Advertisment

கோடிகளைக் குவிக்கும் குருவின் யோகங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி (சென்ற இதழ் தொடர்ச்சி...)

/idhalgal/balajothidam/gurus-yogas-accumulate-crores-prasanna-astrologer-i-anandi-continued-previous

குருமங்கள யோகப் பரிகாரம்

சுய ஜாதகரீதியாக ஒருவருக்கு குரு மங்கள யோகம் இல்லை என்றாலும், ஸ்திர சொத்துகள் சேராதவர்களுக்கும் பலன் தரும் பரிகாரம்;

1. செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் முருகன் வழிபாடு செய்ய வேண்டும்.

Advertisment

2. வியாழக்கிழமை செவ்வாய் ஓரையில் சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவேண்டும்

3. செவ்வாய்கிழமையும் குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரமும், பிரதோஷமும் இணைந்தநாளில் மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சித்து சிவவழிபாடு செய்ய வேண்டும்.

4. வியாழக்கிழமையும் செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரமும், பிரதோஷமும் இணைந்தநாளில் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சித்து சிவவழிபாடு செய்யவேண்டும்.

Advertisment

சென்ற வாரம் குருமங்கள யோகத்தைப் பற்றிய தகவல்களைப் படித்த வாசகர்களுக்கு இந்த வாரம் சிவராஜ யோகம் பற்றிய கருத்துகளை வழங்குகிறேன். சென்ற வாரம் குருபகவான் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது சிவராஜ யோகம் பற்றிப் பார்க்கும்முன் சூரிய பகவானைப் பற்றிய சிறிய விளக்கத்தைத் தெரிந்து கொள்வோம்.

சூரிய பகவான்

நவகிரகங்களில் முதன்மையானவராகவும். ராஜகிரகம் எனவும் அழைக்கப்படுபவர் சூரிய பகவான். ஆதிகாலம்முதல் தற்போதுவரை உலக மக்கள் ஜாதி, மத பேதமின்றி வழிபடக்கூடிய ஒரே கடவுளாகவும் இருப்பவர் சூரியன்.

சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் உலகம் முழுவதும் வலம்வருவதாக ஐதீகம். உலகிலுள்ள அனைத்து உயிர்களும் வாழத் தேவையான ஒளிக்கதிர்களை எந்தவிதமான பாகுபாடுமின்றி வழங்குபவர். நம் கண்ணிற்குப் புலப்படும் முதல் இயற்கை சக்தி கிரகம். சூரியன் பலம் பெற்றால் உயிர் காரகத்துவங்களான தந்தை, மாமனார், மூத்த மகன், தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். மனிதர்கள் வாழ்வில் வெற்றிபெற ஆன்மபலம் மிக அவசியம். சூரியன்

குருமங்கள யோகப் பரிகாரம்

சுய ஜாதகரீதியாக ஒருவருக்கு குரு மங்கள யோகம் இல்லை என்றாலும், ஸ்திர சொத்துகள் சேராதவர்களுக்கும் பலன் தரும் பரிகாரம்;

1. செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் முருகன் வழிபாடு செய்ய வேண்டும்.

Advertisment

2. வியாழக்கிழமை செவ்வாய் ஓரையில் சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவேண்டும்

3. செவ்வாய்கிழமையும் குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரமும், பிரதோஷமும் இணைந்தநாளில் மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சித்து சிவவழிபாடு செய்ய வேண்டும்.

4. வியாழக்கிழமையும் செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரமும், பிரதோஷமும் இணைந்தநாளில் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சித்து சிவவழிபாடு செய்யவேண்டும்.

Advertisment

சென்ற வாரம் குருமங்கள யோகத்தைப் பற்றிய தகவல்களைப் படித்த வாசகர்களுக்கு இந்த வாரம் சிவராஜ யோகம் பற்றிய கருத்துகளை வழங்குகிறேன். சென்ற வாரம் குருபகவான் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது சிவராஜ யோகம் பற்றிப் பார்க்கும்முன் சூரிய பகவானைப் பற்றிய சிறிய விளக்கத்தைத் தெரிந்து கொள்வோம்.

சூரிய பகவான்

நவகிரகங்களில் முதன்மையானவராகவும். ராஜகிரகம் எனவும் அழைக்கப்படுபவர் சூரிய பகவான். ஆதிகாலம்முதல் தற்போதுவரை உலக மக்கள் ஜாதி, மத பேதமின்றி வழிபடக்கூடிய ஒரே கடவுளாகவும் இருப்பவர் சூரியன்.

சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் உலகம் முழுவதும் வலம்வருவதாக ஐதீகம். உலகிலுள்ள அனைத்து உயிர்களும் வாழத் தேவையான ஒளிக்கதிர்களை எந்தவிதமான பாகுபாடுமின்றி வழங்குபவர். நம் கண்ணிற்குப் புலப்படும் முதல் இயற்கை சக்தி கிரகம். சூரியன் பலம் பெற்றால் உயிர் காரகத்துவங்களான தந்தை, மாமனார், மூத்த மகன், தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். மனிதர்கள் வாழ்வில் வெற்றிபெற ஆன்மபலம் மிக அவசியம். சூரியன் சுப பலத்துடன் வலுவாக இருந்தால் ஆன்மபலம் பெருகும். உடல் தேஜஸ் பெறும். கௌவுரவம், புகழ், அந்தஸ்து உண்டாகும். சூரியன் காலபுருஷ ஐந்தாம் அதிபதி என்பதால், ஒருவருக்கு குழந்தை உருவாக சூரியனே பொறுப்பு. சூரியன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே புத்திரர்களால் பயன் உண்டு.

gg

சூரியன் கிழக்கு திசை அதிபதி என்பதால் சூரியன் பலம்பெற்றால் வீட்டில் நற்சக்திகள் நிரம்பியிருக்கும். சூரியன் பலம் குறைந்தால் ஆன்மா பலமிழந்து மன அமைதி குறையும்.

எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் தந்தை, தந்தைவழி உறவுகளின் அன்பு, ஆதரவு கிடைக்காது. சமுதாய அங்கீகாரம், அரசின் ஆதரவு, முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்காது. கடவுள் நம்பிக்கை இருக்காது.

உஷ்ண நோய், கண் நோய், பித்ததோய், தலைவலி உண்டாகும். சித்து வேலைகள், ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பு நடத்துவர். அரச தண்டனை, தண்டம் கட்ட நேரும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை குறையும்.

பொறுப்பற்றவராக இருப்பார்கள். சூரிய ஒளி குறைவாக உள்ள இடங்களில் வாழ நேரும்.

நம் கண்ணுக்கு ஒளியாய் இருந்து நம்மை வழிநடத்திச் சென்று, உலக உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் சூரியனைப் பித்ரு காரகன் என்று அழைக்கிறோம்.

சிவராஜ யோகம்

கோடீஸ்வர யோகம் வழங்கும் குருவின் சிறப்பான மற்றொரு யோகம் சிவராஜ யோகம்.

சூரியனும், குருவும் ஒரே ராசியில் இணைந் திருந்தாலோ குருவின் ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் பார்வையில் சூரியன் நின்றாலோ, குருவிற்கு 2-ல் நின்றாலோ, குருவும், சூரியனும் பரிவர்த்தை பெற்றாலோ அது குரு, சூரியன் சேர்க்கையாகும்.

பரமாத்மா, ஜீவாத்மா சம்யோகம் என்றும் கூறலாம். பரமாத்மாவைக் குறிக்கும் கிரகமான சூரியனும், ஜீவாத்மாவைக் குறிக்கும் கிரகமான குருவும் சம்பந்தம் பெற்றால் இதை சிவராஜ யோகம் எனலாம். சிரஞ்சீவி யோகம் எனலாம்.

சூரியனின் கதிர்வீச்சை திரும்பவும் அவருக்கே பிரதிபலிப்பதன்மூலம் சூரியனைப் புனிதப் படுத்தி, உச்ச பதவியை அளிக்கும் தன்மையைக் குறிப்பிடும் சுய ஜாதக அமைப்பாக சிவராஜ யோகம் குறிப்பிடப்படுகிறது. இந்த யோக அமைப்பில் குருவும், சூரியனும் பலவீனம், பகை, நீசம் போன்ற நிலைகளை அடையாம லும், பாவக் கிரகங்களின் தொடர்புகள் எதுவுமில்லாமல் வலுவாக இருப்பதன்மூலம் மிகுதியான சுபப் பலன் உண்டு. தனியார் துறை யில் பணியாற்றும்போது உயர் பொறுப்பில் வைத்திருக்கும்.

சிவராஜ யோகத்தால் ஏற்படும் நன்மைகள்

சிரஞ்சீவி போன்று அழியா புகழ் கொண்டவர்களாகவும், நல்ல தேக சுகம் நிறைந்தவர்களாகவும் ஆன்ம பலம் படைத்தவர்களாகவும், உயர்ந்த தலைமைப் பண்பை உடையவராகவும் இருப்பார்கள்.

தயாளகுணம் உள்ளவர்களாகவும். எளிமை யானவர்களாகவும், தர்மவழி பின்பற்றுபவர் களாகவும் கடமை தவறாதவர்களாவும், சுறுசுறுப்பானவர்களாகவும், நல்ல ஆற்றல் உள்ளவர்களாகவும், எதையும் விரைவாகப் புரிந்துகொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

சிறந்த நுண்ணறிவு உடையவர்கள். தன் திறமையால், அறிவால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர். தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருப்பார்கள்.

குலப்பெருமையைக் காக்கக்கூடியவராக இருப்பார்கள். உயர்கல்வி விருத்தி, சந்ததி விருத்தி, ஆண்வாரிசு உண்டு.

குளம் வெட்டுதல், நீர்நிலைகள் அமைத்துக் கொடுத்தல், மரம் நடுதல் இயற்கை வளங் களைப் பாதுகாத்தல், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல் என பொதுவான செயல்கள் அனைத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். மகான்கள், ஞானிகள் மற்றும் பெரியோர்களின்மீது மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவராக இருப்பார்கள்.

நேர்மையான, தன்னுடைய குலப் பெருமையைக் காக்கக்கூடிய புத்திரர்களைப் பெறுவார்கள். புத்திரர்களால் பெயரும் புகழும் அடைவார்கள்.

ஜாதகரின் தந்தை புகழ், செல்வம், யோகம் போன்றவற்றை அடைந்தவராக இருப்பார்.

அரசாங்கம்மூலமாக திடீர் அதிர்ஷ்டம், ஆன்மிக, ஜோதிடம் ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி, நல்ல வீடு, வாகனம் வாங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

சொந்தத் தொழிலில் முதலாளியாக இருப்பது, ஊர், சொந்த பந்தம் , மக்கள் மத்தியில் முக்கிய நபராக மற்றவர்களால் மதிக்ககூடிய மரியாதை, அந்தஸ்தை ஜாதகர் பெறுவார்.

ஜாதகரின் எண்ணமும் செயல்பாடுகளும் எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் கொண்ட தாக இருக்கும். அவற்றை அடையும் குறிக் கோளைத் தனக்குதானே உருவாக்கி கொள்வார்கள்.

தங்கம், மாணிக்கம் மற்றும் தெய்வீகமான அணிகலன்கள் அணிந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும். தெய்வீக வித்தை களில்- குறிப்பாக ஜோதிடத்தில் தேர்ச்சி யடையலாம்.

பொன், பொருள் சேர்க்கையோடு, புகழோடு வாழும் சூழ்நிலை உருவாகும். நல்ல விஷயங்களை உலகமக்களுக்கு போதிக்கும் ஆற்றலும், அதன்மூலம் புகழ்பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

குருபகவான் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் அல்லது நீசபங்க ராஜயோகம் பெற்று, அதற்கேற்ற தசாபுக்திகள் நடக்கும் காலங்களில், குருவும் சூரியனும் லக்ன யோகர்களாக இருந்து தசா நடக்கும் காலத்தில் ஜாதகர் இதற்குரிய பலன்களை அனுபவிக்கிறார். எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம் மற்றும் பூர்வபுண்ணிய காரகன் குரு ஆகியோரது சுப அம்சங்களைப் பொருத்து பதவிகள் அமையும். ஒருவரது சுய ஜாதகத்தில் ஐந்தாமிடம், அதன் அதிபதி மற்றும் குரு ஆகியவை பலம் பெற்றிருக்கும் நிலையில், சிவராஜ யோகம் அளிக்கும் பூர்வபுண்ணிய பலனை அனுபவிப்பதற்காக அவரது பிறப்பு ஏற்பட்டதாக ஜோதிடரீதியாக கருத்து உள்ளது.

சிவராஜ யோகத்தால் ஏற்படும் அசுபங்கள் இதில் குருவும் சூரியனும் நீசம் அடையக்கூடாது. குரு வக்ரம், அஸ்தமனம் அடையாமல் இருக்கவேண்டும்.

சூரியனால் குரு அஸ்தமனம் பெற்றால் குழந்தை அமைப்புகள் எப்பொழுதும் இவர்களுக்கு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. பிள்ளைகளின்மூலமாக நற்பலன்கள் பெறுவதில்லை அல்லது பிள்ளைகளை விட்டுத் தனித்து வாழும் அமைப்பும் நிறைய பேருக்கு ஏற்படுகின் றது. சிலர் நாத்திகம் பேசும் அமைப்புள்ளவர் களாகவும் இருக்கிறார்கள். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் பணத் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.

குரு, சூரியனைத் தவிர பிற கிரகங்களின் சம்பந்தம் இருக்கக்கூடாது.

இந்த கிரகச் சேர்க்கையில் சூரியபகவான் ஒரே ஆதிபத்தியம் உள்ளவர். குருபகவான் இரு ஆதிபத்தியம் கொண்டவர். ஒரு ஆதிபத்தியரீதியாக சுபப் பலன்கள் நடந்தால் மற்றொரு ஆதிபத்தியத்தால் பாதிப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.

தற்போது நடிகர் விஜய் அவர்கள் வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி சிவப்பு, மஞ்சள், யானை, வாகைப்பூ சிவராஜ யோகம். ஆனால் கட்சிக்கொடியை குளிகை நேரத்தில் வெளியிட்டுள்ளார். அதனால் கொடியில் மாற்றம் வரலாம். தற்போது அது தொடர்பான சர்ச்சைகள் நிலவிவருகிறது.

பரிகாரம்

சுய ஜாதகரீதியாக சிவராஜ யோகம் இல்லாதவர்கள் சிவராஜ யோகத்தின் நற்பலன்களை அடைய உதவும் பரிகாரங்கள்:

தினமும் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வதன்மூலம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தீய சக்திகள் விலகும். நேர்மறை அதிர்வலைகள் பரவும். ஆயுள் பலம் கூடும். குறிப்பாக, எலும்புகள், கண் பார்வை தொடர்பான பாதிப்புகளுக்கு இந்த பாராயணம் நிவாரணம் தரும்.

அனைத்து உயிர்களின் இயக்கத்திற்கும் அடிப்படை சக்தியைத் தரவல்ல சூரியனை தினமும் அதிகாலையில் வணங்கி சூரிய நமஸ் காரம் செய்தன்மூலம் மனம் அமைதியுடன் உடல் ஆரோக்கியமும் பெறலாம்.

மஞ்சள், சிவப்பு நிறம் கலந்த ஆடைகள், பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு சிவப்புநிற உணவு, உடை தானம் வழங்கி ஆசிபெற வேண்டும்.

அந்தணர்களுக்கு சிவப்பு அரிசி, கோதுமை தானம் வழங்குவது நல்லது.

தொடரும்...

செல்: 98652 20406

bala060924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe