்.

சுக்கிரன்

சுக்கிரன் 6, 8-ஆம் வீடுகளில் பலவீனமாக இருந்தால் கண்களில் பிரச்சினை, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு, ரத்த சோகை, ரகசிய உறுப்புகளில் பாதிப்பு, ரகசிய நோய்கள் காரணமாக இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை, பெண்களால் பயம், தவறான பழக்க வழக்கங்களால் உடல் உபாதைகள் ஏற்படும்.

சனி

சனி 6, 8-ஆம் வீடுகளில் பலவீனமாக இருந் தால் உடல் ஊனம், எலும்புகளில் பாதிப்பு, வயிற்றுக் கோளாறு, பற்களில் பாதிப்பு, உடல் பலவீனம், சோம்பேறித்தனம், விபத்துகளை சந்திக்கக்கூடிய அமைப்பு- அதன்மூலம் உடலில் குறைபாடு, இயற்கை சீற்றத்தால் உடல் உபாதைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு களால் உடலில் ஒரு அசாதாரண நிலை ஏற்படும். ஒரு ஜாதகத்தில் சனி பலவீனமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதன்மூலம் எளிதில் நோய்கள் அந்த ஜாதகரைத் தாக்கும்.

ராகு

ராகுவால் 6, 8-ஆம் வீடுகள் பாதிக்கப் பட்டிருந்தால் தொழுநோய், மூளையில் கட்டி, இதய நோய், நெருப்பால் பயம், விஷத்தால் கண்டம், எதிரிகளால் பயம், மனச்சோர்வு, விபத்தால் கண்டம், அஜீரணக் கோளாறு, புற்று நோய், தவறான பழக்க வழக்கங்களால் நோய், கண்டுபிடிக்க முடியாத உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

கேது

கேது 6, 8-ஆம் வீடுகளில் பலவீனமாக இருந் தால் வெட்டுக்காயம், விஷத்தால் கண்டம், அஜீரணக் கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சாப்பிட முடியாத நிலை, இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பிராமணர்கள் சாபத்தால் பாதிப்புகள் போன்றவை ஏற்படும். மேற்கூறிய கிரகங்கள் 6, 8-ஆம் பாவங்களில் பாவ கிரகத் தொடர்போடு அமையப்பெற்று, அதன் தசாபுக்தி நடைபெறுகின்றபொழுது அந்த கிரகத்துடைய இயல்புக்கு ஏற்ப உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த தசா புக்திக் காலங்களில் எந்த கிரகத்தால் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த கிரகத்துக்குரிய இறை வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் உடல் உபாதைகள் சற்று குறைய வாய்ப்புண்டு.

bala260724
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe