குரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம்? - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/guru-sees-marriage-yoga-present-astrologer-i-anandi

னித வாழ்வில் ஏற்படும் அன்றாட நிகழ்வு களுள் நவகிரகங்களின் பங்கு அளப்பரியது. நவகிரகங்களின் பெயர்ச்சியே மனித வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் தருகிறது. கிரகங்களின் பெயர்ச்சியில் வருட கிரகங்களான குரு, ராகு- கேது, சனிப்பெயர்ச்சிக்கு எல்லாரும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும், குருப்பெயர்ச்சி என்றால் மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

நவகிரகங்களுள், சுபகிரக வரிசையில் முன்னிலையில் இருப்பவர் குரு பகவான். ஒவ்வோராண்டும் குருப்பெயர்ச்சியின்மூலமும் தன் பார்வை பலத்தால் பல்வேறு சுபப் பலன்களை வாரிவழங்கும் சுபகிரகம் என்பதால் மக்களுக்கு குருப்பெயர்ச்சியின்மேல் அதிக ஆர்வம். பொதுவாக, திருமணத்திற்கு ஜோதிடரை அணுகுபவர்கள் குருபலம் வந்து விட்டதா? குருபலம் எப்பொழுது வரும் என்ற கேள்வியைப் பிரதானமாகக் கேட்பார்கள். நம்முள் பலருக்கு குருபலம் வந்தால் மட்டுமே திருமணம் நடக்குமென்னும் நம்பிக்கை இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் குருபகவான் என்பவர் யார்? அவரால் ஏற்படும் நற்பலன்கள் எப்படி வேலைசெய்யும்? குருபலம் என்றாலென்ன? குரு பலத்திற்கும் திருமணத்திற்கும் சம்பந்தமுண்டா? குரு பார்வை ராசிக்கு இருக்கும்போது திருமணம் நடைபெறுமா என்பது போன்ற பல்வேறு தகவல்களைப் பார்க்கலாம்.

பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் நவகிரகங்களுள் முதன்மையான சுபகிரகமாவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமானமாற்றங்களை உண்டாக் கக்கூடிய ஆற்றல் குரு பகவானுக்கு உண்டு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாக அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தனக்காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான் மங்களகாரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக்கிறார். இறைவழிபாட்டிற்கும் ஞானத் திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.

அதுமட்டுமின்றி, ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவிசெய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறைவழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, மதகுருமார்கள், பெரியோர்கள், கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்ட சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங் கள், பாராட்டுகள், விருதுகள் ஏற்படுதல், சாந்தமான கபாவம், கண்கள், வாக்குப் பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெற்றல் ஆகியவற்றுக்கெல்லாம் குரு காரகனாவார்.

ஜனன ஜாதகத்தில் குருபகவான் பலவீனமானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல்புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.

குரு தசை ஒருவருக்கு நடைபெற்றால் ராஜயோக தசை நடப்பதாகக் கூறுவார்கள். வலுப்பெற்று அமைந்த குரு தசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால் கல்வியில் சாதனைமேல் சாதனைசெய்யும் அமைப்பு உண்டாகும். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மணவாழ்க்கை, தொழில்ரீதியான மேன்மை, பொருளாதார உயர்வுகள் போன்ற ய

னித வாழ்வில் ஏற்படும் அன்றாட நிகழ்வு களுள் நவகிரகங்களின் பங்கு அளப்பரியது. நவகிரகங்களின் பெயர்ச்சியே மனித வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் தருகிறது. கிரகங்களின் பெயர்ச்சியில் வருட கிரகங்களான குரு, ராகு- கேது, சனிப்பெயர்ச்சிக்கு எல்லாரும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும், குருப்பெயர்ச்சி என்றால் மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

நவகிரகங்களுள், சுபகிரக வரிசையில் முன்னிலையில் இருப்பவர் குரு பகவான். ஒவ்வோராண்டும் குருப்பெயர்ச்சியின்மூலமும் தன் பார்வை பலத்தால் பல்வேறு சுபப் பலன்களை வாரிவழங்கும் சுபகிரகம் என்பதால் மக்களுக்கு குருப்பெயர்ச்சியின்மேல் அதிக ஆர்வம். பொதுவாக, திருமணத்திற்கு ஜோதிடரை அணுகுபவர்கள் குருபலம் வந்து விட்டதா? குருபலம் எப்பொழுது வரும் என்ற கேள்வியைப் பிரதானமாகக் கேட்பார்கள். நம்முள் பலருக்கு குருபலம் வந்தால் மட்டுமே திருமணம் நடக்குமென்னும் நம்பிக்கை இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் குருபகவான் என்பவர் யார்? அவரால் ஏற்படும் நற்பலன்கள் எப்படி வேலைசெய்யும்? குருபலம் என்றாலென்ன? குரு பலத்திற்கும் திருமணத்திற்கும் சம்பந்தமுண்டா? குரு பார்வை ராசிக்கு இருக்கும்போது திருமணம் நடைபெறுமா என்பது போன்ற பல்வேறு தகவல்களைப் பார்க்கலாம்.

பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் நவகிரகங்களுள் முதன்மையான சுபகிரகமாவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமானமாற்றங்களை உண்டாக் கக்கூடிய ஆற்றல் குரு பகவானுக்கு உண்டு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாக அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தனக்காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான் மங்களகாரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக்கிறார். இறைவழிபாட்டிற்கும் ஞானத் திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.

அதுமட்டுமின்றி, ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவிசெய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறைவழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, மதகுருமார்கள், பெரியோர்கள், கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்ட சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங் கள், பாராட்டுகள், விருதுகள் ஏற்படுதல், சாந்தமான கபாவம், கண்கள், வாக்குப் பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெற்றல் ஆகியவற்றுக்கெல்லாம் குரு காரகனாவார்.

ஜனன ஜாதகத்தில் குருபகவான் பலவீனமானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல்புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.

குரு தசை ஒருவருக்கு நடைபெற்றால் ராஜயோக தசை நடப்பதாகக் கூறுவார்கள். வலுப்பெற்று அமைந்த குரு தசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால் கல்வியில் சாதனைமேல் சாதனைசெய்யும் அமைப்பு உண்டாகும். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மணவாழ்க்கை, தொழில்ரீதியான மேன்மை, பொருளாதார உயர்வுகள் போன்ற யாவும் உண்டாகும். இறுதிக்காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

குருபகவான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9-ஆமிடங்களைப் பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களைக் கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும் என்பதால்தான் நமது ஆன்றோர்கள் குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்று கூறியுள்ளார்கள்.

bb

ஜனன ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு மாரகராகவோ, பாதகராகவோ, அஷ்டமாதிபதியாகவோ இருந்தால்கூட கோட்சாத்தில் 2, 5, 7, 9, 11-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும்போதும், 5, 7, 9-ஆம் பார்வையால் பார்க்கும் பாவகத்தையும், அந்த பாவகத்திலுள்ள கிரகத்தின்மூலமும் சுபப் பலனே கிடைக்கச் செய்வார். பலமிழந்து அமையப்பெற்ற கிரகங்களுக்கு குரு பார்வை இருந்தால், அதிலுள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாகிவிடும். குரு தனித்திருப்பது நல்லதல்ல. குரு நின்ற இடம் பாழ் என்பார்கள். அதுவே குரு கிரகச்சேர்க்கை யுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.

கோட்சார குரு 2-ல் குரு வரும்போது குடும்பத்திற்கு நலம் பயக்கும். தனவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குழந்தை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நிகழ்த்தி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

5-ல் குரு வரும்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் கல்வி வாய்ப்பு கைகூடும். குல, இஷ்டதெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். பூர்வ புண்ணியப் பலன் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளுக்கு சுபகாரியம் நடைபெறும்.

7-ல் குரு வரும்போது திருமணம் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழில் சிறக்கும். புதிய தொழில் ஒப்பந் தங்கள் கைகூடும். நண்பர்களுக்கு நலமுண்டாகும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

9-ல் குரு வரும்போது தந்தை, மூத்தவர்களுக்கு நலம் கிடைக்கும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும். வெளிமாநிலம், வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்பு கிடைக்கும். தந்தைக்கு யோகம், தந்தைவழி முன்னோர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். புனிதத் தலங்களுக்குத் தீர்த்தயாத்திரை செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

11-ல் குரு வரும்போது தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் தனலாபம், பாலிசி முதிர்வு, உயில் சொத்துகள் கிடைக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குரு பகவான் கோட்சாரரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும் என்பது பலரின் நம்பிக்கை. அதாவது, திருமணம் தொடர்பான பாவகங் களான 1, 2, 7, 8 ஆகிய இடங்களுக்கு கோட்சார குருவின் பார்வை கிடைத்தால் திருமணம் நடந்துவிடுமென நம்பப்படுகிறது. 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும்போது குருபலம் எனக் கூறுகிறோம்.

குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்துக் கொள்ளும்போது ஐந்துமுறை குருபலம் வருகிறது. அப்படி 12 வருடத்திற்கு ஐந்துமுறை குருபலம் வரும்போது ஏன் பலர் 40 வயதைக் கடந்தும திருமணம் நடைபெறாமல் இருக்கிறார்கள்? இது யோசிக்கவேண்டிய கேள்விதானே? குருபலத்தை மூன்றுபிரிவாகப் பிரிக்கலாம்.

1. திருமணம் தொடர்பான பாவங்களான 1, 2, 7, 8 சுபவலிமை பெற்று தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்களுக்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைக்கும்போது திருமணம் எளிதில் நடைபெறும். ஒருவருக்கு எந்த சிரமமும் இன்றி எளிதில் திருமணம் நடைபெற ஜனனகால ஜாதகத்தில்- ● களத்திரக்காரகன் சுக்கிரன் பலமுள்ளதாக அமையவேண்டும்.

● ஏழாம் அதிபதி இயற்கை சுபகிரகமாக இருந்து ஜாதகத்தில் வலிமைபெற வேண்டும்.

● ஏழாம் பாவக அதிபதி சுக்கிரனுடன் இணைந்து திரிகோணத்துடன் தொடர்புபெற வேண்டும்.

● இரண்டில் சுக்கிரன் அமர்ந்து செவ்வாயுடன் தொடர்பு பெறுவது.

● இரண்டு மற்றும் ஏழாம் பாவக அதிபதிகள் பலம்பெற்று திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறுவது.

● ஏழாம் பாவகாதிபதி இயற்கை சுபராகி ஜாதகத்தில் வலிமை பெறுவது.

● ஏழாம் பாவகாதிபதி மற்றும் சுக்கிரன் லக்னத்திலோ, லக்னாதிபதியுடனோ அல்லது லக்னாதிபதியின் பார்வை பெறுதல்.

● ஏழாம் பாவகாதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையோடு இருப்பது.

● இரண்டு, ஏழாம் பாவகங்கள் திதிசூன்யம் அடையாமல் இருக்கவேண்டும்.

● ஏழாம் பாவகம் ஏழாம் அதிபதி, சுக்கிரன் அமர்ந்த வீடு ஆகிய 3-ம் 30 பரல்களுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.

மேலேகூறிய விதிகளில் ஏதேனும் சில விதிகள் சுபமாக இருந்தால்கூட குருவின் இரண்டாம் சுற்றில் (12 வயதிற்கு ஒரு சுற்று) 18 முதல் 23 வயதிற்குள் திருமணம் நடந்துவிடும். திருமணம் தொடர்பான பாவகங்கள் வலிமையாக இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும்; கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கும்.

ஒருவருக்கு ஜனனகால ஜாதகத்தில்-

● ஏழாம் பாவக அதிபதி 3, 6, 8, 12-ல் மறைந் திருந்தாலும்

● திதிசூன்ய பாதிப்பு இருந்தாலும்

● 1, 2, 7, 8 பாவகங்களும், அதன் அதிபதிகளும் வலிமை குறைந்திருந்தாலும்

● ஏழாம் பாவகதிபதி 3, 6, 8, 12-ல் அமர்ந் திருந்தாலும்

● ஏழாம் பாவகதிபதி பகை, நீச, அஸ்தமனம் மற்றும் கிரக யுத்தத்தில் தோற்றாலும்

● ஏழாம் பாவக அதிபதிகள் வலிமை குறைந்து, திரிகோணாதிகள் தொடர்பு இல்லாமலிருந் தாலும்

● 7-ஆம் பாவக அதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையற்று இருந்தாலும்

● சனி, ராகு- கேது போன்ற கிரகங்கள் 1, 2, 7, 8 ஆகிய பாவகங்களைப் பாதித்திருந்தாலும்

● பெண் ஜாதகத்தில் 8-ஆம் பாவகம் அல்லது 8-ஆம் பாவகாதிபதி பாதிக்கப்பட்டிருப்பது

தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லா விட்டாலும் 24- 36 வயதிற்குள் திருமணம் நடக்கும். தசாபுக்திகள் சாதகமாக இருந்து, ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார வரும் போது திருமணம் தொடர்பான பாவகங்கள் தோஷ நிவர்த்திபெற்று குருவின் மூன்றாம் சுற்றில் 24-36 வயதிற்குள் திருமணம் நடைபெறும்.

2. திருமணம் தொடர்பான பாவங்களான 1, 2, 7, 8 சுபவலிமை பெற்றாலும், தசாபுக்திகள் சாதகமற்றிருக்கும்போது ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்களுக்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைத்தாலும் திருமணம் நடை பெறாது.

3. திருமணம் தொடர்பான பாவங்களான 1, 2, 7, 8 அசுப வலிமை பெற்று தசாபுக்திகள் சாதகமற்றிருக்கும்போது எத்தனை குருப் பெயர்ச்சி வந்தாலும் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரவேண்டும். குரு பார்த்தால் எத்தகைய தோஷமும் விலகுமென அனைவரும் கூறு கிறார்கள். தாங்களும் அதை இந்தக் கட்டுரையின் முகப்பில் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி யிருக்கத் தோஷமுள்ள பாவகங்களுக்கு குரு பார்வை கிடைக்கும்போது ஏன் தோஷ நிவர்த்தி கிடைப்பதில்லை என்னும் சந்தேகம் உங்கள் மனதில் வந்திருக்குமே...?

அதாவது, ஜனனகால ஜாதகத்தில் கீழ்க் காணும் தோஷமிருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் திருமணம் தொடர்பான பாவகங்களுக்குக் கிடைத்தாலும் திருமணம் நடைபெறும் வாய்ப்பு மிகக்குறைவு.

● கிரகணத்திற்கு ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்பும் பூமிக்கு தோஷ காலம். இந்த 15 நாட்களில் பிறக்கும் குழந்தைகள் செவ்வாய், சனி தொடர்பு பெறுபவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினம்.

● 9-ஆம் பாவகத்தில் வலிமையிழந்த ராகு-கேது, சனி சம்பந்தமிருந்தாலும்

● 2, 7-ஆம் அதிபதிகள் பாவகிரகத்துடன் சம்பந்தம், அஸ்தமனம், நீசம் பெற்றாலும்; 2, 7-ஆம் அதிபதி 12-ல் மறைந்தாலும்;

1, 7-ஆம் அதிபதிகள் இணைந்தாலும்; 6, 8, 12-ல் பலவீனமடைந்தாலும்; 5, 6-ஆம் அதிபதிகள் இணைந்து 7-ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றாலும்; 7, 12-ஆம் அதிபதி சூரியனுடன் 7-ஆம் பாவகத்தில் இணைந் தாலும்; சுக்கிரனுக்கு 1, 5, 9-ல் வலுவற்ற கிரகங்கள் நின்றாலும்; சனி லக்னம்- லக்னாதிபதி- சந்திரனைப் பார்த்து சுபகிர கங்கள் பார்வை, ஜனன குரு தொடர் பில்லாமல் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதுதில்லை.

ஒருசிலருக்கு ஜனனகால ஜாதகத்தில் ஏழாமிடத்திற்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைக்கும் காலங்களில், 24 வயதிற்குமேல் 36 வயதிற்குள் குறைந்தது மூன்று திருமணம், விவாகரத்து நடக்கும். ஒருசிலருக்கு அந்தரங் கத்தைப் பகிர்ந்துகொள்ளும்விதமான நட்பும் மட்டும் கிடைக்கும். என்ன வாசகர்களே, திருமணத்திற்கு சுய ஜாதக வலிமை மிகமுக் கியம் என்பது புரிந்திருக்கும் என நினைக் கிறேன்.

மேலும், பலருக்கு கோட்சார குரு சந்திரனைப் பார்க்கும்போது திருமணம் நடக்குமென நம்பிக்கை இருக்கிறது. சந்திரன் என்பவர் மனோகாரகன், உடல் காரகன். சூரியன் என்பவர் ஆத்மக்காரகன்.

ஒரு ஆன்மாவை சுமக்க, இயக்க உடல் தேவை. ஆன்மாவின் இயக்கத்திற்கு உதவும் கருவியான உடல்காரகன் சந்திரனுக்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைக் கும்போது ஆன்மாவும் உடலும் புனிதமடையும்.

மனம் ஒரு நிலைப்படும். மனம் ஒருநிலைப் படும்போது மனவலிமை கூடும். பாவம், புண்ணியம் பற்றி யோசிப்பார்கள்.

பன்னிரண்டு வயதுவரை தாயின் கட்டுப் பாட்டில் இருக்கும் குழந்தை குருவின் ஒரு சுற்று முடிந்தபிறகு, தனித்து சுயமாக சிந்திக்கத் துவங்கும். பய உணர்வு குறைந்து தைரியம், தெம்பு அதிகரிக்கும். ஒவ்வொரு முறையும் குருவின் பார்வை ராசிக்குக் கிடைக்கும் காலகட்டங்களில் குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கேற்ற உடல்வளர்ச்சி ஏற்பட்டு, சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்தத் தேவையான ஆத்ம சிந்தனை அதிகரிக்கும்.

குருவின் பார்வை ராசிக்குக் கிடைக்கும் காலங்களில் உடல்ரீதியான பாதிப்பு மற்றும் மனசஞ்சலம் நீங்கும். அழகாக, ஆடம்பரமாக தன்னை அலங்கரிக்க ஆர்வம் ஏற்படும். திருமண உறவில் ஈடுபட மனமும் உடம்பும் தயாராகும். எப்பொழுதும் சோம்பலாக இருப்பவர்கள்கூட சுறுசுறுப்பாக இருப் பார்கள்.

மிகுதியான நோயில் இருப்பவர்களுக்கு உடலில் நோய்த் தாக்கம் குறையும். தேக அழகு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி உருவாகும்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதில் அமைதி குடிகொள்ளும். பொறுப்புமிக்க பதவிகள் உங்களைத் தேடிவரும். ஓய்வெடுக்க நேரமில்லாது உழைக்கவேண்டியதிருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும்.

குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். ஆக, கோட்சார குருவின் பார்வை சந்திரனுக்குக் கிடைக்கும் காலங்களில் உடலும் உள்ளமும் பரிசுத்தமடையும். வயதுக்கேற்ப உடல்பலமும் மனபலமும் அதிகரிக்குமே தவிர, திருமண வாய்ப்பு ஏற்படாது.

ஜோதிடத்தில் குருவானவர் தெய்வ அருளைக் குறிக்கும் கிரகமாகும். எனவே எந்த ஒரு செயலைச் செய்தாலும், அந்தச் செயலை குரு கோட்சாரத்தில் பலம்வாய்ந்த இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் செய்தால், அந்தச் செயல் சுபமாக நடக்கும் என்னும் அடிப் படையில் தெய்வ அனுக்கிரகத்திற்காக குருபலம் பார்க்க வேண்டும். திருமணத்திற்கு மட்டுமல்ல, வாழ்வில் அனைத்து சுபகாரியம் நடக்கும்போது தெய்வ அனுக்கிரகம் வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டது குரு பலம்.

ஒருவருக்குத் திருமணம் நடக்கும்போது, கோட்சார குருவானவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆமிடங்களில் சஞ்சரித்தால், அந்த நபருக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைத்து, எந்தத் தடையுமில்லாமல் திருமணம் நடக்குமென்ற காரணத்திற்காக முன்னோர்களால் பார்க்கப் பட்டது குருபலம். எனவே, குருபலம் வந்து விட்டால் திருமணம் நடக்குமென்பது தவறான நம்பிக்கை.

2020-ஆம் ஆண்டின் நவம்பர் மாத குருப்பெயர்ச்சியில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீன ராசியினர் சுயஜாதகத்தில் 1, 2, 7, 8-ஆமிடங்களை வலிமைப்படுத்த திருமண வாய்ப்பு மிகுதியாக இருக்கும்.

பரிகாரம்

ஜனன ஜாதகத்தாலும், கோட்சாரத்தாலும் குரு பலக்குறைவால் அதிக சிரமம் சந்திப் பவர்கள் சிவனை வணங்கி, சனிக்கிழமை ஸ்ரீருத்ரம் ஜெபிக்கவும். ருத்ராபிஷேகம் செய்யவும்.

அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்கள், குழந்தைகளுக்கு தானம் செய்யவும்.

மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைக் குட்டை பயன்படுத்துவது, மஞ்சள் நிறப் பூக்களை அணிவது நல்லது.

வெண்முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

திருமணத்தடை உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி திதித் தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கேற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்கள்கொண்டு பூஜைகள்செய்தால் தடைகள்நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் காலபைர வருக்கு வடைமாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்.

வாரத்தின் ஏழு நாட்களும் காலபைர வரின் வழிபாடு மற்றும் பைரவ அஷ்டகப் பாராயணம் செய்தால் காரிய சித்தி கிட்டும்.

செல்: 98652 20406

bala140820
இதையும் படியுங்கள்
Subscribe