Advertisment

நலம் தரும் திருத்தலம்! -விசு அய்யர்

/idhalgal/balajothidam/healing-temple-vishu-iyer-0

நோய் இல்லாத வாழ்வினால் வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம் இல்லையா.. விரும்பியோ, விரும்பாமலோ, கொரனாவுக்கு பிறகு இந்த எண்ணம் எல்லோருக்கும் இல்லாமல் இல்லை. மருத்துவ காப்பீடு எடுப்பதும் வீட்டுக்கு ஒரு குடும்ப மருத்துவரை வைத்துக்கொள்வதும் இன்றைய நாளில் தேவையாகி போய்விட்டது.

Advertisment

ஜோதிடத்தில் 6-ஆம் பாவகத்தை நோய் பற்றி குறிக்க சொல்லுவார்கள். 6-ஆம் பாவகம் என்பது ஜாதகத்தில் "ல' என்று போட்டு இருக்கும் கட்டத்தில் இருந்து கடிகார சுற்றில் எண்ணி வரும்போது, வரும் ஆறாவது கட்டம் என சோதிட ஆர்வலர்களுக்கு தெரிந்திருக்கும்.

Advertisment

dd

எந்த ஒரு பாவகத்திற்கும் அதன் பன்னிரண்டாம் பாவகம் தான் நிவர்த்தி பாவகம் என சோதிடத்தில் சொல்லுவார்கள். இந்த 6-ஆம் பாவகத்திற்

நோய் இல்லாத வாழ்வினால் வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம் இல்லையா.. விரும்பியோ, விரும்பாமலோ, கொரனாவுக்கு பிறகு இந்த எண்ணம் எல்லோருக்கும் இல்லாமல் இல்லை. மருத்துவ காப்பீடு எடுப்பதும் வீட்டுக்கு ஒரு குடும்ப மருத்துவரை வைத்துக்கொள்வதும் இன்றைய நாளில் தேவையாகி போய்விட்டது.

Advertisment

ஜோதிடத்தில் 6-ஆம் பாவகத்தை நோய் பற்றி குறிக்க சொல்லுவார்கள். 6-ஆம் பாவகம் என்பது ஜாதகத்தில் "ல' என்று போட்டு இருக்கும் கட்டத்தில் இருந்து கடிகார சுற்றில் எண்ணி வரும்போது, வரும் ஆறாவது கட்டம் என சோதிட ஆர்வலர்களுக்கு தெரிந்திருக்கும்.

Advertisment

dd

எந்த ஒரு பாவகத்திற்கும் அதன் பன்னிரண்டாம் பாவகம் தான் நிவர்த்தி பாவகம் என சோதிடத்தில் சொல்லுவார்கள். இந்த 6-ஆம் பாவகத்திற்கு 12-ஆம் இடம் பூர்வ ஜென்ம பலனை குறித்து சொல்லும் 5-ஆம் பாவகம் தான் என்பது சோதிட அன்பர்களுக்கு தெரிந்திருக்கும். அந்தவகையில் பூர்வ ஜென்ம பலன் கிடைத்தால் மட்டுமே இந்த ஊத்துமலை திருத்தல தரிசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அகத்திய மாமுனிவர் ஸ்ரீ சக்கரம் அமைத்த இந்த ஊத்துமலை பாலசுப்பிரமணியர் திருக்கோவில், மருத்துவகுணங்களாலும் கொண்ட சுனைகள் அரியவகை மூலிகையாலும் நிரம்பிய திருத்தலம்.

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்த பெருமானார் வழிபட்டு அருள்பெற்ற இந்த ஊத்துமலை முருகனை தரிசித்து வழிபடுவோருக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறுவதாக பக்தர்களிடம் இன்றும் நம்பிக்கை உண்டு.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் பதினெண் சித்தர்களுக்கு இங்கே சிறப்பு பூஜை செய்யப்படும் இந்த கோவிலின் ஸ்ரீசக்கர தரிசனம் வாழ்வில் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வ வளத்தை நிலைக்க செய்யும்.

கருணை பொழியும் அழகு திருமுகத்துடன், நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன் அருள்பாலிக் கும் முருகப் பெருமான், சந்நிதியிலுள்ள பாறையில் நீரூற்று வருவதால் ஊத்துமலை என்று பெயர் என சொல்கிறார்கள்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று சொல்லும்படி இந்த ஊத்துமலை முருகன் கோவில் மூன்று நிலைகளை கொண்டதாக அமைந்துள்ளது. இம் மலையை சுற்றி ஸ்கந்தகிரி, நாமகிரி, குமரகிரி, பத்மகிரி என மலை வளம் நிறைந்த இந்த ஸ்தலம், நோய் தீர்க்கும் அற்புத தலமாக அமைந்துள்ளது.

இன்றைய நாளில் சர்வ சாதரணமாகிவிட்ட இரத்த குழாய் அடைப்பு போன்ற இதய நோயும், உயர் ரத்த அழுத்த நோயும் குணமடைய வேண்டுபவர்கள், இந்த ஸ்ரீ சக்கரம் உள்ள பாறையில் நேர் எதிரில் நின்று தியானம் செய்தால் குணம் ஏற்படுகிறது.

இங்குள்ள தியான மண்டபத்தில் சில மணி நேரம் அமர்ந்து தியானம் செய்து நினைத்தது நினைத்தபடி பெற முடியும் என்பதை அவரவர்கள் அனுபவத்தில் உணரலாம்.

dd

சித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்றும் வற்றாத மூலிகை நீராக மக்களின் நோய்களைத் தீர்த்துக்கொண்டுள்ளது. சப்தசாகரம் என்றழைக்கப்படும் ஏழுவிதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது.

ஆள் உயர பைரவர், அகத்தியர் உட்படபதினெண் சித்தர்களும் வழிபட்ட இடம், ஸ்ரீசக்கரம், மூலிகை சுனை, மூலிகை வனம், மலைமீதமர்ந்த திருக்கோவில் என பல சிறப்புகளைகொண்ட இந்த ஊத்துமலை முருகன் கோவில் சேலம் மாவத்தில் சீலநாயக்கன் பட்டி என்ற ஊருக்கு அருகிலுள்ளது.

வாய்ப்பு கிடைக்கும்போது, அவசியம் இத் திருத்தலம் சென்று பயனடைய வேண்டும். மற்றவர்கள் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு ஒருமுறையாவது திருத்தல யாத்திரை செய்யவேண்டும்.

சோதிடரீதியாக இதயத்தில் ரத்தகுழாய் அடைப்பு இருப்பவர்கள், வேல் மாறல் பாராயணம் செய்ய வேண்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் வேல் வகுப்பினை மட்டுமாவது படனம் செய்து பலன் பெற வேண்டும். இந்த தமிழ் பாடலை படனம் செய்து ஆபேரஷன் இல்லாமல் மீண்டு வந்த பலர் இங்கே உண்டு என்பதை புரிந்துகொண்டு தமிழ்வழி, வழிபாடு செய்துபலன் பெற்று நிறைவுடன் வாழ இறைவன் திருமுன் வேண்டி வணங்குகிறோம்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.

செல்: 94443 27172

bala040823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe