ன்றையநாளில் யாரைப் பார்த்தாலும் கேட்கும் முதல் கேள்வி எது தெரியுமா? என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். ஆனால் வரன் குதிரவில்லை என ஆதங்கப்படும் பெற்றோர்கள் எப்போது பையனுக்கு திருமணம் கூடிவரும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான்!

Advertisment

இதேபோல பெண்ணை பெற்றவர்களோ, யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளட்டும் ஆனால் காலம் தள்ளி போகிறதே, இந்த பெண்ணிற்கு ஒரு வரன் கிடைக்காதா என பதிவு செய்யாத மேட்ரிமோனி இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை என ஆதங்கபடுவார்கள்.

jj

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக் கப்படுவதாக சொல்லுவார்கள். பண்டைய நாளில், அறம் செய்வதற்காக அறவாழ்க்கை வாழ்வதற்காக திருமணம் செய்தார்கள். இன்றையநாளில், பெண்ணிற்கு ஒரு லட்சம் சம்பளம், பையனுக்கு ஒரு லட்சத்திற்குமேல் சம்பளம் இருந்தால் தேவலை என கணக்கு பார்த்து திருமண வாழ்க்கையை ஒரு பெட்டிக்குள் அடைத்து விடு கின்றனர்.

Advertisment

எப்படியிருந் தாலும், தன் பிள்ளை களுக்கு திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்ற கனவும் ஏக்கமும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் இல்லாமல் போனா லும், பெற்றோர் களுக்கு இல்லாமல் போயிடும்.

அதுவும் 90 கிட்ஸ்தான் பாவம். காதல் வலையிலும் வாழ தெரியாமல், குடும்ப சூழலையும் மனதில் சுமந்து, நவீன உலக வாழ்க்கையை மறந்து, பரிதாபமாக நம்முன் வந்து நிற்கும்போது, வருத்தம் நமக்கு மட்டும் இல்லாமலா இருக்கும்.

சரி! இவர்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லி திருமண வாழ்வை அமைத்துதரும் திருத்தல குறிப்பையும் சொன்னால் நன்றாக இருக்குமே என்றுதான் இந்த வாரம் இந்த திருத்தலத்தை பதிவு செய்கிறோம்.

Advertisment

திருமணத் தடைக்கு ஜோதிடரீதியாக பல காரணம் இருந்தாலும், பொதுவாக சர்ப்ப தோஷம் அல்லது சர்ப்ப பாவம் இருந்தால், திருமணம் தாமதமாகும் என்பதை ஜோதிட அன்பர்கள் அறிந்திருப்பார்கள்.

அதேபோல எந்த சிவ திருத்தலமாக இருந்தாலும் சரி, அங்கே சுவாமிக்கு வலது புறம் அம்பாள் சன்னதி இருந்தால், அது மணவாழ்வை அமைத்து தரும் திருத்தலமாகவே வைத்து எண்ணவேண்டும். உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் ஜாதக அமைப்புகொண்டு அடையாளம் காட்டும் அந்த திருத்தலத்தில் உங்கள் ஜோதிடர் சொல்வதுபோல நம்பிக்கையுடன் செய்தால், பலன் நிச்சயம் உண்டு என்பதை முதலில் நம்புங்கள்.

இந்த வாரம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை பற்றி அறிந்துகொள்வோம். பிரம்ம ஹத்திதோஷ நிவர்த்தி தலமாக சொல்லப்படும் திருவிடைமருதூர் தலத்திற்கு பரிவார தலமாக அமைந்தது இந்த திருத்தலம்.

அறுபடை வீட்டில் ஒன்றான திருவேரகம் (சுவாமிமலை) திருத்தலத்திற்கு அருகில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ளது இந்த திருவலஞ்சுழி என்ற திருத்தலம்.

ff

இந்த திருத்தலத்தின் சிறப்பு வெள்ளை விநாயகர்தான். பாற்கடலை கடைந்து அமுதம் பெறுவதல் பொருட்டு வந்த ஆவலில் முதல் கடவுளான விநாயக பெருமானை வழிபட மறந்து இன்னல்களை சந்தித்த தேவர்கள் பின்னர் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபட பொங்கிவந்த நுரையை விநாயகராக வழிபட அமுதம் கிடைக்கப்பெற்றனர் என சொல்லுவார்கள்.

அப்படி வழிபட்ட விநாயகரை இந்திரன் இந்த திருத்தலத்தில் எழுந்தருள செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். ஸ்வேத விநாயகர் என்ற இந்த வெள்ளை விநாயகர் துதிக்கையும் வலம்புரி என சுழித்து இருக்கும். இந்த விநாயகருக்கு மற்ற திருக்கோவிலில் இருப்பதுபோல அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் கைபடாமல் அர்ச்சகர் சுவாமிக்கு சாற்றுவார்கள். ஒரு அடிக்கும் குறைவான உயரத்திலுள்ள தீண்டா திருமேனி யுடன் விளங்கும் இந்த மூர்த்தி விக்கினங்களை கலைந்து நல்வழி காட்டும் என நம்பப் படுகிறது காவிரி நதி வலமாக சுழித்து செல்லும் இடத்தில் இந்த திருத்தலம் அமைந்து உள்ள தால் திருவலஞ்சுழி என்ற பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். ஆதிசேடன் வெளிப்பட்ட பள்ளத்தில் காவிரி பாய்ந்து அழுந்திவிட்டது. அதுசமயம் அங்கே ஏரண்ட முனிவர் தியாகம் செய்து, மக்கள் நலனுக்காக, காவிரியை மீட்டுதந்தமையால் ஏரண்ட முனிவருக்கு தனிசிலையும் இந்த திருக்கோவிலில் உள்ளது.

இன்றளவும் மகா சிவராத்திரி அன்று ஆதிசேடன் வந்து வழிபட்டு செல்வதாக சொல்லப்படுகிறது. இது வழிபாட்டு தலமாக மட்டுமின்றி வரலாற்று சிறப்புமிக்க தலமாகவும் உள்ளது. இராஜராஜசோழன் இங்குள்ள எட்டு கைகளை உடைய அஷ்ட புஜ மஹா காளியை வழிபாடு செய்துதான் போருக்கு செல்வார் என்று சொல்கிறார்கள்.

இங்கே சுவாமியின் திருநாமம், வலஞ்சுழி நாதர் என்ற கற்பகநாதேஸ்வரர். அம்பிகை யின் திருநாமம் பெரியநாயகி. இங்கே சுவாமி சுயம்பு சுவாமிக்கு வலதுபுறம் அம்பாள் மணக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கி றார். அப்பரும் சம்பந்தரும் பாடப்பெற்ற தேவார திருத்தலம் இது.

கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதிகள்கொண்ட இந்த திருத்தலம் சாலை ஓரத்திலேயே உள்ளது. சோதிடரீதியாக களத்திர தோஷம் உள்ளவர்கள், இந்த திருத் தலத்தில் பிரார்த்தனை செய்து பலன் பெறலாம்.

திருமணம் வேண்டி பிரார்த்தனை செய்ப வர் ஆணாக இருந்தால், முதலில் அம்பாளை யும், பெண்ணாக இருந்தால் சுவாமியையும் முதலில் தரிசனம்செய்து வேண்டுதலை பதிவுசெய்து வலம்வந்து நின்றால், குறிப் பிட்ட காலத்திற்குள் திருமண வைபவம் நிகழ்ந்து விடும்.

ஜோதிடரீதியாக, 7-ஆம் இடம் பாதிக் கப்பட்டவர்கள், 7-ஆம் அதிபதியுடன் பாவ கிரகங்கள் சம்பந்தம் பெற்றவர்கள், 7-ஆம் இடத்தில் சூரியன் இருப்பவர்கள் இந்த தலத்தில் வழிபாடு செய்வது நலம். அதுவே மகிழ்ச்சியான அமைதி யான வாழ்க்கைக்கு துணை நிற்கும்.

இதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள் ஏதோ சந்தர்ப்ப வசத் தில் திருமணம் ஆகி இருந்தாலும் இங்கேவந்து வழிபாடு இயற்று வது மன அமைதிக்கும் நிம்மதியான வாழ்க் கைக்கும் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இது திருப்புகழ் தலமாகும். இத்தலத்து முருகப்பெருமான்மீது திருப்புகழ் பாடப் பெற்று உள்ளது. ஆறு திருமுகங்களுடன் இரு தேவியாரும் உடனிருக்க கிழக்கு நோக்கி எழுந் தருளியிருக்கும் முருகப்பெருமானை உள்ளம் உருகி வேண்டி வேண்டியதை பெறலாம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172