Advertisment

நலம் தரும் திருத்தலம்! - விசு அய்யர் 16

/idhalgal/balajothidam/healing-temple-vishu-iyer-16

ல்லாமே சரியாகதான் செய்து இருக்கேன், ஆனால் பாருங்க இந்த காரியம் வெற்றிக்கரமாக முடியவில்லை யென்று புலம்பிக்கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் இங்கே கவனியுங்கள். உங்களுக்காகதான் இந்த வாரம் இந்த திருத்தலம். எடுத்தக்காரியம் ஏதுவாக இருந்தாலும் தடையில்லாமல் நிறைவேறவேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நமக்கில்லாமல் இல்லை.

Advertisment

அதுபோன்ற முயற்சிகள் தடை இல்லாமல் எந்தவித இடையூறும் இல்லாமல், நிறைவேற ஒருதலம்யென் றால் அது திருநெடுங்களம் என்ற திருத்தலம்தான். காசிக்கு நிகரான இந்த திருத்தலம் திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி என்ற இடத்தில் அமைந் துள்ள நெடுங்குளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த திருத்தல தெய்வம் ஒரு சுயம்பு. தேவாரப் பாடல்பெற்ற திருத்தலத் தில், இந்த திருத்தலம் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிசெய்த இடர்களையும் பதிகம் பாடல்பெற்ற திருத்தலம் இது. மக்கள் பேச்சுவழக்கில் இத்தலத்தை "திருநட்டாங் குளம்' என்கின்றனர்.

te

இறைவனை நோக்கி தவஞ்செய்த அம்பிகையை கள்ள உருவில் தோன்றி இறைவன் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்ற தமிழ் பெயர் கொண்டு வழங்கப்படுகிறது.

இந்த திருக்கோவிலின் முன்னால் திருக்க

இந்த திருக்கோவிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. கொடிமரத்தின் கீழே விழுந்து வணங்கி வலம்வந்தால், வெளிப்பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், ஒப்பில்லா நாயகி என்ற திருநாமம்கொண்ட அம்பாள் சன்னதியும் உள்ளது.

அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் அம்பாள் காட்சிதருகிறாள். வடக்கு வெளிப் பிராகாரத்தில் அகஸ்தியர் சன்னதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது என்று சொல்கிறார்கள்.

இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிராகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிராகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனிசன்னதி உள்ளது. மேற்கு பிராகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனிசன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார் களுடன் வரதராஜப் பெருமாள் சன்னதியும் உள்ளது.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்றுத்தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

கோவில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாக ஐதீகம். இதனால் மூலஸ்தானத் தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன.

காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடித்த திருத்தலம் இது என்று தலபுராணம் சொல்கிறது.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத் தலத்து முருகப்பெருமானை அருணகிரி நாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன்மீது ஒரு பாடலுள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஆடி மாதம் முதல் வாரத்தில் காலையில் சூரிய ஒளி சுயம்பு மூர்த்தியாக உள்ள மூலவர் மீது விழுகிறது. இந்த சூரிய வழிபாடு சிறப்புக் குரியது.

இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் ஆகியவை உள்ளன. சுந்தர தீர்த்தக்கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்தியம் செய்து பலருக்கும் வழங்கி னால் நோய் தீருமென்பது நம்பிக்கையாக இருந்துவருகின்றது. இத்தலத்தில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக்கல் உரல் சிறந்த வேலைப் பாடமைந்தது.

இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க்கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சிதருகிறார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன்மேல் பாடியுள்ள இப்பதிகம் "இடர்களையும் திருப்பதிகம்'' என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்திலுள்ள பத்து பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்துவந்தால் நலம்பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

இப்போதெல்லாம் பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நாம் கவனித்து இருப்போம். பைரவர் சன்னதியில் அவரவர்கள் வழிபாடு செய்வார்கள். உங்களுக்குத் தெரியுமா? தேய்பிறை பஞ்சமி வழிபாடு.

அட அது என்னங்க ஐயா தேய்பிறை பஞ்சமி என யோசிக்கத் தொடங்கி விட்டீர்கள். நான் ஆமாம் தேய்பிறை பஞ்சாமியில் வாராஹி வழிபாடு செய்வது என்று ஒரு நடைமுறை வழக்கம்.

இந்த வழிபாடு சில கோவில்களில் மட்டுமிருக்கும். காரணம் வாராஹி அம்மன் சிலா ரூபம் பொதுவாக இருக்காது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள நெடுங்களம் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ளது இந்த வழிபாட்டு முறையில் பானக நிவேதனம் செய்றது வழிபாடு இயற்றும் முறையும் வழக்கத்தில் உள்ளது.

தினமும் காலை 6:30 மணிமுதல் ஆலயம் திறந்திருக்கும் காசிக்கு நிகராக கருதப்படும் இந்த திருத்தல யாத்திரை, வாழ்வில் வரும் இடர்களை களைந்து நாளும் நலத்தை தரும் திருத்தலமாகும்.

வித்தியாசமான வெண்கல குதிரை சிலை அமைந்துள்ள இந்த கோவிலில், யோக தட்சிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். வேலைபாடுகள் உடன் அமைந்த சோழர் காலத்து கல் உரல் இங்கு மகா மண்டபத்தில் உள்ளது. இதில் ஒரு சுவாமிக்கு மஞ்சள் இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கும்.

ஜோதிடரீதியாக புனர்பு தோஷம் உள்ளவர்கள் சனி, சந்திரன் சஷ்டாஷ்ட கத்தில் உள்ளவர்கள், இங்கு வழிபாடு செய்வது அவசியம். அவரவர்கள் நம்பிக் கைக்குரிய சோதிடர்கள் ஆலோசனைப்படி வழிபாடு செய்து நலம்பெற வேண்டுகிறோம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

bala171123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe