Advertisment

சாபத்தால் உண்டாகும் தோஷமும், பரிகாரமும்... நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர் ஏமாந்தவர்கள்

/idhalgal/balajothidam/harm-caused-by-curse-and-its-remedy

கொடுக்கும் சாபம்

ஏமாற்றியவர்களை

ஏழேழு பிறப்பும் பாதிக்கும்..

சாபத்தைப் பெறாதீர்கள்

ஏமாற்றமும் வலியும்

ஏமாந்தவர்களுக்குத்தான் தெரியும்..

ஏமாந்தவர்கள் கொடுக்கும்

சாபங்கள் பலிக்கும்...?

ஒருவருடன் அன்பு செலுத்தி

அவரை நம்பவைத்து..

காரியம் முடிந்தவுடன்

கழட்டிவிட்டுச் சென்றால்..

பாதித்தவர்,

நம்பி அன்பு வைத்தவர்..

சாபம் கொடுத்தால்

ஏழேழு தலைமுறையும்

பாதிக்கும்..

"உன் சாபம் என்னை

ஒன்னும் பண்ணாது'' என

தனக்குத்தானே

ஆறுதல் சொல்லிக்கொண்டும்..

ஒருவேளை

சாபம் பலித்துவிடுமோ என்கிற

பயத்துடனும் பலர்

வாழ்கிறார்கள்!...

ஏழாம் இடம் கெட்டுப்

போனவர்கள்

கட்டாயம் ஏமாற்றம் அடைவர் உடன்பிறந்தவர்கள்...

நண்பர்..

தொழில் கூட்டாளி...

வாழ்க்கைத் துணைவரால் ஏமாற்றப்படுவர்..

காதலித்து ஏமாறுதல்

பணத்தைக் கொடுத்து ஏமாறுதல்

அன்பிற்காக சொத்தை எழுதிக் கொடுத்தல்..

ஜாமின் கையெழுத்துப் போட்டு ஏமாறுதல்..

மனரீதியாகவும்

உடல்ரீதியாகவும் பாதிப்பு

அடைதல்..

ஏழாம் இடம்

கெட்டுப்போனவர்கள்

அன்புக்கு ஏங்கி

கொடுக்கும் சாபம்

ஏமாற்றியவர்களை

ஏழேழு பிறப்பும் பாதிக்கும்..

சாபத்தைப் பெறாதீர்கள்

ஏமாற்றமும் வலியும்

ஏமாந்தவர்களுக்குத்தான் தெரியும்..

ஏமாந்தவர்கள் கொடுக்கும்

சாபங்கள் பலிக்கும்...?

ஒருவருடன் அன்பு செலுத்தி

அவரை நம்பவைத்து..

காரியம் முடிந்தவுடன்

கழட்டிவிட்டுச் சென்றால்..

பாதித்தவர்,

நம்பி அன்பு வைத்தவர்..

சாபம் கொடுத்தால்

ஏழேழு தலைமுறையும்

பாதிக்கும்..

"உன் சாபம் என்னை

ஒன்னும் பண்ணாது'' என

தனக்குத்தானே

ஆறுதல் சொல்லிக்கொண்டும்..

ஒருவேளை

சாபம் பலித்துவிடுமோ என்கிற

பயத்துடனும் பலர்

வாழ்கிறார்கள்!...

ஏழாம் இடம் கெட்டுப்

போனவர்கள்

கட்டாயம் ஏமாற்றம் அடைவர் உடன்பிறந்தவர்கள்...

நண்பர்..

தொழில் கூட்டாளி...

வாழ்க்கைத் துணைவரால் ஏமாற்றப்படுவர்..

காதலித்து ஏமாறுதல்

பணத்தைக் கொடுத்து ஏமாறுதல்

அன்பிற்காக சொத்தை எழுதிக் கொடுத்தல்..

ஜாமின் கையெழுத்துப் போட்டு ஏமாறுதல்..

மனரீதியாகவும்

உடல்ரீதியாகவும் பாதிப்பு

அடைதல்..

ஏழாம் இடம்

கெட்டுப்போனவர்கள்

அன்புக்கு ஏங்கி ஏங்கி ஏமாறுவார்கள்...

tt

லக்னத்தை சனி பார்ப்பது

லக்னாதிபதியை சனி பார்ப்பது

லக்னாதிபதியுடன் சனி இணைவது

பாவ கிரகங்களால்

லக்னம் பாதிக்கப்படுவது..

இப்படிப்பட்ட

ஜாதக அமைப்பு கொண்டவர்கள்

உங்களை ஏமாற்றுவார்கள்..

லக்னம் கெட்டவர்கள் எப்போதும்

கெட்டவர்கள்தான்..

இரண்டாம் இடமாகிய

வாக்கு ஸ்தானத்தில்

சுப கிரகங்கள் இருந்தால்

இனிக்க இனிக்கப் பேசி

உங்கள் வாழ்க்கையைக் கெடுப்பார்கள்...

ஆறு, எட்டாம் அதிபதி

லக்னத்திற்குத் தொடர்பு கொண்டவர்கள்..

எப்போதும் பிறரை ஏமாற்றி பிழைப்பர்...

ஏமாற்றிய பிறகும்

குற்ற உணர்ச்சியே இல்லாமல்

மேலும் மேலும்

ஏமாந்தவர்களை இழிவுபடுத்தி

பேசுவதும்..

நல்லவர்களை

கெட்டவர்களாக சித்தரித்துக் கூறி

அவமானப்படுத்தினால்..

உயிருடன் இருக்கும்போதே

தான் நேசிப்பவரை இழந்து தவிப்பர்...

அடுத்தவர் அழுவதை

பார்த்து ரசித்து வருபவர்களுக்கு

காலத்தின் தண்டனை

கடுமையாக இருக்கும்...

"நல்லவர்களுக்கு

நல்லதே நடக்கும்'' என

கெட்டவர்கள்தான்

அடிக்கடி சொல்வார்கள்..

நாணயமானவர்கள்

நடப்பது நடக்கட்டும் என

நன்றி கெட்டவரையும்

மன்னித்து விடுவர்..

ஏமாந்தவர்கள் எப்போதும்

பயப்படாதீர்கள்..

ஏமாற்றியவர்களை காலம் ஏமாற்றும்...

சொத்தை அபகரித்தவன்

நன்றாக இருக்கிறான் என

எண்ண வேண்டாம்..

கெட்டவன்தான்

நன்றாக இருக்கிறான்

என நொந்துகொள்ள வேண்டாம்..

வினை விதைத்தவன் வினை அறுப்பான்..

கெடுவான் கேடு நினைப்பான்..

இது கலிகாலம்..

கெட்டவர்கள் நன்றாக இருப்பார்கள்

நல்லதுக்கு காலமில்லை என எண்ணாதீர்கள்..

கலிகாலத்தில்தான் கெட்டவர்களுக்கு

கொடூரமாக தண்டனை கிடைக்கும்..

எனக்கு மட்டும் ஏழரைச்சனியில்

ஏகப்பட்ட பிரச்சினை வருகிறது

என்ன செய்வதென்றே தெரியவில்லை

என குமுறிக் குமுறி

அழுதாலும்

தப்புக்கு தண்டனை

தப்பாமல் வரும்..

தனக்குத் தெரிந்து

தற்சமயத்தில்

நல்லவர்களாக வாழ்ந்தாலும்..

முன்ஜென்மத்தில்

செய்த பாவங்களுக்கு கர்மா

ஏழரைச்சனியில்தான்

தண்டனை தருவார்..

கர்மாவை குறிக்கும் ஸ்தானம்

காலபுருஷ தத்துவத்திற்கு பத்தாமிடம்..

பத்தாம் இடத்து கர்மாதிபதி

சனி ஆவார்..

கர்மவினைகளால்

கட்டாயம் பாதிப்புகள்

நடந்தே தீரும்...

நான் நல்லவன் என்று

நமக்கு நாமே

சொல்லிக்கொள்வது

தற்பெருமைக்கு

வேண்டுமானால் பயன்படும்..

தர்மத்தின் பார்வையில்

தவறு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு..

தண்டனை தாமதமாகக் கிடைப்பதால்தான்..

இன்று துணிந்து

தவறுகள் செய்கிறார்கள்..

ஒருவருக்கு துரோகம் செய்துவிட்டு

எந்தக் கோவிலுக்குச் சென்று

வேண்டுதல் வைத்தாலும்

உங்கள் கோரிக்கை

நிறைவேறாது..

நீங்கள் தவறே செய்யாதவர்கள்போல

பிறர் முன்பு..

நல்லவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் சாபம்

உங்களைத்தான் பாதிக்கும்..

கெட்டவர்கள் கொடுக்கும் சாபம்

நல்லவர்களுக்கு என்றும் பலிக்காது..

பிறர் சொத்தை அபகரித்து

உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால்..

பண மூட்டை

பாவ மூட்டையாக மாறி

உங்கள் பிள்ளைகளுக்கு

போய்ச் சேரும்..

பாவத்தின் தண்டனை

கொடூரமாக இருக்கும்..

கெட்டவர்களுக்குத் துணை நிற்பதும்

கெட்ட செயல்தான்..

கெட்டவன் பயந்து

திருந்த நினைத்தாலும்

நீங்கள் கொடுக்கும்

தைரியத்தால் அதர்மத்தைத்

தொடர்வான்..

நல்லவன் சாபம்

தவறுக்கு துணை நிற்பவர்களை

நாச கொடூரமாக்கிவிடும்..

கெட்டவர்களுக்குத் துணை நிற்காதீர்கள்..

உங்கள் பிள்ளைகள்

அனாதை ஆக்கப்படுவார்கள்...

ஐந்தாம் இடம் வலுத்திருந்தால்

ஏமாற்றுபவர்களை மன்னித்துவிடுங்கள்..

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்

வரும் தசா புக்தி காலத்தில்..

உங்கள் வாழ்க்கையைக் கெடுத்தவர்கள்

உங்கள் கண்முன்னே அழிந்து நாசமாவார்கள்..

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்..

"தெய்வம் நின்று கொல்லும்''

முன்னோர் பாவம் தீர்க்க

முடவர்களுக்கு உதவுங்கள்..

இந்நாள் பாவம் தீர்க்க

துரோகம் செய்தவர்களிடம்

சென்று மன்னிப்புக் கேளுங்கள்..

இழப்புகளை ஒருபோதும்

திருப்பித் தரமுடியாது..

மனம் நொந்து

போனவர்களுக்கு

மருந்து கிடையாது..

உங்கள்முன் உங்களுக்காக

துடிதுடித்து அழுபவர்களை

தூக்கி எறிந்துவிட்டு வராதீர்கள்..

அன்பைக் கொடுத்து ஏமாற்றுவது

ஆத்மாவையே பாதிக்கும்..

மன்னிப்புக் கேளுங்கள்

மன்னிப்பைக் கொடுங்கள்..

உங்கள் வாழ்க்கையில்

மாற்றம் வரும்

முன்னேற்றம் தரும்..

செல்:96003 53748

Advertisment
bala140325
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe