னிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடுவது மிகவும் நல்லது.

சனிக்கிழமை தெற்கு நோக்கிய ஆஞ்சனேயரை வழிபடுவது மேலும் நல்லது. செந்தூரம், மல்லிலிகை எண்ணெயைக் கலந்து அபிஷேகம் செய்யவேண்டும். இதனால் கடன் தீரும். வீடு வாங்கும் எண்ணம் ஈடேறும்.

ஏழரைச்சனியின் பாதிப்பிலிலிருந்து விடுபடலாம்.

Advertisment

அடிக்கடி விபத்துகள் நடைபெற்றால், ஆஞ்சனேயருக்கு முன்னால் அமர்ந்து அனுமன் சாலீசா படிப்பது சிறந்தது.

வீட்டில் அண்ணன்- தம்பி உறவு, தந்தை- மகன் உறவு சரியில்லாமலிலிருந்தால், சனிக்கிழமை சுந்தர காண்டம் படிப்பது நற்பலன் தரும்.

ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது பலவித சிக்கல்கள் இருக்கும். சந்தோஷ சூழல் இருக்காது. அவர் ஆஞ்சனேயரை சனிக் கிழமை வழிபட்டால் பிரச்சினைகள் தீரும்.

Advertisment

ஒரு ஜாதகரின் சந்திர ராசியிலிலிருந்து சனி பகவான் 8-ஆவது ராசிக்கு வரும் போது அதை அஷ்டமச்சனி என்பர்.

அஷ்டமச்சனியின்போது ஜாதகர் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்.

வாடகை வீட்டில் இருந்தால் அங்கு தோஷம் உண்டாகி வேறொரு வீட்டி னைத் தேடிச்செல்லும் சூழ்நிலை உண்டாகும். பணவரவு குறையும். தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவாது. கூட்டுக்குடும்பத்தில் விரிசல் உண்டாகும்.

ஒருவரின் ராசியிலிலிருந்து 4-ஆவது வீட்டிற்கு சனி பகவான் வரும்போது, அதை அர்த்தாஷ்டமச்சனி என்பர்.

Advertisment

ssஅந்த காலகட்டத்தில் தொழிலிலில் பலவித சிக்கல்கள் உண்டாகும். சிலருக்கு தொழிலை மாற்றவேண்டிய நிலை உண்டாகும். தற்போதைய இடத்தை விட்டு வேறொரு இடத்திற்குச் சென்று தொழில் செய்யும் சூழல் உண்டாகும். வருமானம் குறையும்.

சந்திர ராசியிலிலிருந்து 10-ஆம் வீட்டிற்கு சனி பகவான் வரும் கால கட்டத்தில், நாம் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அந்த பணம் நமக்கு திரும்ப வராது. நண்பர்கள் ஏமாற்று வார்கள். வியாபாரம் சிறக்காது. அடிக்கடி தேவையற்ற பயணங்கள் ஏற்படும்.

ஒருவர் ஜாதகத்தில் சனியின் நிலை சரியில்லையென்றால், அவர் சொந்தமாக வீடு வாங்கவே முடியாது.

அவர் பல நோய்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.

ஜாதகத்தில் சனி 2-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

2-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், வீட்டில் எந்த சுபகாரியம் நடை பெற்றாலும் தடை உண்டாகும்.

4-ஆம் பாவத்தில் சனி பலவீனமாக இருந்து, அதை பாவகிரகங்கள் பார்த் தால் அல்லது பாவகிரகத்துடன் சனி 4-ல் இருந்தால், அவருக்கு அன்னையின்மூலம் நிம்மதி கிடைக்காது. பணவரவு திருப்தியாக இருக்காது. குடும்பத்தில் பிரச்சினைகள் தொடர் கதையாகும்.

6-ஆம் பாவத்தில் சனி இருந்து, லக்னாதிபதி பலவீனமாக அல்லது அஸ்தமனமாக இருந் தால், அவருக்கு வயிற்றில் பித்தம் இருக்கும். தூக்கம் சரியாக வராது. வாழ்க்கையின் முற்பகுதி யில் பல சிக்கல்களை சந்திப்பார். வாழும் வீட்டில் பல தோஷங்கள் இருக்கும்.

7-ஆம் பாவத்தில் சனி இருந்து, லக்னம் அல்லது 4-ல் சூரியன் இருந்தால், வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் நடக்கும். நிறைய சிரமங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோயால் மனைவி பாதிக்கப்படுவார்.

8-ஆம் பாவத்தில் சனி, செவ்வாயுடன் அல்லது சுக்கிரன், ராகுவுடன் இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். கணவன்- மனைவி உறவு சீராக இருக்காது. தேவையற்ற கோபத்தால் காரியங்கள் கெடும். 9-ஆம் வீட்டில் ராகு வுடன் சனி அல்லது சனி, செவ்வாய், ராகு அல்லது சனி, சூரியன், ராகு ஆகிய கிரகங்கள் இருந்தால், இளமையில் நிறைய அலைச்சல்கள் இருக்கும். கனவுத் தொல்லைகள் இருக்கும்.

நம் வீட்டில் தென்மேற்கு திசையில் பள்ளமிருந்தால் அல்லது அந்த இடம் தாழ்ந் திருந்தால் அல்லது அந்த இடத்தில் கழிவறை இருந்தால், அந்த மனிதரின் ஜாதகத்தில் 10-ஆம் பாவம் சரியாக இருக்காது.

ஒரு வீட்டின் சுவரில் நீர்க்கசிவு ஏற்பட்டு அந்த இடம் பாசி பிடித்திருந்தால், அங்கு சனியின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது என்று பொருள். அதனால் பணப்பிரச்சினை, மனக் கஷ்டம் உண்டாகும்.

ஒரு வீட்டில் கால்வாய் அடிக்கடி அடைத்துக் கொண்டு துர்நாற்றம் அதிகமாக இருந்தால் சனியின் பாதிப்பு உள்ளதாகப் பொருள். அதனால் அங்கு பணச் சிக்கல் உண்டாகும். மனதில் பிரச்சினைகள் ஏற்படும். வீட்டில் சண்டை நடக்கும்.

இத்தகைய தோஷங்கள் உள்ளவர்கள் சனிக்கிழமை ஆஞ்சனேயரை முழுமனதுடன் வழிபட்டால், அவற்றிலிலிருந்து விடுபட்டு, நிம்மதியாக வாழலாம். அரசமரத்தை வழிபட் டாலும் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். துயரங் கள் நீங்கும்.

செல்: 98401 11534