Advertisment

நலம் தரும் திருத்தலம்! (9) விசு அய்யர்

/idhalgal/balajothidam/healing-temple-9-vishu-iyer

திருவேடகம் என்பது மதுரைக்கு பக்கத்திலுள்ள சோழவந்தான் என்ற ஊருக்கு அருகிலுள்ள சிறிய கிராமம். இந்த ஊரிலுள்ள ஏலவார் குழலி சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவில்தான் இந்த வார சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் திருத்தலம்.

Advertisment

இது 274 பாடல்பெற்ற சிவத்தலத்தில், சம்பந்த பெருமானால் பாடப்பெற்ற பாண்டி நாட்டு திருத்தலம்.

Advertisment

வருடம் முழுவதும் திருவிழா கொண்டாட்டம் கொண்ட பழமையான திருக்கோவில் இது.

அனல் (நெருப்பு) வாதத்தில் தோற்ற சமணர்கள் சம்பந்தம் பெருமானை புனல் (நீர்) வாதத்திற்கு அழைத்தனர். அதை துணிச்சலாக ஏற்றுக்கொண்டு வெற்றிபெற்று சைவ சமயத்தை நிலை நிறுத்திய திருத்தலம் இந்த திருவேடகம்.

dd

இந்த திருக்கோவிலின் சிறப்பை சொல்லி மாளாது. ஓடுகிற நீரில் இட்ட பொருள் எதுவாக இருந்தாலும், அது நீரின் ஓட்டத்திற்கேதான் போகும் இல்லையா. ஆனால் இந்த திருக்கோவில் அருகிலுள்ள வைகை ஆற்றில் இட்ட திருஞான சம்பந்தர் எழுதிய திரு ஏடு வைகை ஆற்று நீரிணை எதிர்த்து ஓடியது என்றால் ஆச்சரியமாக தானே இருக்கும். அப்படி எதிர்த்து ஓடிய ஏட்டினை நிறுத்திய இடம்தான் இந்த திருத்தலம் அமைந்த இடம்.

திருவேடகம் என்பது மதுரைக்கு பக்கத்திலுள்ள சோழவந்தான் என்ற ஊருக்கு அருகிலுள்ள சிறிய கிராமம். இந்த ஊரிலுள்ள ஏலவார் குழலி சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவில்தான் இந்த வார சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் திருத்தலம்.

Advertisment

இது 274 பாடல்பெற்ற சிவத்தலத்தில், சம்பந்த பெருமானால் பாடப்பெற்ற பாண்டி நாட்டு திருத்தலம்.

Advertisment

வருடம் முழுவதும் திருவிழா கொண்டாட்டம் கொண்ட பழமையான திருக்கோவில் இது.

அனல் (நெருப்பு) வாதத்தில் தோற்ற சமணர்கள் சம்பந்தம் பெருமானை புனல் (நீர்) வாதத்திற்கு அழைத்தனர். அதை துணிச்சலாக ஏற்றுக்கொண்டு வெற்றிபெற்று சைவ சமயத்தை நிலை நிறுத்திய திருத்தலம் இந்த திருவேடகம்.

dd

இந்த திருக்கோவிலின் சிறப்பை சொல்லி மாளாது. ஓடுகிற நீரில் இட்ட பொருள் எதுவாக இருந்தாலும், அது நீரின் ஓட்டத்திற்கேதான் போகும் இல்லையா. ஆனால் இந்த திருக்கோவில் அருகிலுள்ள வைகை ஆற்றில் இட்ட திருஞான சம்பந்தர் எழுதிய திரு ஏடு வைகை ஆற்று நீரிணை எதிர்த்து ஓடியது என்றால் ஆச்சரியமாக தானே இருக்கும். அப்படி எதிர்த்து ஓடிய ஏட்டினை நிறுத்திய இடம்தான் இந்த திருத்தலம் அமைந்த இடம். சுவாமியின் பெயர் திரு ஏடகநாதர். அம்பாள் பெயர் ஏலவார் குழலி.

இந்த திருக்கோவில் லிங்க திருமேனி ஒரு சுயம்பு லிங்கம். அதன் உயரமும் அகலமும் பெரியதுதான். ஒன்பது படிகளை ஏறிதான் கோவில் குருக்கள் சுவாமிக்கு ஆராதனை செய்வார். கீழிருந்துதான் நாம் தரிசனம் செய்யவேண்டும்.

நவகிரகங்களினால், ஏற்படும் எந்த தொல்லையாக இருந்தாலும் நெருப்பில் இட்ட மெழுகுபோல காணாமல் போயிடும் என்பதை உறுதியாக சொல்லமுடியும். பொதுவாக இந்த திருத்தலத்தில், முன்னோர் மோக்ஷமடைய சிறப்பு வழிபாடு, திருமணம் நடைபெறாத வர்கள் அம்பாள் சந்நிதியில் திரு கழுத்து மாலையுடன் வலம்வந்து வரன் பெறுவது, வழக்கில் வெற்றிபெற என பலவித வழிபாடுகள் இயல்பாகவே இந்த திருத்தலத்தில் நடைபெறுகிறது. மனத்திலுள்ள இனம்புரியாத பயம் இயல்பாகவே இந்த திருக்கோவிலில் அடியெடுத்து வைத்த உடனேயே மறைந்துவிடும் என்பது அவரவர்கள் அனுபவ உணர்வு.

தமிழகத்தில் காசிக்கு இணையான முக்தி தலங்கள் என சில உண்டு. அவற்றுள் திருவேடகமும் உண்டு. இங்கு மும்மூர்திகளையும் வழிபட்ட புண்ணியம் இந்த ஒரு திருக்கோவில் வழிபாட்டில் கிடைக்கு என்பது சிறப்புக்குறியது. எல்லா நதிகளும் கடலில் சென்று கலக்கும். ஆனால் கடலில் சென்று கலக்காத ஒரே நதி தெற்கு வடக்காக ஓடும் வைகைதான் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கும்.

சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்திரத்தில் நடராஜர் அபிஷேகம், ஆடி பூரம், ஆவணி பௌர்ணமியில் ஏடு எதிர் ஏறிய உற்சவம், ஐப்பசியில் சூரசம்ஹாரம், கார்த்திகையில் தீப திருவிழா, மார்கழியில் ஆரூத்ரா தரிசனம், தை மகத்தில் தெப்ப திருவிழா, மாசியில் சிவராத்திரி, பங்குனியில் உத்திரம் என ஆண்டு முழுவதும் திருவிழா காணும் இந்த திருக்கோவிலிலுள்ள திருஏடகபெருமான், பத்திரகா பரமேஸ்வரர் என்ற திருப்பெயரில் அன்புடன் அழைக்கப்படுகிறார். ஸ்வாமிகக்கு எதிரிலுள்ள நந்தி உயரமான மேடையில் அமர்ந்திருக்கும். அம்பாள் சந்நிதி தனியாக சுவாமிக்கு வலது புறம் இருக்கும்.

இங்கு அம்மை நின்ற திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார். நான்கு திருக்கரங்களில் இரண்டில் அபயமும் வரதமும் தாங்கி அருள்பாலிக்கிறார். இங்கு அம்மையை வேண்டிக்கொண்டால் திருமண வரம் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள். திருமணமாகாத 90 கிட்ஸ் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கோஷ்டத்தில் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள் அமைந்து ஆட்சி அருள்புரிகின்றனர். பிராகாரத்தின் வடக்குச் சுற்றில் பள்ளியறை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரி தேவி சந்நிதிகொண்டு அருள்கிறார்.

அம்மன் சந்நிதித் தூண்கள் ஒன்றில் திருஞான சம்பந்தக் குழந்தையின் திருவுருவம் சிற்பமாக உள்ளது. சின் முத்திரையுடன், தலையில் மாலை சூடி, கைத்தாளம் இல்லாமல் ஞானசம்பந்தரின் அழகு மனதைக் கொள்ளைகொள்வதாக அமைகிறது.

காசியில் நான்காம் கால சிவராத்திரி பூஜை பைரவருக்கு நடத்தப்படுவதுபோல ஏடகநாத ஸ்வாமி திருக்கோவிலிலும் நடைபெறும். இந்த பைரவர் பூஜையை காண்பவர்கள் அஸ்வமேதை யாகம் செய்த பலனை பெறுவார்கள் என்பது ஐதீகம்.

பிராகாரத்தில் உயரமான நால்வர் திருமேனி சந்நிதியும், அறுபத்து மூன்று நாயன்மார் களும், இந்த திருக்கோவில் நிகழவுக்கு காரணமாக இருந்த மங்கையற்கரசியார் திருமேனியும், வலமாக வரும் பகுதியில் வள்ளி, தெய்வயானையுடன் நின்ற திருக் கோலத்தில் அருள்பாலிக்கும் திரு முருகன் திருமேனியும், சப்த மாதர்கள், திருஉருவ சிலையும் இருப்பது நம்மை தெய்வீக உணர்விற்கு அழைத்து செல்லும் என்பதில் ஐயம் இல்லை.

பாம்பன் ஸ்வாமிகள் திருமேனி சிலை இந்த திருக்கோவிலில் இருப்பது இன்னொரு சிறப்பு. பாம்பன் ஸ்வாமிகள் திருமேனி சிலை எந்த திருக்கோவிலில் இருந்தாலும் அந்த திருக்கோவில் புண்ணியத்தை அள்ளிதரும் சிறப்பு பெற்றவை என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

திருப்பாசுரம் என்று அழைக்கப்படும், "வாழ்க அந்தணர்' என்ற திருப்பதிகத்தை எழுதி வைகை ஆற்றில்விட்ட ஏட்டினை துதிக்கையில் தாங்கி, கரை சேர்த்த காரணத்தால், இங்குள்ள விநாயகர் "வாதில் வென்ற விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.

இந்த விநாயகர் சந்நிதி தனியாக கோவிலுக்கு வெளியே இருக்கிறது. திருஞான சம்பந்தர் சிலையும் கோவிலுக்கு வெளியே வைகை கரையில் தனிக் கோவிலாக உள்ளது.

காலை 7 மணிமுதல் திறந்திருக்கும் இந்த திருக்கோவில் மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்ற ஊருக்கு அருகில் அமைந்த சிறிய கிராமம். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதிகள் உண்டு.

வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் விடாமல் இந்த திருத்தல தரிசனம் செய்து முயற்சியில் ஏற்படும் தடைகள் நீங்கி, தடையற்ற முன்னேற்றம் பெற வாழத்து கிறோம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

செல்: 94443 27172

bala220923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe