Advertisment

கேடு தரும் சொவ்வாய் + ராகு! தடுத்து நிறுத்தும் பரிகாரங்கள்! - ஆர்.மகாலட்சுமி

/idhalgal/balajothidam/harmful-mars-rahu-preventative-remedies-r-mahalakshmi

ஜோதிடத்தில் கிரகங்கள் நகர்ந்துகொண்டே இருப்பது உங்களுக்கு தெரிந்ததுதான். இதில் சுபர்கள் இணையும்போது நல்ல பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும். சிற்சில சமயங்களில் ஒரே ராசியில் இரு சுபர் அல்லது இரு பாபர் இணைவு ஏற்பட்டுவிடும். அதிலும் இரு பாபர்கள் ஒரே நட்சத்திரக் காலில் நிற்கும்போது, பின்விளைவுகள் சற்று கலவரம்தான்.

Advertisment

இப்போதைய காலகட்டத்தில் மீன ராசியில், ராகு பொறுமையாக நகர்ந்துகொண்டு வருகிறார். அவர் ஒரு ராசிக்கு ஒன்றறை வருடம் பின்னோக்கி நகர்வதால், ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்வார்.

Advertisment

இப்போது, விரைவு கிரகமான செவ்வாய், தனது கிரக நகர்வில் மீன ராசிக்குள் நுழைகிறார். இவர் ஏறக்குறைய 45 நாட்கள், 1 1/2 மாதம் அங்கு தங்கியிருப்பார்.

இப்போது மீன ராசியில், ராகு+ செவ்வாய் என்று இணைந்து நிற்கிறார்கள்.

ஜோதிடத்தில் கிரகங்கள் நகர்ந்துகொண்டே இருப்பது உங்களுக்கு தெரிந்ததுதான். இதில் சுபர்கள் இணையும்போது நல்ல பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும். சிற்சில சமயங்களில் ஒரே ராசியில் இரு சுபர் அல்லது இரு பாபர் இணைவு ஏற்பட்டுவிடும். அதிலும் இரு பாபர்கள் ஒரே நட்சத்திரக் காலில் நிற்கும்போது, பின்விளைவுகள் சற்று கலவரம்தான்.

Advertisment

இப்போதைய காலகட்டத்தில் மீன ராசியில், ராகு பொறுமையாக நகர்ந்துகொண்டு வருகிறார். அவர் ஒரு ராசிக்கு ஒன்றறை வருடம் பின்னோக்கி நகர்வதால், ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்வார்.

Advertisment

இப்போது, விரைவு கிரகமான செவ்வாய், தனது கிரக நகர்வில் மீன ராசிக்குள் நுழைகிறார். இவர் ஏறக்குறைய 45 நாட்கள், 1 1/2 மாதம் அங்கு தங்கியிருப்பார்.

இப்போது மீன ராசியில், ராகு+ செவ்வாய் என்று இணைந்து நிற்கிறார்கள்.

நல்ல காலத்திலேயே இந்த ராகு+ செவ்வாய் சேர்க்கை கிலி பிடிக்கும். அதிலும் இவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரே நட்சத்திர காலில் நிற்பார்கள். என்னத்தைச் சொல்ல.

ராகுபகவான், சித்திரை 1-ஆம் தேதி 2024 ஏப்ரல் 14-ஆம் தேதி ரேவதி 1-ஆம் பாதத்தில் தன் திருப்பாதங்களை பதிக்கிறார். ஒரு விஷயம் இங்கு கவனிக்கவேண்டும். ராகு ரேவதி 1-ஆம் பாதத்தில் நின்ற பிறகு, அடுத்து ரேவதி 2-ஆம் பாதம் செல்லமாட்டார். தன் பின்னோக்கிய பயணத்தில் ஆனி 1-ஆம் தேதி ஜூன் 15-ல் உத்திரட்டாதி 4-ல் சென்று அமர்ந்துவிடுவார். ஆக, ராகு ஏப்ரல் 14 முதல் ஜூன் 15 வரை ரேவதியில் நிற்கிறார். சரிதானே!

இப்போது செவ்வாயின் கோட்சாரத்திற்கு வாருங்கள். செவ்வாய் சித்திரை 9 ஏப்ரல் 22-ல் பூரட்டாதி, 4-ஆம் பாதத்தில் தன் திருவடி களை, மீன ராசிக்குள் நுழைக்கிறார். பின் அவர் முன்னோக்கிய பயணத்தில் உத்திரட் டாதியின் நான்கு பாதங்களையும் கடக்கி றார். பின் வைகாசி 1, மே 14 அன்று, ரேவதி 1-ஆம் பாதத்தில் வந்து அமர்ந்துகொள்வார். அடுத்து, மே 18-ஆம் தேதி ரேவதி 2-ஆம் பாதம் சென்று, நிறைவாக, வைகாசி 18 அன்று மே 31-ஆம் தேதி, அஸ்வினி 1-ஆம் பாதம் மூலம் மேஷ ராசிக்கு மாறி சென்றுவிடுவார்.

ss

இப்போது, ஏப்ரல் 22-ஆம் முதல் மே 31 வரை செவ்வாயும், ராகுவும் மீனத்தில் சேர்ந்தே உள்ளனர். இதுவே மிகப்பெரிய தீமையான இணைவாகும்.

அதிலும் மே 14 முதல் மே 18-ஆம் தேதி வரை, ரேவதி நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் ராகுவும், செவ்வாயும் மிக இணைந்திருப்பர். இந்த காலகட்டம் சற்று கடினமானதுதான். உலகில் ஜோதிட கணக்குப்படி இந்த இணைவு மிக கேடானது எனக் கூறுகிறது.

செவ்வாய் காவல்துறையை குறிக்க ராகு தீவிரவாதிகளைக் குறிப்பார். எனவே தீவிரவாதிகளால், கொடுஞ்செயல்கள் நிறைவேற அதனை இராணுவமும் போலீசும் சேர்ந்து அடக்கி ஒடுக்க நேரிடும். செவ்வாய் பூமியைக் குறிப்பதால் ராகுவின் சேர்க்கை யால் பூமி அதிர்ச்சி உண்டாகும். இந்த இரு கிரக சேர்க்கை கடல் ராசியில் இருப்பதால், கடலில் அதிர்வுகள் உண்டாகலாம்.

மேலும் கொலை, திருட்டு மிக அதிகரிக்கும் ஒரு தீவிரவாதி கொல்லப்படுவார்.

ஒரு அரசியல் பெரிய தலைவர் மிக கவனமாக இருக்கவேண்டும்.

பூமி தொழில் எனும் ரியல் எஸ்டேட் துறையில் ரௌடிகள் அட்டகாசம் செய்வர். இதில் சில ரௌவுடிகளை காவல்துறை சுட்டுவிடக்கூடும். விபத்துக்கள் மிக அதிகரிக்கும்.

மின்சார துறை பணியாளர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

சிறு வயது இளம் பையன்கள், இளைஞர் கள் போதை கடத்தல் செய்வர். அவர்களும் போதை பழக்கத்துக்கும் அடிமையாகிவிடுவர்.

ராகுவும், செவ்வாய் ரேவதி எனும் புதன் சாரம் பெறுவதால், தகவல் திருட்டு, ஒயிட் காலர் ப்ராடுத்தனம், வேலை விஷயமான ஏமாற்று, குழந்தைகள் சம்பந்தமான குற்றங்கள் இவையும் அதிகரிக்கும்.

ஆக, மக்கள் செவ்வாய், மீன ராசியில் இருந்து விலகும் வரை ரொம்ப பத்திரமாக இருக்கவேண்டும்.

இந்த மோசமான கிரக இணைவின் தாக்கங் களை தடுத்து நிறுத்துபவள் காளி ஒருவளே! ஆக்ரோஷமான துர்க்கையை வணங்குங்கள்.

பிரத்தியங்கார, வராஹி, திரிசுலி, மகிஷாசுரமர்த்தினி, வக்ரகாளி, தில்லை காளி இவர்களை குங்குமம் எலுமிச்சை கொண்டு வணங்குங்கள்.

ஒரு பித்தளை தட்டில் கொஞ்சம் துவரம் பருப்பு, கொஞ்சம் உளுந்தும் வைத்து, அர்ச்சகர் அல்லது தெரிந்தவர்களுக்கு கொடுங்கள்.

செவ்வாய்க்கும், ராகுவுக்கும் அதிபதியான துர்க்கையால் மட்டுமே இந்த மோசமான காலத்தை கடக்க உதவ இயலும். துர்க்கையே, உன்னை நமஸ்கரிக்கிறோம். மீண்டும், மீண்டும் உன்னை வணங்குகிறோம்.

விபத்துக்கள் அதிகமாகும் நடக்கப் போகும் இந்த 1 1/2 மாதத்தில், முனிஸ்வரன் போன்ற தெய்வங்களுக்கு வண்டி, வாகனங் களை பூஜை செய்யுங்கள்.

செல்: 94449 61845

bala260424
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe