லைமுடி அதிகமாக உதிர்வதற் கும், தலை முற்றிலும் வழுக்கையாக இருப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பிருக்கிறதா?

ஒருவருக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதென்றால், அவருடைய ஜாதகத்திலுள்ள லக்னாதிபதி யையும், 12-க்குரிய கிரகத்தையும் பார்க்கவேண்டும். புதனின் நிலையை யும் பார்க்கவேண்டும்.

ஒருவர் ஜாதகத்திலுள்ள லக்னம், அவரின் தலையிலிருந்து பாதம்வரை அனைத்தையும் கூறிவிடும். லக்னத்திலுள்ள கிரகங்கள் அந்த மனிதரின் தலைப்பகுதியைக் குறிக்கும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரனாக இருந்து, விரய ஸ்தானத் தில் இருந்தால்- அந்த சந்திரனை பாவ கிரகம் பார்த்தால், அவருக்கு 23 வயதிற்குப்பிறகு தலைமுடி உதிர ஆரம்பித்துவிடும்.

Advertisment

ஜாதகத்தில் 6-ல் சூரியன் இருந்து, அது 12-ஆவது பாவத்திற்கு அதி பதியை பாவ கிரகம் பார்த்தால், அந்த ஜாதகருக்கு தலைமுடி சீக்கிரமே கொட்ட ஆரம்பித்துவிடும்.

ஏனென்றால் சூரியன் பித்தகாரகன். உடலில் பித்தம் அதிகமாக இருக் கும்போது, தலைமுடி உதிரும். 12-ஆவது பாவம் தலையின் பின்பகுதியைக் குறிக்கும். அதை பாவ கிரகம் பார்த்தால், அந்த ஜாதகருக்கு வழுக்கைவிழும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், புதன் நீசமாக இருந்தால்- 2-ஆவது பாவத்தில் நீசச்சனி இருந்தால், இளம்வயதிலேயே அவருக்கு தலைமுடி கொட்டிவிடும். அவர் "விக்' வைக்க வேண்டியதிருக்கும். தலையில் அரிப்பு (நமைச்சல்) இருக்கும். தலைமுடி உதிரும்.

Advertisment

ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்பும் பின்பும் சூரியன், செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகருக்கு தலைமுடி சீக்கிரமே கொட்டிவிடும்.

pp

12-ஆவது பாவத்தில் சூரியன், செவ்வாய், புதன் அல்லது சூரியன், செவ்வாய், சந்திரன் இருந்தால், அவருக்கு வழுக்கை விழுந்துவிடும். 12-ஆவது பாவத்தில் பாவ கிரகங்களான செவ்வாய், சூரியன் இருந்தால், அந்த இடத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் தலைமுடி கொட்டும்.

லக்னத்தில் புதன், 2-ஆம் பாவத்தில் ராகு அல்லது சனி, 12-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியன் இருந்தால், அவருக்கு இளம்வயதிலேயே தலைமுடி உதிர ஆரம்பித்துவிடும்.

லக்னத்தில் நீசச்சனி, 7-ல் செவ்வாய், 8-ல் குரு, சூரியன் இருந்தால், அந்த ஜாதகருக்கு 30 வயதாகிவிட்டால், தலைமுடி உதிரத் தொடங்கிவிடும்.

ஜாதகத்தில் புதன் கெட்டுப்போய், அத்துடன் 12-க்கு அதிபதி இருந்தால், அவருக்கு இளமையிலேயே தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும்.

12-ல் சனி, சந்திரன், லக்னத்தில் செவ்வாய், லக்னாதிபதி நீசமடைந்து சூரியனுடன் 3 அல்லது 4-ல் இருந்தால், அந்த ஜாதகருக்கு 32 வயதிற்குப்பிறகு தலைமுடி உதிர ஆரம்பித்துவிடும். 45 வயதில் அவர் வழுக்கைத் தலையுடன் இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் 12-ல் சூரியன், புதன், செவ்வாய், சந்திரன் இருந்தால், படிக்கும் காலத்திலேயே அவருக்கு தலைமுடி கொட்டத் தொடங்கிவிடும்.

சில பெண்களின் ஜாதகத் தில் செவ்வாய், சனியைப் பார்த்தால்- லக்னாதிபதி பாவ கிரகத்துடன் இருந்தால், "தைராய்ட்' பாதிப்பால் தலைமுடி உதிரும்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், "தைராய்ட்' காரணமாக, தலையிலிருந்து முடி கொட்டும்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், சுக்கிரன், ராகு இருந்தால், அவருக்கு "தைராய்ட்' பாதிப்பு இருக்கும்.

அதன்காரணமாக, தலைமுடி கொட்டும்.

பெண்ணின் ஜாதகத்தில் 12-ஆவது பாவத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் இருந்தால், தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.

பெண்ணின் ஜாதகத்தில் 2-ஆவது பாவத்தில் சனி, செவ்வாய் இருந்தால்- 6-ஆம் பாவத்தில் சூரியன், சுக்கிரன் இருந்தால், 27 வயதிற்குப்பிறகு தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் 12-ல் சனி, 2-ல் செவ்வாய், புதன், சூரியன் இருந்து, அதே ஜாதகத்தில் 6-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு சீக்கிரமே தலைமுடி கொட்டத் தொடங்கிவிடும். சிலருக்கு வழுக்கை விழும்.

பரிகாரங்கள்

தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும். புதன்கிழமை விநாயகரை நான்குமுறை சுற்றிவரவேண்டும். அங்கு தீபமேற்றவேண்டும். தினமும் சூரியனை வணங்கவேண்டும். இரவில் படுக்கும் போது, தொப்புளில் பத்து சொட்டு நல்லெண் ணெய் விடவேண்டும். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

ஜாதகத்திலுள்ள 12-ஆம் பாவத்திற்கு அதிபதியின் பொருளை தானமளிக்க வேண்டும். சூடான உணவைச் சாப்பிடக் கூடாது. இரவில் புளி, காரம், உப்புள்ள உணவைத் தவிர்க்கவும். வடமேற்கில் தலைவைத்துப் படுக்கக்கூடாது.

செல்: 98401 11534