Advertisment

நலம் தரும் திருத்தலம்! விசு அய்யர் 26

/idhalgal/balajothidam/healing-temple-vishu-iyer-26

திருக்கோவில் வழிபாடு என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். இஷ்டதெய்வ வழிபாடு என்று தங்கள் நடைமுறைக்கு மாற்றாக கூட சிலர் வைத்திருப் பார்கள். இது சரியுமில்லை; தவறுமில்லை என்ற போதும், சில சிந்தனைகளை இந்த வாரம் சிந்திக்க எடுத்துக்கொள்வோம்.

Advertisment

சக்திபீட தலங்கள் என்றால் 51 என எண்ணிச் சொல்வார்கள். திவ்ய தேஷங்கள் என்றால் 108 என நமக்கு காட்டுவார்கள். இதேபோல, பஞ்சபூத தலங்கள், ஒரு ஊரிலுள்ள பஞ்சபூத தலங்கள், பஞ்ச நடன தலங்கள், அட்ட வீரட்ட தலங்கள் என்ற வரிசையில் ஜோதிர்லிங்க தலங்கள் என பட்டியல் வளர்ந்துகொண்டே போகும்.

temple

பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள், ஜாதகக் கட்டத்திலுள்ள பன்னிரண்டு பாவகங்களை மனதில்வைத்து சிந்தித்து பார்க்கவேண்டும். இதேபோல பஞ்சபூத தலங்கள், ஒலிக் கிரகங்களான சூரியன், சந்திரன் மற்றும் நிழல் கிரகங்களா

திருக்கோவில் வழிபாடு என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். இஷ்டதெய்வ வழிபாடு என்று தங்கள் நடைமுறைக்கு மாற்றாக கூட சிலர் வைத்திருப் பார்கள். இது சரியுமில்லை; தவறுமில்லை என்ற போதும், சில சிந்தனைகளை இந்த வாரம் சிந்திக்க எடுத்துக்கொள்வோம்.

Advertisment

சக்திபீட தலங்கள் என்றால் 51 என எண்ணிச் சொல்வார்கள். திவ்ய தேஷங்கள் என்றால் 108 என நமக்கு காட்டுவார்கள். இதேபோல, பஞ்சபூத தலங்கள், ஒரு ஊரிலுள்ள பஞ்சபூத தலங்கள், பஞ்ச நடன தலங்கள், அட்ட வீரட்ட தலங்கள் என்ற வரிசையில் ஜோதிர்லிங்க தலங்கள் என பட்டியல் வளர்ந்துகொண்டே போகும்.

temple

பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள், ஜாதகக் கட்டத்திலுள்ள பன்னிரண்டு பாவகங்களை மனதில்வைத்து சிந்தித்து பார்க்கவேண்டும். இதேபோல பஞ்சபூத தலங்கள், ஒலிக் கிரகங்களான சூரியன், சந்திரன் மற்றும் நிழல் கிரகங்களான ராகு- கேது தவிர மீதமுள்ள ஐந்து ராஜ கிரகங்களை வைத்து சிந்திக்கவேண்டும். இது உடலிலுள்ள ராஜ உறுப்புகளை அடையாளம் காட்டுவதை இணைத்து சிந்திக்கவேண்டும். கைகளில்- கால்களிலுள்ள ஐந்து விரல்களை இப்படி இணைத்து சிந்தித்து பார்க்கவேண்டும்.

Advertisment

இப்படி ம்ஹஸ்ரீழ்ர்-வில் இருந்து ம்ண்ஸ்ரீழ்ர் அளவில் சிந்தித்தால், ஜோதிடத்தை பாவிப்பதற்கும் ஜோதிடர்களை மதித்து கௌரவப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். சில ஆயிரங் களுக்காக அல்லது தங்கள் குடும்பச் சூழல் காரணமாக பலன் சொல்பவர்களில்லை சோதிடர் என்ற அடிப்படை மனநிலை ஒவ்வொருவருக்கும், ஜோதிட அபிமானிகளுக்கும் வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இந்த ஜோதிட சிந்தனைகள், வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் அறிந்து, தெரிந்து கொள்ள முடியும், உண்ணும் உணவுமுதல் வாழ்க்கைமுறை அமைப்பிலும் என சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் ஒரு பானை சோறுக்கு என்று சொல்வதுபோல ஒரு சிந்தனையை பகிர்ந்துகொள்கிறேன்; சரியாக உள்ளதா சொல்லுங்கள்.

ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் ஒரு பெண் என்பதை அடிக்கடி சொல்வதை நாம் கேட்டு இருப்போம். சிலர் அனுபவத்திலும் அறிந்திருப்போம். குறைந்த பட்சம் திரைப் படத்திலாவது பார்த்திருப்போம். இதனை எப்போதாவது சோதிடரீதியில் சிந்தித்து இருப்போமா என்றால் கழுத்து வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் ஒருமுறை நகருமே தவிர ஆம் என்று சொல்வதற்கு தயக்கமாக இருக்கும்.

இப்படி சொல்கிறேன்; சரியாக உள்ளதா சொல்லுங்கள். ஜோதிடத்தில் ஆண் கிரகம் சில இருந்தாலும், தலைமை கிரகம் சூரியன் தானே. குடும்பத் தலைவனை சூரியனை வைத்தே பலன் எடுக்கிறோம் இல்லையா. இதேபோல பெண் கிரகம் என்று வைத்துக்கொண்டால், சந்திரன், தலைவியை குறிப்பதும் இப்படிதானே.

இப்போ ஜாதகக் கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியனின் ஆட்சி வீட்டு சிம்மம் இல்லையா. இந்த சிம்மத்திற்கு பன்னிரண்டாம் வீடு சந்திரன் ஆட்சி வீடான கடகம் இல்லையா. சூரிய னுக்கு பின்னால் சந்திரன் என்பதை சொல்லும்விதமாக ஆணுக்கு பின்னால் பெண் என்ற சொல் வழக்கு வந்துள்ளது என்று இணைத்து சிந்தித்து பாருங்கள்.

இப்படி ஒவ் வொரு அசைவிலும் சோதிட சிந்தனை நிழலாடினால், வாழ்க்கை எளிதாக அமையும். பிரச்சினைகளை அறிந்து பிரகாசமான வாழ்க்கை முறையை கையாளலாம் இல்லையா.

temple

சரி; இந்த வார திருத்தல வரிசையில், சோமனை குறித்து சொல்லும் பன்னிரு சோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோம நாத் பற்றி சில சிந்தனைகளை எடுத்துக் கொள்வோம்.

சோமன் என்ற வடமொழி சொல் சந்திரனை குறிக்கும் சொல். அதனால்தான் பௌர்ணமியன்று "ஓம் சோம் சோமாய நம' என 108 முறை அல்லது 1,008 முறை தியானிக்க உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர்கள் சொல்லித்தந்து இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இந்த சோம்நாத் அல்லது சோமநாதபுரம் என்ற இந்த திருத்தலம் தமிழ்நாட்டில் இல்லை. குஜராத் மாநிலத்தின் சௌராஷ் டிரா தீபகற்பத்தில் அரபிக்கடல் பகுதியில் அமைந்திருக்கிறது.

தில்- சுல்தான் மற்றும் முகலாயர்களால் பலமுறை சிதைக்கப்பட்ட திருக்கோவில் என்றாலும் 12 சோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது சோமநாதபுரம்.

இமயமலை தோன்றும்முன்பே இப் பகுதி இருந்ததாகவும் கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்றும் ஆராய்ச்சி யாளர்கள் கருதுகிறார்கள். நாகலோகத் திற்கும் சோமநாத ருக்குமுள்ள தொடர்பு பற்றியும் புராணம் விவரிக்கிறது. இதைக் காட்டுவதைப்போல இங்குள்ள சிவலிங்க திருமேனியில் நாகம் இருப்பதை காணலாம்.

நல்லதே நினைப் போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala260124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe